நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.

என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.

எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.

முதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.

நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.

எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.

பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.

பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

வாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.

தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

அப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.

அறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)

அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா? தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.

பக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.

ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.

14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.

சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

சுஜாதா ரசித்த அசோகமித்ரன் சிறுகதைகள்

asokamithran1978-இல் படிகள் என்ற சிற்றிதழுக்காக சுஜாதா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பேட்டியில் அசோகமித்ரனைப் பற்றி ஒரு கேள்வி.
படிகள்: அசோகமித்திரனின் எந்தக் கதைகளை ரொம்ப ரசிக்கிறீர்கள்?

சுஜாதா: உதாரணமாக ‘வழி‘ ஒரு கதை. இன்னொன்று புலிக்கலைஞன், எலி, விமோசனம், நிறைய கதைகள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், அசோகமித்ரன் பக்கம்

சுஜாதா தேர்ந்தெடுத்த அவரது படைப்புகள்

sujatha1978-இல் படிகள் என்ற சிற்றிதழுக்காக சுஜாதா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் ஒரு கேள்வி:

படிகள்: நாங்கள் அல்லது இன்னொருவர் உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன்.

சுஜாதா: பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும்.

 • தனிமை கொண்டு (தனிப் புத்தகம்)
 • ஜன்னல் (கசடதபற)
 • காணிக்கை (கல்கி)
 • செல்வம் (கலைமகள்)
 • முரண் (சுதேசமித்திரன்)
 • நகரம் (தினமணிக்கதிர்)
 • எதிர்வீடு (கணையாழி)
 • அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்)
 • வீடு (தினமணிக்கதிர்)
 • ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்)
 • அம்மோனியம் பாஸ்ஃபேட் (தினமணிக்கதிர்)
 • பார்வை (தினமணிக்கதிர்)

இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியத் தரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writing என்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.

இந்த சிறுகதைகளுக்கான மின்பிரதிகள் கிடைக்குமா? குறிப்பாக ‘தனிமை கொண்டு’. சுட்டிகள் கிடைத்தால் சொல்லுங்கள், இணைத்துவிடலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

தி. ஜானகிராமன் பற்றி அசோகமித்ரன்

thi_janakiramanசொல்வனத்தில் தி.ஜா. பற்றி அசோகமித்ரன் அளித்த ஒரு பேட்டி கண்ணில் பட்டது. சிறுகதைகளின் master என்றே தி.ஜா.வைப் பற்றி அவர் கருதினாலும், தி.ஜா.வின் admirer என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும் தி.ஜா. பற்றி முடிவான கருத்தை இப்போது யாராலும் சொல்லிவிட முடியாது, இன்னும் காலம் வேண்டும் என்கிறார்.

asokamithranஅசோகமித்ரனின் அபிப்ராயங்களும் அவரது எழுத்தைப் போலவேதான் – எந்த அதீதத்துக்கும் அவர் போவதில்லை. யாரையாவது முழுதாகப் புகழ்வது என்பது அபூர்வமே. தன்னைப் பற்றியே அவர் பெருமிதம் கொள்பவரில்லை. தி.ஜா. அசோகமித்ரனின் கதைகளை விரும்பிப் படித்தார் என்பதையே இந்தப் பேட்டியில் போகிறபோக்கில் சின்னதாகச் சொல்கிறார், அவ்வளவுதான். மேலோட்டமாகப் படிப்பவர்கள் அதை கவனிக்காமல் தாண்டிவிடவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மேதை உண்மையாக மனம் விட்டுப் பாராட்டுபவை சிறு வயதில் அவரைக் கவர்ந்த எழுத்துக்களும் சினிமாக்களும்தான் (கல்கியின் தியாகபூமி, எம்ஜிஆர்நம்பியார் கத்திச்சண்டை போடும் சர்வாதிகாரி திரைப்படம்…) என்பது பெரிய நகைமுரண்தான். (irony)

1950களில் தி.ஜா.வின் “சிகப்பு ரிக்‌ஷா” சிறுகதைத்தொகுதி கையில் கிடைத்ததாம். தி.ஜா.வின் எழுத்து அப்போதுதான் அறிமுகம் ஆயிற்றாம். “சிகப்பு ரிக்‌ஷா” சிறுகதைத் தொகுதி அவரைப் பெரிதாகக் கவராவிட்டாலும் சிறுகதைகளில்தான் தி.ஜா.வின் சாதனை என்கிறார். “Essentially a far better short story writer than a novelist” என்று குறிப்பிடுகிறார். அடுத்த, பாயசம், கண்டாமணி ஆகிய சிறுகதைகளைக் குறிப்பிடுகிறார். “ஏழ்மையை romanticize செய்யாமலும், இழிவு செய்யாமலும் – அவங்களோட சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி ஜானகிராமனால பதிவு செய்ய முடிஞ்சுது” என்கிறார்.

