கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது

இந்த வருஷத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தமிழ் கூறும் நல்லுலகில் விஷ்ணுபுரம் விருது முக்கியமானது. ஆரம்பித்த நாளிலிருந்து தரம் உணர்ந்து விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விக்ரமாதித்யனும் விஷ்ணுபுரம் விருதும் இந்த விருதளிப்பால் பரஸ்பரம் தங்களை கௌரவித்துக் கொண்டிருப்பார்கள்.

கொண்டிருக்கிறார்கள் என்று எழுதாமல் கொண்டிருப்பார்கள் என்று எழுத ஒரே காரணம்தான். நற்றிணை, குறுந்தொகை என்று ஆரம்பித்திருந்தாலும் எனக்கு இன்னும் கவிதைகள் உலகம் கொஞ்சம் தூரம்தான். ஆனால் சமகாலக் கவிஞர்கள் வரை ஒரு நாள் வந்துவிடலாம் என்று நம்பிக்கை வந்திருக்கிறது.

அழியாச்சுடர்கள் தளத்திலும் எழுத்து தளத்திலும் அவரது சில கவிதைகள் கிடைக்கின்றன. எனக்கே இன்னும் படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்திருந்த கவிதை தட்சிணாமூர்த்தியான…

மாமிசம் தின்னாமல்
சுருட்டு பிடிக்காமல்
பட்டையடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடை வராதது பொறாமல்
பதினெட்டாம் படி விட்டிறங்கி
ஊர் ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்த காலக் கைத்த நினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

கவிஞருக்கு ஒரு தளம் இருந்தாலும் அது செயல்படவில்லை. கடைசி பதிவு 2009-இல்.

விக்ரமாதித்யன் கவிஞர் என்றே அடையாளம் காணப்படுகிறார். ஆனால் அவர் சில சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். அங்கே இருந்து ஆரம்பிப்பது என் போல கற்பூர வாசனை தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கலாமோ என்னவோ. நேர்ந்தது என்ற சிறுகதை இங்கே கிடைக்கிறது.

கவிஞருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

2 thoughts on “கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது

  1. நாஞ்சில் நாடனின் கதைகளில் எல்லாம் உணவு என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அவர் சிறுவயதில் பந்தியிலிருந்து எழுப்பப்பட்டார் என்று ஜெயமோகன் எழுதியிருந்தார். அதை கற்பனை செய்யவே தாங்க முடியவில்லை.

    Like

    1. இது சூடிய பூ சூடற்க பதிவுக்கு எழுதப்பட்ட மறுமொழியோ? உண்மை, உணவோடு அவருக்கு ஒரு ஆத்மார்த்த பந்தம் இருக்கிறது. அவர் பேச்சிலும் அது அவ்வப்போது வெளிப்படுகிறது.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.