கரோனா காலத்தில் படிக்க – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

(மீள்பதிவு)

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் பட்டியல் என்னுடைய reference-களில் ஒன்று. கரோனா காலம். வீட்டில் அடைந்து கிடக்கிறோம். கிடைத்த வரைக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன், அப்டேட் செய்திருக்கிறேன்.. படித்துப் பாருங்களேன்!

தோழி அருணா ஒரு காலத்தில் தேடிப் பிடித்து பல சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்தார்.
அவரது வார்த்தைகளில்:

ஊட்டி முகாமிற்காக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. மற்றும் தி.ஜா.வின் படைப்புகளை படிக்கும் முயற்சியில், ஜெ.மோவின் பரிந்துரை சிறுகதைகளை முதலில் படிக்கலாம் என்று எடுத்தேன். முன்னரே அனுப்பிய இந்த சுட்டியில் இன்று மேலும் ஒரு 15 சிறுகதைக்கு மேலேயே இணையத்தில் கிடைத்தது. அழியாச்சுடர் ராம் விட்டு போனவைகளை சீக்கிரமே ஏற்றுவார் என நம்புவோம். நான் பெரும்பாலும் அழியாச்சுடர், openreadingroom மற்றும் சுல்தானின் வலைத்தளங்களில் (நாஞ்சில்நாடன், வண்ணதாசன்) இருந்தே எடுத்தேன். உங்களுக்கு வேறேதேனும் தெரியுமானால் சொல்லுங்கள். தேடிப் பார்க்கலாம்.

சில புள்ளி விவரங்கள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்: 260 (75 எழுத்தாளர்கள்)
சுட்டி கிடைத்தவை: 161
கிடைக்காதவை: 99

எழுதியவர், எண்ணிக்கை காகிதப் பிரதி படைப்பு ஆண்டு குறிப்புகள்
அ. மாதவையா (0/1) கண்ணன் பெருந்தூது ஜெயமோகனுக்கு இதுதான் தமிழின் முதல் சிறுகதை
சுப்ரமணிய பாரதி (1/1) ரயில்வே ஸ்தானம்
புதுமைப்பித்தன் (12/12) புதுமைப்பித்தன் கதைகள், காலச்சுவடு கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
கயிற்றரவு
செல்லம்மாள்
சிற்பியின் நரகம்
கபாடபுரம்
ஒரு நாள் கழிந்தது
அன்றிரவு
சாமியாரும் குழந்தையும் சீடையும்
காலனும் கிழவியும்
சாப விமோசனம்
வேதாளம் சொன்ன கதை
பால்வண்ணம் பிள்ளை
மௌனி (3/3) மௌனியின் கதைகள் அழியாச்சுடர்
பிரபஞ்ச கானம்
மாறுதல்
கு.ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.) (4/4) கு.ப. ராஜகோபாலன் கதைகள் சிறிது வெளிச்சம்
விடியுமா?
ஆற்றாமை
பண்ணைச் செங்கான்
ந. பிச்சமூர்த்தி (3/6) ந. பிச்சமூர்த்தி படைப்புகள், மருதா பதிப்பகம் காவல்
அடகு
விதை நெல்
ஒரு நாள்
தாய்
ஞானப்பால்
எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1/2) பொன் மணல், தமிழினி மீன் சாமியார்
பொன் மணல்
சி.சு. செல்லப்பா (1/2) சரசாவின் பொம்மை
வெள்ளை
க.நா. சுப்ரமணியம் (க.நா.சு.) (0/1) க.நா.சு படைப்புகள், காவ்யா தெய்வ ஜனனம்
லா.ச. ராமாமிருதம் (லா.ச.ரா.) (6/6) லா.ச.ரா. கதைகள், வானதி பாற்கடல்
பச்சைக் கனவு
ஜனனி
புற்று
ராஜகுமாரி
அபூர்வ ராகம்
தெளிவத்தை ஜோசஃப் (1/1) மீன்கள் ஈழ எழுத்தாளர்
வ.அ. ராசரத்தினம் (1/1) தோணி ஈழ எழுத்தாளர்
எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.) (1/2) ஆண்மை, மித்ர வெளியீடு அணி ஈழ எழுத்தாளர்
ஆண்மை
கு. அழகிரிசாமி (4/8) கு. அழகிரிசாமி கதைகள் – சாஹித்ய அகாதமி வெளியீடு அன்பளிப்பு
ராஜா வந்திருக்கிறார்
இருவர் கண்ட ஒரே கனவு
அழகம்மாள்
பெரிய மனுஷி
பாலம்மாள் கதை
சிரிக்கவில்லை
தரிசனம்
தி. ஜானகிராமன் (தி.ஜா) (5/8) தி. ஜானகிராமன் படைப்புகள், ஐந்திணை தீர்மானம்
சிலிர்ப்பு
பாயசம்
பரதேசி வந்தான்
கடன் தீர்ந்தது
கோதாவரி குண்டு
தாத்தாவும் பேரனும்
மாப்பிள்ளைத் தோழன்
கி. ராஜநாராயணன் (கி.ரா) (6/8) கி. ராஜநாராயணன் கதைகள், அகரம் கன்னிமை
பேதை
கோமதி
கறிவேப்பிலைகள்
நாற்காலி
புவனம்
அரும்பு
நிலைநிறுத்தல்
மு. தளையசிங்கம் (3/3) தொழுகை ஈழ எழுத்தாளர்
ரத்தம்
கோட்டை
சுந்தர ராமசாமி (சுரா) (3/8) காகங்கள், சுரா கதைகள் – காலச்சுவடு ஜன்னல்
வாழ்வும் வசந்தமும்
பிரசாதம்
பல்லக்குத் தூக்கிகள்
ரத்னாபாயின் ஆங்கிலம்
கோயில் காளையும் உழவு மாடும்
காகங்கள்
கொந்தளிப்பு
அசோகமித்திரன் (5/12) அசோகமித்திரன் கதைகள், கவிதா விமோசனம்
காத்திருத்தல்
காட்சி
பறவை வேட்டை
குழந்தைகள்
காலமும் ஐந்து குழந்தைகளும்
புலிக்கலைஞன்
காந்தி
பிரயாணம்
பார்வை
மாறுதல்
குகை ஓவியங்கள்
பிரமிள் (2/2) பிரமிள் படைப்புகள், அடையாளம் வெளியீடு காடன் கண்டது ஈழ எழுத்தாளர்
நீலம்
சார்வாகன் (1/1) எதுக்குச் சொல்றேன்னா…, க்ரியா யானையின் சாவு
வல்லிக்கண்ணன் (0/1) சிவப்புக்கல் மூக்குத்தி
எம்.வி. வெங்கட்ராம் (1/1) பைத்தியக்காரப் பிள்ளை
ந. முத்துசாமி (1/4) நீர்மை
செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
படுகளம்
பிற்பகல்
அ. முத்துலிங்கம் (6/6) அ. முத்துலிங்கம் கதைகள், தமிழினி கறுப்பு அணில் ஈழ எழுத்தாளர்
ரி
கொழுத்தாடு பிடிப்பேன்
ஒட்டகம்
ராகு காலம்
பூமாதேவி
சா. கந்தசாமி (2/3) சா. கந்தசாமி கதைகள், கவிதா தக்கையின் மீது நான்கு கண்கள்
ஹிரண்யவதம்
சாந்தகுமாரி
ஆதவன் (3/4) ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
முதலில் இரவு வரும்
சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்
லேடி
ஜி. நாகராஜன் (1/2) ஜி. நாகராஜன் படைப்புகள், காலச்சுவடு டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
யாரோ முட்டாள் சொன்ன கதை
கிருஷ்ணன் நம்பி (2/3) கிருஷ்ணன் நம்பி கதைகள் மருமகள் வாக்கு
தங்க ஒரு
சத்திரத்து வாசலில்
ஆர். சூடாமணி (0/1) டாக்டரம்மா அறை
இந்திரா பார்த்தசாரதி (1/3) குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
ஒரு கப் காப்பி
ஆ. மாதவன் (1/6) ஆ. மாதவன் கதைகள், தமிழினி நாயனம்
பூனை
பதினாலு முறி
புறா முட்டை
தண்ணீர்
அன்னக்கிளி
சுஜாதா (7/7) தேர்ந்தெடுத்த சிறுகதைகள், உயிர்மை நகரம்
குதிரை
மாஞ்சு
ஓர் உத்தம தினம்
நிபந்தனை
விலை
எல்டொரோடா
ஜெயகாந்தன் (5/8) ஜெயகாந்தன் சிறுகதைகள், கவிதா யாருக்காக அழுதான்?
குருபீடம்
எங்கோ யாரோ யாருக்காகவோ
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
முன்நிலவும் பின்பனியும்
அக்கினிப் பிரவேசம்
இறந்த காலங்கள்
சு. சமுத்திரம் (0/3) திரிசங்கு நரகம்
மானுடத்தின் நாணயங்கள்
பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்
தோப்பில் முகம்மது மீரான் (1/3) வட்டக் கண்ணாடி
சுருட்டுப்பா
அனந்தசயனம் காலனி
மா. அரங்கநாதன் (1/2) சித்தி
மெய்கண்டார் நிலையம்
வண்ணதாசன் (6/6) வண்ணதாசன் கதைகள் தனுமை
நிலை
சமவெளி
தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
போய்க் கொண்டிருப்பவள்
வடிகால்
வண்ணநிலவன் (4/4) வண்ணநிலவன் கதைகள் எஸ்தர்
பலாப்பழம்
துன்பக் கேணி
மிருகம்
நாஞ்சில்நாடன் (5/5) நாஞ்சில்நாடன் கதைகள், தமிழினி பாம்பு
வனம்
மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
பாலம்
சாலப் பரிந்து
அ. யேசுராஜா (1/1) தொலைவும் இருப்பும், அலை வெளியீடு ஓர் இதயம் வெறுமை கொள்கிறது ஈழ எழுத்தாளர்
பூமணி (0/3) பூமணி கதைகள், ராஜராஜன் பதிப்பகம் நொறுங்கல்
தகனம்
கரு
பிரபஞ்சன் (3/3) பிரபஞ்சன் கதைகள், கவிதா மனசு
கருணையினால்தான்
அப்பாவின் வேட்டி
ராஜேந்திர சோழன் (2/3) ராஜேந்திர சோழன் கதைகள், தமிழினி பாசிகள்
புற்றில் உறையும் பாம்புகள்
வெளிப்பாடுகள்
திலீப்குமார் (4/4) திலீப்குமார் கதைகள், க்ரியா தீர்வு
மூங்கில் குருத்து
கடிதம்
அக்ரஹாரத்தில் பூனை
சுரேஷ்குமார இந்திரஜித் (1/2) சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள், காலச்சுவடு விரித்த கூந்தல்
பிம்பங்கள்
விமலாதித்த மாமல்லன் (1/1) சிறுமி கொண்டு வந்த மலர்
அம்பை (3/3) வீட்டின் மூலையில் ஓர் சமையலறை, க்ரியா அம்மா ஒரு கொலை செய்தாள்
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
கறுப்புக் குதிரைச் சதுக்கம்
கந்தர்வன் (2/6) கந்தர்வன் கதைகள், வம்சி புக்ஸ் சாசனம்
காளிப்புள்ளே
கதை தேசம்
பத்தினி
உயிர்
மங்களநாதர்
கோபிகிருஷ்ணன் (1/2) மொழி அதிர்ச்சி
காணி நிலம் வேண்டும்
ச. தமிழ்ச்செல்வன் (1/2) ச. தமிழ்ச்செல்வன் கதைகள், கலைஞன் வெயிலோடு போய்
வாளின் தனிமை
ரஞ்சகுமார் (3/3) மோகவாசல், யதார்த்தா, யாழ்ப்பாணம் கவரக்கொயாக்கள் ஈழ எழுத்தாளர்
கோளறு பதிகம்
கோசலை
சட்டநாதன் (2/2) சட்டநாதன் கதைகள் – சவுத் ஏசியன் புக்ஸ் மாற்றம் ஈழ எழுத்தாளர்
நகர்வு
திசேரா (0/1) நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும் ஈழ எழுத்தாளர்
உமா வரதராஜன் (1/1) அரசனின் வருகை ஈழ எழுத்தாளர்
விக்ரமாதித்யன் (0/1) திரிபு, வஉசி நூலகம் திரிபு
எக்பர்ட் சச்சிதானந்தம் (2/2) நுகம்
பிலிப்பு
பாவண்ணன் (1/2) பேசுதல்
முள்
சுப்ரபாரதிமணியன் (1/2) ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
உறைவிடங்கள்
கோணங்கி (5/8) மதினிமார்கள் கதை – அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ் மதினிமார்கள் கதை
கோப்பம்மாள்
கம்மங்கதிர்
கருப்பன் போன பாதை
கறுத்த பசு
தாத்தாவின் பேனா
மலையின் நிழல்
கறுப்பு ரயில்
ஜெயமோகன் (6/6) ஜெயமோகன் கதைகள், உயிர்மை திசைகளின் நடுவே
போதி
படுகை
மாடன் மோட்சம்
கடைசி முகம்
முடிவின்மைக்கு அப்பால்
எஸ். ராமகிருஷ்ணன் (2/3) எஸ். ராமகிருஷ்ணன் கதைகள், கிழக்கு தாவரங்களின் உரையாடல்
வேனல் தெரு
பறவைகளின் சாலை
எம். யுவன் சந்திரசேகர் (0/6) ஒளிவிலகல் – காலச்சுவடு, ஏற்கனவே – உயிர்மை பதிப்பகம் தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
ஒளிவிலகல்
ஊர்சுற்றிக் கலைஞன்
அவரவர் கதை
நார்ட்டன் துரையின் மாற்றம்
கடல் கொண்ட நிலம்
பிரேம் ரமேஷ் (2/2) கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்
மூன்று பெர்நார்கள்
பொ. கருணாகரமூர்த்தி (1/2) கிழக்கு நோக்கிய சில மேகங்கள் – ஸ்நேகா, பொ. கருணாகரமூர்த்தி கதைகள் – உயிர்மை கிழக்கு நோக்கிய சில மேகங்கள் ஈழ எழுத்தாளர்
கலைஞன்
பவா செல்லத்துரை (2/2) சத்ரு – வம்சி புக்ஸ் ஏழுமலை ஜமா
ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்
சு. வேணுகோபால் (0/4) கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் – தமிழினி மறைந்த சுவடுகள்
மீதமிருக்கும் கோதும் காற்று
களவு போகும் புரவிகள்
தங்கமணல்
உமா மகேஸ்வரி (1/2) மரப்பாச்சி, தொலைகடல் – தமிழினி மரணத்தடம்
மரப்பாச்சி
யூமா வாசுகி (1/3) தமிழினி வேட்டை
உயிர்த்திருத்தல்
ஜனனம்
வேல. ராமமூர்த்தி (1/2) இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் – அகரம் அன்னமயில்
இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும்
பெருமாள் முருகன் (1/2) நீர் விளையாட்டு
திருச்செங்கோடு
எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} (0/2) பிறிதொரு நதிக்கரை, வைகறை ஒற்றைச் சிறகு
வலியின் நிறம்
கண்மணி குணசேகரன் (0/2) ஆதண்டார் கோயில் குதிரை, தமிழினி வண்ணம்
ஆதண்டார் கோயில் குதிரை
அழகிய பெரியவன் (1/2) தீட்டு – தமிழினி விலங்கு
வனம்மாள்
லட்சுமணப்பெருமாள் (0/2) பாலகாண்டம் – தமிழினி கதைசொல்லியின் கதை
நீதம்