தி.ஜா.வின் masterpiece என புகழப்படும் மோகமுள்ளிலேயே சில இடங்கள் சரியாக வரவில்லை என்கிறார். மோகமுள்ளை கொஞ்சம் எடிட் செய்யுமாறு இவரை தி.ஜா. கேட்டதாகவும், இவரால் முடியவில்லை என்றும் நினைவு கூர்கிறார். மரப்பசு மோசமான நாவல் என்பதை அவர் மறைத்தும் மறைக்காமலும் சொல்லுவதை – “மரப்பசு, நளபாகமெல்லாம் சரியா வரல. நளபாகத்துலேயாவது சில இடங்கள் நன்னா இருக்கும்” – நான் ரசித்தேன். அம்மா வந்தாள் நாவலில்தான் அவருக்கு நாவலின் form கைவந்தது என்று நினைக்கிறார். அவரது புகழ் பெற்ற நாவல்களை விட உயிர்த்தேன், மலர் மஞ்சம், செம்பருத்தியெல்லாம் நன்னாருக்குமாம்.

தி.ஜா.வின் நாடகங்களை படித்ததில்லை, பார்த்ததில்லை என்பதால் அவை என் பிரக்ஞையிலேயே இல்லை. என்றாவது படித்துப் பார்க்க வேண்டும். “நாலு வேலி நிலம்” சாதாரணமான கதை, அதை ரொம்ப நன்னா, தளுக்கா எழுதி இருக்கிறாராம். எஸ்.வி. சகஸ்ரநாமம்தான் நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியார் முதலிய நாடகங்களை மேடையேற்றினார் என்றும் நாலு வேலி நிலத்தை திரைப்படமாகக் எடுத்து சகஸ்ரநாமம் பெரிதாக கையைச் சுட்டுக்கொண்டார் என்றும் தகவல் தருகிறார்.

முழுப் பேட்டியையும் படித்துப் பாருங்கள்; தி.ஜா.வைப் பற்றி தெரிந்து கொள்வதை விட அசோகமித்ரனைப் பற்றி அதிகமாகப் புரிந்து கொள்ளலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம், அசோகமித்ரன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பாயசம் சிறுகதை
மரப்பசு பற்றி ஆர்வி
நளபாகம் பற்றி ஆர்வி
அம்மா வந்தாள் பற்றி வெங்கட் சாமிநாதன்
சொல்வனத்தின் தி.ஜா. சிறப்பிதழ்

18-வது அட்சக்கோடு பற்றி அசோகமித்ரன்

மாதம் முடிய மூன்று நாள் இருக்கிறது. இந்த அரை வாரத்துக்கு எழுத்தாளர்கள் அவர்களது எழுத்துக்களைப் பற்றி சொன்னவற்றை பதிக்கப் போகிறேன். அசோகமித்ரனிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்துக்கு நன்றி!

asokamithranஅசோகமித்ரனே எழுதிய கட்டுரை இது. வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது ஒரு வேளை, ‘18-வது அட்சக்கோடு‘ எழுத நேர்ந்ததில் நிர்ப்பந்தம் இருந்திருக்கிறதோ என்று ஓர் ஐயம் வருகிறது. அன்று வார மாதப் பத்திரிகைகளில் தொடர்கதை என்று ஒன்றாவது இருக்க வேண்டும். எனக்கு ‘அட்சக்கோட்டை’ தொடர்கதையாக மாற்றுவதில் சம்மதம் இல்லை. ஆனால் ஒத்துக்கொண்ட பிறகு எவ்வளவு நேர்த்தியாக அதைச் செய்து முடிப்பது என்பதில் கவனம் செலுத்தினேன்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் என் திட்டம். அது நாவலில் பூர்த்தியாகவில்லை. முன்பும் பின்னரும் எழுதிய சிறுகதைகளில்தான் அந்த எண்ணம் பூர்த்தியாயிற்று. ‘ஐநூறு கோப்பை தட்டுகள்‘ சிறுகதையை முதல் அத்தியாயமாக வைத்துக்கொள்ள முடியுமா? ஏதேதோ பரிசோதனைகள் செய்த பின் இப்போது நாவல் ஓர் உருவம் பெற்றிருக்கிறது.

சுதந்திரத்துக்கு ஓர் ஆண்டு முன்னரே நிஜாம் ராஜ்யத்தில் வாழ்க்கை நடத்துவது கடினமாகப் போய்விட்டது. ஊரில் பாதி ஜனம் வெளியூர் போய்விட்டது. என் கூடப் படித்தவர்கள், விளையாடியவர்கள் சொல்லிக்கொண்டும் சொல்லாமலும் மறைந்துவிடுவார்கள். தெருவில் ஆறரை மணி, ஏழு மணிக்குப் பிறகு ஆட்களைப் பார்ப்பது அபூர்வம். நாங்கள் ஊருக்குச் சற்று வெளியே இருந்தோம். ஆனால் ஊர் மத்தியில் இருந்தவர்கள் எந்நேரமும் என்ன நடக்குமோ என்று கிலியில் இருந்தார்கள். எங்கள் சாரியிலேயே பன்னிரண்டு குடும்பங்களில் மூன்று குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆகாது. ஆனால் இப்போது அவர்களே தகரக் கத்திகளையும் ஓட்டை துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார்கள்.

