சில வாரங்களுக்கு முன் தற்செயலாக சிங்காரவேலு பாலசுப்ரமணியம் அவர்களின் வீடியோக்கள் என் கண்ணில் பட்டன. பல கதைகளை அவர் உணர்ச்சிகரமாக வாசித்து அதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயமோகன், தி.ஜா. என்று ஜாம்பவான்களோடு நின்றுவிடாமல் எப்படியோ என் போன்றவர்களின் கதைகளையும் ஒலி வடிவம் ஆக்கி இருக்கிறார்.
நான் அப்டியே ஷாக்காயிட்டேன்! கதை எழுதுவது நின்று போயே வருஷங்கள் ஆகிவிட்டன. இவர் கண்ணில் என் மகாபாரதக் கதைகள் பட்டு, அவருக்கும் பிடித்திருந்து, அதை ஒலி வடிவம் ஆக்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறது! என் மனமார்ந்த நன்றி!
worldcat.org என்பது உலகில் உள்ள அத்தனை புத்தகங்களையும் பட்டியல் போடும் முயற்சி. பல நூலகங்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களின் விவரங்களை இந்த தளத்தின் மூலம் தொகுத்திருக்கின்றன. http://www.oclc.org என்பது இந்த நூலகங்களின் கூட்டுறவு இயக்கம்.
இப்படி நூலகங்கள் தங்கள் விவரங்களைக் கொடுத்தால் எந்தப் புத்தகங்கள் பல காலமாக பிரபலமாக இருக்கின்றன, எவை classics என்று கண்டுபிடிக்கலாம் இல்லையா? அப்படி போடப்பட்ட பட்டியல்தான் இது.
டாப் டென் புத்தகங்கள்:
Don Quixote (Cervantes, 1605-1615)
Alice’s Adventures in Wonderland (Lewis Caroll, 1865)
Good Will Hunting (1997) நல்ல திரைப்படம். . சிறந்த நடிப்பு. ஆனால் என்னவோ குறைகிறது.
லட்சத்தில் ஒருவர்தான் ஏதாவது துறையில் மேதையாக இருக்கிறார்கள். கோடியில் ஒருவர்தான் மேதையாகவே பிறக்கிறார்கள். ஜெயமோகனும் விஸ்வநாதன் ஆனந்தும் மேதைகள், ஆனால் என் போன்ற சாதாரணர்களுக்கும் விடாமுயற்சியோடு உழைத்தால் அவர்கள் நிலையை அடைய 0.0001% வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ராமானுஜனாகவோ பாபி ஃபிஷராகவோ மாற முடியாது. ராமானுஜனின் மூளை வேறு விதமாகதான் செயல்பட்டிருக்க வேண்டும். பாபி ஃபிஷரின் மேதமையும் கிறுக்குத்தனமும் தொடர்புள்ளவை.
மேதமை, மேதமையின் பிரச்சினகள் என்ற கருக்கள் என்னை எப்போதும் கவர்வன. அதிலும் இந்தத் திரைப்படம் கணிதப் பின்புலம் கொண்டது. திரைப்படம் வெளியானபோதும் சரி, 25 வருஷம் கழித்து மீண்டும் பார்த்தபோதும் சரி, இந்தத் திரைப்படம் எனக்கு ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்று புரிகிறது. திரைப்படத்தின் பல இடங்கள் எனக்கு பிடித்தமானவை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் விவரிக்கப்படும் பிரச்சினைகள் எனக்கு கொஞ்சம் எளிமையாக இருக்கின்றன. அதனால் என்னவோ குறைகிறது என்று தோன்றுகிறதோ என்னவோ.
Will Hunting and Friends
இளைஞன் வில் ஹண்டிங் எம்ஐடியில் சுத்திகரிப்பு பணியாளன். அநாதை. பிறவி மேதை. தானாகவே கணிதம் உட்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவன் நண்பர்கள் பெரிதாகப் படிக்காதவர்கள். உடல் உழைப்பால் வாழ்ப்வர்கள். ஆனால் அவர்கள்தான் அவன் உலகம். மேலும் படிக்கப் போனால், தன் நண்பர்களின் உலகத்திலிருந்து தான் விலக நேரிடும் என்று உணர்ந்திருக்கிறான். அதனால் தன் மேதமையை மறைக்கிறான், அவர்களோடு சுற்றுகிறான், குடிக்கிறான், சண்டை போடுகிறான், அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிறான்.
Will Hunting Solving a Problem
புகழ் பெற்ற கணிதப் பேராசிரியர் லாம்பா கடினமான ஒரு கேள்வியை கரும்பலகையில் எழுதி மாணவர்களை அதற்கு விடை தரும்படி சவால் விடுகிறார். வில் யாரும் இல்லாதபோது அதன் விடையை வில் எழுதி வைக்கிறான். யார் விடையை கண்டுபிடித்தது, யார் அந்த சிறந்த மாணவன் என்று எல்லாரும் தேடுகிறார்கள். லாம்பா இன்னும் கடினமான கேள்வியை – கரும்பலகையில் எழுதி வைக்கிறார். வில் அதற்கும் விடை எழுதும்போது அவனைப் பார்க்கிறார். வில் ஓடிவிடுகிறான். லாம்பா அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். வில்லுக்கு சண்டை ஒன்றில் மாட்டிக் கொண்டு சிறைக்கு செல்லும் நிலை. சிறையைத் தவிர்க்க லாம்பாவிடம் பாடம் கற்கவும், ஒரு மனநிலை மருத்துவரை சந்திக்கவும் வில் ஒத்துக் கொள்கிறான்.
