Top 100 Thrillers

(மீள்பதிவு) நான் த்ரில்லர்களை, துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவன். பதின்ம வயதில் ஏற்பட்ட மோகம் இன்னும் விடவில்லை. அலிஸ்டர் மக்ளீன் புத்தகங்களை அந்தக் காலத்தில் மிகவும் விரும்பிப் படித்தேன். இன்று மைக்கேல் கானலி, சாரா பாரட்ஸ்கி என்று பலர் இருக்கிறார்கள். என்பிஆர் மக்கள் தேர்வுகளாக டாப் 100 த்ரில்லர் பட்டியல் ஒன்றை 2011-இல் வெளியிட்டிருக்கிறது. முன்னும் ஒரு முறை இதைப் பற்றி எழுதி இருக்கிறேன், இந்த முறை பட்டியலில் நான் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைப்பவற்றை இணைத்திருக்கிறேன். … Continue reading Top 100 Thrillers

ஜான் லெ காரே எழுதிய “Our Kind of Traitor”

லெ காரேயின் (John Le Carre) பெரிய பலம் உளவுத்துறையை சித்தரிப்பது. அவர் காட்டும் உளவுத்துறை, உளவாளிகள் ஜேம்ஸ் பாண்ட் டைப் இல்லை. அவரது உளவாளிகள் குறி பார்த்து சுடுவதில் விற்பன்னர்கள் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஒரு ஆளை எப்படி பின் தொடர்வது, எதிரி முகாமில் இருக்கும் நம்மவர்களோடு எப்படி தொடர்பு வைத்துக் கொள்வது இந்த மாதிரி விஷயங்கள் தெரியும். அப்படிப்பட்ட உளவாளிகள் அவர் உலகத்தில் ஒரு சிறு பகுதிதான். மெயின் ஆர்டிஸ்ட் எல்லாம் ஆஃபீஸ் போய் … Continue reading ஜான் லெ காரே எழுதிய “Our Kind of Traitor”

ஜான் லெ காரே – அஞ்சலி

ஜான் லெ காரே மறைந்தார் என்ற செய்தி வருத்தம் தந்தது. லெ காரே உளவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரது நாவல்கள் பலவும் ஒற்றர் பின்புலத்தைக் கொண்டவை. (இதே போல உளவுத் துறையில் பணிபுரிந்து அந்தப் பின்புலத்தை வைத்து Ashenden என்ற சிறப்பான புத்தகத்தை எழுதியவர் சாமர்செட் மாம்.) ஆனால் அவை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் அல்ல.அவற்றின் நோக்கம் விறுவிறுப்போ, அல்லது மர்மத்தை சுவாரசியமாக கட்டவிழ்ப்பதோ அல்ல. அவை இலக்கியப் படைப்புகள். ஆழ்மனதின் பிரச்சினைகளை, ஒற்றுத் தொழில் … Continue reading ஜான் லெ காரே – அஞ்சலி

ஸ்காட் டூரோவின் “Presumed Innocent”

ஸ்காட் டூரோ த்ரில்லர் எழுத்திலேயே இலக்கியத் தரமாக எழுதுபவர் என்று சொல்லலாம். ஜான் லெ காரேவின் தரத்தில் எழுதுகிறார். தனிப்பட்ட பல நாவல்கள் த்ரில்லர் என்ற அனுபவத்தை கொஞ்சமே தாண்டுகின்றன. ஆனால் மொத்தமாக வைத்துப் பார்த்தால் – கிண்டில் மாவட்டம் (Kindle county), அதன் கோர்ட், வக்கீல்கள், போலீஸ் அமைப்பை மிக அருமையாக கொண்டு வந்திருக்கிறார். பெரும்பாலும் வெள்ளையர்கள் வாழும் ஒரு மாவட்டத்தின் சட்டத் துறையில் பண்பாட்டு பின்புலத்தை காட்டுகிறார். அமெரிக்க நீதித்துறை எப்படி அரசியலோடு பின்னிப் … Continue reading ஸ்காட் டூரோவின் “Presumed Innocent”

ஜான் லெ காரே எழுதிய “Looking Glass War”

ஜான் லெ காரேவின் இன்னொரு சிறந்த படைப்பு. புத்தகம் 1965-இல் வந்திருக்கிறது. உளவுத்துறை என்றால் நம்மில் அனேகருக்கு முதலில் நினைவு வருவது ஜேம்ஸ் பாண்ட்தான். சாகசங்கள், வன்முறை, உலகை மாற்றி அமைக்கக் கூடிய பெரும் ரகசியங்கள் என்றுதான் முதலில் நமக்கு ஒரு பிம்பம் கிடைக்கிறது. ஆனால் சாமர்செட் மாம் (ஆஷண்டன்), எரிக் ஆம்ப்ளர், க்ரஹாம் க்ரீன், ஜான் லெ காரே என்று ஒரு பரம்பரையே அதை மீண்டும் மீண்டும் கட்டுடைத்திருக்கிறது. அதிலும் லெ காரேவின் இந்தப் புத்தகத்தை … Continue reading ஜான் லெ காரே எழுதிய “Looking Glass War”

