டாப் சினிமா வசனங்கள்

கேட்டவுடன் கபகபவென்று சிரிக்க வைத்த வசனங்கள், அல்லது நினைவில் வரும்போதெல்லாம் புன்னகைக்க வைப்பவை, ஏதோ ஒரு விதத்தில் அந்தத் திரைப்படத்தையோ, நடிகரையோ வரையறுப்பவை.

சட்டென்று நினைவுக்கு வந்தவற்றின் பட்டியல். ரொம்ப எல்லாம் யோசிக்கவில்லை, இன்னும் நிறைய இருக்கும். உங்களுக்கு ஏதாவது நினைவு வந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

YearFilmQuote
1930Animal CrackersOne morning I shot an elephant in my pajamas. How he got into my pajamas, I will never know
1933King KongIt was beauty that killed the beast
1939Gone with the WindFrankly, my dear, I don’t give a damn
1939Wizard of OzToto, I’ve a feeling we’re not in Kansas anymore
1940சகுந்தலைஅடிப்பியா! உங்கப்பன் மவனே சிங்கண்டா!
1941Citizen KaneRosebud.
1942CasablancaOf all the gin joints in all the towns in all the world, she walks into mine
1942CasablancaRoundup the usual suspects.
Louis, I think this is the beginning of a beautiful friendship
1942CasablancaHere is looking at you, kid
1950Sunset BoulevardAll right, Mr. DeMille, I am ready for my close-up
1951Patala BhairaviNijam Cheppamantara Abaddham Cheppamantara
1951Patala BhairaviSahasam Cheyera Dimbaka!
1952பராசக்திகோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக
1953On the WaterfrontYou don’t understand. I coulda had class. I coulda been a contender
1953DevadasKaun kambakht bardaasht karne ko peeta hai
1954மனோகராபொறுத்தது போதும் பொங்கியெழு!
1957மகாதேவிமணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி!
1958நாடோடி மன்னன்சரிதான் நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது!

இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது.

1959வீரபாண்டிய கட்டபொம்மன்வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி!
1959Some Like It HotWell, nobody’s perfect
1960PsychoA boy’s best friend is his mother
1961கப்பலோட்டிய தமிழன்சொல்லிக் கொள்ளும்! நன்றாக நானூறு முறை சொல்லிக் கொள்ளும்!
1963Dr. NoBond. James Bond
1964Dr. StrangeloveGentleman, you can’t fight here! This is the war room!
1965ஆயிரத்தில் ஒருவன்மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?

சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!

1967GraduateMrs. Robinson, you are trying to seduce me, aren’t you?
1971AnandBabumoshai, zindagi badi honi chahiye, lambi nahi
1971Dirty HarryYou gotta ask yourself one question. “Do I feel lucky?”. Well, do ya punk?
1972GodfatherI will make him an offer he can’t refuse
1972PakeezahAapke paon dekhe, bahut haseen hai. Inhe zameen par mat utariyega, maile ho jayenge
1975DeewarMeri paas maa hai
1975DeewarMain aaj bhi pheke hue paise nahin uttatha
1975SholayKitne Aadmi?
1975SholayYeh Haath Mujhe De De Thakur!
1975JawsYou’re gonna need a bigger boat
1975Monty Python and the Holy GrailAfrican swallow or European swallow?
1976NetworkI am mad as hell and I am not going to take this any more!
1976Taxi DriverAre you talking to me?
1976Apocalypse NowI love the smell of napalm in the morning
1977Star WarsMay the force be with you
1978DonDon ko pakadna mushkil hi nahi, naamunkin hai
1980தில்லுமுல்லுஅய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்!
1980தில்லுமுல்லுகாந்தி உங்க வீட்டுக்கு வந்ததும் முதல்ல என்ன பண்ணினார்?
சட்டையக் கழட்டி கோட் ஸ்டாண்டில மாட்டினார்!
1980ShiningHeeeere’s Johnny!
1982E.T.E.T. Go home
1983வைதேகி காத்திருந்தாள்என்னண்ணே உடச்சிட்டீங்க!
1984TerminatorI’ll be back
1987நாயகன்நீங்க நல்லவரா கெட்டவரா?
1987Mr. IndiaMogambo Khush Hua
1987Wall StreetGreed is good
1988Rain ManI am an excellent driver
1988அக்னி நட்சத்திரம்என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!
1989When Harry Met SallyI’ll have what she’s having
1989Dead Poet’s SocietyCarpe Diem. Seize the day. Make you life extraordinary, boys.
1990மைக்கேல் மதனகாமராஜன்நீங்களும் குக்கு, கிராமமும் குக்கா?
1991Silence of the LambsA census take once tried to test me. I ate his liver with a nice Chianti and some fava beans
1991Terminator 2Hasta la vista, baby
1992My Cousin VinnyOh, Yeah. You Blend.
1992My Cousin VinnyAnd now, Mrs. Riley. And only Mrs. Riley
1992My Cousin VinnyYou were serious about that?
1992My Cousin VinnyHowever, In 1964, the correct ignition timing would be four degrees before top-dead-center
1992A Few Good MenYou can’t handle the truth!
1992தேவர் மகன்என்ன, திங்கற கையில கழுவணும், கழுவற கையிலே திங்கணும்
1994Pulp FictionThe path of the righteous man is beset on all sides by the inequities of the selfish and the tyranny of evil men
1995Apollo 13Houston, we have a problem
1995பாட்ஷாநான் ஒரு தடவை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி
1996Jerry MaguireShow me the money!
1999Sixth SenseI see dead people
2000அலைபாயுதேநீ அழகா இருக்கேன்னு நினைக்கல
2001மனதை திருடிவிட்டாய்சிங் இன் த ரைன், ஐ அம் சொய்ங் இன் த ரைன்
2003வின்னர்ஒத்துக்கிடறேன். உன் தாய் பத்தினிதான்னு ஒத்துக்கிடறேன்
2003வின்னர்என்னை இது வரை யாரும் அடிச்சதில்லை.

