பொருளடக்கத்திற்கு தாவுக

சுய அறிமுகம்

ஏழு வயதில் என் அம்மா எங்கள் கிராமத்து நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்தே ஒரு வாசிப்பு பைத்தியம் தொடங்கிவிட்டது. எல்லாவற்றையும் படிக்கும் பழக்கம். இன்று அரைக் கிழமாக ஆன பிறகும் ஹாரி பாட்டரைக் கூட விடுவதில்லை.என் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாக்.

இன்றும் த்ரில்லர்களை விரும்பிப் படிப்பவன். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட ஆங்கில துப்பறியும் எழுத்தாளர்கள் (ஷெர்லாக் ஹோம்ஸ், அகதா கிறிஸ்டி, டாக்டர் தார்ண்டைக், ராஃபிள்ஸ், மாக்ஸ் காரடோஸ், ஆஃப்ரிக்கன் மில்லியனர்…) என்றால் ஒரு மோகம் உண்டு. தமிழைத் தவிர்த்த மற்ற மொழிகளில் செவ்விலக்கியம் படிப்பது இப்போதெல்லாம் குறைந்திருக்கிறது (கிரைம் அண்ட் பனிஷ்மென்ட், வார் அண்ட் பீஸ் இரண்டும் ரொம்ப நாளாக ஷெல்ஃபில் தூங்குகின்றன.) இளமைக் காலத்தில் உள்ளம் கவர்ந்த ஹீரோக்களான இரும்புக் கை மாயாவி, ஜானி நீரோ ஆகியோரின் கதைகளையும் நாஸ்டால்ஜியாவுக்காக படிப்பேன்.

உங்களுக்கு எனக்கு எந்த மாதிரி வாசிப்பு பிடிக்கும் என்று ஒரு ஐடியா கிடைப்பதற்காக இந்த புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் குறிப்பிடுகிறேன். பிடித்த புத்தகங்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவை:

 • உலக மொழிகளில்: One Hundred Years of Solitude, All Quite on the Western Front, To Kill a Mockingbird, Ah, But Your Land is Beautiful, Les Miserables
 • இந்திய மொழிகளில்: யயாதி, ஃபனீஷ்வர் நாத் ரேணுவின் கதைகள், மணிக் பந்தோபாத்யாயின் கதைகள், பிரேம்சந்த், எஸ்.எல். பைரப்பாவின் நாவல்கள்
 • தமிழில்: புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் ஜீனியஸ்கள் என்று கருதுகிறேன். அடுத்த லெவலில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
 • ஏன் படிக்கிறேன் என்ற கேள்வி உண்டு. அதைப் பற்றி இங்கே விலாவாரியாக எழுதி இருக்கிறேன்.

  தமிழ் வாசிப்புக்கு நான் references-களாக பயன்படுத்தும் இணைய சுட்டிகள், தளங்களை இந்தப் பதிவில் தொகுத்திருக்கிறேன்.

  இன்று எழுத வேண்டும் என்று ஆசை, பல கதைகள் மனதில் ஓடுகின்றன, சில கதைகள் மட்டுமே பேப்பருக்கு போகின்றன. ஒரு கதை – அம்மாவுக்கு புரியாது – பரிசு பெற்றிருக்கிறது.

  66 பின்னூட்டங்கள்
  1. sundararajan permalink

   i also like those authors and books you mentioned. i wonder
   why there is no mention of kumudam editor S.A.P annamalai stories,novels etc;
   in popular blocks even when they talk about janaranjaka writers like kalki,akilan,na.parthasarathy etc;

   why don”t you talk about his books ?

   Like

   • சுந்தரராஜன், நினைவில்லாத காரணம்தான். இப்போதைக்கு இந்த பதிவை படித்துக் கொள்ளுங்கள்.

    Like

  2. இந்த வலைப்பூவுக்கு வருகை தாருங்களேன்
   http://nanjilnadan.wordpress.com

   Like

  3. முக்கியமான தேவையான பதிவுகள்.வாழ்த்துக்கள்.

   Like

  4. இன்றைய தலைமுறைக்கு புத்தகங்களின் மீதான காதல் கொஞ்சம் குறைவுதான். கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றி அம்மா அடிக்கடி சிலாகிப்பார். ஆனால் அந்த புத்தகத்தின் கனத்தினைப் பார்த்து ஓடியவன், இன்றுவரை அதன் அருகில் செல்லவில்லை.

