சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்” (மீள்பதிவு)

சுஜாதாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று, ஆனால் பெரிதாக கவனம் பெறவில்லை. கச்சிதமான கதை. எங்கோ ஒரு மலையடிவாரத்தில் வைரங்கள் இருக்கின்றன. தற்செயலாக தெரிந்து கொள்ளும் ஒரு பணக்கார சேட்டுப் பையன் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறான். இதில் ஒரு கிளீனர் சிறுவன், ஒரு ஊமைச் சிறுமி என்று பாத்திரங்கள். கிளீனராக வரும் சிறுவன் கலக்கலான பாத்திரப் படைப்பு. சுஜாதாவுக்கு எப்போதும் இந்த மாதிரி உழைக்கும் வர்க்க சிறுவர்களை படைப்பது பைன் ஹாத் கா கேல். அவர்கள் மேல் … Continue reading சுஜாதாவின் குறுநாவல் – “வைரங்கள்” (மீள்பதிவு)

கோவை ஞானி – அஞ்சலி

கோவை ஞானியை நான் ஜெயமோகன் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அவருடைய கருத்துக்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறதா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அதுவும் மார்க்சியம் என்றால் கொஞ்சம் விலகிவிடுவது வழக்கம். அவருக்கு அஞ்சலி எழுதும் அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லைதான். ஆனால் அவரது தளம் கண்ணில் பட்டது. அதை நாலு பேர் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் இந்தப் பதிவை எழுதுகிறேன். காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை. ஞானியின் இலக்கியத் தேர்வுகள் என்று எப்போதோ … Continue reading கோவை ஞானி – அஞ்சலி

ஃபெட்னா பரிந்துரைகள்

ஃபெட்னா அமெரிக்காவின் உள்ள பல தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பு பரிந்துரைத்த 100 சிறந்த தமிழ்ப் புத்தகங்களின் பட்டியலை இணைத்திருக்கிறேன் . நாவல், சிறுகதைகள், கவிதைகள், அபுனைவுகள் என்று எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். புனைவுகள் தேர்வுகளில் எனக்கு அனேகமாக இசைவுண்டு. சித்திரப்பாவை தவிர. புனைவுகளைப் பற்றி மட்டுமே நான் தைரியமாகப் பேச முடியும். கவிதைகளுக்கான என்னுடைய standard உலகத்தோடு ஒத்துப் போவதில்லை. ஆனால் அவர்கள் தேர்வுகளில் பாரதியார் கவிதைகள், பிச்சமூர்த்தி கவிதைகள், ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை … Continue reading ஃபெட்னா பரிந்துரைகள்

எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

இந்த ஆர்வி நானில்லை. ஒரு காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர். கண்ணன் என்று சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். போன தலைமுறைக்காரர்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரிந்திருக்கும். அவர் 30-40களில் வெளிவந்த சிறுகதைகளில் தனக்கு பிடித்தவற்றை பரிந்துரைப்பதை இங்கே மற்றும் இங்கே பார்த்தேன். (பசுபதி சாரின் தளத்தில்தான்) இவற்றுள் சிலவற்றையே நான் படித்திருக்கிறேன். படித்தவரை எதுவும் என் பட்டியலில் இடம் பெறாது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு கண்ணாடியாக இருக்கின்றன. வசதிக்காக இங்கே பட்டியலாக: வ.வே.சு. … Continue reading எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

ரா.கி. ரங்கராஜனின் ‘நான், கிருஷ்ணதேவராயன்’

எனக்கு ரா.கி.ர.வைப் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை. என் கண்ணில் அவர் இலக்கியம் படைக்கவில்லை. அவரது முக்கியத்துவம் குமுதத்தின் வெற்றியின் மூலம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதில் அவரது பங்களிப்புதான். கறாராகச் சொல்வதென்றால் அவர் குமுதத்தின் பக்கங்களை நிரப்பியவர், அவ்வளவுதான். ரா.கி.ர.வின் பலம் வடிவ கச்சிதம்தான். முடிவை நோக்கி சீராகப் போகும் கதைப் பின்னல். சரளமான நடை. அவ்வளவுதான். ஆனால் தமிழில் சரித்திர நாவல்கள் என்பது கொஞ்சம் நிறையவே பலவீனமான sub-genre. சாண்டில்யனிலிருந்து தொடங்கி அனேகரும் கல்கியைத்தான் நகல் … Continue reading ரா.கி. ரங்கராஜனின் ‘நான், கிருஷ்ணதேவராயன்’

நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும். என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. … Continue reading நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு

நண்பர் செல்வராஜ் பல தொகுப்புகள், பரிந்துரைகளைத் தேடி இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். Wisdom of the Crowds தேர்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஓவர் டு செல்வராஜ்! சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு … Continue reading 150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு

க.நா.சு.வின் நாவல் பட்டியல்

ஒரு தலைமுறைக்கு முன்னால் க.நா.சு.வைப் பற்றி ஒரு ஜோக் உண்டு. எல்லா எழுத்தாளர்களும் க.நா.சு. எல்லாம் என்னய்யா விமர்சனம் எழுதறாரு, வெறுமனே பட்டியல்தான்யா போடறாரு, அது சரி அவர் சமீபத்தில போட்ட பட்டியல்ல என் நாவல் இருக்கோ என்பார்களாம். நண்பர் செல்வராஜு உதவியால் க.நா.சு. போட்ட பட்டியல் ஒன்று கிடைத்தது. சில நாவல்களை – சத்தியமேவ, அறுவடை, நாய்கள், நான்கு அத்தியாயங்கள், பெண் ஜன்மம் – எழுதியது யார் என்று கூடத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்! … Continue reading க.நா.சு.வின் நாவல் பட்டியல்

இலக்கிய விமர்சகனின் பணி

யார் சிறந்த வாசகன் பதிவின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். என் வாசிப்பு அனுபவம் என்னுடையது மட்டுமே என்று சொல்லி இருந்தேன். ஒரு படைப்பில் எனக்கு கிடைக்கும் தரிசனங்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரிக்க அதிகரிக்க, அது என் தரவரிசையில் உயர்ந்த இடத்துக்குப் போகிறது. அனிதா இளம் மனைவியை விட விஷ்ணுபுரத்தை நான் மிக உயர்ந்த இடத்தில் வைக்க அதுதான் காரணம். ஒரு படைப்பு என்ன மேலும் சிந்திக்க வைக்கும்போது, புதிய உலகங்களை பார்க்க/கற்பனை செய்ய உதவும்போது, மனித இயல்பை … Continue reading இலக்கிய விமர்சகனின் பணி