வேறு சில பொங்கல் தருணங்களிலும் இந்தக் கதையை பகிர்ந்திருக்கிறேன். அப்போது சொந்த வாழ்க்கையின் இழப்புகள், ஆங்காரம் எல்லாம் லா.ச.ரா.வின் மண் சிறுகதையை நினைவு கூர வைத்தன. இந்த முறை ஆங்காரம் எல்லாம் கொஞ்சம் நீர்த்துப் போயிருக்கிறது, கலக்கி இருக்கிறார் என்பதால் பகிர்கிறேன்.
ஆனால் பொங்கல் புனைவு என்றவுடன் இப்போதெல்லாம் முதலில் நினைவு வருவது மண் சிறுகதைதான். மங்கல நாளில் இத்தனை ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையை பகிர்வது தேவையா என்றெல்லாம் கேட்கக் கூடாது. லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகளை நினைவில் கொள்ளுங்கள்!
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…
மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. கதைச் சுருக்கம் எல்லாம் எழுதி அதை நீங்கள் படிப்பதை விட நேராக சிறுகதையைப் படிப்பது உத்தமம். இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்
மிக மிக அருமையான சிறுகதை. ஒரு நம்பிக்கை அவ்வளவு தானே எல்லாம் என்று சொல்லும் கதை இது. அந்த குழந்தை படைத்திருக்கலாம். பிடித்திருந்தால் பொங்கல் பானைகள் ஊர் மக்களுக்கு ஏன் இலவசமாக கூட கிடைத்திருக்கும். செங்கல்பட்டு வெயில் பின்னணி மிக மிக அழகாக கதையுடன் பொருந்தி வந்திருக்கிறது. பகிர்ந்தமைக்கும் பரிந்துரத் அமைக்கும் நன்றி நன்றி.
LikeLike