   ஆனால் ஹாரிப் பாட்டர் முதல் இரும்புக்கை மாயாவி வரை படிப்பது என்பது மிகப்பெரியது. அதையும் பகிர்வது என்பது அதைவிட பெரியது.

   இந்தத் தளம் பின்வரும் சந்ததிகளுக்கான ஒரு பொக்கிசமாக இருக்கும். நன்றி!

   Like

  5. Visitor Blogs permalink

   Wow! Impressive entries. Thanks

   Like

  6. உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முடிந்தால் என் வலைத்தளத்தில் என் படைப்புக்களை படித்துப் பாருங்கள்
   http://www.neelakandans.blogspot.com

   Like

  7. குமரி நீலகண்டன், பிசுப்ரா, வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!

   Like

  8. உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முடிந்தால் என் வலைத்தளத்தில் என் படைப்புக்களை படித்துப் பாருங்கள்

   Like

  9. இரத்தினவேலு permalink

   அன்புடையீர், நானும் தமிழ் மொழி பெயர்ப்பில் பைரப்பாவின் நூலை மிக விரும்பிப் படித்துக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் சில இடங்களில் அவருடைய தவறுகள் உறுத்துகின்றன.
   அர்ச்சுனன் , கண்ணணனைப் போலவே சியாமள வண்ணன் .பீஷ்மருக்கும் பாண்டுவுக்கும் உறவுமுறை தவறாகக் குறிக்கிறார். பீமன் விருகோதரன் அதாவது , எவ்வள்வு உண்டாலும் ஓநாய் போல் ஒட்டிய வயிறுடையவன்.( அதுவே மல்யுத்த வீரர்க்கு அழகு.) நிறையப்பேர் குண்டோதர்ன் என்பதாய்ச் சித்தரிக்கிறார்கள்; இவரும் அவ்வாறே.

   இதில் ஒரு தவறைத், தமிழ் மொழிபெயர்பார்ப்பாளரான
   பாவண்ணன் என்பவரிடம் கேட்டபோது,” அப்படியா? நான் கவனிக்கவில்லை;கேட்டுச்சொல்கிறேன்”, என்றார். பல திங்கள்களாயும் விடையில்லை.

   உங்களுக்குத்தொடர்பு கொள்ளமுடிந்தால் அன்புகூரர்ந்து முயற்சிக்கலாம்.

   இரத்தினவேலு

   Like

   • ரத்தினவேலு, உங்கள் மறுமொழிக்கு நன்றி!

    அர்ஜுனன் நிறம் பற்றி தெரியாது; பீஷ்மர்-பாண்டு உறவு பற்றி தவறாக என்ன சொல்லி இருக்கிறார் என்று நினைவில்லையே? பீமன் விருகோதரன் என்று அழைக்கபடுவது உண்மைதான். ஆனால் பைரப்பா மகாபாரதத்தை அங்கும் இங்கும் மாற்றி எழுதி இருப்பதுதானே அவரது சிறப்பு? உதாரணமாக கிருபர் வேலைக்காகதவர் என்று பாரதத்தில் எழுதப்படவில்லை, ஆனால் பைரப்பா அப்படித்தான் எழுதி இருக்கிறார்…

    Like

  10. பலவகையிலும் பயன்படும் தளம்… அருமையான தகவல்கள்…

   அன்புடன்,
   கிருஷ்ண பிரபு

   Like

   • கிருஷ்ண பிரபு, நான் உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன். நீங்கள் இங்கே வருவது மகிழ்ச்சி தருகிறது…

    Like

  11. மகாபாரத நாவல்கள் மகாபாரதம் அல்ல. அவை அந்த களத்தில், அந்த கதைமாந்தர்களுடன் கற்பனை கதைமாந்தர்களையும் கலந்து, புதிய அர்த்தங்கள் உருவாகும்படி மறு ஆக்கம் செய்யப்பட்டவை. பழைய கதைகளை மறு ஆக்கம் செய்யும்போது அப்படி நிகழ வேண்டும். அந்த மாற்றத்தை ஆசிரியர் எப்படி, ஏன் குறிக்கிறார் என்பதே முக்கியம்

   கண்ணகி செந்தழல்நிறம் என்கிறார் இளங்கோ. என் கொற்றவை நாவலில் அவள் கருநிறம். ஏனென்றால் அவளை தொல்தமிழ்ப்பாவையாக காட்டுகிறேன்.