ஆனால் எல்லாரும் சேர்ந்து வாழ வேண்டும், இந்த நெருக்கடி நிரந்தரமானதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். அது ஓரளவு பூர்த்தியாகியிருக்கிறது. பிரிட்டனும் அமெரிக்காவும் ஜெர்மனியை நிர்மூலம் செய்தன. அந்நாடுகளுடன் அதே ஜெர்மனி வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்கிறது. இரு அணு குண்டுகளை வீசிய அமெரிக்காவுடன் மின்னணுக் கருவிகள் மூலம் ஜப்பான் போட்டி போடுகிறது. நிஜாம் ராஜ்யத்தில் பல தலைமுறைகள் சேர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் அப்படி வாழ முடியாதா?

இன்று பல பிற்போக்குச் சக்திகள் உலவினாலும் ’18வது அட்சக்கோடு’ நாவலில் பரவிக் கிடந்த பீதி இன்றில்லை. நிஜாம் ராஜ்ஜியமும் அரசுமுமே இல்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: 18ஆவது அட்சக்கோடு

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் – அப்டீன்னா?

வெண்பாவிற் புகழேந்தி என்று புகழ் பெற்றவரும், நளவெண்பாவை எழுதியவருமான புகழேந்திப் புலவருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நடுவே பலத்த போட்டி இருந்தது என்று கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு. அந்தப் போட்டியிலிருந்து முளைத்ததாம் இந்த “பழமொழி”.

சுந்தரராமன் தன் தளத்தில் அசோகமித்ரன் கட்டுரை ஒன்றை digitize செய்து பதித்திருக்கிறார். அதிலிருந்து:

சீதனமாக சோழ அரசியுடன் அனுப்பப்பட்ட புகழேந்தியை சொல்வார் பேச்சு கேட்டு சோழ மன்னன் சிறையில் அடைத்திருக்கிறான். இதை அறிந்த அரசி கோபத்துடன் தன் அறைக்குள் தாளிட்டுக் கொள்கிறாள்.
அவள் கோபத்தைத் தணிக்க அரசன் ஒட்டக்கூத்தரை அனுப்புகிறான். அவர் பாடிய செய்யுள் அரசிக்கு இன்னும் கோபமூட்டிவிடுகிறது. “என் இடை பற்றியும் அழகு பற்றியும் பாட இவன் யார்? ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!”

asokamithranஅசோகமித்ரன் இந்தக் கதையை வினோத ரசமஞ்சரி என்ற புத்தகத்தில் படித்ததாகக் குறிப்பிடுகிறார். அவ்வையார், கம்பன், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகம், பொய்யாமொழிப் புலவர், ஏகம்பவாணன் பற்றிய பல கர்ணபரம்பரைக் கதைகள் அடங்கிய தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுரங்கம் என்று இந்தப் புத்தகத்தைப் புகழ்கிறார். போதாக்குறைக்கு பரமார்த்த குரு கதை வேறு இருக்கிறதாம். 1891-இல் நிச்சயமாக ஒரு பதிப்பு வெளியாகி இருக்கிறதாம். அதற்கு முன்பும் பதிப்புகள் வந்திருக்கலாம் என்று அசோகமித்ரன் யூகிக்கிறார். (வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார் என்று இந்தப் பதிவில் படித்தேன்.) சமீப காலத்தில் விஜயா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் நினைவு கூர்கிறார்.

அசோகமித்ரன் குறிப்பிடும் பிற இரு புத்தகங்களும் (வாதூலன் எழுதிய “கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்“, சுந்தரராமன் எழுதிய “ராகசிந்தாமணி“) கூட சுவாரசியமானவையாகத் தெரிகின்றன.

என்றாவது தேடிப் பிடித்து இதையெல்லாம் வாங்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கர்ணபரம்பரைக் கதைகள்

கிழக்கு பதிப்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

nhmbadri_seshadriசமீபத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது கிழக்கு பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தமிழ் நாவல்களை பற்றிய ஒரு சுட்டி கிடைத்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவற்றில் முக்கால்வாசியாவது தமிழின் முக்கிய நாவல்கள் பட்டியலில் இடம் பெறுபவை, அதிகமாக விற்காத இலக்கியப் புத்தகங்கள். இவை எல்லாம் பிரமாதமாக வியாபாரம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கிழக்கு பதிப்பகம் லாப நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் நிறுவனமோ, சாகித்ய அகாடமியோ, நேஷனல் புக் ட்ரஸ்டோ இல்லை. அப்படி இருந்தும் இதைச் செய்திருக்கும் பதிப்பகத்துக்கும் அதன் நிறுவனர் பத்ரி சேஷாத்ரிக்கும் ஒரு ஜே போட வேண்டுமென்று தோன்றியது, அதனால்தான் இந்தப் பதிவு.

தமிழ் படிக்கத் தெரியாத, படிக்கும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பரிசாக வாங்கிக் கொடுங்கள்!

மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் நாவல்களின் பட்டியல்: ஆங்கிலப் பெயர் அடைப்புக்குறிக்குள்.

