சீவலப்பேரி பாண்டி திரைப்படமாகத்தான் பார்த்திருக்கிறேன். சுமார்தான். சமீபத்தில் எங்கோ புத்தகத்தைப் பார்த்தபோது இது புத்தகமாக வேறு வந்ததா என்று புரட்டிப் பார்த்தேன். பதிவாக எழுத ஒரே காரணம்தான். புத்தகத்தை விட எனக்கு புத்தகம் உருவான விதம் சுவாரசியமாக இருக்கிறது.
ஜூனியர் விகடனில் தொடராக வந்திருக்கிறது. எப்போதுமே இந்த மாதிரி “கள்ளபார்ட்” ஆளுமைகளுக்கு ஒரு கவர்ச்சி உண்டு. அது ஜம்புலிங்க நாடாராகட்டும், சம்பல் கொள்ளைக்காரர்களாகட்டும், ஃபூலான் தேவியாகட்டும், ஆட்டோ சங்கராகட்டும், வீரப்பனாகட்டும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள மக்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இந்த பாண்டியைப் பற்றி சௌபா எப்படி கேள்விப்பட்டார்? ஜூனியர் விகடன் ஆசிரியர் இது ஏதோ பிரபலமாகாத, யாரம் கேள்விப்டாத, வெளியில் தெரியாத் கிராமத்து வெட்டு குத்து கொள்ளை கொலை, இதை எல்லாம் யார் படிப்பார்கள் என்று கேட்கவில்லையா? எப்படியோ பதிவாகி இருக்கிறது, வெற்றி பெற்றிருக்கிறது, திரைப்படமாக மாற்றினால் ஓடும் என்ற அளவுக்கு பிரபலம் ஆகி இருக்கிறது.
சௌபாவின் அணுகுமுறையை பாராட்ட வேண்டும். அவர் பாண்டிக்காக வாதிட்ட வக்கீல்களைப் பார்த்திருக்கிறார், விவர்ம் சேகரித்திருக்கிறார். வக்கீல்களில் ஒருவர் ரத்னவேல் பாண்டியன். பிற்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்.
பாண்டியின் வரலாறு என்ன? யாரோ தூண்டிவிட்டதால் பெரிய மனிதர் ஒருவரை கொலை செய்கிறார். சிறை. ஆனால் தூண்டிவிட்டவர்கள் தன் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுவிட்டார்கள் என்று தெரிந்து தப்பி இருக்கிறார். கொடைக்கானல் பக்கத்தில் தலைமறைவு வாழ்வு. அவ்வப்போது சொந்த ஊர் பக்கம் வந்து திருடுவது. தற்செயலாக தன் மனைவியை “கொன்றுவிடுகிறார்”. அவரைத் தேடி அலையும் காவல்துறை. கடைசியில் பிடிக்கிறார்கள். அவர்தான் என்கவுண்டரில் சுடப்பட்ட முதல் ஆளாம். (அப்படி என்றால் ஜம்புலிங்க நாடார், மலையூர் மம்பட்டியான் எல்லாம் சுடப்பட்டு இறகக்வில்லையா?)
இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்
Rv Please check this link.
https://thiruvarunaisivasu.blogspot.com/?m=1
LikeLike
ரங்கநாதன், பித்ரு சிறுகதை என் அப்பாவின் இறப்பைப் பற்றி நினைக்க வைத்தது. வாழ்த்துக்கள்!
உங்கள் தளத்திலேயே இதை சொல்ல முயற்சி செய்தேன், ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது 🙂
சைதாப்பேட்டைக்காரரா நீங்கள்? எங்கே? நான் கொத்தவால் சாவடித் தெருவில் என் இளமைக் காலத்தில் சில வருஷங்கள் வாழ்ந்திருக்கிறேன்…
LikeLike