   அர்ஜுனன் கரிய நிறம். பாஞ்சாலியும் கருமை. [அவளுக்கு கிருஷ்ணை என்று பெயர்] ஏன் அர்ஜுனனை பைரப்பா சிவப்பாக காட்டினார் என்பதற்கு அந்நாவலில்தான் காரணம் தேடவேண்டும்.

   விருகோதரன் என்றால் ஒட்டிய வயிறு என்றல்ல உக்கிரமான ஓநாய்ப்பசி உடையவன் என்று மட்டுமே பொருள். மகாபாரதத்தில் பீமனின் வயிறு பெரியது என்ற வரி உள்ளது– பீமனைபோன்ற பதுமையை திருதராஷ்டிரர் நொறுக்கும் இடத்தில். கடும்பசியே கூட ’விருகோதரம்’ என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது.

   பீஷ்மரின் தம்பி விசித்திர வீரியனுக்கு அம்பிகை அம்பாலிகையில் பிறந்தவர்கள் பாண்டுவும் திருதராஷ்டிரனும். பாண்டுவும் திருதராஷ்டிரனும் குருதிவழியில் கிருஷ்ண துவைபாயனனின் பிள்ளைகள். அதாவது பாண்டுவுக்கு பீஷ்மர் தந்தைவழி தாத்தா -பாட்டா.

   மூலத்தில் சரியாக இருந்தமாதிரி ஞாபகம். மொழியாக்கத்தில் என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை.

   உறவுமுறைகளைப்பற்றி மகாபாரதத்தில் நிறைய மௌனங்கள் உண்டு. பின்னாளில் மகாபாரத நாவல்களை எழுதிய எழுத்தாளர்கள் அதில் விளையாடியிருக்கிறார்கல். உதாரணமாக எம்டி வாசுதேவன் நாயர் தர்மரை விதுரனின் மகனாக சித்தரிக்கிறார்.

   நான் எழுதிய பதுமையிலும் வடக்குமுகம் நாடகத்திலும் அப்படிப்பட்ட விளையாட்டு உள்ளது – நுட்பமாக

   ஜெ

   Like

  12. Lakhmanan permalink

   சுவாரஸ்யமாக இருந்தது
   நன்றி

   Like

   • லக்ஷ்மணன், சுய அறிமுகம் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி!

    Like

  13. நன்றி சொல்ல நா எழவில்லை . சிறந்த தமிழ் நூல்கள் வாசிக்க வேண்டும் என்ற எனது முயற்சிக்கு இந்த இணைய தளம் ஒரு கலங்கரை விளக்கம்.

   Like

   • மணிகண்டன், படிப்பில் ஆர்வம் உள்ள நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனின் தளத்தை கட்டாயம் பாருங்கள். அழியாசுடர்கள் தளத்தில் பல சிறுகதைகள் பதியப்படுகின்றன. பாஸ்கி, கிருஷ்ணப்ரபு ஆகியோரும் இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் எழுதுகிறார்கள்.

    Like

  14. ஆகா.. சுட்டிகளுக்கு நன்றி! உங்கள் தளத்திற்கு வந்ததே பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

   Like

   • சுபத்ரா, தளத்தை நீங்கள் ரசிப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    Like

  15. Your comments about sandilyan novels are riticulous. Suttamana illakanam theriyuma ungalukku. if you dont know proper tamil dont comment please.

   Like

  16. இயன், உங்களுக்கு சாண்டில்யன் பிடித்திருந்தால் சரி. எனக்கும் பிடிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்?

   Like

  17. subbu permalink

   have you read dravida mayai -oru parvai authored by me

   Like

   • ஆ, நீங்கள் திராவிட மாயை எழுதிய சுப்புவா? நண்பர் திருமலைராஜன் சில சமயம் உங்களைப் பற்றி பேசுவார். இல்லை, இன்னும் படிக்கவில்லை, படிக்க வேண்டும்…