ஜான் லெ காரேவின் “Spy Who Came in from the Cold”

வண்டியை கொஞ்ச நாளைக்கு த்ரில்லர்கள் பக்கம் ஓட்டுகிறேன். ஜான் லெ காரே அறியப்பட்ட எழுத்தாளரானது Spy Who Came in from the Cold (1963) நாவலுக்குப் பிறகுதான். Well crafted novel. கம்யூனிஸ்ட் கிழக்கு பெர்லினையும் மேற்கு பெர்லினையும் பிரிக்கும் சுவர் இப்போதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. அது வரையில் கிழக்கு ஜெர்மனியில் மேற்குக்காக உளவு பார்த்தவர்கள் மாட்டிக் கொள்வோம் என்று தெரியும்போது சுலபமாக மேற்கு பெர்லினுக்கு ஓடிவிடுவது இப்போது கஷ்டமாகிவிட்டது. இங்கிலாந்துக்காக உளவு பார்க்கும் கார்ல் ரீமெக் … Continue reading ஜான் லெ காரேவின் “Spy Who Came in from the Cold”

ரஷ்யா ஹவுஸ் – ராஜனின் திரைப்பட விமர்சனம்

Espionage நாவல்களின் அரசன் ஜான் லீ காரின் பரம ரசிகன் நான். அனேகமாக அவரது அனைத்து நாவல்களை படித்து விட்டு அதன் சினிமா மற்றும் சீரியல் வெர்ஷன்களையும் தேடிப் பிடித்துப் பார்ப்பவன். மீண்டும் மீண்டும் பார்த்தும் வருபவன். அந்த வகையில் ஜான் லீ காரின் அற்புதமான romantic espionage நாவல்களில் ஒன்று இந்த Russia House. இது பின்னாளில் பழைய ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியும் மிஷைல் ஃபிஃபைரும் நடிக்க சினிமாவாகவும் வந்தது. அந்த நாள் தொடங்கி … Continue reading ரஷ்யா ஹவுஸ் – ராஜனின் திரைப்பட விமர்சனம்

ராஜனின் சினிமா சிபாரிசுகள் – A Most Wanted Man

நண்பர் ராஜனின் விமர்சனம் விமானத்தில் வரும்போது நான்கைந்து சினிமாக்கள் பார்த்தேன். அவற்றுள் உருப்படியாக இருந்தவை A Most Wanted Man என்ற ஆங்கிலப் படமும் சதுரங்க வேட்டை என்ற தமிழ்ப் படமும்தான். அதே பெயரில் ஜான் லீ கார் எழுதிய நாவலை சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். லீ கார் எனது அபிமான spy நாவலாசிரியராவார். ஜான் லீ கார் cold war நாவல்களில் இருந்து வெளியேறி Constant Gardener, A Most Wanted Man போன்ற வேறு விதமான … Continue reading ராஜனின் சினிமா சிபாரிசுகள் – A Most Wanted Man

ஸ்டூவர்ட் நெவில் எழுதிய “கோஸ்ட்ஸ் ஆஃப் பெல்ஃபாஸ்ட்”

எனக்கு ஒரு தியரி உண்டு. பொழுதுபோக்குக்காக எழுதப்படும் “வணிக” எழுத்தில் சில ஏதோ ஒரு கூறு பிரமாதமாக அமைந்து இலக்கியம் என்ற நிலையை எட்டிவிடுகின்றன. பொன்னியின் செல்வனின் கதைப் பின்னல், சாத்திரம் சொன்னதில்லையின் கச்சிதமான அமைப்பு, நிர்வாண நகரத்தில் வெளிப்படும் ஒரு இளைஞனின் பாத்திரப் படைப்பு, ஜான் லே காரின் பல புத்தகங்கள் – குறிப்பாக ஸ்மைலி சீரிஸ் என்று நிறைய உதாரணம் சொல்லலாம். அந்த லிஸ்டில் ஸ்டூவர்ட் நெவில் எழுதிய Ghosts of Belfast-க்கும் ஒரு … Continue reading ஸ்டூவர்ட் நெவில் எழுதிய “கோஸ்ட்ஸ் ஆஃப் பெல்ஃபாஸ்ட்”