வங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்

ஒரு காலத்தில் வங்காள மொழி நாவல்களுக்கு திரைப்பட உலகில் இருந்த மவுசு ஆச்சரியப்படுத்துவது. சாதாரண வணிக நாவல்கள், சுமாரான கதைகள் எல்லாம் கூட திரைப்படமாக வெளிவந்தன. தமிழில் வெளியான தேவதாஸ், பெண்ணின் பெருமை, அன்னை, படிக்காத மேதை, படித்தால் மட்டும் போதுமா, காத்திருந்த கண்கள், பழனி, எதிர்நீச்சல் கூட வங்காள மொழி நாவல்கள்/நாடகங்களை மூலக்கதையாகக் கொண்டவை. எதிர்நீச்சல் விஷயத்தில் அது வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்று அந்தக் காலத்தில் ஒரு சின்ன சச்சரவு இருந்திருக்கிறது. ஐம்பது-அறுபதுகளின் ஜமீந்தார்/நிலச்சுவான்தார் குடும்ப மிகை உணர்ச்சித் திரைப்படம் (Melodrama) என்றால் அதன் மூலக்கதை வங்காள நாவலாக இருக்க நல்ல வாய்ப்பிருக்கிறது.

இந்தக் கட்டுரை அப்படிப்பட்ட சில நாவல்கள்-ஹிந்தித் திரைப்படங்களைப் பற்றி பேசுகிறது. அந்த திரைப்படங்களைப் பற்றி கீழே…

சாஹெப் பீபி அவுர் குலாம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. பாட்டுகளுக்காகவே பார்க்கலாம். மீனாகுமாரியும் குரு தத்தும் வஹீதா ரெஹ்மானும் ரஹ்மானும் கலக்கலாக நடித்திருப்பார்கள். அந்த வருஷ ஃபில்ம்ஃபேர் விருதுகளுக்கான ஐந்து nominations-உம் மீனாகுமாரிக்கு இந்தப் பாத்திரத்துக்காகவே கிடைத்தது, வேறு யாரும் nominate கூட செய்யப்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறேன், படிக்க வேண்டும்…

எல்லா பாட்டுகளுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான் என்றாலும் ஒரே ஒரு பாட்டு.

தேவதாஸைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இன்று ஒரு cliche-வாக மாறிவிட்ட படிமம். எல்லா இந்திய மொழிகளிலும் ஒரு முறையாவது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கே.எல். சைகலுக்கும் திலீப் குமாருக்கும் நாகேஸ்வரராவுக்கும் அவர்களின் இமேஜை நிர்ணயித்தவை அவர்கள் தேவதாசாக நடித்த திரைப்படங்கள்தான். அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.

இஜாசத் சுமாரான திரைப்படம்தான். சுபோத் கோஷ் எழுதிய மூலக்கதை இங்கே.

அமர் ப்ரேம் போன்ற செயற்கையான திரைப்படத்தின் மூலக்கதையை (ஹிங் கச்சோரி) எழுதியவர் பாதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் போன்ற திரைப்படங்களின் மூலக்கதையை எழுதிய அதே பிபூதிபூஷன் பந்தோபாத்யாயா என்பது வியப்புதான்.

இன்னும் எத்தனையோ ஹிந்திப் படங்கள் இருக்கின்றன. பரினீத்தா, சுஜாதா, ஹஜார் சௌராஷி கி மா, சோக்கர் பலி, ருடாலி, காபூலிவாலா, உப்ஹார், பிரஜ் பஹூ, குஷ்பு என்று பல நினைவுக்கு வருகின்றன. உங்களுக்கு நினைவு வருவதையும் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்