ஹசீன் தில்ரூபா திரைப்படத்தின் முடிச்சு

நெட்ஃப்ளிக்ஸில் டப்ஸி பன்னு நடித்து ஹசீன் தில்ரூபா என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

திரைப்படத்தின் முடிச்சு ரொவால்ட் டால் எழுதிய ஒரு சிறுகதைதான் – Lamb to the Slaughter (1953) சிறுகதையைப் படித்தபோது பத்தோடு பதினொன்று என்றுதான் தோன்றியது. ஆனால் டாலின் எழுத்து திரைப்படமாக்க எப்போதும் ஏற்றது. மடில்டா, Fantastic Mr. Fox, ஏன் நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் ரஜினிகாந்தோடு ஜெயித்தால் கார், தோற்றால் கட்டைவிரலை வெட்டிவிடுவேன் என்று வைக்கும் பந்தயக் காட்சி (Man from the South)என்று பல சொல்லலாம். இந்தத் திரைப்படத்தில் இந்திய சூழ்நிலைக்கேற்ற மசாலா கலந்து நன்றாக வந்திருக்கிறது. கதையை சொல்லிவிட விரும்பவில்லை, ஆனால் நம்பகத்தன்மை குறைவான காட்சிகள் கூட உறுத்தவில்லை.  டப்ஸி, நாயகன் விக்ராந்த் மாஸ்ஸி, நாயகனின் அம்மாவாக நடிப்பவர் கலக்கி இருக்கி இருக்கிறார்கள்.

ரொவால்ட் டாலின் படைப்புகளில் தவறவே விடக்கூடாதது BFG.

திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் சிறுகதையையும் படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலகப் புனைவுகள், திரைப்படங்கள்

எரிக் செகல் எழுதிய “Love Story”

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத நாவல்கள் என்று எனக்கு ஒரு சின்ன லிஸ்ட் உண்டு. Pride and Prejudice, Right Ho Jeeves, Secret Ways (அலிஸ்டர் மக்ளீன்), To Kill A Mockingbird, சமீபத்தில் வண்ணக்கடல் (வெண்முரசின் மூன்றாவது நாவல்). இந்தப் பட்டியலில் உள்ள நாவல் Love Story.

Erich Segal 1970 in Berlin, Deutschland / Personen, Promi, Celebrity, Portrait, Portr‰t, Schriftsteller, Autor, author, writer, Germany

கறாராக மதிப்பிட்டால் Love Story வணிக நாவலே. மிகை உணர்ச்சி நாவலே (melodrama). ஸ்டெல்லா ப்ரூசின் எழுத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால் இந்த நாவலை நானும் பத்து முறையாவது படித்திருப்பேன். கடைசிப் பக்கத்தைப் படிக்கும்போது கண் கலங்காமல் இருந்ததே இல்லை.

லவ் ஸ்டோரி காதல் கதை. ஹார்வர்டில் படிக்கும் பணக்கார, சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள பாரெட், மத்தியதர வர்க்க ஜென்னியை காதலிக்கிறான். தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி மணந்து கொள்கிறான். ஜென்னியின் அப்பாவுக்கு பரிபூரண சம்மதம். சட்டப்படிப்பு படிக்க வேண்டும், அதற்கான பணம் இல்லை. ஜென்னி வேலை செய்து அந்த சம்பளத்தில் படிக்கிறான், பற்றாக்குறை வாழ்க்கை. படிப்பு முடிந்ததும் பெரிய வேலை கிடைக்கிறது. பணக் கவலைகள் தீர்கின்றன. ஆனால் ஜென்னிக்கு கான்சர். மருத்துவச் செலவுக்காக அப்பாவிடம் கடன் வாங்குகிறான், ஆனால் என்ன தேவை என்று சொல்லவில்லை. ஆனால் அப்பா என்ன என்று கண்டுபிடித்து மருத்துவமனைக்கு ஓடோடி வருகிறார். அதற்குள் ஜென்னி இறந்துவிடுகிறாள். பாரெட் முதல் முறையாக தன் அப்பாவின் தோள்களில் உடைந்துபோய் அழுகிறான்.

லவ் ஸ்டோரி என்னைப் பொறுத்த வரையில் காதல் கதை இல்லை. பாரெட்டுக்கும் ஜென்னிக்கும் உள்ள உறவு சுவாரசியமானதுதான். ஆனால் அது மட்டுமே கதையாக இருந்தால் எனக்கு இரண்டு முறை படிக்கக் கூட பொறுமை இருந்திருக்காது. என் மனதைத் தொடுவது பாரெட்டுக்கும் அவன் அப்பாவுக்கும் உள்ள உறவுதான்.