    Like

  18. க்ருஷ்ணகுமார் permalink

   ஸ்ரீ ஆர்வி, தமிழ் புஸ்தகங்களின் விபரங்களை (தங்களுக்குப்ரியமான?) விபாகங்களுடன் அழகாகத்தொகுத்துள்ளீர்கள். தமிழின் முதல் புதினம் எனப்படும் மாயூரம் சாமுவேல் வேதநாயகம் பிள்ளையவர்களின் “பிரதாப முதலியார் சரித்ரம்” தேடினேன் இந்த தொகுப்பில். கிட்டவில்லை. ஒருவேளை நான் சரியாகத் தேடவில்லையோ?பால்யத்தில் நாமக்கல் முனிஸிபல் வாசகசாலையில் இந்த புஸ்தகம் படித்திருக்கிறேன். நீங்கள் வாசித்ததுண்டா? இல்லையெனில் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து வாசிக்கவும். நிஸ்ஸம்சயமாக களிப்படைவீர்.

   http://pm.tamil.net/pub/pm0217/pcaritram.pdf

   மணிப்ரவாளத்திலெனது ஸ்வாபிமானம் ஹேதுவான போதிலும் தமிழின் முதல் புதினம் என்ற படியாலும் இந்த புஸ்தகம் தங்கள் ஷெல்ஃபில் இருக்க வேண்டும் என்பது என் விக்ஞாபனம்.

   Like

   • க்ருஷ்ணகுமார், பிரதாப முதலியார் முக்கியமான முன்னோடி முயற்சி, ஆனால் இன்று அலுப்பைத்தான் தருகிறது. என்றாவது அதைப் பற்றியும் எழுத வேண்டும். சுட்டிக்கு நன்றி!

    Like

  19. அருமையான முயற்சி, வாழ்த்துகள்.

   Like

   • ஜீவா புத்தகாலயம் உரிமையாளர்களுக்கு, மறுமொழிக்கு நன்றி! உங்கள் பதிப்பகம் எங்கே இருக்கிறது?

    Like

  20. Ralf M.M. Stultiens permalink

   Dear Sirs,

   Maybe you have already read about my Queen of Crime Library, which I launched recently. More info about this library can be found on one of my two websites: http://www.queenofcrime.com (> 1,000 unique visitors each month) and http://www.facebook.com/QueenOfCrime.

   I’m looking for Agatha Christie novels, translated into the Tamil language.

   I hope some of you can be of some help!

   Of course I will mention your kind cooperation on my several websites.

   You can read what the famous multi award winning author John Curran says about the library later on in this email.

   Thanks a lot in advance!

   Best wishes,

   Ralf M.M. Stultiens
   Parkstraat 2b
   5671 GG Nuenen c.a.
   The Netherlands

   r.m.m.stultiens@gmail.com

   ///

   Award winning author John Curran (‘Agatha Christie’s Secret Notebooks: Fifty Years of Mysteries in the Making’ and ‘Agatha Christie’s Murder in the Making: Stories and Secrets from Her Archive’) about the ‘Queen of Crime Library’:

   ‘I applaud Ralf’s initiative in collecting every edition of every Agatha Christie book and only sorry that I did not think of it first. I can see from the photograph [www.queenofcrime.com] that one Hercule Poirot would also approve of the neat and orderly arrangement – ‘Order
   and method, mon ami’! In years to come the library will provide a valuable resource for future historians of detective fiction and for bibliographers of The Queen of Crime. And to encourage others I have already donated copies of my two contributions to the ever-growing library of Christie-related literature.’

   Like

   • If anybody know of translations of Christie into Tamil, please contact Raif Stultiens at r dot m dot m stultiens at gmail dot com. Raif, I personally haven’t come across any such translation, but it is nice to see a Christie fan like you…

    Like

  21. இந்த வலைப்பூவுக்கு வருகை தாருங்களேன்
   http://www.rishvan.com

   Like

  22. katugu permalink

   pl let me have your email

   Like

   • அன்புள்ள கடுகு சார்,

    உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன். அது ஸ்பாம் பில்ட்டர்-ஐத் தாண்டுமா என்று சந்தேகம் – என் முகவரி rv dot subbu at gmail dot com

    Like

  23. subbu permalink

   naan ippothu thuglakkildravida mayai thotar eluthu subbu

   Like

   • வாழ்த்துக்கள், சுப்பு அவர்களே! இந்த முறை சென்னை வந்தபோது உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், முடியாமல் போய்விட்டது. அடுத்த முறையாவது…

    Like

  24. விமல் permalink

   http://www.jeyamohan.in/?p=26591
   —————–
   ஜெ

   ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பேரில் ஃபேஸ்புக் தளம் உள்ளதா? Jeyamohan Balayan என்றபேரில் உங்கள் படத்துடன் ஒரு ஃபேஸ்புக் தளம் உள்ளதே

   ஜேக்கப் ராய் ஆப்ரஹாம்

   அன்புள்ள ஜேக்கப்

   அது ஒரு மோசடி தளம். நான் ஃபேஸ்புக் உறுப்பினர் அல்ல. எந்த சமூக வலைத்தளத்திலும் நான் உறுப்பினர் அல்ல.