போன வாரம்தானே அடிச்சேன்?

அது போன வாரம், நான் சொல்றது இந்த வாரம்.

2003வின்னர்இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்க!
2010நகரம்எல்லாரும் பாத்துக்கங்க, நானும் ரௌடிதான்!
2010நகரம்பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு
2010நகரம்என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?
20103 IdiotsAll izz well

ஜாக் ஹிக்கின்ஸ் மறைவு

பிரபல சாகச நாவல் எழுத்தாளர் ஜாக் ஹிக்கின்ஸ் சில நாட்களுக்கு முன்னால் மறைந்தார்.

என் சிறு வயதில் நான் விரும்பிப் படித்த சாகச நாவல் எழுத்தாளர்களில் ஹிக்கின்ஸ் ஒருவர். 85 நாவல்கள் எழுதி இருக்கிறார். Eagle Has Landed (1975) அவரை வெற்றிகரமான எழுத்தாளராக ஆக்கியது. அதற்கு முன் ராஜேஷ்குமார் தரத்தில் நிறைய pulp நாவல்கள். Eagle Has Landed-ஏ pulp நாவல் என்றும் சொல்லலாம்தான், ஆனால் கொஞ்சம் உயர்தர pulp நாவல். அதற்குப் பிறகும் பல நாவல்கள் எழுதி இருக்கிறார். எதுவும் இந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் சில நாவல்கள் – Storm Warning (1973), Prayer for the Dying (1976) – இந்தத் தரத்தில் இருந்தது என்று சிறு வயதில் நினைத்தேன். இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. என் பதின்ம வயதுகளில் Exocet (1983) என்ற நாவலும் பிரபலமாக இருந்தது. 1982-இல் நடந்த ஃபாக்லண்ட்ஸ் போரில் எக்சோசெட் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்று நினைவு.

ஹிக்கின்ஸ் மீண்டும் மீண்டும் கையாண்ட கரு அயர்லாந்து கலவரம்/போர். IRAவை களமாக வைத்து நிறைய எழுதி இருக்கிறார்.

நான் படித்த முதல் நாவலும் Eagle Has Landed-தான். 15, 16 வயதில் படித்தேன். ஜெர்மானிய படை வீரர்களை உயர்ந்த பண்புகள் உள்ள வீரர்களாக சித்தரித்ததுதான் – குறிப்பாக திட்டம் வகுக்கும் மாக்ஸ் ராடல், ஜெர்மானிய தளபதி கர்ட் ஸ்டைனர், அவரது துணை அதிகாரி ரிட்டர் நியூமன், அவர்களுக்கு உதவியாக வரும் ஐரிஷ்கார லியம் டெவ்லின், கப்பல் தலைவர் கோனிக், விமானம் ஓட்டும் பீட்டர் கெரிக் ஆகியோரின் நாயகத் தன்மைதான் அந்த நாவலை சாதாரண சாகச நாவல் என்ற நிலையிலிருந்து உயர்த்தியது என்பதெல்லாம் பிற்காலத்தில்தான் புரிந்தது. நீர் ஏவுகணைகள் (torpedos) மேல் பயணித்து அவற்றை எதிரி கப்பல்கள் மீது செலுத்துவது, ஆங்கிலேயப் பிரதமர் சர்ச்சிலை இங்கிலாந்திலிருந்து கடத்தி வரப் போடப்படும் திட்டங்கள், ஆற்றில் விழுந்த சிறுமியைக் காப்பாற்ற ஒரு ஜெர்மானிய வீரன் தன் உயிரைக் கொடுப்பது, அந்தத் தியாகத்தின் மூலமே திட்டம் தோல்வி அடைவது, ஆழமான காதல், அந்தக் காதல் சாகசக் கதையை முன்னே நகர்த்த தேவையாக இருப்பது, கடைசியில் சர்ச்சில் பற்றிய திருப்பம் எல்லாம் அந்த வயதில் மனதை மிகவும் கவர்ந்தது. எடுத்தால் கீழே வைக்க முடியாது.