முதல் தமிழ் நாவல் “பிரதாப முதலியார் சரித்திரம்” இல்லை!

aadhiyur_avadhani_sarithamமுதல் தமிழ் நாவல் எது என்று கேட்டால் நாம் எல்லாரும் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்றுதான் சொல்வோம். ஆனால் சிட்டி-சிவபாதசுந்தரம்ஆதியூர் அவதானி சரிதம்” என்ற நாவலை முதல் தமிழ் நாவல் என்று குறிப்பிடுகிறார்கள்.

பிரதாப முதலியார் சரித்திரம் 1879-இல் வெளியானது. ஆதியூர் அவதானி சரிதம் 1875-இலேயே வெளியாகிவிட்டதாம். முதல் பதிப்பிற்கு ஒரே ஒரு xerox எடுக்கப்பட்ட பிரதிதான் இருக்கிறதாம் – அதுவும் லண்டனின் பிரிட்டிஷ் ம்யூசியத்தில். அதை சிவபாதசுந்தரம் பார்த்து நகல் எடுத்திருக்கிறார். பிறகு சிட்டியும் அவரும் சேர்ந்து 1994-இல் மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இது வித்வான் சேஷையங்கார் என்பவர் எழுதியது. இவர் பேராசிரியராக இருந்தாராம்.

சிட்டி-சிவபாதசுந்தரம் இதைப் பற்றி எழுதிய விளக்கம் மற்றும் கதைச் சுருக்கத்தை இங்கே படிக்கலாம். வசதிக்காக சிட்டி எழுதிய கதைச் சுருக்கத்தின் சுருக்கத்தை இங்கே பதித்திருக்கிறேன்.

பாண்டிச்சேரி அருகில் ஆதியூர் என்னும் கிராமத்தில் உத்தமன் என்ற பிராமணக் குடும்பத் தலைவன் இறந்துவிட மனைவி காந்தாரியும் மகன் வினையாளனும் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் மகன் பச்சையப்பன் பள்ளியில் அடிப்படைக் கல்வியும் பிறகு மருத்துவக் கல்வியும் கற்றுத் தேர்கிறான். படித்து முடித்த பிறகு வினையாளன் அவதானி என்று அழைக்கப்படுகிறான். பிணங்களை அறுக்கும் பணியை செய்வதை உறவினர்கள் எதிர்க்கிறார்கள். அம்மாவும் ஜாதிப்பிரஷ்டம் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறாள். நடுவில் திருமண ஏற்பாடு. மணமகளின் பெற்றோர்கள் பேராசையுடன் அதிகத் தொகை கேட்கிறார்கள். இதன் விளைவாக அவதானி பெரிதும் கடன்படுகிறான். உறவினர் தொல்லையால் அவதானி அவதிப்படுகிறான். சென்னையில் தேவதத்தை என்ற க்ஷத்திரிய குல கைம்பெண் ஒருத்தியோடு நட்பு, அது காதலாக மாறுகிறது. எல்லாரும் எதிர்ப்பையும் மீறி தேவதத்தை எல்லார் மனதையும் கவர்கிறாள், விதவையை இரண்டாம் தாரமாக மணப்பதுடன் கதை முடிகிறது.