   அந்த அசடு என் அப்பா பேரை குத்துமதிப்பாக போட்டது இன்னும் கண்டிக்கத்தக்கது

   இன்னும் ஒரு விஷயம். நான் எந்த இணையதளத்திலும் பின்னூட்டம் போடுவதில்லை. ஜெயமோகன் என்றபேரில் போடப்படும் எந்தப்பின்னூட்டமும் என்னுடையதல்ல.

   எப்படியெல்லாம் ஜாக்ரதையாக இருக்கவேண்டியிருக்கிறது

   ஜெ
   —————–

   / ****
   இன்னும் ஒரு விஷயம். நான் எந்த இணையதளத்திலும் பின்னூட்டம் போடுவதில்லை. ஜெயமோகன் என்றபேரில் போடப்படும் எந்தப்பின்னூட்டமும் என்னுடையதல்ல.
   ****/

   நம்முடைய இந்த இணையதளத்தில் இது வரை ஜெயமோகன் என்றபேரில் போடப்பட்ட பின்னூட்டம் யார் இட்டது ?

   Like

  25. விமல் permalink

   இவ்வளவு கடுமையாக பின்னோட்டம் இட்டது யார் ?

   ஜெயமோகன் தானா இல்லை வேறு யாராவதா ?

   // ***

   இவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும்

   ஜெ

   *** //

   // ***

   https://siliconshelf.wordpress.com/2011/07/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/#comments

   சிலிகான் ஷெல்ஃப் தளமும் ஜெயமோகனும்

   ஜெயமோகன் நிரந்தரத் தொடுப்பு

   ஆர்வி

   இதற்கு நான் பதில் சொல்லக்கூடாது, ஆனாலும் இது நம் சூழலில் ஒரு வாடிக்கை என்பதனால் பதில். ஏனென்றால் இதே சிக்கலை நானும் சந்தித்திருக்கிறேன். என் நண்பர்களும் வாசகர்களும் சந்தித்திருக்கிறார்கள்.

   நான் எழுத ஆரம்பித்தபோதிருந்து கணிசமான கட்டுரைகளில் சுந்தர ராமசாமி பெயர் வரும். சுந்தர ராமசாமியில் இருந்துதான் நான் ஆரம்பித்தேன். அவருடன் ஒட்டியும் வெட்டியும்தான் முன்னால் சென்றேன். ஆகவே அதை தவிர்க்கமுடியாது. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட சிற்றிதழ் வம்புகளில் சுரா பக்தர், சுரா மேற்கோள் இல்லாமல் பேசமாட்டார் என்றெல்லாம் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. நான் நீங்கள் எழுதியதுபோலவே கணக்கெல்லாம் பிரசுரித்திருக்கிறேன். எத்தனை இடங்களில் மேற்கோளிட்டிருக்கிறேன், எங்கெல்லாம் முரண்பட்டிருக்கிறேன் என

   பின்னர் தெரிந்தது அதெல்லாமே வெட்டிவேலை. இந்தமாதிரி எதிர்வினையாற்றுபவர்கள் அக்கறையாக வாசிப்பவர்கள் அல்ல. பொறுப்பாக பதிலும் சொல்ல அவர்களால் முடியாது. நம் கருத்துக்களை உண்மையிலேயே எதிர்கொள்பவர்கள் இந்தவகையான சில்லறைத்தனமான எதிர்வினைகளை செய்வதில்லை. அவர்களுக்குச் சொல்வதற்கு விஷயம் என ஏதேனும் இருக்கும்.