மனநிலை மருத்துவர்களோடு வில் ஒத்துழைக்க மறுக்கிறான். லாம்பாவை விடவும் அவனுக்கு கணிதம் சுலபமாக இருக்கிறது. அதனால் லாம்பாவிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறான். லாம்பா வில்லை எப்படியாவது கணிதத்தில் மும்முரமாக ஈடுபட வைக்க வேண்டும் என்று முனைகிறார். தன் பழைய நண்பன் ஷானை அவனுக்கு மனநிலை மருத்துவராக ஏற்பாடு செய்கிறார்.
ஷான் தன் மனைவி இறந்த துக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறான். முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும் வில்லோடு ஷானுக்கு நல்ல உறவு ஏற்படுகிறது. வில் ஸ்கைலர் என்ற பணக்கார, ஹார்வர்ட் கல்லூரி மாணவியால் ஈர்க்கப்படுகிறான். வில்லின் நெருங்கிய நண்பன் சக்கி வில் மேலே படிக்காமல் தங்களோடு சுற்றிக் கொண்டிருப்பது அவனுக்கு வருத்தம்தான் என்பதை வில்லிடம் சொல்கிறான். வில் தன் நண்பர்களின் உலகத்தை விட்டு தான் போக வேண்டிய அறிவுலகத்துக்கு செல்கிறான்.
திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் பேராசிரியர் லாம்பா. அவர் கணிதத்தில் பல சாதனைகள் புரிந்திருக்கிறார், பல பரிசுகளை வென்றிருக்கிறார். ஆனால் வில் ஹண்டிங் வேற லெவல் என்பதை உணர்கிறார். வில் ஒரு தேற்றம் உள்ள காகிதத்தை எரிக்கும்போது அவர் பேசுவது என் உள்ளத்தைத் தொட்ட காட்சி.
மாட் டேமன், பென் ஆஃப்லெக், ராபின் வில்லியம்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கர்ட் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராபின் வில்லியம்ஸ் தன் நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றார். திரைக்கதைக்காக மாட் டேமன்+பென் ஆஃப்லெக் இருவரும் ஆஸ்கர் விருது பெற்றனர்.
எனக்கு என்னவோ குறைந்தாலும் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
காமிக்ஸ், அதுவும் சாகச காமிக்ஸ் அறிமுகமானது இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ மூலம்தான். அதற்குப் பிறகு முத்து காமிக்ஸில் பிறகு வேறு நாயகர்கள் வந்தாலும் – ரிப் கிர்பி, சிஸ்கோ கிட், மாண்ட்ரேக் மாதிரி – யாரும் முதல் மூவர் அளவுக்கு மனதைக் கவரவில்லை. ஓரளவு அருகே வந்தது ஃபாண்டம் மட்டுமே.
ஃபாண்டம் ஏறக்குறைய டார்ஜான். நீண்ட பாரம்பரியம் உள்ள டார்ஜான். கதைகள் தனிப்பட்ட முறையில் எதுவும் பெரிதாக சுவாரசியப்படவில்லைதான். ஆனால் மண்டையோட்டு குகை, பந்தர் பிக்மிக்கள், கதை சொல்லும் மோஸ், பாண்டமின் ஓநாய், அவரது வெள்ளை குதிரை, பல தலைமுறை ஃபாண்டம்கள் எழுதி வைத்திருக்கும் சாகச வரலாறு, மண்டையோட்டு முத்திரை பதிக்கும் அவரது மோதிரம், இவைதான் காமிக்ஸ்களை சுவாரசியப்படுத்தின.
முதல் ஃபாண்டம் ஐநூறு அறுநூறு வருஷங்களுக்கு முன் கப்பல் உடைந்து ஆஃப்ரிக்காவின் காடுகளில் வந்து சேர்கிறார். பிக்மிக்கள் அவரது நண்பர்களாகிறார்கள். கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடுசதை தன் சுயதர்மமாகக் கொள்கிறார். அவரது சந்ததியினரும் அப்படியே. காட்டின் காவல்துறை ஒன்றை உருவாக்குகிறார். இன்றைய ஃபாண்டமின் மனைவி டயானா. அவரும் அப்படியே சர்வாதிகாரிகள், கடற்கொள்ளையர்கள் எல்லாரையும் எதிர்த்துப் போராடுகிறார்.
பொதுவாக இன்றைய ஃபாண்டமின் சாகசங்களை விட சென்ற தலைமுறையினரின் சாகசங்கள் எனக்கு சுவாரசியமாக இருக்கும்.
ஃபாண்டம் பாத்திரத்தை படைத்தவர் லீ ஃபாக்.
சமீபத்தில் புத்தகமாக சிலவற்றை படித்தேன். சிறு வயதில் படிக்கத்தான் என்றாலும் எனக்கு நாஸ்டால்ஜியா, அவ்வப்போது புன்னகைத்தேன். எதையாவது படிப்பது என்றால் Story of Phantom, Slave Market of Mucar இரண்டையும் பரிந்துரைக்கிறேன்.
காமிக்ஸாக இல்லாமல் புத்தகமாகப் படித்தவை – Story of Phantom, Slave Market of Mucar, Golden Circle, Veiled Lady, Hydra Monster, Mysterious Ambassador, Mystery of the Sea Horse, Scorpia Menace.
இவை எல்லாம் பத்து வயதிற்குள் படிப்பதற்குத்தான். அதுவும் காமிக்ஸாகப் படிப்பதுதான் உத்தமம். ஆனால் அந்த வயதில் படிக்க மிக சுவாரசியமானவை.