சா. கந்தசாமியின் “சூர்ய வம்சம்” (Sons of the Sun)
இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்” (Surrendered Dreams)
கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”
இரா. முருகனின் “அரசூர் வம்சம்” (Ghosts of Arasur)
யூமா. வாசுகியின் “ரத்த உறவு” (Blood Ties)
இ.பா.
      Ashes and Wisdom
      சுதந்திர பூமி (Into this Heaven of Freedom)
      தந்திர பூமி (Wings in the Void)
      கிருஷ்ணா கிருஷ்ணா (Krishna Krishna)
சிவசங்கரி
      Deception
      பாலங்கள் (Bridges)
ஹெப்சிபா ஜேசுதாசனின் “புத்தம்வீடு” (Lizzie’s Legacy)
விஜயராகவனின் “Twice Born”
ஜெயகாந்தன்
      ரிஷிமூலம் (Rishimoolam)
      ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (Once an Actress)
      உன்னைப் போல் ஒருவன்
நீல. பத்மநாபனின்பள்ளிகொண்டபுரம்” (Where the Lord Sleeps)
அசோகமித்ரன்
      இன்று (Today)
      கரைந்த நிழல்கள் (Star-Crossed)
பி.எஸ். ஸ்ரீயின் “Temple Elephant” (சிறுவர் புத்தகம் என்று யூகிக்கிறேன்.)
ஆதவன்
      காகித மலர்கள் (Paper Flowers)
      என் பெயர் ராமசேஷன் (I, Ramaseshan)
வாசந்தியின் ஆகாச வீடுகள் (A Home in the Sky) – நன்றி, ஜடாயு!

கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”, விஜயராகவனின் “Twice Born” எல்லாம் தமிழ் நாவல்தானா? ஆசிரியரையும் புத்தகத்தையும் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

இ.பா.வின் “Ashes and Wisdom”, சிவசங்கரியின் “Deception”, வாசந்தியின் “A Home in the Sky” ஆகியவற்றுக்கு ஒரிஜினல் தமிழ்ப் பெயரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

TamBrahm Bride மற்றும் Ashes and Wisdom இரண்டும் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்டவை, TamBrahm Bride சும்மா pulp என்று ஜடாயு தகவல் தந்திருக்கிறார். இவற்றைத் தவிர ஜெயமோகனின்காடு” (Forest) புத்தகமும் ஆங்கில மொழிபெயர்ப்பாக கிழக்கு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறதாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

அசோகமித்ரனின் “இன்று”

asokamithranஇன்று ஒரு “சிறுகதை”த் தொகுப்பு. சில சிறுகதைகளைப் படிக்கும்போது சிறுகதைதானா இல்லை ஏதாவது கட்டுரையா என்று சந்தேகமாக இருந்தது. அசோகமித்ரன் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்தான், ஆனால் அதே சமயம் எனக்கு அவர் ஒரு challenging எழுத்தாளரும் கூட. எத்தனையோ முறை என்னதான் சொல்ல வருகிறார் என்று புரியாமல் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். குமுதத்தில் அவர் எழுதிய சிறுகதை ஒன்று (ஒற்றன் புத்தகத்தில் வரும் – பஸ்ஸுக்காக காத்திருப்பார், பஸ் அவருக்குப் பழகிய விதத்தில் இருக்காது.) பத்து வருஷங்களுக்குப் பிறகு தன்பாத் நகரத்தில் பஸ் தேடி ஒரு டிரக்கரில் ஏறிய நொடியில்தான் புரிந்தது. புகழ் பெற்ற காந்தி சிறுகதை எனக்கு சிறுகதையாகவே தெரிவதில்லை. ஆனால் புரியும்போது மண்டையில் டங் என்று அடி விழுகிறது, அந்த அனுபவத்துக்காகவே அவரை மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் முதல் சிறுகதையின் பேர் “டால்ஸ்டாய்”. முதலில் டால்ஸ்டாயைப் பற்றி சம்பிரதாயமான ஒரு உரை. பிறகு இன்னொரு உரை. என்னடா எழவு இது என்று படித்துக் கொண்டே போனேன். கடைசி வரி –

“இந்த இரு உரைகளையும் சேர்த்துப் படித்தபோது அவனுக்கு சிரிப்பாக வந்தது. சிரித்து முடித்தபோது வருத்தமாகவும் இருந்தது.”

மனிதர் டால்ஸ்டாயைப் பற்றி எழுதவில்லை, இந்த உரைகளைக் கேட்கும் மனிதர்களைப் பற்றி, இந்த சிறுகதையைப் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி எழுதி இருக்கிறார்! மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர். “நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற சிறுகதையில் எழுத்தாளர் ஹரிதாசனைப் பேட்டி காண்கிறார்கள். பேட்டி எடுப்பவர் ஹரிதாசன் எழுதிய கதை என்று எதையோ விவரிக்கிறார். அப்போதைய உரையாடல்.

இந்தக் கதையை நான் எழுதலே.
நீங்க எழுதலையா? ரொம்ப நல்ல கதை.
என்ன செய்யறது? நான் எழுதலை.”

Sarcasm கசப்பே இல்லாமல் வெளிப்படும் ஒரு அபூர்வ தருணம்!

குரூரமான நகைச்சுவையும் உண்டு. ஒரு ஆர்ப்பாட்டம், ஜனாதிபதி வருகை, ரகளை, போலீஸ், அப்பா, அம்மா, குழந்தைகள் உள்ள குடும்பம் பிரிந்துவிடுகிறது. குடும்பத் தலைவன் சுந்தரராமனின் மன ஓட்டம்

“எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கியது நல்லதாகப் போயிற்று. ஒரேயடியாக மின்சார ரயிலில் ஏறி பரங்கிமலை போய்விடலாம். குழந்தைகளை கடவுள் காப்பாற்றுவார்.”