   இந்த வகையான விமர்சனங்கள் ஒருவகை காழ்ப்பு அல்லது ஆற்றாமையில் இருந்து வெளிப்படுபவை மட்டுமே. அவர்களுக்கு சுந்தர ராமசாமி அல்லது என் மேல் உள்ள காழ்ப்பையே இப்படி காட்டுகிறார்கள். இப்படி சில்லறைத்தனமாக அதை வெளிப்படுத்துவது பற்றிய சுயவெட்கம் கூட இருப்பதில்லை. ‘சுந்தர ராமசாமி என்ற பிராமணனை ஏன் மேற்கோள் காட்டுகிறாய்?’ என்று கேட்பதற்குப் பதிலாகத்தான் ‘சுரா வழியாகவே எல்லாவற்றையும் பார்ப்பீர்களா?’ என்று கேட்கிறார்கள் என புரிந்தது.

   அதேதான் இங்கும். என்னுடைய கருத்துக்களை எதிர்கொள்வதற்கான திராணி இல்லாதவர்கள், என் மேல் தனிப்பட்ட காழ்ப்புகளை [அவற்றில் கணிசமானவை சாதி, மதம் சார்ந்தவை. மரபான பிராமண மனங்கள் முதல் முற்போக்குமுகாமினர் வரை பல தரப்புகள்] கொண்டவர்களே என் கருத்துக்கள் கவனிக்கப்படுவதையும் விவாதிக்கப்படுவதையும் கண்டு இத்தகைய மனப்பொருமலை அடைகிறார்கள். அதையே இப்படி வெளிப்படுத்துகிறார்கள்

   இங்கே பலரிலும் நான் காண்பது இந்த காழ்ப்பையே. அதை அவர்கள்தான் சரிசெய்து கொள்ளவேண்டும். அந்தக் காழ்ப்பு வழியாக இழப்பது அவர்களே

   இந்த கணக்கெடுப்புகள், முத்திரை குத்தல்களில் இருந்து முழுமையாக விடுபட்டாலொழிய எவராலும் சுதந்திரமாக இங்கே சிந்திக்கமுடியாது என்பதை மட்டும் சுட்ட விரும்புகிறேன். அரசியல்சரிகளை கடைப்பிடிப்பது, முற்போக்கு முகத்தை தக்கவைப்பது, நண்பர்களை பேணுவது, சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது போன்ற ஜாக்ரதைகளைப்போல சிந்தனைக்கு விலங்குகள் இல்லை.

   ஒருவரை சுதந்திரமாக சிந்திக்காமல் அடிப்பதற்கான ஒரு வழியாகவே இந்த முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு முத்திரையை ஒருவர் மேல் குத்திவிட்டால் அதன் பின்னர் அவர் அந்த முத்திரையை களைவதற்காக நேர் எதிராக சிந்திக்க ஆரம்பிப்பார், பேச ஆரம்பிப்பார். அப்படி ஒரு நாலைந்து முத்திரைகளை குத்தினால் எவரையுமே அவர் போக்கில் எழுதவிடாமல் ஆக்கிவிடலாம்

   இவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும்

   ஜெ

   *** //

   Like

  26. Bags permalink

   விமல்

   >>>நம்முடைய இந்த இணையதளத்தில் இது வரை ஜெயமோகன் என்றபேரில் போடப்பட்ட பின்னூட்டம் யார் இட்டது ?

   நல்ல கேள்வி. உங்கள் கேள்வி இந்த விஷயத்தை தெளிவு படுத்த ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. விடை அளிப்பதன் மூலம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என நம்புகிறேன்.

   ஜெயமோகன் இரண்டு அல்லது மூன்று அபிமான வலைதளங்கள் வைத்திருக்கிறார். அதில் நமது இந்த தளமும் ஒன்று. இங்கே அவர் தான் பின்னூட்டமிடுகிறார். அவர் சொல்ல வருவது சில அர்த்தமில்லாமல் பிதற்றும் வலைதளங்களை பற்றி.

   சிலசமயம் அறிஞர்கள் பொதுவாக மையமாக உள்ள பிரச்சனையில் கவனம் செலுத்தி சொற்களில் கவனக் குறைவாக இருந்து அலட்சியமாக சிலவற்றை கூறிவிடுவார்கள். பிறர் அதனை பிடித்துக் கொண்டு சொல்லவரும் மையக் கருத்தை கோட்டை விடுவார்கள். சில காழ்ப்புணர்வு கொண்டிருப்பவர்கள், அதையே தங்களுக்கு ஆதாயமாக எடுத்துக் கொண்டு சொல்லியவரை கவிழ்ப்பார்கள். இதை நீங்கள் முதிர்ந்த நாடுகளின் தேர்தல் பிரச்சாரங்களில் எளிதாக பார்க்கலாம். 2004ல், ஜான் கெர்ரி ஜார்ஜ் புஷ்ஷிர்க்கு எதிராக போட்டியிட்ட பொழுது இப்படிதான் அவர் அலட்சியமாக சொன்னவற்றால் flip-flop என்று பெயர் வாங்கி தோல்வியை தழுவினார்.