1875-இல் விதவை விவாகம். புரட்சிதான்.

சிட்டி-சிவபாதசுந்தரத்துக்கு முன்னரே இதுதான் முதல் தமிழ் நாவல் என்று ஜெ. பார்த்தசாரதி என்பவர் 1976-இல் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாராம்.

நூல் உரைநடையாக எழுதப்படவில்லை, பாடல் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதை நாவல் என்றே சிட்டி-சிவபாதசுந்தரம் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் சிலப்பதிகாரத்தைக் கூட நாவல் என்றே சொல்லிவிடலாம் என்று ஒரு எண்ணம் எழுகிறது. ஆனால் சிட்டி-சிவபாதசுந்தரமே வாதிடுவது போல verse வடிவத்தில் எழுதப்பட்ட Golden Gate புத்தகத்தை நாவல் என்று அனைவரும் ஏற்கிறோம். இன்னொரு உதாரணம் வேண்டுமென்றால் மனோன்மணீயம் பாடல் வடிவில் இருப்பதால் அது நாடகம் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. சேஷையங்காரே இது நாவல் என்று சொல்லி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.

நீங்களே இது நாவலா இல்லையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், References

தொடர்புடைய சுட்டிகள்: ஹிந்து பத்திரிகையில் ஆதியூர் அவதானி சரிதம் பற்றி பெருமாள் முருகன்

1775இல் எழுதப்பட்ட தமிழ் உரைநடைக் கதை

அடுத்த தீமாக முன்னோடி முயற்சிகளை வைத்துக் கொள்கிறேன்.

venkat_swaminathanபரமார்த்த குரு கதைக்குப் (1740) பிறகு தமிழ் உரைநடையில் கதை என்றால் பிரதாப முதலியார்தான் என்று நினைத்திருந்தேன். வெ.சா.வின் ஒரு கட்டுரையின் மூலம் முத்துக்குட்டி ஐயர் 1775-ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று ஒரு உள்ளூர் ராஜா தூங்காமல் இருக்க ஒரு கதையை சொல்லி இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். இரா. முருகன் அந்தக் கட்டுரையை மீள்பதித்திருக்கிறார். அருமையான கட்டுரை. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

1775-இல் சிவகங்கை அரசர் தன் சமஸ்தானப் புலவர் முத்துக்குட்டி ஐயரை சிவராத்திரி அன்று இரவு விழித்திருக்க ஒரு கதை சொல்லும்படி சொன்னாராம். அது வாய்மொழியாகவும் சுவடிகளாகவும் தலைமுறைகளைக் கடந்திருக்கிறது. சிட்டி-சிவபாதசுந்தரம் தங்கள் ‘தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சி‘ (1977)-இல் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். வெ.சா. இதைப் பதிப்பிக்க விரும்பி இருக்கிறார், கடைசியில் சிட்டியே இதை “கண்டெடுத்த கருவூலம்” (2006) என்ற தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.

பெருமாள் முருகன் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் சொல்கிறார்:

இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980ஆம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் ‘கண்டெடுத்த கருவூலம்’ (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004ஆம் ஆண்டு சிட்டி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வெ.சா. ‘கண்டெடுத்த கருவூலம்’ 2006இல் வெளி வந்தது என்கிறார், பெ.மு. 2004-இல் என்கிறார். எது சரியோ தெரியவில்லை.

வசதிக்காக வெ.சா.வின் கட்டுரையை மீண்டும் இங்கே பதித்திருக்கிறேன். கடைசியில் சில வரிகளைக் காணவில்லை.