அடுத்த வரி –

“கடவுள் காப்பாற்றினார், ஒரு குழந்தையில் காலைத் தவிர.”

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த சிறுகதை(கள்) ஆக நான் கருதுவது “புனர்ஜென்மம்” மற்றும் அதன் தொடர்ச்சியான “இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன?”. புனர்ஜென்மத்தில் முதிர்கன்னி சீதா, ஏற்கனவே மணமான ஒருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறாள். கசப்பும் மன அழுத்தமும் அதிகம் ஆக ஆக ஒரு நாள் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். இதே கருவை எம்.வி. வெங்கட்ராம்பைத்தியக்காரப் பிள்ளை” என்ற அற்புதமான சிறுகதையில் எழுதி இருக்கிறார். எம்.வி.வி.யின் அணுகுமுறைக்கும் அசோகமித்ரனின் அணுகுமுறைக்கும் எத்தனை வித்தியாசம்! எம்.வி.வி. ஒரு மாஸ்டர்பீஸைப் படைத்திருக்கிறார் என்பது புரியாதவர்கள் இருக்க முடியாது. அசோகமித்ரனின் சிறுகதையை நானே என் இருபதுகளில் படித்திருந்தால் என்ன அழுமூஞ்சிக் கதைடா என்று விசிறி அடித்திருப்பேன். அவரது subtlety புரிந்திருக்காது.

ஆனால் இந்த இரண்டு சிறுகதைகளையும் ஒன்றாக எந்த வயதில் படித்திருந்தாலும் இரண்டாம் பகுதிக்கு சிரித்திருப்பேன். அதுவும் என் இருபதுகளில் வாய்விட்டு கபகபகபகபவென்று சிரித்திருப்பேன். சீதாவின் தற்கொலையைப் பற்றி ஒரு பொதுக் கூட்டம் இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன என்று விவாதிக்கிறது. வரதட்சணை வாங்க மாட்டேன் என்று கையெழுத்து வாங்குவோம் என்று ஒருவர் ஆலோசனை சொல்கிறார். அதை இன்னொருவர் வரதட்சணைக் கொடுமை கையெழுத்துப் போடவும் இயலாத எழுத்தறிவில்லாதவர்களால்தான் வளர்க்கப்படுகிறது என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார். அமைப்பாளரின் தீர்வு – கையெழுத்துப் போட முடியாதவர்களிடம் கைநாட்டு வாங்கிக் கொள்ளலாம், அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை!

இவற்றைத் தவிரவும் இன்னும் இரண்டு நல்ல சிறுகதைகள் உண்டு. “ஒரு மனிதனுக்கு வேண்டிய நிலம் எவ்வளவு?” டால்ஸ்டாயின் சிறுகதையை நினைவுபடுத்தும் தலைப்பு. இங்கே ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி – தமிழர் – தன் கடைசி நாட்களை டெல்லியில் தன் சொந்தங்களிடமிருந்து வெகு தூரத்தில், வயதான தியாகிகள் வசிக்கும் ஒரு ஹாஸ்டலில் கழிக்கிறார். டால்ஸ்டாய் எழுப்பும் அதே கேள்விதான், ஆனால் முற்றிலும் வேறான விடை. “நடனத்துக்குப் பின்” சிறுகதையில் அவசர நிலையின்போது பல கஷ்டங்களை அனுபவித்த சோமு இன்று தன் பழைய அரசியல் நண்பன் ஒருவனைப் பார்க்க வருகிறான்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, விலை 50 ரூபாய்தான். ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டிருக்கிறார்கள். (மொழிபெயர்த்தவர் – சாந்தி சிவராமன்) அவர்களுடைய மார்க்கெட்டிங் blurb கீழே. நானே பரவாயில்லை, சிறுகதையா கட்டுரையா என்றுதான் குழம்பினேன். அவர்கள் ஒரு படி மேலே போய் இதை நாவலாக்கிவிட்டார்கள். 🙂

Today
Ashokamitran
ISBN:978-81-8368-384-5 Page :88 Rs. 100
Ashokamitran’s Today—translated from his Tamil novel Indru—is an avant garde departure from traditional forms of writing. The novel strings together a number of genres such as narrative fiction, poetry, lectures and a newspaper interview to produce a rare amalgam of fiction and recent history. The condition of freedom fighters in free India, social evils like dowry, corruption and crass commercialism, institutions like marriage and politics are highlighted as problems that occupy centre stage today. The period chosen for such delineation is immediately before and after the imposition of a national emergency by Prime Minister Indira Gandhi. Anger, persecution, lack of compassion and tolerance find their counterpoint in a father figure-perhaps a veiled reference to the Father of the Nation whose dreams lie shattered in the present. Today is also for all time. Its concerns are universal, its people are of flesh and blood. It raises serious questions about the validity of the value systems governing our lives in an increasingly complex world. It is without doubt a trailblazer in post-modern Tamil literature. Translated from Tamil by Shanti Sivaraman

