லே மாண்டே தேர்வுகள்

1999-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சு பத்திரிகையான லே மாண்டே (இதுதான் சரியான உச்சரிப்பா? Le Monde) சுவாரசியமான கேள்வி ஒன்றைக் கேட்டு நூறு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தது. நீங்கள் படித்தவற்றில் உங்களுக்கு நன்றாக நினைவிருப்பது எந்தப் புத்தகம்?

தமிழில் என் தலைமுறைக்காரர்களுக்கு பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு விஷ்ணுபுரம்?

வசதிக்காக டாப் டென் கீழே. முழு பட்டியலும் இங்கே

  1. ஆல்பர்ட் காமு, Stranger (1942)
  2. மார்சல் ப்ரௌஸ்ட், Remembrance of Things Past (1913–27)
  3. ஃப்ரான்ஸ் காஃப்கா, Trial (1925)
  4. அன்டோயின் டி செயிண்ட்-எக்சூபரி, Little Prince (1943)
  5. ஆண்ட்ரே மால்ரா, Man’s Fate (1933)
  6. லூயி-ஃபெர்டினாண்ட் செலின், Journey to the End of the Night (1932)
  7. ஜான் ஸ்டைன்பெக், Grapes of Wrath (1939)
  8. ஹெமிங்வே, For Whom the Bell Tolls (1940)
  9. அலைன் ஃபோர்னியே, Le Grand Meaulnes (1913)
  10. போரிஸ் வியன், Froth on the Daydream (1947)

நான் இவற்றில் 16 புத்தகங்களைத்தான் படித்திருக்கிறேன். இப்போதுதான் காமுவின் Stranger நாவலை ஆரம்பித்திருக்கிறேன். நீங்கள் படித்தவற்றைப் பற்றி சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்