‘தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சி’ என்ற நூல் 1977இல் வெளிவந்தது, தமிழின் முதல் நாவல் என்று கருதப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் வெளியான ஆண்டு 1876 என்ற கணிப்பில், தமிழ் நாவல் இலக்கியம் பிறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. அது மிக முக்கியமான நூல். சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதியது. அது பல முக்கியமான, அன்று வரை தெரிந்திராத பல நீண்ட உரைநடை நூல்களைப் பற்றிய தகவல்களையும் வெளிக்கொணர்ந்தது. அவற்றில் மிக முக்கியமானது, மிகவும் சுவாரஸ்யமானது, முத்துக் குட்டி ஐயர் என்னும் சிவகங்கை மன்னரின் ஆஸ்தான புலவர் வாய்மொழியாகச் சொன்ன கதை. இது நடந்தது 1775ஆம் ஆண்டு ஒரு சிவராத்திரி இரவு. சிவகங்கை மகாராஜா, இரவிகுல முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் (1750þ1780) தம் சமஸ்தானப் புலவர் முத்துக்குட்டி ஐயரை அழைத்து, சிவராத்திரி அன்று தாமும் சமஸ்தானாதிபதிகளும் இரவு முழுதும் விழித்திருக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுபணித்தார். அக்கதை அதற்கு முன் யாரும் சொல்லப்படாததாக இருக்க வேண்டும், தெய்வ பக்தி உணர்வும், சிவராத்திரி முக்கியத்துவம் உணர்த்துவதாகவும், 56 தேசங்களும், அவற்றின் இடங்களும் தாவரங்களும் விலங்குகளும் இடம்பெறுவதாக அக்கதை இருக்க வேண்டும் என்பதும் சிவகங்கை மன்னரின் நிபந்தனைகள்.
மகாராஜா கதை கேட்க விரும்பியதோ, அதற்கு தம் ஆஸ்தானப் புலவரைப் பணித்ததோ, நிபந்தனைகளோ நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் அல்ல. எல்லாம் மரபுப்படிதான் நடந்துள்ளன. ஆனால் முத்துக்குட்டி ஐயர் மன்னரின் நிபந்தனைகளையும் நிறைவேற்றினார், அத்தோடு கேட்ட கதையையும் தம் வழியில்தான் சொன்னார். அந்த வழியும் அக்கதையின் சொல்முறையும் கதை பெற்ற வடிவமும் தமிழ் மரபில் முன்னும் இருந்ததில்லை. பின்னும் இருக்கவில்லை. மரபு சார்ந்து புதுமை செய்யும் சமாச்சாரமாகத்தான் அது இருந்தது. இத்தகைய ஒரு புதுமை நோக்கு, சிவகங்கை சமஸ்தானத்தின் இன்று நாட்டரசன்கோட்டை என்று அறியப்படும் அந்நாளைய தென்பளசை என்னும் கிராமத்து முத்துக்குட்டி ஐயருக்கு 1775 அந்த சிவராத்திரி இரவில் எப்படித் தோன்றியது?
விவரமாகச் சொல்லவேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் எல்லாம் என்றென்றைக்கும், முத்துக் குட்டி ஐயரின் காலத்திலிருந்து இன்று வரை கூட வறட்சிக்கும், மழை பொய்ப்பதற்கும், வறுமைக்கும் பெயர் போனது. பஞ்சம் பிழைக்க, பின் நூற்றாண்டுகளில் இப்பகுதி மக்கள், இலங்கை,மலேசியா, ஃபிஜி, கயானா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கரும்பு, தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யக் கடல் கடந்து சென்றது நமக்குத் தெரியும். முத்துக்குட்டி ஐயரின் காலத்தில் ஏற்பட்ட வறட்சியையும் மக்கள் தவிப்பையுமே தம் கதைப் பொருளாக்கினார் புலவர். அவ்வறட்சியை நேராகக் கதை சொல்லும் சமாச்சாரம் ஆக்கவில்லை புலவர்.
அவரது கதையில் தாவரங்கள், மேகங்கள், புல் பூண்டு, விலங்குகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மனித உடலின் பாகங்கள் எல்லாமே மனித கதாபாத்திரங்களாகின்றன. வருட மழை பொழிதல், மேகவண்ண சேர்வைக்காரன் (மேகங்கள்) செலுத்தும் வருஷக் கட்டளையாகிறது. மன்னனிடம் சென்று மக்கள் தம் கஷ்டங்களை முறையிடுகிறார்கள். ஒப்பந்தப்படி கட்டளை செலுத்தத் தவறிய மேகவண்ண சேர்வைக்காரனைச் சிறையிலடைக்க மன்னர் உத்தரவிடுகிறார். மேகவண்ணச் சேர்வைக்காரன் கட்டளை தவறியதற்கு காரணங்கள் தயாராக இருக்கின்றன. அவனது மேல்காரியகர்த்தாக்களான ஆதித்தமய்யன் (சூர்யன்), சோமசுந்தரமய்யன் (சந்திரன்) இருவருக்கும் அவர்களது கஷ்டங்கள்: ஆதித்தமய்யனுக்கு கரியமாணிக்கம் (சனி) என்றொரு புத்திரன் அவன் யாரை வந்து பற்றினாலும் படாதபாடெல்லாம் படுத்திப் பின்னர் சந்தோஷப்படுத்துவார். சோமசுந்தரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் மங்களேஸ்வய்யர் (செவ்வாய்) குரூர புத்திக்காரன்… இப்படி போகிறது கதை
இனி சொல்முறையைக் கவனிக்க வேண்டும்: மாதிரிக்கு சில வரிகள்;
“இப்படியிருக்கிறபடியினாலே ஆதித்தமய்யன் முதல் ஒன்பது வீட்டுக்கார கிரஹஸ்தாளும் ஒன்றுக்கொண்று விகாரத்தால் வக்கரித்துக்கொண்டிருக்கையில் இவர்களை மிஞ்சி நாம் அங்கே போகக்கூடாதென்று மேல மேற்குடி மேகணன் சேர்வைக்காரன் புறம் சற்றே பின்னுக்கு வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் விரோதமில்லாமல் அவரவர் எதாஸ்தானங்களில் வந்து சுபிட்சமானதன் பேரில், அனுபவித்துக் கொள்வோம் என்று மேகணன் சேர்வைக்காரன் இந்தத் தவணைக்கு வராமலிருகிறானென்று அவ்விடத்துக் காரியம் சீக்கிரத்திலே சமரஸத்துக்கு வரும், அதற்குப் பிறகு வருவானென்று வேதியங்குடியார் சொன்னார்கள்.”
கிரகங்கள் சரியில்லாததன் காரணத்தால், இந்த தோஷங்கள் நீங்கியபின் பார்த்துக்கொள்ளலாமென்று இருந்த காரணத்தால் இந்த வருடம் மழை பெய்யவில்லை என்று அரண்மணை ஜோஸ்யர்கள் சொன்னார்கள் என்பது பொருள்.
இது பற்றி சிட்டியின் “தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்” புத்தகத்தில் இது கண்டெடுக்கப்பட வரலாறும் செய்திகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
‘வசன சம்பிரதாயக் கதை’ என்ற பெயரில் இப்போது அறியப்படும் இக்கதை, 1775 ஆண்டு சிவராத்திரி இரவு வாய்மொழியாக முத்துக்குட்டி அய்யரால் மன்னர் பின் அவதானிகள் முன்னிலையில் சொல்லப்பட்டது. இதற்கு முன் வசன வடிவில் எழுதப்பட்டது, 1740ஆம் ஆண்டு வீரமாமுனிவரின்அவிவேக பரமார்த்த குருவும் சீடர்களும்” ஆனால் அது அச்சில் வெளியிடப்பட்டது 80 வருடங்கள் கழித்து 1820இல்.
முத்துக்குட்டி ஐயரின் காலத்தில் வீரமாமுனிவரின் நூல் ஐயருக்குக் கிடைத்திருக்குமா என்பது தெரியாது. ஆனாலும், வீரமா முனிவரின் நேரிய எளிய கதை சொல்லும் முறையும், முத்துக் குட்டி அய்யரின் உருவக வடிவிலான கதை சொல்லலும் முற்றிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. மேலும், வீரமாமுனிவரின் இத்தாலிய ரோமன் கதோலிக்க கிறிஸ்துவம் அவர் காலத்திய குருகுல கல்வி முறையைக் கேலி செய்யஅவிவேக பரமார்த்த குரு கதையை சிருஷ்டித்தது.
முத்துக்குட்டி ஐயர் சம்பிரதாயத்தில் மூழ்கியிருப்பவர். உலகப் பார்வை மட்டுமல்ல, அவரவர் கையாண்ட தமிழ் வசனமும் வேறுபட்டது. எது என்னவாக இருந்தாலும், முத்துக்குட்டி ஐயருக்கு மட்டுமல்ல, வெகு காலத்திற்குப் பரமார்த்த குரு கதை தமிழருக்குத் தெரியாமலேயே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். பிறகு ஒரு வசன கதை உருவாக்கம் கிடைக்க 1879இல் வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் நகைச்சுவையில் தோய்த்து எடுக்கப்பட்ட கதைதான். ரொம்ப காலத்திற்குத் தமிழனைச் சிரிக்க வைத்தால்தான் அவன் கதை கேட்கச் சம்மதிப்பான் போலத் தோன்றுகிறது. முத்துக்குட்டி ஐயர், தான் கதை பண்ணும்போது இந்த மசாலாவைச் சேர்க்க மறக்கவில்லை.
—————-
கதையை முத்துக் குட்டி ஐயரிடம் வாய் மொழியாகக் கேட்டவர் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். சமஸ்தான ஊழியத்தில் இவர்களும் இருப்பார்கள்தானே. பின்னர் அது காணாமல் போயிற்றாம். ஆனால் நாகுபாரதி என்பவர் இவர் இசைப் புலவர் குஞ்சர பாரதியின் சகோதரர் முத்துக்குட்டி ஐயர் சொன்னபடியே மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தவர். அவரிடமிருந்து அக்கதை முழுதும் கேட்டுப் பிரதி செய்து, தமது நண்பர் ராமசாமி தீட்சிதரின் உதவியுடன் வசன சம்பிரதாயக் கதை என்ற தலைப்பில் 1895ஆம் ஆண்டு திருவையாற்றில் வெளியிட்டார் என்று தகவல் தருகிறார் சிட்டி. ஆக, வாய்மொழியாகச் சொல்லப்பட்ட கதை ஒன்று அச்சில் பதிவாக, 120 வருடங்கள் ஆயிருக்கின்றன. அதன் பின்னரும் அது பற்றி யாரும் பேசியதில்லை. அறிந்ததில்லை. கடைசியில் அது பற்றி நாம் அறிய சிட்டியும் சிவபாத சுந்தரமும் அதை வரலாற்றின் ஆழ்குழியிலிருந்து தேடி வெளிக்கொணர இன்னம் ஒரு 85 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
‘தமிழ் நாவல்: நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ புத்தகத்தில் இந்த விவரங்களோடு கதையிலிருந்து இரண்டு பாராக்களும் மாதிரிக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு அந்த நூல் முழுதையும் வெளியிடவேண்டும் என்று தோன்றிற்று. அப்போது என் பொறுப்பில் ‘யாத்ரா’ என்ற பத்திரிகை இருந்தது. நான் சிட்டிக்கு எழுதினேன். வசன சம்பிரதாயக் கதைப் புத்தகத்தின் பிரதியை அவர் அனுப்பிவைக்கக் கூடுமானால், அது முழுதையும் யாத்ரா பத்திரிகையில் வெளியிடலாம், இனியும் அது யாரும் அறியாத, படித்திராத, மாயப் பொருளாக இருக்க வேண்டியதில்லை என்று கேட்டிருந்தேன். அப்போது சிட்டிக்கு அது புத்தகமாக வெளிவரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொன்னார். இது நடந்தது 1980களில். அது துரதிருஷ்டவசமாக நடக்கவில்லை. பெரும்பாலான சாத்தியக் கூறுகள் தமிழ் சமூகத்தில் எழுத்தாளன்முன் கைக்கெட்டும் தூரத்துக்கு சற்று அப்பால் தொங்கும் காரட்தான். இதில் நான் செய்யக்கூடியது ஏதும் இல்லை.
கடைசியாக ‘கண்டெடுத்த கருவூலம்‘ என்ற தலைப்பில் வசன சம்பிரதாயக் கதையும் அது போன்று 1898இல் ஞானபோதினி என்ற இதழில் பி. ஏ. பிரணதார்த்திஹரசிவ ஐயர், பி.ஏ. எல்.டி. அவர்கள் எழுதிய சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் இதுவரை வெளித்தெரியாத சிலப்பதிகார ஆராய்ச்சி நூலையும் சேர்த்துப் பிரசுரிக்க முடிந்திருக்கிறது சிட்டியினால். ஆக, பிரதி கிடைத்த பிறகும் வசன சம்பிரதாயக் கதையை அச்சிட ஒரு தமிழ் பிரசுரம் தேடிக் கண்டுபிடிக்க 25 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகார ஆராய்ச்சிக்கோ 106 ஆண்டுகள் தவமாக அது நீண்டுள்ளது. வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் ஞானத் தேட்டை!
இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம், உ.வே. சாமிநாதய்யரது சிலப்பதிகாரப் பதிப்பு அச்சான வருடம் 1872, அதன் பின் நமக்குத் தெரிய வந்த முதல் ஆராய்ச்சி நூல் பிரணதார்த்திஹரசிவ ஐயரது தான். அது பற்றி நமது முனைவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதன் தலைப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர யாரும் இதைப் படித்தவரில்லை. அது படிக்கக் கிடைத்திருப்பது இப்போது 106 ஆண்டுகளுக்குப் பிறகு,சிட்டியின் முயற்சியின் பேரில், அவரது 94ஆவது வயதில். இதுதான் அவரது ள்ஜ்ஹய் ள்ர்ய்ஞ். இன்று அவர் இல்லை. சில நாட்கள் முன்பு அவர் மறைந்துவிட்டார்.
இது வெளியானதும், சிட்டி எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்து, எழுதுகிறார். “இந்த முயற்சியின் ஆரம்பத்திலிருந்தே வசன சம்பிரதாயக் கதையில் ஆர்வம் காட்டிய வெங்கட் சாமிநாதனுக்கு, அன்புடன் சிட்டி” என்று எழுதி அனுப்பியுள்ளார். 26 வருடங்களுக்கு முன் அவரிடம்இது பற்றித் தொடர்பு கொண்டதை நினைவில் வைத்திருந்து, தனது 95ஆவது வயதில் கைப்பட எழுதுகிறார் சிட்டி.
இப்போது வசன சம்பிரதாயக் கதை முழுதும் என் கையில். முன்னர் இரண்டு பாராக்களே கிடைத்த இடத்தில் இப்போது புத்தகம் முழுதும்.
கதையைச் சுருக்கமாக சொல்லலாம். வறட்சி பற்றிய செய்தி கிடைத்ததும், அதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டியது என்ன என்று விசாரித்து அப்பரிகாரங்கள் செய்து, சமஸ்தானத்தில் மழை பெய்கிறது. பயிர்கள் செழித்து, மக்களும், ஆடு மாடுகளும் வயிறார உண்டு மகிழ்ச்சி அடைகின்றன. இப்படிக் கதை கேட்கக் கூடாது. முத்துக் குட்டி ஐயரின் வாய் மொழியாக அவர் பாஷையில் கேட்கவேண்டும். பஞ்சம் பற்றியும் மக்கள் தவிப்பும், வறட்சியும், பின்னர் மழை பொழிவது, மக்கள் மகிழ்ச்சியும். கடைசியாக இவ்வளவு சுபிட்சத்தையும் கடாட்சித்த மன்னரின் புகழ் பாடப்படுகிறது. இது சுமார் ஒன்றரைப் பக்கத்துக்கு நீள்கிறது. மாதிரிக்குச் சில வரிகள்:
“அடியேங்களை இந்தப்படி வரிசைகுடிகளாக வைத்து ஆதரிக்கிற இராஜவர்க்கங்கள் மகாவிஷ்ணு பிம் பமென்கிறது சுபாவமே. அதுவல்லாமல் ஒருநிதானத்திலே எங்கள் துரையவர்கள் ஸ்ரீமது ராஜமானிய ராஜ ஸ்ரீ சிவகங்கை கர்த்தாக்கள் தங்களுக்கு அதிகமென்று சொல்லலாம். அதெப்படியென்றால் தாங்கள் ஆதி பரமேஸ்வரனை நோக்கித் தபசு பண்ணுகிறபோது போன கண்ணுக்குப் பொற்கண் வெகுமதி வாங்கினீர்கள். அடியேங்கள் துரையவர்கள் அந்தப் பரமேஸ்வரனுக்கு கண்ணுக்குக் கண்ணாயிருக்கிற சூரிய வங்கிஷத்திலே பிறந்தவர்களானதினாலே எங்கள் துரையவர்கள் அதிகம். ….
இந்த மாதிரியாக, சிவகங்கை சமஸ்தானாதிபதி இரவிகுல முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர், பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் சிவனுக்கும், இன்னம் உள்ள தேவர்கள் தேவதைகளுக்கெல்லாம் பெரியவர், ஒப்பீட்டில் இந்த கடவுளர்கள் எல்லாம் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவருக்கு சிறியவர்கள்தாம் என்பதை ஒன்றரைப் பக்கத்துக்குக் காரணங்களை அடுக்கிச் செல்கிறார் முத்துக்குட்டி ஐயர்.
கடைசியில், “இத்தனை பேரும் எங்களுக்குச் சகாயமானபடியினாலே அடியேங்களும் சுகமாயிருக்கிறோம். சுவாமியவர்கள் பரிநாமத்திலே இருக்கிற சேதிக்கும் அடியேங்கள் செய்யும் பணிவிடை ஊழியத்திற்கும் இது புத்தியென்று திருமுகம் பாலிட்டருள கட்டளையிட்டருள வேண்டியது. ஆகையாலே விண்ணப்பம்.”
மற்றவை எப்படியோ, இந்த கடைசி தோத்திரமாலை நம் இரண்டாயிர வருட மரபு சார்ந்ததே. சங்கப் பாடல்களில் கணிசமானஎண்ணிக்கையில் இப்படி புலவர் பெருமக்கள் பரிசு வேண்டி மன்னரைப் புகழ்ந்து பாடுதற்கு ஒரு எல்லை இருந்ததில்லை. அது முத்துக்குட்டி ஐயரிடமும் காணப்படுகிறது, ஒரு மரபு சிறப்பாகப் பேணப்பட்டு வருவதையே சாட்சியப்படுத்துகிறது. இந்த மரபு சிறிது சிதைவுறாமல், இன்று வரை, அதாவது 2006