   ஜெயமோகன் நீங்கள் quote செயத ஜேக்கப் ராய் ஆப்ரஹாமிற்கான பதிலை சொல்லும் பொழுது மிக பிஸியான மத்திய கிழக்கு வெளிநாடுகள் பயணத்தின் நடுவில் இருந்தார். ஆனாலும் உடனடியாக போலி ஜெயமோகனை மறுப்பதற்க்கான கட்டாயம் இருந்தது. ”அபிமான வலைதளங்களில் மட்டுமே பின்னூட்டமிடுவேன். அதுவும் இரண்டு மூன்று தளங்கள் தான்” என்பதெல்லாம் நாமாக விரித்துப் புரிந்துக் கொள்வது நமது முதிர்ச்சியையும் நம் வாசகத் தரத்தையும் உயர்த்தும்.

   இலக்கியம் எழுதும் ஸ்டைலில் கூறிவிட்டார் ஜெயமோகன். இதை புரிந்துக்கொள்ளாதவர்களை ”குறிப்பறியா மாட்டாதான் நல்மரம்” என்று சொல்லி அவர் ஒதுங்கிவிடுவார்.

   அவருக்கும் இந்தப் பதிலை நான் அனுப்புகிறேன். அவர் உடன்படும் பட்சத்தில் ஒருவேளை அவர் தளத்தில் பிரசுரித்து அவரே தெளிவு படுத்துவார்.

   Bags

   Like

  27. Arangasamy.K.V permalink

   சிலிகான் செல்ப் தளத்தில் சிலமுறை ஜெயமோகன் கமண்ட் எழுதியிருக்கிறார் , ஆபிதீன் தளத்தில் ஒருமுறை .

   Like

  28. மிக அருமையான, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு முன்னொடி தளம். வாழ்த்துகள்.

   Like

  29. Kamald permalink

   Yarum yarukkum uravumillai
   Yarum yarukkum pagaiumillai -vanakkam

   Like

  30. வணக்கம்
   அண்ணா
   உங்களின் தளத்துக்கு வருவது இதுதான் முதல் முறை அண்ணா பலவகைப்பட்ட படைப்புக்களை இந்த வலையுலகில் வழங்கிக் கொண்டு இருக்கும் உங்கள் பணி சாலச் சிறந்தது வாழ்த்துக்கள் அண்ணா மேலும் படைப்புக்களை படைத்து எழுத்துலகில் வெற்றி நடை போட்டு வாகை சூட எனது வாழ்த்துக்கள் (அண்ணா) நேரம் கிடைக்கும் போது என் வலைப்பக்கமும் வாருங்கள்-http://2008rupan.wordpress.com
   சிறு பிழை ஏற்ப்பட்டதாள் மீண்டும் இடுகிறேன் இடுகையை

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Like

  31. வலைக்கு வெகு புதியவன்……சலிப்பில்லாமல் படித்துக் களிக்க ஏராள ஆசை….நன்றி!

   Like

  32. My Dear friends.Can anybody of you explain about the population of the universe during the horappan civilization ,Veda period and during different periods.Because I am very much confused about the Manu sastra and other sastras and their period.Poet Bharathy says about 30 crores of population about India in 1930 .Then what was the population in 500 BC and 1400 BC.Does Vishnupuram was the whole of India?

   Like

   • கண்ணன், அந்தக் காலங்களில் உலக மக்கள் தொகை என்ன என்று தெரியும்போது எங்களுக்கும் சொல்லுங்கள்!

    Like

    • kannan.r permalink

     இந்த சந்தேகத்திற் கான காரணம் ஸ் மிருதி ச்ருதி புராணம் எல்லாம் இந்த கால நடைமுறைக்கு ஒத்து வரா என்ற எண்ணம் ஒரு குடும்பம் ,குழு ,ஊர் க்காக சொல்லப்பட்டது எப்படி நாட்டிற்காக ஆகும் மேலும் எந்த வித போக்குவரத்து இருந்ந்து இவை பரப்ப பட்டன என்பதே.ஆகவே கோபம் வேண்டாம் பிழை இருந்தால் மன்னிக்கவும்

     Like

  33. கண்ணன், இதில் கோபப்பட என்ன இருக்கிறது? வீணாக டென்ஷன் ஆகாதீர்கள்.

