ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதை (பிரதிபிம்பம்) – மகாபாரதப் பின்புலத்தில் -எழுதினேன். அதை சொல்வனம் இணைய இதழில் பதித்திருக்கிறார்கள். ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி!
வழக்கம் போல என் குருட்டு யோசனைகளில் ஒன்றுதான். வளம் மிகுந்த பாஞ்சால நாட்டின் அரசன் துருபதன் தன் சிறு வயது நண்பனுக்கு கேவலம் ஒரு பசுவைத் தர ஏன் மறுக்க வேண்டும்? மகாபாரதத்தின்படி அது வெறும் அற்பத்தனம்தான். வேறு ஒரு காரணத்தை கற்பனை செய்திருக்கிறேன். இதற்கு மூலம் ராஜாஜியின் வியாசர் விருந்தில் வரும் ஒரு வரிதான் – ஏதோ ஒரு நாள் போரில் துரோணர் திருஷ்டத்யுமனோடு போரிடுவதைத் தவிர்ப்பார். வியாசர் விருந்தின்படி திருஷ்டத்யும்னன் கையால்தான் தனக்கு இறப்பு என்பதால் தவிர்ப்பார், நான் வேறு மாதிரி எழுதி இருக்கிறேன்.
எழுதி ஒரு வருஷத்துக்கு மேலாகிவிட்டது; மகாபாரத சிறுகதை என்றால் தமிழ்ஹிந்து தளத்தில்தான் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்வேன். யாரோ ஒரு ஹிந்துத்துவ மேதாவி பெண்களை பத்து பனிரண்டு வயதில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எழுதிய கட்டுரையை அவர்கள் பதித்ததிலிருந்து, அப்படி பதித்தற்கு ஜடாயு சப்பைக்கட்டு கட்டிய பிறகு, வெறுத்துப் போய்விட்டது, அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பதே நின்றுவிட்டது. ஒரு வருஷத்திற்குப் பிறகுதான் சொல்வனம் இதழிற்கு அனுப்பலாம் என்று தோன்றியது. நம்ம சாமர்த்தியம் அப்படி!
படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்
தொடர்புடைய சுட்டி: பிரதிபிம்பம் சிறுகதை
கொஞ்சம் கண்ணை கட்டிவிட்டது. திரும்ப திரும்ப வரும் வரிகள் கொஞ்சம் குழப்புகின்றன. கதைக் கரு நன்றாக உள்ளது.
LikeLike