மின்னூல் – ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் “கிருஷ்ண கானம்”

oothukkaadu_venkata_subbaiyerகர்நாடக இசையில் பாட்டு புரிவது தனி சுகம்தான். அப்படி கேட்கும் பாடல்களில் நன்றாகப் பரிச்சயமானவை ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள்தான். அலைபாயுதே, குழலூதி மனமெல்லாம், தாயே யசோதா, ஆடாது அசங்காது வா கண்ணா மாதிரி பாட்டுகளை இன்று அனேகத் தமிழர்கள் கேட்டு அனுபவத்திருக்கிறோம். அதுவும் மகாராஜபுரம் சந்தானம் குரலில் கேட்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கிருஷ்ணகானம் என்று பேர் இருந்தாலும் அங்கங்கே முருகன், பிள்ளையார் மீதும் பாடல் உண்டு. 105 பாடல்களில் சில சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.

அவரது பாடல்களை ப்ராஜெக்ட் மதுரையில் தொகுத்திருக்கிறார்கள். வசதிக்காக இங்கே pdfசுட்டியை இணைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மின்னூல்கள்

மின்னூல் – சலீம் அலியின் “இந்தியப் பறவைகள்”

படங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக வண்ணங்களில் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்றும் பயனுள்ள புத்தகம்தான்.

குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய “தஞ்சைப் பெரிய கோவில்”

இன்றும் ஒரு மின்னூல். அழகிய விவரப்படங்களுக்காகவே படிக்கலாம். அடுத்த முறை தஞ்சாவூர் போகும்போது இவரை சந்திக்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: மின்னூல்கள்

ஈசாப் கதைகள்

இன்னும் கொஞ்ச நாளைக்கு எதுவும் பெரிதாக எழுதும் நிலையில் இல்லை. அனேகமாக மீள்பதிப்புகள், மின்னூல் இணைப்புகள் மட்டும்தான்.

சின்னக் குழந்தைகளுக்காக ஒரு மின்னூலுடன் இந்த phaseஐத் தொடங்குகிறேன். – ஈசாப் கதைகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மின்னூல்கள்

இன்னொரு மின் நூலகம்

சினுவா அசிபி மறைந்தார் என்று தெரிந்ததும் Things Fall Apart நாவல் இணையத்தில் கிடைக்குமா என்று தேடினேன். அப்போது தென்பட்ட சுட்டி. பல நல்ல புத்தகங்கள் மின்புத்தகமாகக் கிடக்கின்றன. தரம்பால் எழுதிய A Beautiful Tree உட்பட்ட சில புத்தகங்கள், ஃ புகுவோகாவின் One Straw Revolution, வந்தனா சிவா எழுதிய Staying Alive என்று பல. உங்களுக்குப் பிடித்த புத்தகம் ஏதாவது தென்பட்டால் அதைப் பற்றி இங்கே எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: மின் நூலகங்கள்