என் அப்பா இன்றில்லை. இருந்த வரையிலும் அவரிடம் என்னால் மனம் திறந்து பேச முடிந்ததில்லை. அவரிடம் பேசும்போதெல்லாம் ஜாக்கிரதை உணர்வுடன்தான் பேசி இருக்கிறேன். இரண்டொரு முறை யோசிக்காமல் வாய் தவறி பேசியபோது அவரது மனதைப் புண்படுத்தி இருக்கிறேன். இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் ஏண்டா நீ ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். வருகிற சம்பளத்தை எல்லாம் குடும்பக் கடனை அடைக்கவே உங்களிடம் தந்துவிட்டால் எங்கிருந்து ஸ்கூட்டர் வாங்குவது என்று யதார்த்தமாக சொன்னேன். வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்த பிறகுதான் என்ன சொன்னேன் என்பதை உணர்ந்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை. ஏதோ ஒரு முறை ஏம்பா பேத்தறீங்க என்று சொல்லிவிட்டேன். அவர் பாவம், ரொம்பவே வருத்தப்பட்டார்.

பதின்ம வயதைக் கடந்த காலத்திலிருந்து அப்படித்தான் எங்கள் உறவு இருந்திருக்கிறது. அப்பாவிடம் பேச முடியாத நிறைய விஷயங்கள் உண்டு என்று உணர்ந்த காலத்தில்தான் இந்தப் புத்தகத்தை முதன்முதலாகப் படித்தேன். அப்பாவிடம் முறைத்துக் கொள்ளும் மகன், அப்பாவிடம் கடன் வாங்கும், ஆனால் என்ன பணத்தேவை என்று அவரிடம் சொல்ல முடியாத மகன், அப்பாவின் தோள்களில் முகம் புதைத்து அழும் மகன் என்ற காட்சிகள்தான் அன்றும் இன்றும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்தன, பதிந்து கொண்டிருக்கின்றன.

சில சமயம் அப்படித்தான். சில புத்தகங்கள் எங்கோ ஆழ்மனதில் ஒரு நரம்பைத் தொட்டுவிடுகின்றன. எனக்கு இந்தப் புத்தகம், To Kill A Mockingbird இரண்டும் அப்படித்தான்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

திரைப்படமான புத்தகம்: Crazy Rich Asians

இரண்டு வருஷத்துக்கு முன்னால் வெளியான இந்தப் படம் சக்கைப்போடு போட்டது. 3 கோடி டாலர்கள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 24 கோடி டாலர்கள் வரவு கண்டது. ஆஸ்கர் விருது வாங்கும் திரைப்படங்களைத் தவிர பிறவற்றைப் பற்றி அவ்வளவு பிரக்ஞை இல்லாத நான் கூட இதன் பேரைக் கேட்டிருந்தேன். ஒரு முறை விமானத்தில் பார்க்கவும் பார்த்தேன்.

திரைப்படம் ஒன்றும் நன்றாக இல்லை. எனக்கு திரைப்படத்தின் மூலம் புத்தகமாக இருந்தால் அந்தப் புத்தகம் நன்றாக இருக்கும் என்று ஒரு (மூட) நம்பிக்கை உண்டு. மோசமான புத்தகத்தை யாரும் திரைப்படமாக எடுக்கமாட்டார்கள் என்று ஒரு குருட்டு நம்பிக்கை. சரி, எப்போதாவது கையில் வந்து விழுந்தால் படிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

என் துரதிருஷ்டம், கையில் வந்து விழுந்துவிட்டது. அந்தக் காலத்து மணியன் கதைகளை விட மோசமாக இருந்தது. நாவல் முழுவதும் Brand name dropping மட்டுமே. அவன் ஆஸ்டன் மார்ட்டின் காரை ஓட்டினான், இவள் இந்த டிசைனர் கைப்பையை வாங்கினாள் என்று பக்கத்துக்கு இரண்டு brand name.Brand name-இல் ஆர்வம் உடையவர்களுக்கு இந்த நுண்விவரங்கள் சுவாரசியமாக இருக்கலாம். நான் எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கூட நான் அனேகமாக பழைய புத்தகக் கடையில்தான் வாங்குபவன், எனக்கு போர்தான் அடித்தது.