தொகுக்கப்பட்ட பக்கம்: References

சீன, ஜப்பானிய முன்னோடி நாவல்கள்

ஜெயமோகன் “இரண்டாயிரத்துக்குப் பின் நாவல்” என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு உரை ஆற்றி இருக்கிறார். அதில் சீன, ஜப்பானிய நாடுகளின் நாவல் முன்னோடி நாவல் முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவற்றை இணையத்தில் தேடி அவற்றுக்கான சுட்டிகளை இணத்திருக்கிறேன்.

tale_of_genjiபதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Tale of Genji பற்றி இப்படி சொல்கிறார்.

ஜப்பானியப் பெருநாவல் மரபு முன்னரே உலகமெங்கும் அறியப்பட்டது. அதில் ஜெஞ்சியின் கதை தமிழிலும் கா. அப்பாத்துரையால் சுருக்கமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 11-ஆம் நூற்றாண்டு நாவலான இதை உலகின் முதல் நாவல் என்பதுண்டு.

ஜெஞ்சியை இணையத்தில் படிக்கலாம்.

அவர் முற்கால சீனப் பெருநாவல்கள் பற்றி சொல்வது:

சீனப் பெருநாவல் மரபு என்று 14-ஆம் நூற்றாண்டில் மிங் வம்ச அரசர்களின் காலத்தில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் குயிங் மன்னர்களின் காலம் வரை நீடித்தது. அவற்றில் நான்கு பெருநாவல்கள் உச்சங்கள். மானுடம் உருவாக்கிய மாபெரும் நாவல்கள் அவை. மானுடம் உரைநடையில் அடைந்த மாபெரும் கலைவெற்றிகளும் அவையே என்னும் விமர்சகர்கள் உள்ளனர்.

 • நீர்வேலி (Water Margin) – பதினான்காம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க
 • மூன்று அரசுகளின் கதை (Romance of Three Kingdoms) – பதினான்காம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க
 • மேற்கு நோக்கிய பயணம் (Journey to the West) – பதினாறாம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க
 • செந்நிற அறையின் கனவு (Dream of the Red Chamber) – பதினெட்டாம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க

தொகுக்கப்பட்ட பக்கம்: References

இன்று புதிதாய்…

dilbert

ரொம்ப பிசியாக இருக்கும்போதுதான் நிறைய வேலை செய்ய முடியும் என்று எனக்கு ஒரு தியரி உண்டு. அதை நம்பித்தான் மீண்டும் தொடங்குகிறேன். 🙂

புது வருஷத்தில் அதைச் செய்யப் போகிறேன் இதைச் செய்யப் போகிறேன் என்று ஆகாசக் கோட்டை கட்டுவதும் அது நிறைவேறாமல் போவதும் கல் தோன்று மண் தோன்றாக் காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் விஷயம்தான். அதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பி நான் புது வருஷம் ஆரம்பித்து 14 நாட்களுக்குப் பிறகு ஆகாசக் கோட்டை கட்ட ஆரம்பிக்கிறேன். (தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக நான் ஏற்பதில்லை. :-))

படிக்க நிறைய இருக்கிறது. மனதில் உற்சாகம் இருக்கிறது. எப்போதும் கையில் ஒரு புத்தகமும் இருக்கிறது. ஆனால் படிக்க இருக்கும் நேரம் குறைந்து கொண்டே போகிறது. அதனால் இந்த வருஷத்திலிருந்து குறிக்கோளுடன் படிக்க வேண்டும். எண்ணிக்கையை விட தரத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்தத் தளம் புத்தகங்களைப் பற்றிப் பேச. ஆனால் நான் ஒருவனே பேசிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது முத்துகிருஷ்ணன் குரல் கொடுக்கிறார், அவ்வளவுதான். உள்ளூர்/வெளியூர் குழும உறுப்பினர்களான பக்ஸ், ராஜன், பாலாஜி, விசு, சுந்தரேஷ், நித்யா, காவேரி, பத்மநாபன், அருணா இன்னும் மாட்டிக் கொள்ளும் எல்லாரையும் ஒரு பதிவாவது எழுத வைக்க வேண்டும். எல்லாரும் பங்கேற்றால் – அது எத்தனை சின்ன பங்காக இருந்தாலும் சரி – சுமையாகத் தெரிவதில்லை.

எழுத வேண்டும். மனதில் இன்னும் ஒரு டஜன் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. உட்கார்ந்து எழுத முடியவில்லை. சோம்பேறித்தனம், starting trouble என்னவோ ஒன்று.

மொழிபெயர்க்க வேண்டும். அதற்கும் மனதில் ஒரு பட்டியல் இருக்கிறது.

அழியாச்சுடர்களைப் பார்த்து வியந்த காலம் ஒன்று உண்டு. இப்போதோ இணையத்தில் பல தளங்களில் தமிழ் சிறுகதைகள் கிடைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரு அட்டவணை தயாரிக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில் நுட்ப அறிவு எனக்குப் பத்தாதுதான். இருந்தாலும் நண்பர்கள் உதவமாட்டார்களா என்ன?

வருஷாவருஷம் பட்டியல் போட்டு அதில் பாதி கூட படிப்பதே இல்லை. அதனால் இந்த வருஷம் மூன்றே மூன்று புத்தகம் படித்தால் போதும் மிச்சம் எல்லாம் போனஸ் என்று நினைத்திருக்கிறேன்.War and Peace, Bridge on Drina மற்றும் Woman in the Dunes. மாதாமாதம் ஒரு க்ளாசிக்கையாவது படிக்க வேண்டும் என்று ஆசை; மூன்று மாதங்களுக்கு ஒன்று படித்தால் திருப்தி அடைந்து கொள்வேன்.