   Like

  34. Ela permalink

   Hi RV, I am also addicted to reading but all in tamil . My favourites writers are Nanjil nadan , Vairamuthu, Ki.Ra, Thi.Ja. I love read books and i am not comfort with reading in net but this collection concept is very good which give me lot of details. I started my reading at my child hood and my reading habit is watered by my mother she will also a good reader.

   Like

   • இளா, மற்றும் ஒரு புத்தகப் பைத்தியத்தை சந்திப்பதில் மகிழ்ச்சி!

    Like

  35. cHANDRA permalink

   pLEASE CAN YOU REFER TO REVIEW OF ETHIRNEECHAL AT BOLOJI.

   Like

  36. atr,sivakumar permalink

   Thankyou

   Like

  37. Dear Admin,
   You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

   To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

   To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% – 100% of daily links of NamKural in social networking websites such as,
   1. Facebook: https://www.facebook.com/namkural
   2. Google+: https://plus.google.com/113494682651685644251
   3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

   தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

   நன்றிகள் பல…
   நம் குரல்

   Like

  38. Bala Sundara Vinayagam permalink

   In your list, there are no writers of left. By the term left, I don’t refer to dravidian writers, but writers who deal with lives of working classes. I don’t insist you should read them. But can only say, by not reading them, we run the risk of seeing only the rosy side of life presented by these writers; even if they do present the other side sometimes, it is a look from ivory tower. The left writes with empathy that gives a greater participation, resulting in full satisfaction for a reader. You can, for an experiment, pick a few of them up and give full devotion to them for a period of time during which, don’t go near writers like Jeyamohan, Asoka Mitran or Pudumaippithan.

   It is possible to classify writers as the greatest, just as you have done here calling Pudumaippiththan, Asoka Mithran and Jeyamohan geniuses. But literature is bizarre in the sense that an unknown writer can also give us a single great classic and disappear. Therefore, we should not close our minds to all.

   Like

   • பாலசுந்தர விநாயகம்,

    கூட்டாஞ்சோறு தளத்தில் உங்கள் மறுமொழிகளை பார்த்திருக்கிறேன். அது இப்போது செயலாக இல்லை, நீங்களே இந்தப் பக்கம் வந்தது மகிழ்ச்சி! நீங்கள் தமிழில் எழுதினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    // writers who deal with lives of working classes // புதுமைப்பித்தனின் முக்கால்வாசி கதைகள் ஏழை, கீழ் நடுத்தர வர்க்க மக்களைப் பற்றித்தான். அசோகமித் ரனும் பல கதைகளை இந்தப் பின்புலத்தில்தான் எழுதி இருக்கிறார். நினைவுபடுத்திப் பாருங்கள்.

    Like

  39. kalaivani permalink

   Useful blog
   Thank you.

   Like

  40. Bharathi Raja permalink

   வணக்கம்

   Like

  41. judiee permalink

   Miga sirantha vasagara irukirir.muthalil atharku .vaathugal… aanal jeya mohan entra peyar rombavae thaguthi atrathu… jeyakanthan..ka.na su.pontra alumaigal irukum pothu ..avar epd ..tharpothu avar kalathil iyangum charu .. s.ra kuda solalam… Na ungalai korai solavilai.. enaku thelivu paduthungal..
   Na Madurai American kalluriyil ilakiyam katrukondu irukiren

   Like

   • ஜூடி, ஜெயமோகன் ஏன் தகுதி அற்றவர் என்று உங்கள் தரப்பை விளக்குங்களேன்!

    Like

  42. தின்னத் தோளன் permalink

   எழுத்துக்குடிக்கு வணக்கம் ,
   பா ஜெயப்ரகாசம் எழுதிய ‘ஒரு ஜெருசலம்’ சிறுகதையை பதிவேற்ற முடியுமா

   Like

   • தின்னத் தோளன், என் கையில் பிரதி எதுவும் இல்லை, கிடைத்தால் ‘ஒரு ஜெருசலம்’ சிறுகதையைப் பதிவேற்றுகிறேன்.

    Like

  Trackbacks & Pingbacks

  1. My Homepage

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  %d bloggers like this: