2022க்கான இயல் விருது பாவண்ணனுக்கும் லெ. முருகபூபதிக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் புனைவுலகம் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு பாவண்ணனைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. தேவைப்படுபவர்கள் இங்கே படித்துக் கொள்ளுங்கள். சிறந்த புனைவுகள் பல எழுதி இருந்தாலும், அவர் பேசப்படுவது திண்ணை தளத்தில் எழுதிய எனக்குப் பிடித்த கதைகள் தொடராலும் (என் ஆதாரப் பதிவுகளில் – ஆதாரப்பதிவு என்றால் என்ன என்று குழம்புபவர்களுக்கு – reference-ஐத்தான் இப்படி தமிழ்ப்படுத்தி இருக்கிறேன்) ஒன்று. பைரப்பாவின் பர்வா புத்தகத்தை கன்னடத்திலிருந்து சிறப்பாக மொழிபெயர்த்ததாலும்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதாவது அவரது விமரிசனங்களும் மொழிபெயர்ப்புகளும் அவரது புனைவுத்திறனை அத்தனை பிரபலம் அடையாமல் தடுக்கின்றனவோ என்று ஒரு சந்தேகம்.
அவரது பாய்மரக்கப்பல் நாவலை ரொம்ப நாளாகத் திறக்காமல் வைத்திருக்கிறேன், இந்த உந்துதலிலாவது படிக்க வேண்டும்.
ஜெயமோகன் அவரது சிறந்த நாவல்கள் பட்டியலில் (என் இன்னொரு ஆதாரப் பதிவு) பாவண்ணனின் சிதறல்கள் (1990) நாவலை சேர்க்கிறார். பேசுதல், முள் ஆகிய சிறுகதைகளை சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவுக்கு பாய்மரக்கப்பல் நாவல், மற்றும் விளிம்பின் காலம் சிறுகதை
முருகபூபதி புலம் பெயர்ந்த ஈழத் தமிழர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. இனி மேல்தான் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பாவண்ணன் பக்கம், விருதுகள்
தொடர்புடைய சுட்டிகள்:
பாவண்ணன் தளம்
பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் தொடர்
தமிழ் விக்கியில் பாவண்ணன், முருகபூபதி
பாவண்ணன் பேட்டி