சின்னப் புத்தகம், கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

தமிழ் நாவல் பரிந்துரைகள் – ஒரு விரிவான அலசல்

செல்வராஜ் திண்ணை தளத்தில் தமிழ் நாவல் பரிந்துரைகளை பிரமாதமாகத் தொகுத்திருந்தார். அதைப் பற்றி இந்தத் தளத்திலும் குறிப்பிட்டிருந்தேன். இப்போது இன்னும் விரிவாகத் தொகுத்திருக்கிறார். பூரி என்று யாரையோ புதிதாக குறிப்பிடுகிறார். அதுவும் நாந்தேன்! ஒரு காலத்தில் அந்தப் பேரில் சில குழுமங்களில் எழுதிக் கொண்டிருந்தேன். ஓவர் டு செல்வராஜ்!

கொஞ்சம் நீளமான பதிவுதான். இருந்தாலும் நமக்குப் பிடித்த புத்தகங்களை வேறு யாரெல்லாம் பரிந்துரைக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறது.

இதைப் பதிப்பதில் காலதாமதம் ஆகிவிட்டது. சிலிகன் ஷெல்ஃப், ஜெயமோகன் தளங்களில் குறிப்பிடப்பட்ட நாவல்களுக்கெல்லாம் சுட்டி தரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் தாவு தீர்ந்துவிடும்! தாமதத்துக்கு செல்வராஜ் மன்னிக்க வேண்டும்.

சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1

என். செல்வராஜ்

இது வரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன. அவை 15000க்கு மேலும் இருக்கலாம். அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். அவை எத்தனை என்பதை நாம் அறிய இதுவரை வெளிவந்துள்ள பல்வேறு எழுத்தாளர்களின் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பட்டியல் இடுவது என்பது க.நா. சுப்ரமணியம் காலத்தில் இருந்தே இருக்கிறது. எல்லா எழுத்தாளர்களும் பட்டியலாகத் தரவில்லை. க.நா. சுப்ரமணியம், கோவை ஞானி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சி. மோகன், அசோகமித்திரன், விக்கிரமாதித்யன், வண்ணநிலவன் ஆகியோர் பட்டியலாகத் தந்துள்ளனர். கட்டுரைகளில் சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், வெங்கட் சாமிநாதன், ந. முருகேச பாண்டியன், சு.வேணுகோபால், பெ.தேவி, க.பூரணசந்திரன், இராம குருநாதன் ஆகியோர் சிறந்த நாவல்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

வலைப்பூக்களில் ஆர்வி, பா.ராகவன், சரவணகார்த்திகேயன், பாலகுமாரன், இரா.முருகன், பாவண்ணன், அய்யனார் விஷ்வனாத், எம்.வேதசகாயகுமார், சுந்தர், கொழந்த, வெங்கட்ரமணன், விஜயமகேந்திரன், ம.மணிமாறன் ஆகியோர் பட்டியலாகத் தந்துள்ளனர்.

முதலில் சில முக்கிய பதிவுகளைப் பார்க்கலாம்.


நூறு சிறந்த நாவல்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்

1.பிரதாப முதலியார் சரித்திரம் 2. கமலாம்பாள் சரித்திரம் 3. கிளாரிந்தா 4. நாகம்மாள் 5. தில்லான மோகனாம்பாள் 6.பொன்னியின் செல்வன் 7. வீரபாண்டியன் மனைவி 8.சயாம் மரண ரயில் 9. லங்காட் நதிக்கரை 10. தீ 11. பஞ்சமர் 12. பொய்த்தேவு 13. வாடிவாசல் 14.அபிதா 15.நித்ய கன்னி 16.பசித்த மானுடம் 17.அம்மா வந்தாள் 18 மோகமுள் 19.மரப்பசு 20.வாசவேஸ்வரம் 21. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 22. சில நேரங்களில் சில மனிதர்கள் 23. பாரீசுக்கு போ 24. புயலிலே ஒரு தோணி 25. கடலுக்கு அப்பால் 26. நினைவுப்பாதை 27. நாய்கள் 28. ஒரு புளிய மரத்தின் கதை 29. ஜே.ஜே. சில குறிப்புகள் 30. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 31. கோபல்ல கிராமம் 32. சாயாவனம் 33.தொலைந்து போனவர்கள் 34. நாளை மற்றுமொரு நாளே 35.குருதிப்புனல் 36. கருக்கு 37. கரிப்பு மணிகள் 38. வாடாமல்லி 39. கல் மரம் 40. போக்கிடம் 41. புத்தம் வீடு 42. கரைந்த நிழல்கள் 43.பதினெட்டாவது அட்சக்கோடு 44. ஒற்றன் 45. இடைவெளி 46.பள்ளி கொண்டபுரம் 47. தலைமுறைகள் 48. கிருஷ்ணபருந்து 49.அசடு 50. வெக்கை 51. பிறகு 52. தலைகீழ் விகிதங்கள் 53. எட்டு திக்கும் மத யானை 54. ஒரு கடலோர கிராமத்தின் கதை 55. மானுடம் வெல்லும் 56.சந்தியா57காகித மலர்கள் 58. என் பெயர் ராமசேஷன் 59. ரத்தம் ஒரே நிறம் 60. உடையார் 61. கரிசல் 62.கம்பா நதி 63. கடல் புரத்தில் 64. பழையன கழிதலும் 65. மௌனப்புயல் 66. ஈரம் கசிந்த நிலம் 67. பாய்மரக்கப்பல் 68. பாழி 69.ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 70. வார்ஸாவில் ஒரு கடவுள் 71.கோவேறு கழுதைகள் 72. செடல் 73.உள்ளிருந்து சில குரல்கள் 75. கரமுண்டார் வீடு 76. விஷ்ணுபுரம் 77. காடு 78. கொற்றவை 79. உப பாண்டவம் 80.நெடுங்குருதி 81. யாமம் 82.கூகை 83. புலிநகக்கொன்றை 84. ஸீரோ டிகிரி 85. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் 86. சொல் என்றொரு சொல் 87. சிலுவை ராஜ் சரித்திரம் 88.தகப்பன் கொடி 89. கொரில்லா 90. நிழல் முற்றம் 91. கூளமாதாரி 92. சாயத்திரை 93. ரத்த உறவு 94. கனவுச் சிறை 95. அளம் 96. அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் 97. அரசூர் வம்சம் 98. அஞ்சலை 99. குள்ளச்சித்தன் சரித்திரம் 100. ஆழிசூழ் உலகு


