மோகமுள் பிறந்த கதை

சொல்வனத்தில் பார்த்தது. 57 வருஷங்களுக்கு முன்னால் தி.ஜா. இந்த நாவலின் ரிஷிமூலத்தை விவரித்திருக்கிறார். வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். சொல்வனத்துக்கும், சொல்வனத்துக்கு இதை அனுப்பிய லலிதாராமுக்கும், தி.ஜா.விடம் இதைக் கேட்டு வாங்கிய கல்கி பத்திரிகைக்கும் நன்றி! கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றாப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள். “ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?” “சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை … Continue reading மோகமுள் பிறந்த கதை

எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

இந்த ஆர்வி நானில்லை. ஒரு காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர். கண்ணன் என்று சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். போன தலைமுறைக்காரர்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரிந்திருக்கும். அவர் 30-40களில் வெளிவந்த சிறுகதைகளில் தனக்கு பிடித்தவற்றை பரிந்துரைப்பதை இங்கே மற்றும் இங்கே பார்த்தேன். (பசுபதி சாரின் தளத்தில்தான்) இவற்றுள் சிலவற்றையே நான் படித்திருக்கிறேன். படித்தவரை எதுவும் என் பட்டியலில் இடம் பெறாது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு கண்ணாடியாக இருக்கின்றன. வசதிக்காக இங்கே பட்டியலாக: வ.வே.சு. … Continue reading எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”

குருதிப்புனல் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு. இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பாப்புலரானது என்று நினைக்கிறேன்.

அசோகமித்ரன் பேட்டி

விகடன் தடம் இதழில் வந்திருக்கிறது. மிகவும் நல்ல பேட்டி. நிறைவாழ்வுக்குப் பிறகு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத பெருசு. விகடனுக்கு நன்றி! 86 வயது அசோகமித்திரன்! எங்களை எதிர்பார்த்து பால்கனியில் நின்றிருந்தார். பார்த்துச் சிரித்து, கைகளை வாஞ்சையோடு அசைத்து, மேலே வரச் சொன்னார். கதவை முறையாகச் சாத்தி, மின்விசிறியை அளவாக வைத்து, மிக மிக மெல்லிய குரலில் நலம் விசாரிக்கிறார். ஜன்னலுக்கு வெளியே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பக்கத்துக் கட்டடத்தில ரெண்டு பறவைகள் இருந்துச்சு. ஒண்ணு … Continue reading அசோகமித்ரன் பேட்டி

நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

இது நண்பர் செல்வராஜின் பதிவு. குறைந்தது நான்கு பரிந்துரை (தொகுப்பு, பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டவை) பெற்ற சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பாலகுமாரனின் சின்னச் சின்ன வட்டங்கள் என்ற கதை 4 பரிந்துரை பெற்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது. புதுமைப்பித்தனின் மகாமசானம் 5 பரிந்துரை பெற்றுள்ளது. இந்த கதை திலீப்குமார் தொகுத்து ஏப்ரல் 13-இல் வெளியான The Tamil Story என்ற ஆங்கிலத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த … Continue reading நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு

நண்பர் செல்வராஜ் பல தொகுப்புகள், பரிந்துரைகளைத் தேடி இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். Wisdom of the Crowds தேர்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஓவர் டு செல்வராஜ்! சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு … Continue reading 150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு

தமிழ் நாடகங்கள்

எனக்குத் தெரிந்து தமிழ் நாடகங்களில் இலக்கியம் குறைவு. சுஜாதா, இ.பா., சோ ராமசாமியைத் தவிர்த்துப் பார்த்தால் ஜெயந்தன், ந. முத்துசாமி, மெரினா மூவரைத்தான் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியும். போனால் போகிறது என்று அண்ணாதுரையைச் (ஓரிரவுக்காக) சேர்த்துக் கொள்ளலாம். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், வெ. சாமிநாத சர்மா இவர்களின் முயற்சிகள் எல்லாம் முன்னோடி முயற்சிகள் என்பதைத் தாண்டாது. இதற்கு என்ன காரணம்? தமிழ் நாடகங்கள் என்ன தலைவிதியாலோ ஆரம்பத்திலிருந்தே … Continue reading தமிழ் நாடகங்கள்

பி.எஸ். ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்” சிறுகதை

பி.எஸ். ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்” சிறுகதை பற்றி பாவண்ணன் “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” சீரிஸில் குறிப்பிட்டிருந்தார். அப்போது இதன் மின்வடிவம் கிடைக்கவில்லை, இப்போது அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைக்கிறது. சீரிஸ் பதிவை அப்டேட் செய்திருக்கிறேன். சிறுகதைக்கு வேண்டிய வடிவம், சிறுகதையாக ஆக்கும் வரி எல்லாம் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் கதை என் கண்ணில் சுமார்தான். பாவண்ணன் அலசி இருக்கும் மிச்சக் கதைகளுக்கு மின்வடிவம் இருக்கிறதா? உங்கள் கண்களில் பட்டால் சொல்லுங்கள், சுட்டிகளை இணைத்துவிடலாம். தொடபுர்டைய சுட்டிகள்: அழியாச்சுடர்கள் தளத்தில் … Continue reading பி.எஸ். ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்” சிறுகதை

ராமையா அரியா சிறுகதை – உப்புக் காங்கிரசின் தோற்றமும் முடிவும்

சொல்வனம் இணைய இதழில் இந்த சிறுகதையைப் படித்தேன். புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். சிறுவர்களின் உலகத்தை தமிழ்க் கதைகளில் காண்பது அபூர்வம். ராமையா அரியா அதைக் காண்பிப்பத்தில் வெற்றி அடைந்திருக்கிறார். படித்துப் பாருங்களேன்! ராமையா அரியாவின் இன்னொரு சிறுகதையும் – தந்திப் புரட்சி – எனக்குப் பிடித்திருந்தது. தொகுக்கப்பட்ட பக்கம்: படைப்புகள்

காவியத் தலைவன் விமர்சனம் – பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்தான் கொஞ்சம் வீக்கு

ரொம்ப நாளாச்சு முதல் நாள், முதல் காட்சி பார்த்து. விடுமுறை நாள், எனக்கும் என் மனைவிக்கும் ஏதாவது தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று தோன்றியதால் இங்கே சான் ஹோசேயில் ஒரு தியேட்டரில் காவியத் தலைவனைச் சென்று பார்த்தோம். படத்தின் களன் – இருபது, முப்பதுகளின் நாடக உலகம் – நிறைய ஸ்கோப் உள்ள உலகம். ஜெயமோகன் போன்ற ஒரு ஜீனியசிடம் இந்த மாதிரி களன், ஒரு திரைக்கதையை உருவாக்கு என்றால் பிரித்து மேய்ந்துவிடுவார் என்று எதிர்பார்த்தேன். திரைக்கதை சொதப்பிவிட்டது. … Continue reading காவியத் தலைவன் விமர்சனம் – பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்தான் கொஞ்சம் வீக்கு