வயதாக ஆக ஒரு பிரச்சினை உருவாகிறது. நல்ல பொழுதுபோக்குப் புத்தகங்கள் கிடைப்பதே இல்லை. ஒரு முறைதான் ஷெர்லக் ஹோம்ஸை கண்டுபிடிக்க முடியும், இன்னொரு ஹோம்ஸுக்கு எங்கே போவது? இன்று பிரபலமாக இருக்கும் டான் பிரவுன், டக்ளஸ் ப்ரெஸ்டன், ஜெஃப்ரி டீவர், லீ சைல்ட் உள்ளிட்ட பலரும் எனக்கு மொக்கை ஆகிவிட்டார்கள். இரண்டு மூன்று பேரையாவது இந்த வருஷம் கண்டுபிடிக்க வேண்டும். மாதம் ஒன்றிரண்டு நல்ல த்ரில்லர்களையாவது படிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழ் புத்தகங்கள் வாங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். இந்த வருஷமாவது என்னை நானே நவீனப்படுத்திக் கொண்டு இணையம் மூலம் புத்தகம் வாங்க வேண்டும்.

இந்த இரண்டு மூன்று மாதத்தில் மிகவும் திருப்தி அளித்த விஷயம் தமிழ் ஹிந்து தளத்தில் எழுதிய “மகாபாரத ஆக்கங்கள்” கட்டுரைதான். இந்தத் தளத்தில் வந்த ஒரு பட்டியலை முழுமையாக்க விரும்பி அதை எழுதினேன். அதற்கு வந்த மறுமொழிகளைப் பார்த்தால் நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்று தெரிகிறது. மீண்டும் விரிவுபடுத்த வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: References

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன்

asokamithranஹிந்து பத்திரிகையில் அசோகமித்ரன் எழுதி இருக்கும் கட்டுரை. கட்டுரை அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. பிறகு எதற்காக இந்தப் பதிவு என்கிறீர்களா?

சமீப காலமாக வாசிப்பு அனுபவம் என்பது அவரவருக்கு மட்டுமே புரியக் கூடியது, மற்றவர்களுக்கெல்லாம் புரிய வைத்துவிட முடியாது என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. இதில் என்ன இழவுக்காக சிலிகான் ஷெல்ஃபும் இன்னொன்றும், படித்தோமா, அத்தோடு விட்டுவிட வேண்டியதுதானே என்று அவ்வப்போது அலுத்துக் கொள்கிறேன். பாருங்கள், அசோகமித்ரன் மாதிரி மேதையே தன் வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர வைக்க முடியவில்லை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்?

விமரிசனத்தின் குணமே அதுதானே? ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இன்னும் பல நூறு வருஷங்கள் படிக்கப்படும், நடிக்கப்படும். கோடி கோடிப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் நாடக விமர்சனங்களை யார் சீந்துவார்கள்? படைப்பு முக்கியம், விமரிசனம் என்பது சும்மா முதுகு சொரிவதுதான். தன் வாசிப்பு அனுபவத்தை மற்றவருக்கு சொல்ல வேண்டும் என்ற அரிப்புதான். அதன் முக்கியப் பங்களிப்பே நல்ல படைப்பு இது என்ற தகவலை அடுத்தவருக்கு சொல்லுவதுதான். அசோகமித்ரனின் இந்தக் கட்டுரையின் takeaway என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது, தமிழ் படிக்கத் தெரியாத நண்பர்களுக்கு வாங்கித் தரலாம் என்பதுதான்.

ka.naa.su.படித்திருக்கிறீர்களா என்ற க.நா.சு. புத்தகத்தைப் பற்றி பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன்னால் சாயாவனம், சில புதுமைப்பித்தன் கதைகள், சில ஜெயகாந்தன் நாவல்கள், பொன்னியின் செல்வன் ஆகியவற்றைப் படித்திருந்தாலும் க.நா.சு. பரிந்துரைகளைப் படிக்கும் முன்னர் தமிழில் நல்ல உரைநடை இலக்கியம் உண்டு என்று நான் உணர்ந்ததில்லை. அந்தப் புத்தகம் என் கண்களைத் திறந்தது. அதற்குப் பிறகுதான் நான் தமிழில் இலக்கியப் படைப்புகளைத் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினேன். ஆனால் க.நா.சு. குறிப்பிட்ட பல புத்தகங்கள் – இதய நாதம், நாகம்மாள், கரித்துண்டு – எனக்கு பெரும் இலக்கியப் படைப்புகள் அல்ல. அழகிரிசாமியின் சிறுகதைத் தொகுப்பில் நல்ல சிறுகதைகளைத் தேட வேண்டி இருக்கிறது. நான் அவரோடு முழுமையாக இசைவது புதுமைப்பித்தன் விஷயத்தில் மட்டும்தான். என்னை விடத் தேர்ந்த வாசகர் என்று நான் கருதும் க.நா.சு. பரிந்துரைக்கும் பல இலக்கியப் படைப்புகள் என்னைப் பொறுத்த வரையில் வெற்றி பெறாதவையே என்றால் அவரது படிப்பு அனுபவம் எனக்கு கைகூடவில்லை, என் படிப்பு அனுபவம் அவருக்கு கைகூடவில்லை என்றுதானே பொருள்?

ஆனால் அதே நேரத்தில் படித்திருக்கிறீர்களா என்னைப் பொறுத்த வரையில் ஒரு seminal புத்தகம்தான். அந்தப் புத்தகத்திலிருந்து நான் பெரும் இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லைதான்; ஆனால் தமிழில் பெரும் இலக்கியங்கள் உண்டு என்று தெரிந்து கொண்டேன். சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பு அவரது தாக்கத்தை விட பல மடங்கு குறைந்தது என்று திடீரென்று புரிந்தது. சாண்டில்யனும் அகிலனும் சிவசங்கரியும் வாசந்தியும்தான் பிற முக்கியத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது வெறும் டைம் பாஸ், சிலருக்கு சிகரெட், வெற்றிலை பாக்கு, எனக்கு தமிழ் புத்தகங்கள் என்ற இளக்காரப் பார்வை இந்தப் புத்தகத்தை சுப்ரபாரதிமணியன் நடத்திய செகந்தராபாத் புத்தகக் கண்காட்சியில் வாங்கி அங்கேயே கீஸ் பள்ளித் தாழ்வாரத்தில் உட்கார்ந்து புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தபோதே செத்துவிட்டது.

ஆனால் இந்தப் புத்தகம் எல்லாரிடமும் இதே விளைவை ஏற்படுத்துமா என்ன? நான் அன்றிருந்த மனநிலையில், எனக்கு ஏற்பட்ட வாசிப்பு அனுபவம் இந்தப் புத்த்கத்தை என் அளவில் உயர்த்துகிறது. இது எல்லாருக்கும் பொருந்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.

என்றாவது, யாராவது ஒருவராவது, இந்தத் தளத்தின் மூலம் சில நல்ல புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன், அவற்றைப் படித்தேன் என்று சொன்னால் இந்தத் தளம் வெற்றி பெற்றிருக்கிறது என்று உணர்வேன்.

வாடிவாசல், அசோகமித்ரன் என்று ஆரம்பித்து படித்திருக்கிறீர்களா, க.நா.சு. சிலிகன் ஷெல்ஃப் என்று முடித்திருக்கிறேன். யாராவது எடிட்டர் இருந்தால் தலைப்பை மாத்துய்யா என்று கடிந்து கொள்வார். 🙂


தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புள்ள சுட்டிகள்:
வாடிவாசல் பற்றி ஆர்வி
படித்திருக்கிறீர்களா புத்தகம்
என் அலுப்புக்கு ஜெயமோகன் பதில்

வெங்கடரமணன் எண்ணங்கள்

Venkatramananபல மாதங்களுக்கு முன் சென்னை நண்பர் வெங்கடரமணனிடம் இன்று டாப்பில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டிருந்தேன். அவருடைய விலாவாரியான பதில் இன்று மீண்டும் கண்ணில் பட்டது, அதை மீள்பதித்திருக்கிறேன். இப்போது இந்த நிலையில் ஏதேனும் மாற்றங்கள் உண்டா?


சுஜாதா இன்னிக்கும் டாப்புதான்! பாலகுமாரனுக்கும் இன்னும் மௌஸு கொறஞ்சா மாதிரி தெரியலை! ஆனா மொத்தமாகவே வாசிப்பு வழக்கம் குறைஞ்சா மாதிரி தெரியுது! கிழக்கு பதிப்பகம் பத்ரியைக் கேட்டால் இல்லைம்பார்!)