தமிழ் நாவல்கள் : விமரிசகனின் சிபாரிசு- ஜெயமோகன் ( நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் )

1.பிரதாப முதலியார் சரித்திரம் 2. கமலாம்பாள் சரித்திரம் 3. பத்மாவதி சரித்திரம் 4. நாகம்மாள் 5.சட்டி சுட்டது 6. இதய நாதம் 7. கேட்ட வரம் 8. இருபது வருடங்கள் 9. பகல் கனவு 10. பொய்த்தேவு 11.ஒரு நாள் 12. வாழ்ந்தவர் கெட்டால் 13. வாடிவாசல் 14. ஜீவனாம்சம் 15. அபிதா 16. புத்ர 17. வேள்வித்தீ 18. நித்ய கன்னி 19. காதுகள் 20. பசித்த மானுடம் 21. பஞ்சும் பசியும் 22. மோகமுள் 23.அம்மா வந்தாள் 24. மலர் மஞ்சம் 25. செம்பருத்தி 26. அன்பே ஆரமுதே 27. மரப்பசு 28. மண்ணாசை 29.வாசவேஸ்வரம் 30. தர்மஷேத்ரே 31. புகை நடுவில் 32.நேற்றிருந்தோம் 33.ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன 34. தந்திர பூமி 35. சுதந்திர பூமி 36. குருதிப் புனல் 37. வேதபுரத்து வியாபாரிகள் 38. கிருஷ்ணா கிருஷ்ணா 39. குறிஞ்சித்தேன் 40. வளைக்கரம் 41. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 42. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 43. பாரீசுக்குப் போ 44. சில நேரங்களில் சில மனிதர்கள் 45. சுந்தர காண்டம் 46.கங்கை எங்கே போகிறாள் 47. தாகம் 48. சங்கம் 49. தேனீர் 50. மலரும் சருகும் 51. புயலிலே ஒரு தோணி 52. கடலுக்கு அப்பால் 53. நினைவுப்பாதை 54. நாய்கள் 55. வாக்குமூலம் 56. நவீனன் டைரி 57. ஒரு புளிய மரத்தின் கதை 58. ஜே ஜே சில குறிப்புகள் 59. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 60. கோபல்ல கிராமம் 61. கோபல்லபுரத்து மக்கள் 62. சாயாவனம் 63. சூரியவம்சம் 64. தொலைந்து போனவர்கள் 65. அவன் ஆனது 66. நாளை மற்றுமொரு நாளே 67. குறத்தி முடுக்கு 68. புத்தம் வீடு 69. பதினெட்டாவது அட்சக்கோடு 70. தண்ணீர் 71. கரைந்த நிழல்கள் 72. மானசரோவர் 73. தலைமுறைகள் 74. பள்ளி கொண்டபுரம் 75. உறவுகள் 76. கரிசல் 77. புதிய தரிசனங்கள் 78. கிருஷ்ணப்பருந்து 79. புனலும் மணலும் 80. சோற்றுப்பட்டாளம் 81. வாடாமல்லி 82. போக்கிடம் 83. நதிமூலம் 84. இடைவெளி 85. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 86. கம்பாநதி 87. ரெயினீஸ் அய்யர் தெரு 88. கடல்புரத்தில் 89. பிறகு 90. வெக்கை 91. தலைகீழ் விகிதங்கள் 92. என்பிலதனை வெயில்காயும் 93. மாமிசப்படைப்பு 94.எட்டுத்திக்கும் மதயானை 95. மிதவை 96. ஒரு கடலோர கிராமத்தின் கதை 97. கூனன் தோப்பு 98. துறைமுகம் 99.சாய்வு நாற்காலி 100. மானுடம் வெல்லும் 101. மகாநதி 102. காகித மலர்கள் 103. என் பெயர் ராமசேஷன் 104. கருக்கு 105. சங்கதி 106. பழையன கழிதலும் 107.ஆனந்தாயி 108. கனவுச் சிறை 109. மௌனப்புயல் 110. நிற்க நிழல் வேண்டும் 111. ஈரம் கசிந்த நிலம் 112. மானாவாரி மனிதர்கள் 113. நல்ல நிலம் 114. உப்பு வயல் 115.பாய்மரக் கப்பல் 116. மற்றும் சிலர் 117. சாயத்திரை 118. தூர்வை 119. கூகை 120. சிலுவைராஜ் சரித்திரம் 121. காலச்சுமை 122. கோவேறு கழுதைகள் 123. ஆறுமுகம் 124. செடல் 125. கள்ளம் 126. கரமுண்டார் வீடு 127. பாழி 128. பிதிரா 129. விஷ்ணுபுரம் 130. காடு 131. ஏழாம் உலகம் 132. கன்யாகுமரி 133. கொற்றவை 134. உப பாண்டவம் 135. நெடுங்குருதி 136. உறுபசி 137. எக்சிஸ்டென்ஷலியசமும் ஃபேன்சி பனியனும் 138. ஸீரோ டிகிரி 139. புதைக்கப்பட்ட மனிதர்களும் எரிக்கப்பட்ட பிரதிகளும் 140. சொல் என்றொரு சொல் 141. குள்ளச்சித்தன் சரித்திரம் 142. பகடையாட்டம் 143. நிழல் முற்றம் 144. கூளமாதாரி 145. நுண்வெளிக் கிரணங்கள் 146. கொரில்லா 147. ம் 148. ஆழிசூழ் உலகு 149. அம்மன் நெசவு 150. மணல் கடிகை 151. அஞ்சலை 152.கோரை 153. நிலாக்கள் தூரதூரமாக

