Skip to content

Search results for 'malarmannan'

பிப்ரவரி 9, 2013

மலர்மன்னன் – அஞ்சலி

by

மலர்மன்னன் எழுதிய நாயகன் பாரதி என்ற புத்தகத்தைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்களை சிறுகதைகளாக எழுதி இருக்கிறாராம். ஒரு சிறுகதை திண்ணை தளத்தில் படித்தேன், பிடித்தும் இருந்தது. படிக்க விரும்பும் புத்தகம் என்று அதைப் பற்றி எழுத எண்ணி இருந்தேன். அதற்குள் மலர்மன்னன் மறைந்தார் என்ற செய்தி. வருத்தமாக இருக்கிறது. மலர்மன்னன் போன்றவர்களின் முக்கியத்துவம் அவர்கள் சென்ற பல தசாப்தங்களின் பெரும் அரசியல் ஆளுமைகளை அருகில் இருந்து பார்த்ததிலும் அவற்றை ஆவணப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. மலர்மன்னன் […]

ஏப்ரல் 21, 2012

பாரதியை சந்தித்த பாரதிதாசன் – மலர்மன்னனின் சிறுகதை

by

திண்ணை தளத்தில் இந்த “சிறுகதையை” படித்தேன். மலர்மன்னன் எழுதி இருக்கிறார். இதில் எவ்வளவு நிஜம், எவ்வளவு கற்பனை என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் பாரதிதாசனைப் பற்றி சரிதான். ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும் என்று பாரதி எழுதி இருப்பதை எங்கோ படித்திருக்கிறேன். வேணு நாயக்கரைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார் என்று நினைவு. பாரதிதாசனைப் பற்றி எனக்குப் பெரிதாக அபிப்ராயம் இல்லை. பொதுவாகவே கவிதை அலர்ஜி. ஆனால் […]

ஒக்ரோபர் 7, 2010

மலர்மன்னனின் “தி.மு.க. உருவானது ஏன்?”

by

இந்தப் புத்தகத்தை படிக்கும் முன் தி.மு.க. உருவானது ஏன் என்று என்னைக் கேட்டிருந்தால் ஈ.வெ.ரா.-மணியம்மை திருமணத்தால் ஏற்பட்ட மனக் கசப்பு அண்ணாவை தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வை உருவாக்கச் செய்தது என்று சொல்லி இருப்பேன். மலர்மன்னன் தி.மு.க.வின் தோற்றத்தின் பின்புலத்தை அருமையாக விளக்குகிறார். பல ஆதாரங்களை காட்டி இருக்கிறார். ஆனால் மலர்மன்னன் இந்த புத்தகத்தை அண்ணா நிலையில் நின்று எழுதி இருக்கிறார், எல்லா தவறும் பெரியாருடையது என்றும் அண்ணா எத்தனையோ பொறுமையாக இருந்தும் பிரிவை தவிர்க்க முடியவில்லை என்றும் பொருள்படும்படிதான் எழுதி இருக்கிறார். இருந்தாலும் நல்ல ஆவணம்.