ஆனா வலையில் அடிபடற எழுத்தாளர்களுக்கும் நேரில் வாசகர்கள் ஆர்வம் காட்டறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுனு நினைக்கிறேன். வலையில் (உங்க தோஸ்த்!) ஜெ.மோ, சாருநிவேதிதா இவர்களையெல்லாம் ஒண்ணு கொண்டாடறாங்க இல்லை பந்தாடறாங்க! ஆனா இவங்க பேரு அடிபடற அளவுக்கு புத்தகம் விற்பனை (எண்ணிக்கை அளவில்) எந்தளவு இருக்குனு தெரியலை. மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழத்தில் கிழக்கு பதிப்பகத்தின் வீச்சு மிக அதிக அளவில் இருக்குது. அந்த காலத்தில் ஜெமினி வாசனின் “மாதசம்பளம் கொடுத்து நடிகநடிகையரை ஊழியர்களாக வைத்துக்கொள்ளும் முறை” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதே மாதிரி இன்று கிழக்கில் புத்தகாசிரியர்கள் உள்ளனர் ( பட்டியலைப் பார்க்கவும்! எத்தனை பேர் கிழக்கில் கிட்டத்தட்டப் பிரத்தியேகமாக எழுதுகின்றனர்னு தெரியவரும்!)

மேலும் அக்காலத்தில் (70,80களில்) மணிமேகலைப் பிரசுரம் கிட்டத்தட்ட அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியிட்டிருப்பார்கள்!(சுஜாதாவே ஏதோவொரு க.பெ.கட்டுரையில் “இத்தலைப்பில் ஏதாவது புத்தகம் உள்ளதா என லேனாவைக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருப்பார்!) அதேபோல் இன்று கிழக்கில் “You name it! We have it” என்று ஏகப்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. பத்தும் பத்தாததற்கு, நலம், ப்ராடிஜி, வரம் பதிப்பகம், ஒலிப்புத்தகம் என ஜமாய்க்கின்றனர். எனவே வெகுஜனப் புத்தகங்களில் கிழக்குதான் முந்துகிறது என்றே நினைக்கிறேன். (விகடன் இப்போதுதான் முழித்துக்கொண்டு பழைய தொடர்கள், வாரமலர்-குங்குமம் தொடர்கள் தொகுப்பு என ஏதோ கிம்மிக்ஸ் காட்டுகின்றனர்!).

இன்று படைப்புதான் கிட்டத்தட்ட முக்கியமாகப் படுகிறது! ஆனாலும் என்.சொக்கன், பா.ராகவன் என்று சில பேரின் எழுத்துக்கள் தனியே தெரிகின்றன். அதிலும் வாழ்க்கை வரலாறுகளில், நிறுவன வரலாறுகளில் சொக்கனது எழுத்துக் அமர்ர்களமாய் இருக்கிறது!(கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள் எழுதிவிட்டார்!). ராகவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர் பத்திரிகை அனுபவத்தை வைத்துக் கொண்டு ராஜபாட்டை நடக்கிறார்! “கிழக்கு ப்ளஸ்” என்ற தலைப்பில் கிழக்கின் இதுவரையிலான வெற்றிக்கதையை ராகவன் அவர் தளத்தில் பத்து அத்தியாயங்களாக எழுதியுள்ளார். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

எஸ்.ராவிற்கு விகடனின் துணையெழுத்திற்குப் பிறகு வாசகர்கள் அதிகரித்த மாதிரி அகம்புறம் எழுதிய வண்ணதாசனுக்கும், நாஞ்சில் நாடனுக்கு தீதும் நன்றும் தொடருக்கு அப்புறமும் வாசகர்கள் அதிகரிப்பாங்கனு நினைக்கிறேன்.

பெண்களிடம் ரமணிசந்திரன் இன்னிக்கும் கோலோச்சறாங்க. ஆனாலும் இவரொரு ஆணாதிக்கவாதின்னு சொல்றவங்களும் இருக்காங்க! (தொடர்பான நண்பன் நந்தாவின் – – சூடான இடுகையும் மறுமொழிகளும் வாசிப்பிற்குரியது!)

மேலும் சிறார் பருவத்தில் தமிழ் புத்தக்ங்களை விழுந்து விழுந்து படித்தவர்களின் கவனம் திரைப்படம், ஆங்கிலப் புத்தகங்கள்னு மெல்ல திசைமாறுதுனு தோணுது (எப்படி நீங்களே சுட்டிக்காட்டியுள்ளபடி தமிழ் திரைப்படங்களில் சொல்லிக்கொள்கிற நிலைமை இல்லையோ அதேபோல புத்தகங்களிலும் ஆங்கிலம் தொட்ட ஆழத்தையும் வீச்சையும் தமிழ் தொடுவதற்கு நேரமாகும் என்றே படுகிறது. அதுவரைக்கும் யாருக்கு பொறுமை இருக்கும்னு நினைக்கிறீங்க?!)

மற்றபடி எப்படி யோசித்தாலும் இன்று பதிப்பகங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன! எனிஇந்தியன், விருபா, கிழக்கு, காமதேனு, விகடன், உயிர்மை என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன்!)

இது முழுக்க முழுக்க இணையம் தாராளமாய் கிடைக்கும் ஒரு வாசகனின் பார்வையே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!

ஆங்… சொல்ல மறந்துட்டேன்! ‘விகடன் பொக்கிஷம்’ என வாராவாரம் வெளியிடுகிறார்கள்! 60, 70, 80களின் பேட்டிகள், திரைவிமர்சனங்கள், புகைப்படங்கள், மதன் கார்ட்டூன்கள், கோபுலு சித்திரங்கள், என எனக்கு மிகவும் பிடித்தமானதாயுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

“யப்பா! இவ்வளவு பெரிய மறுமொழியா”ன்னு போலித்தனமா வியக்க மாட்டேன்! நீங்க இந்த வாசிப்பு விஷயம் பற்றிக் கேட்டவுடனே கட்டாயம் விரிவா எழுதனும்னு நினைச்சேன்! (Either that or “மாட்டினான்டா ஒருத்தன்! செத்தான்…!”) அதனாலதான் நினைவுக்கு வந்த முக்கியமான விஷயங்கள்னு எழுதினேன்! எழுதாம விட்டது நிறைய! பொறுமையா படிச்சுப் பார்த்துட்டு மறுமொழியிடவும்! இல்லை தனிமடலிடவும். ஒண்ணும் அவசரமில்லை!

அன்புடன்
வெங்கட்ரமணன்

பி.கு. கடைசியா ஒரு இணைப்பு! – சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், அதீத செல்லம் கொஞ்சலும் வைத்துள்ள ஒரு ரசிகையின் கடிதம்! கட்டாயம் படித்துப் பாருங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: References, Guest Posts

அதிகமாக வாங்கப்பட்ட புத்தகங்கள்

squidoo.com தளத்திலிருந்து:

bestsellers

பைபிள், ஹாரி பாட்டர், Da Vinci Code ஆகியவற்றை நான் இந்தப் பட்டியலில் எதிர்பார்த்தேன். ஆனால் மாசேதுங், Alchemist, , Twilight, Gone with the Wind, Think and Grow Rich, ஆன் ஃப்ராங்க் ஆகியவை ஆச்சரியப்படுத்துகின்றன.

தமிழில் அதிகமாக வாங்கப்பட்ட புத்தகங்கள் எவையாக இருக்கும்? திருக்குறள் மு.வ. உரை? ராஜாஜி மகாபாரதம்? கற்றதும் பெற்றதும்? பொன்னியின் செல்வன்? ஏதாவது ரமணி சந்திரன் புத்தகம்? அதிகபட்சம் ஒரு புத்தகம் எத்தனை காப்பி விற்றிருக்கும்? ஐந்து லட்சம்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!


தொகுக்கப்பட்ட பக்கம்: References

ஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்கள் பட்டியல் – Updated

jeyamohanஜெயமோகனின் தமிழின் முக்கிய நாவல்கள் பட்டியல் என் referenceகளில் ஒன்று. ஆனால் இந்தப் பட்டியல் எழுதப்பட்டு பத்து பனிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் பட்டியலை update செய்யுங்கள் என்று அவரிடம் பல முறை கேட்டிருக்கிறேன். அவர் இது வரை கண்டு கொள்ளவில்லை. என்றாவது ஒரு நாள் அவரது பதிவுகளைப் படித்து அவரது பரிந்துரைகளை தொகுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கேசவமணி செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் கேசவமணி!

புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் புத்தகங்கள்

எம்.எஸ். கல்யாணசுந்தரம் – இருபது வருடங்கள், பகல் கனவு
க.நா. சுப்ரமண்யம்வாழ்ந்தவர் கெட்டால்
எம்.வி. வெங்கட்ராம் – காதுகள்
தி. ஜானகிராமன்மரப்பசு
சங்கர்ராம் – மண்ணாசை
மு. தளையசிங்கம் – ஒரு தனி வீடு
இந்திரா பார்த்தசாரதி – வேதபுரத்து வியாபாரிகள், கிருஷ்ணா கிருஷ்ணா, வேரோட்டம்
ஜெயகாந்தன்ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரிசுக்குப் போ, சுந்தர காண்டம், கங்கை எங்கே போகிறாள்
கு. சின்னப்ப பாரதி – சங்கம்
நகுலன் – நாய்கள், வாக்குமூலம், நவீனன் டைரி
அ. பாலமனோகரன் – நிலக்கிளி
அசோகமித்திரன் – மானசரோவர்
பொன்னீலன் – கரிசல், புதிய தரிசனங்கள்
சு. சமுத்திரம் – சோற்றுப் பட்டாளம், வாடாமல்லி
விட்டல்ராவ் – போக்கிடம், நதிமூலம்
தமிழவன் – ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
வண்ணநிலவன்கம்பாநதி, ரெய்னீஸ் ஐயர் தெரு
நாஞ்சில்நாடன் – மாமிசப் படைப்பு
தோப்பில் முகமது மீரான் – துறைமுகம்
எஸ். அருள் சுப்ரமணியம் – அவர்களுக்கு வயது வந்துவிட்டது
பாமா – கருக்கு, சங்கதி
சிவகாமி – பழையன கழிதலும், ஆனந்தாயி
தேவகாந்தன் – கனவுச் சிறை
சுப்ரபாரதி மணியன் – சாயத்திரை
பாவண்ணன் – பாய்மரக் கப்பல்
சோ. தர்மன் – கூகை
ராஜ் கௌதமன் – சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை
இமையம் – ஆறுமுகம், செடல்
தஞ்சை பிரகாஷ் – கரமுண்டார் வீடு
கோணங்கி – பாழி, பிதிரா
ஜெயமோகன் – காடு, ஏழாம் உலகம், கன்யாகுமரி, கொற்றவை
எஸ். ரா. – நெடுங்குருதி, உறுபசி
சாரு நிவேதிதா – எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃ பான்சி பனியனும், சீரோ டிக்ரி
பெருமாள் முருகன்கூளமாதாரி
பிரேம் ரமேஷ் – புதைக்கப்பட்ட மனிதர்களும் எரிக்கப்பட்ட பிரதிகளும், சொல் என்றொரு சொல்
யுவன் – குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம்
சு. வேணுகோபால் – நுண்வெளிக் கிரணங்கள்
ஷோபா சக்தி – கொரில்லா, ம்
ஜோ டி குருஸ் – ஆழிசூழ் உலகு
எம். கோபாலகிருஷ்ணன் – அம்மன் நெசவு, மணல் கடிகை
கண்மணி குணசேகரன் – கோரை, அஞ்சலை
விமல் குழந்தைவேல் – வெள்ளாவி
பாரததேவி – நிலாக்கள் தூரதூரமாய் (சுயசரிதை)


தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகனின் ஒரிஜினல் பட்டியல்

இணையத்தில் இது வரை கிடைக்காத ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

கிடைக்காத சிறுகதைகளை இங்கே லிஸ்ட் போட்டிருக்கிறேன். நண்பர்கள் யாருக்காவது சுட்டி கிடைத்தால் சொல்லுங்கள், இணைத்துவிடலாம்.

 1. அ. மாதவையா – கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]
 2. ந. பிச்சமூர்த்தி – அடகு
 3. ந. பிச்சமூர்த்தி – விதை நெல்
 4. ந. பிச்சமூர்த்தி – தாய்
 5. எம்.எஸ். கல்யாணசுந்தரம் – பொன்மணல்
 6. சி.சு. செல்லப்பா – சரசாவின் பொம்மை
 7. சி.சு. செல்லப்பா – வெள்ளை
 8. க.நா. சுப்ரமணியம் – தெய்வ ஜனனம்
 9. எஸ். பொன்னுத்துரை (ஈழ எழுத்தாளர்) – ஆண்மை
 10. கு. அழகிரிசாமி – அழகம்மாள்
 11. கு. அழகிரிசாமி – பெரிய மனுஷி
 12. கு. அழகிரிசாமி – பாலம்மாள் கதை
 13. கு. அழகிரிசாமி – சிரிக்கவில்லை
 14. தி. ஜானகிராமன் – தீர்மானம்
 15. தி. ஜானகிராமன் – கடன் தீர்ந்தது
 16. தி. ஜானகிராமன் – தாத்தாவும் பேரனும்
 17. தி. ஜானகிராமன் – மாப்பிள்ளைத் தோழன்
 18. கி. ராஜநாராயணன் – அரும்பு
 19. சுந்தர ராமசாமி – ஜன்னல்
 20. சுந்தர ராமசாமி – வாழ்வும் வசந்தமும்
 21. சுந்தர ராமசாமி – பல்லக்குத் தூக்கிகள்
 22. சுந்தர ராமசாமி – கோயில் காளையும் உழவு மாடும்
 23. சுந்தர ராமசாமி – காகங்கள்
 24. சுந்தர ராமசாமி – கொந்தளிப்பு
 25. அசோகமித்திரன் – விமோசனம்
 26. அசோகமித்திரன் – காத்திருத்தல்
 27. அசோகமித்திரன் – காட்சி
 28. அசோகமித்திரன் – குழந்தைகள்
 29. அசோகமித்திரன் – பார்வை
 30. அசோகமித்திரன் – மாறுதல்
 31. அசோகமித்திரன் – குகை ஓவியங்கள்
 32. வல்லிக்கண்ணன் – சிவப்புக்கல் மூக்குத்தி
 33. ந. முத்துசாமி – செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
 34. ந. முத்துசாமி – படுகளம்
 35. ந. முத்துசாமி – பிற்பகல்
 36. சா. கந்தசாமி – ஹிரண்யவதம்
 37. சா. கந்தசாமி – சாந்தகுமாரி
 38. ஆதவன் – லேடி
 39. ஜி. நாகராஜன் – யாரோ முட்டாள் சொன்ன கதை
 40. கிருஷ்ணன் நம்பி – சத்திரத்து வாசலில்
 41. ஆர். சூடாமணி – டாக்டரம்மா அறை
 42. இந்திரா பார்த்தசாரதி – குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
 43. இந்திரா பார்த்தசாரதி – இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
 44. ஆ. மாதவன் – பூனை
 45. ஆ. மாதவன் – பதினாலு முறி
 46. ஆ. மாதவன் – புறா முட்டை
 47. ஆ. மாதவன் – தண்ணீர்
 48. ஆ. மாதவன் – அன்னக்கிளி
 49. ஜெயகாந்தன் – யாருக்காக அழுதான்?
 50. ஜெயகாந்தன் – எங்கோ யாரோ யாருக்காகவோ
 51. ஜெயகாந்தன் – இறந்த காலங்கள்
 52. சு. சமுத்திரம் – திரிசங்கு நரகம்
 53. சு. சமுத்திரம் – மானுடத்தின் நாணயங்கள்
 54. சு. சமுத்திரம் – பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்
 55. தோப்பில் முகம்மது மீரான் – வட்டக் கண்ணாடி
 56. தோப்பில் முகம்மது மீரான் – சுருட்டுப்பா
 57. மா. அரங்கநாதன் – மெய்கண்டார் நிலையம்
 58. பூமணி – நொறுங்கல்
 59. பூமணி – தகனம்
 60. பூமணி – கரு
 61. ராஜேந்திர சோழன் – பாசிகள்
 62. ராஜேந்திர சோழன் – வெளிப்பாடுகள்
 63. சுரேஷ் குமார இந்திரஜித் – பிம்பங்கள்
 64. கந்தர்வன் – காளிப்புள்ளே
 65. கந்தர்வன் – கதை தேசம்
 66. கந்தர்வன் – பத்தினி
 67. கந்தர்வன் – மங்களநாதர்
 68. கோபிகிருஷ்ணன் – காணி நிலம் வேண்டும்
 69. ச. தமிழ்ச்செல்வன் – வாளின் தனிமை
 70. திசேரா (ஈழ எழுத்தாளர்) – நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்
 71. விக்ரமாதித்யன் – திரிபு
 72. பாவண்ணன் – பேசுதல்
 73. பாவண்ணன் – முள்
 74. சுப்ரபாரதிமணியன்– உறைவிடங்கள்
 75. கோணங்கி – கருப்பன் போன பாதை
 76. கோணங்கி – கறுத்த பசு
 77. கோணங்கி – மலையின் நிழல்
 78. எஸ். ராமகிருஷ்ணன் – பறவைகளின் சாலை
 79. எம். யுவன் – தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
 80. எம். யுவன் – ஒளிவிலகல்
 81. எம். யுவன் – ஊர்சுற்றிக் கலைஞன்
 82. எம். யுவன் – அவரவர் கதை
 83. எம். யுவன் – நார்ட்டன் துரையின் மாற்றம்
 84. எம். யுவன் – கடல் கொண்ட நிலம்
 85. பொ. கருணாகரமூர்த்தி (ஈழ எழுத்தாளர்) – கிழக்கு நோக்கிய சில மேகங்கள்
 86. சு. வேணுகோபால் – மறைந்த சுவடுகள்
 87. சு. வேணுகோபால் – மீதமிருக்கும் கோதும் காற்று
 88. சு. வேணுகோபால் – களவு போகும் புரவிகள்
 89. சு. வேணுகோபால் – தங்கமணல்
 90. உமா மாகேஸ்வரி – மரணத்தடம்
 91. யூமா வாசுகி – உயிர்த்திருத்தல்
 92. யூமா வாசுகி – ஜனனம்
 93. வேல. ராமமூர்த்தி – அன்னமயில்
 94. பெருமாள் முருகன் – திருச்செங்கோடு
 95. எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} – ஒற்றைச்சிறகு
 96. எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} – வலியின் நிறம்
 97. கண்மணி குணசேகரன் – வண்ணம்
 98. கண்மணி குணசேகரன் – ஆதண்டார் கோயில் குதிரை
 99. அழகிய பெரியவன் – விலங்கு
 100. அழகிய பெரியவன் – வனம்மாள்
 101. லட்சுமணப்பெருமாள் – கதைசொல்லியின் கதை
 102. லட்சுமணப்பெருமாள் – நீதம்

தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சுட்டிகள்