புத்தகப் பைத்தியங்கள்

புகைப்படங்களைப் பார்க்கும்போதே மன நிறைவாக இருந்தது. மாதிரிக்கு ஒன்றை இணைத்திருக்கிறேன்.

நான் புத்தகங்களை வாங்குவது மிகவும் குறைந்துவிட்டது. சின்ன வீட்டுக்கு குடிபெயர்ந்து ஐந்து வருஷம் ஆகிவிட்டது, இடப்பற்றாக்குறை. மேலும் இருக்கும் புத்தகங்களை படித்து முடிக்கவே இன்னும் 10 வருஷம் ஆகும். ஆனாலும் என்னை விட பெரிய புத்தகப் பைத்தியங்களைப் பார்ப்பது பெரிய மகிழ்ச்சி!

நான் கஞ்சன். என்னிடம் இருக்கும் புத்தகங்களில் முக்கால்வாசி பழைய புத்தகங்கள்தான். இவற்றைப் பார்த்தால் புதிதாக வாங்கின மாதிரி இருக்கிறது. அது இன்னும் ஒரு சின்ன மகிழ்ச்சி…

என்னிடம் 2000-3000 புத்தகங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் முயன்றால் நானும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுவிடலாம்…

உங்கள் வீட்டு அலமாரிகளில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? பின்னூட்டத்தில் எழுதுங்கள்! செந்தூரம் ஜெகதீஷ் போன்றவர்களின் வீடு முழுக்க இருக்கும் என நினைக்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

4 thoughts on “புத்தகப் பைத்தியங்கள்

  1. இதுவரை எண்ணியதில்லை. என்னிடம் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். படிக்காம நேரத்தை வண செய்கிறேன் என்று சமீப காலங்களில் மிக அடிக்கடி தோன்றும்.

    Like

  2. என்னுடைய புத்தக சேகரிப்பில் பலவற்றை ஊரில் கொண்டு வைத்து விட்டேன். மீண்டும் மீண்டும் படிக்க கூடிய புத்தகங்களை மட்டுமே பெங்களூரில் வைத்துக் கொண்டுள்ளேன். ஊரிலும் அம்மா இனி கொண்டு வந்தால் இடமில்லை என்று கூறிவிட்டார்கள், போய் இடம் தயார் செய்து வைக்க வேண்டும். மகாபாரத நூல்களுக்கே தனி அலமாரி வேண்டும். இவ்வளவு புத்தகங்களை வைத்திருக்க வேண்டுமென்றால் சொந்த வீடு வேண்டும். வாடகை வீடு எனும் போது அடிக்கடி வீடு மாற்றும் நிலையில், மாற்றுவது பெரும் பாடாக இருக்கின்றது. அடுத்தது இடப்பற்றாக்குறை. எனக்கு வரும் வீடு எல்லாம், அதிக அலமாரிகள் இல்லாத வீடாகவே அமைகின்றது. கிண்டில் வந்த பின் பெரும்பாலான புத்தகங்கள அதில் வாங்கிவிடுவதால், கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றது. ஒரே ஒரு ஆளுயர அலமாரி செய்து அதைப் புத்தகங்களுக்கு மட்டும் என்று வைத்துக் கொண்டுள்ளேன். எனக்கு ஒரே சமயம் பல புத்தகஙக்ளை படிக்கும் வழக்கம் உண்டு. படுக்கையறையில் ஒன்று, சோபாவில் இரண்டு, டீவி ஸ்டேண்ட் மீது ஒன்று, வேலை செய்யும் மேஜையில் ஒன்று என்று. இது மாதிரி ஒரு இடம் இருந்தால் இன்னமும் பத்து புத்தகங்கள் அங்காங்கு கிடக்கும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.