மீண்டும்…

மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. என் குறைகள் பூதாகாரமாகத் தெரிகின்றன, வாழ்க்கையில் ஒன்றுமே கிழிக்கவில்லை, இதில் பதிவு போட்டு ஏன் என் நேரத்தையும் அடுத்தவர் நேரத்தையும் வீணடிக்கிறோம் என்று தோன்றுகிறது.

ஏன் படிக்கப் பிடிக்கும் என்று நினைவுபடுத்திக் கொள்ள ஒரு மேற்கோள் கிடைத்தது. என் சிறு வயது புத்தகப் பித்தை நினைத்து புன்முறுவல் கொள்ள வைத்தது. எங்கே படித்தேன் என்பதுதான் நினைவில்லை, படித்ததை எப்போதோ எழுதி வைத்திருக்கிறேன்.

My love for books sprang from my need to escape the world I was born into, to slide into another where words were straightforward and honest, where there was clearly delineated good and evil, where I found (boys) and girls who were strong and smart and creative and foolish enough to fight dragons, to run away from home to live in museums, to become child spies, to make new friends and build secret gardens.

இத்தனை வயதாகியும் இன்னும் அந்த சிறுவன் எங்கோ என்னுள்ளே இருக்கிறான், அதனால்தான் இன்னும் ஹாரி பாட்டர் உள்ளிட்ட Young Adult புத்தகங்கள், துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள் எல்லாவற்றையும் படிக்கப் பிடிக்கிறது. வால்டர் மிட்டியும் சுப்பையா பிள்ளையும் அதனால்தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஆரம்பித்துத்தான் பார்ப்போமே, எத்தனை நாள் ஓடுகிறதோ ஓடட்டும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: சிசிஃபஸ்

5 thoughts on “மீண்டும்…

 1. ஆர்.வி,

  கடந்த ஐந்து வருடங்களில், நிறைய புதிய எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு, நாவல் எல்லாம் எழுதியிருக்கிறார்கள்.
  நீங்க நீங்க பழைய பன்னீர்செல்வமா வந்து, அதெயெல்லாம் முழுக்க படிச்சு, “இந்த புக்க படிக்கறது வேஸ்ட். என்னத்த எழுதியிருக்காங்க” அப்படின்னாவது விமர்சனம் எழுதவேண்டாமா ? (அப்பதான “என் படைப்பு தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.” பதில் சொல்லமுடியும் 🙂 ).

  கள்ள மௌனம் (அல்லது புறக்கணிப்பை) சாதிக்கும் தமிழ் சூழலை விட எதையாவது எதிர்வினையாற்றும் சமூகம் மேல்.
  புத்தங்களை படித்து பாரோட்டோ, திட்டோ சொல்வதே நம் சூழலில் குறைவு. கடமை உங்களை அழைக்கிறது.. ஆகவே அர்சுனா கொலை புரிக 🙂

  Like

  1. விசு, நான் எழுதறதை படிக்கறவங்களே அபூர்வம், இதுலே “என் படைப்பு தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது” என்றெல்லாம் பதில் வேற சொல்றாங்களா? 🙂

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.