கதையோ ஐம்பது அறுபதுகளின் தமிழ் சினிமாவிலேயே பழையதாகிவிட்ட கதை. சிங்கப்பூரில் அதிபணக்காரக் குடும்பத்தில் பிறந்த – டாடா பிர்லா அம்பானி ரேஞ்ச் – நாயகன். மேல் மத்தியதர வர்க்க நாயகியைக் காதலிக்கிறான். அவன் பெரிய பணக்காரன் என்று அவளுக்குத் தெரியாது. வா சிங்கப்பூர் போகலாம் என்று அழைத்துக் கொண்டு போகிறான். பணம், அந்தஸ்து பிரிக்கிறது, பிறகு சேர்ந்துவிடுகிறார்கள்…

எனக்கு ஒரு அசட்டுப் பழக்கம். எத்தனை மோசமான புத்தகத்திலும் ஐம்பது பக்கம் படித்துவிட்டால் தம் கட்டி படித்துவிடுவேன். அதே போல ஒரு சீரிசை ஆரம்பித்துவிட்டால் முடித்தாக வேண்டும். Sunk Cost Fallacy. அதனால் இதன் தொடர்ச்சியான China Rich Girlfriend (2015), Rich People Problems (2017) இரண்டையும் வேறு படித்துத் தொலைத்தேன். இந்த வருஷமாவது இந்த அசட்டுப் பழக்கத்தை தலை முழுக வேண்டும்.

புத்தகங்களை எழுதியவர் கெவின் க்வான். அவருடைய சொந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதினாராம்.

தவிருங்கள். திரைப்படம், புத்தகங்கள் எல்லாவற்றையும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

மார்க் ஹாடன் எழுதிய “Curious Incident in the Dog at the Nighttime”

mark_haddonஇன்னும் விடுமுறைதான்; இன்று என் மகள் எழுதிய பதிவு. Curious Incident of the Dog at the Night Time என்பது புகழ் பெற்ற ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் பஞ்ச் டயலாக் என்பது நினைவிருக்கலாம்.

ஓவர் டு ஸ்ரேயா!

It wasn’t until I realized it was a mandatory assignment for an AP Psychology class that I started reading “The Curious Incident of the Dog in the Night-time” this summer. To be honest, I wasn’t expecting much out of it. I thought it was just one of those things I had to do and be done with.

I was pleasantly surprised to find that the book was actually a pretty entertaining read. It wasn’t exactly the kind I couldn’t put down, but it was definitely a page-turner.

The story circulates around the protagonist, Christopher Boone, and his investigation of a local murder in his neighborhood. The murder of Mrs. Shears’ dog, Wellington. Though never explicitly mentioned, Christopher probably registers somewhere on the autism spectrum, due to his inability to empathize or properly communicate with other people as well his exceptional cognitive ability in math and science. The plot of this novel is easy to follow and certainly predictable, however, I found it interesting to watch the investigation unfold in the way Christopher witnessed it.

The prevalent themes in the novel were definitely the struggle for independence, as well as the subjectivity of the entire story. This novel is similar to other coming-of-age stories such as The Catcher in the Rye in the sense that Christopher, like virtually all fictional teenagers, desires self-sufficiency and independence. What makes this interesting, however, is that Christopher can never be fully independent due to his condition. He strives for autonomy in subtle ways such as lying to/disobeying his overprotective father, planning for college, and most significantly, investigating Wellington’s murder.

The murder investigation serves purposes other than discovering truth and bringing justice, it allows Christopher to overcome the obstacles of his condition. The biggest way in which Christopher demonstrates his new found yearning for self-sufficiency and independence is when he survives a solo trip to London to meet the mother he previously thought deceased. This is a journey of symbolic as well as literal significance as it teaches Christopher how to battle the adversities he faces, and how to overcome his struggles despite the restraints of his life. In that sense, I thought this book was a lot more interesting once I read between the lines, rather than merely taking it at surface level.

I would definitely recommend this book to other people, and I’d hope they would enjoy it as much as I did.

புத்தகத்தை நானும் பரிந்துரைக்கிறேன். Autism உள்ள ஒரு பதின்ம வயதினன் கண் வழியாகவே நிகழ்ச்சிகள் நமக்கு காட்டப்படுகின்றன, அப்படி காட்டப்படும் விதம் மிகவும் consistent ஆக இருக்கிறது, தப்பித் தவறிக் கூட “சாதாரண” மனிதர்களின் கண்ணோட்டம் தெரிவதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: விக்கி குறிப்பு