வேதசகாயகுமார் – அஞ்சலி

வேதசகாயகுமாருக்கு பல முகங்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித் தேடிப் பதிப்பித்த முன்னோடி அவர். எனக்குத் தெரிந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் அதுவே அவரது முதன்மையான அடையாளம். அவரது தேடல் அபூர்வமானது. அர்ப்பணிப்பு மிகுந்தது. கிடைத்தால் படிப்போம், இல்லாவிட்டால் இல்லை என்று என் போல சோம்பிக் கிடப்பவர் அல்லர். ஆராய்ச்சி மாணவரான அவரை வ.ரா.வின் மனைவி வீட்டுக்குள் விட மறுத்தபோது வீட்டுவாசலில் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்து அவரது மனதை மாற்றி இருக்கிறார். எதற்காக? … Continue reading வேதசகாயகுமார் – அஞ்சலி

கோவை ஞானி – அஞ்சலி

கோவை ஞானியை நான் ஜெயமோகன் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அவருடைய கருத்துக்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறதா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அதுவும் மார்க்சியம் என்றால் கொஞ்சம் விலகிவிடுவது வழக்கம். அவருக்கு அஞ்சலி எழுதும் அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லைதான். ஆனால் அவரது தளம் கண்ணில் பட்டது. அதை நாலு பேர் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் இந்தப் பதிவை எழுதுகிறேன். காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை. ஞானியின் இலக்கியத் தேர்வுகள் என்று எப்போதோ … Continue reading கோவை ஞானி – அஞ்சலி

சுதந்திரப் போராட்ட நாவல்கள்

மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்! ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே! கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை) கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்) கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன் கு. ராஜவேலு: 1942 கோவி. … Continue reading சுதந்திரப் போராட்ட நாவல்கள்

ஃபெட்னா பரிந்துரைகள்

ஃபெட்னா அமெரிக்காவின் உள்ள பல தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பு பரிந்துரைத்த 100 சிறந்த தமிழ்ப் புத்தகங்களின் பட்டியலை இணைத்திருக்கிறேன் . நாவல், சிறுகதைகள், கவிதைகள், அபுனைவுகள் என்று எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். புனைவுகள் தேர்வுகளில் எனக்கு அனேகமாக இசைவுண்டு. சித்திரப்பாவை தவிர. புனைவுகளைப் பற்றி மட்டுமே நான் தைரியமாகப் பேச முடியும். கவிதைகளுக்கான என்னுடைய standard உலகத்தோடு ஒத்துப் போவதில்லை. ஆனால் அவர்கள் தேர்வுகளில் பாரதியார் கவிதைகள், பிச்சமூர்த்தி கவிதைகள், ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை … Continue reading ஃபெட்னா பரிந்துரைகள்

கரோனா காலத்தில் படிக்க – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

(மீள்பதிவு) ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் பட்டியல் என்னுடைய reference-களில் ஒன்று. கரோனா காலம். வீட்டில் அடைந்து கிடக்கிறோம். கிடைத்த வரைக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன், அப்டேட் செய்திருக்கிறேன்.. படித்துப் பாருங்களேன்! தோழி அருணா ஒரு காலத்தில் தேடிப் பிடித்து பல சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்தார். அவரது வார்த்தைகளில்: ஊட்டி முகாமிற்காக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. மற்றும் தி.ஜா.வின் படைப்புகளை படிக்கும் முயற்சியில், ஜெ.மோவின் பரிந்துரை சிறுகதைகளை முதலில் படிக்கலாம் என்று எடுத்தேன். முன்னரே அனுப்பிய இந்த சுட்டியில் இன்று … Continue reading கரோனா காலத்தில் படிக்க – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி? மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். … Continue reading மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

2019 பரிந்துரைகள்

2019-இல் படிக்கும் சூழ்நிலை இல்லை. பல சொந்தப் பிரச்சினைகள்; வேலைப்பளு மிக அதிகம். அலுவலகத்துக்கு ட்ரெயினில் செல்லும் நேரத்தில் படித்ததுதான். போன ஆண்டுதான் என் அப்பா இறந்தார். அந்த நேரத்தில் கைகொடுத்த எழுத்தாளர் அம்பைக்கு நன்றி! – அவர் எழுதிய பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் அப்போது கைகொடுத்தது. சுஜாதாவின் அப்பா அன்புள்ள அப்பா கட்டுரையும்.  அப்பா என் சிறு வயதில் எனக்கு சொன்ன கதையை –ஆர்.எல். ஸ்டீவன்சனின் Treasure Island – மீண்டும் படிக்கும்போது ஒரு wry … Continue reading 2019 பரிந்துரைகள்

எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

இந்த ஆர்வி நானில்லை. ஒரு காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர். கண்ணன் என்று சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். போன தலைமுறைக்காரர்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரிந்திருக்கும். அவர் 30-40களில் வெளிவந்த சிறுகதைகளில் தனக்கு பிடித்தவற்றை பரிந்துரைப்பதை இங்கே மற்றும் இங்கே பார்த்தேன். (பசுபதி சாரின் தளத்தில்தான்) இவற்றுள் சிலவற்றையே நான் படித்திருக்கிறேன். படித்தவரை எதுவும் என் பட்டியலில் இடம் பெறாது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு கண்ணாடியாக இருக்கின்றன. வசதிக்காக இங்கே பட்டியலாக: வ.வே.சு. … Continue reading எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்