மைக்கேல் கெய்ன், டொனல்ட் சதர்லாண்ட், ராபர்ட் டுவால் நடித்து 1976-இல் திரைப்படமாகவும் வந்தது.

வேறு சில நாவல்களைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. பால் ஷவாஸ் (Paul Chavasse) என்ற உளவாளியை வைத்து ஒரு சீரிசை ஆரம்பித்தார். Bormann Testament (1962) எல்லாம் சுமாரான pulp நாவல்களே.

ஷான் டில்லன் (Sean Dillon) சீரிஸில் சில கதைகளை மட்டுமே படித்தேன். A Devil Is Waiting (2012), White House Connection (1999) போன்ற நாவல்கள் sloppy ஆக இருந்தன.

என் கண்ணில் ஹிக்கின்ஸை – அதுவும் Eagle Has Landed நாவலை பதின்ம வயதில் படிப்பதுதான் உத்தமம். அதையே இன்று படிக்கும்போது மிகைப்படுத்தி இருப்பது தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

சுஜாதா: பிரிவோம் சந்திப்போம்

பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.

30-35 வருஷங்களுக்கு முன் விகடனில் பிரிவோம் சந்திப்போம் தொடர்கதையாக வந்தது. அப்போதெல்லாம் சுஜாதாவின் சாகசக் கதைகள்தான் எனக்கு comfort-food ஆக இருந்தது. இதுவோ காதல் கதை. அப்போதெல்லாம் காதல் கதைகள் என்றால் பிடிக்காது. ஒரு வாரம் படித்தால் அடுத்த வாரம் விட்டுவிடுவேன்.

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் comfort-food ஆக சுஜாதா நாவல் ஒன்றைத் தேடினேன். இது கண்ணில் பட்டதும் சரி முழுவதுமாகப் படித்துப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன்.

கதையில் அங்கங்கே ஓட்டைகள் தெரிந்தாலும் நாயகன் ரகுவின் முதல் காதல், காதல் முறிந்ததால் ஏற்பட்ட காயம், அடி வாங்கியதாலேயே முழுவதும் மறக்க முடியாமல் – not able to completely move on – தவிப்பது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது “காதலி” ரத்னாவின் பாத்திரம், திருமணத்துக்கு முந்தைய மதுவின் சித்திரம், ரகுவின் அப்பாவின் அறிவுபூர்வமான அணுகுமுறை எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

ஆனால் ரகுவின் அப்பா சரியாக ரகுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்போது இன்னொரு பெண்ணை “வைத்துக் கொள்வது” என்னடா சினிமாத்தனமாக இருக்கிறதே என்று தோன்ற வைக்கிறது. ராதாகிருஷ்ணன் மனைவியை முன்னாள் காதலனோடு ஊர் சுற்ற அனுப்புவது என்னடா தெலுகு சினிமாத்தனமாக இருக்கிறதேன் என்று நினைக்க வைக்கிறது. எதற்காக அனுப்ப வேண்டும்? ரத்னாவோடு நிச்சயதார்த்தம் என்றால் சரியாக அங்கே மது வந்து காரியத்தைக் கெடுக்கிறாள்.

ரகுவின் இளிச்சவாய்த்தனம் நிச்சயமாக அந்தக் கால இளைஞர்களால் அவன் பாத்திரத்தில் தன்னை கொஞ்சமாவது காண வைத்திருக்கும். (தொடர்கதை வந்தது இதயம் திரைப்பட முரளி காலம்…)

அமெரிக்காவின் சித்தரிப்பு சில சமயங்களில் புன்னகைக்க வைக்கிறது. குறிப்பாக இந்தியாவை மறக்க முடியாத முதல் தலைமுறையின் கலாசாரத் தடுமாறல்கள்.

வாரப்பத்திரிகை தொடர்கதையில் not able to completely move on என்பதை அருமையாக, உண்மையாக சித்தரிப்பது சுஜாதாவின் திறமையை உணர வைக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்பதால் சேர்க்கப்பட்டிருக்கும் சினிமாத்தனமான நிகழ்ச்சிகள் எத்தனை திறமை வாய்ந்த எழுத்தாளரையும் நீர்த்துப் போக வைக்கும் என்பதை புரிய வைக்கிறது. சுஜாதா வாரப் பத்திரிகை பிராபல்யம் என்ற மாயைக்குள் சிக்காமல் இருந்தால்… என்று பெருமூச்சு விட வைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்