வரலாற்றுக் கதைகள்

1. பொன்னியின் செல்வன் 2.சிவகாமியின் சபதம் 3. மன்னன் மகள் 4. யவன ராணி 5. கடல்புறா 6. ஜலதீபம் 7. கன்னி மாடம் 8. ராஜமுத்திரை 9. வீரபாண்டியன் மனைவி 10. ஆலவாய் அழகன் 11. பத்தினிக் கோட்டம் 12.திருச்சிற்றம்பலம் 13. திருவரங்கன் உலா 14. மோகவள்ளி தூது 15. வேங்கையின் மைந்தன் 16. வெற்றித் திருநகர் 17. கயல்விழி 18. மணிபல்லவம் 19.ராணி மங்கம்மாள் 20. ரத்தம் ஒரே நிறம் 21. கோபுர கலசம் 22. ரோமாபுரிப் பாண்டியன் 23.பொன்னர் சங்கர் 24. தென்பாண்டிச் சிங்கம் 25. நந்திபுரத்து நாயகி 26. உடையார்.

பொதுவான கதைகள்

1.தியாகபூமி 2. அலைஓசை 3. மிஸ்டர் வேதாந்தம் 4. தில்லானா மோகனாம்பாள் 5. உயிரோவியம் 6.முள்ளும் மலரும் 7. கல்லுக்குள் ஈரம் 8. அணையா விளக்கு 9. கள்ளோ காவியமோ 10.கரித்துண்டு 11.நெஞ்சில் ஒரு முள் 12.ரங்கோன் ராதா 13. அரக்கு மாளிகை 14. காஞ்சனையின் கனவு 15. ஒரு காவிரியைப் போல 16. நாயக்கர் மக்கள் 17. சின்னம்ம 18. மலர்கின்ற பருவத்தில் 19. பிறந்த நாள் 20. கூந்தலிலே ஒரு மலர் 21. ஜி எச் 22.படகு வீடு 23.புரபசர் மித்ரா 24. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 25.குறிஞ்சி மலர் 26. பொன்விலங்கு 27. சமுதாய வீதி 28.பாவை விளக்கு 29. சித்திரப்பாவை 30. பெண் 31. எங்கே போகிறோம் 32. நெஞ்சின் அலைகள் 33. தரையில் இறங்கும் விமானங்கள் 34. பாலங்கள் 35. ஒரு மனிதனின் கதை 36. வாஷிங்டனில் திருமணம் 37.ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் 38. கரையெல்லாம் செண்பகப்பூ 39. அனிதா இளம் மனைவி 40.நைலான் கயிறு 41. பதவிக்காக 42. மெர்க்குரிப்பூக்கள் 43.கரையோர முதலைகள் 44. பந்தயப்புறா 45. அது ஒரு நிலாக்காலம் 46. கள்ளிக்காட்டு இதிகாசம் 47. கருவாச்சி காவியம்


ஜெயமோகனின் பதிவு விரிவான ஒன்றாகக் காணப்படுகிறது. இது போன்ற ஒரு பதிவை நாஞ்சில்நாடன் அவரது பனுவல் போற்றுதும் கட்டுரை நூலில் தந்திருக்கிறார். அவரது கட்டுரையிலிருந்து நாவல்களின் பட்டியல் இதோ.

நாஞ்சில்நாடன் ( ஐம்பதாண்டுத் தமிழ் நாவல் – பனுவல் போற்றுதும்)

1.பொய்த்தேவு 2. நாகம்மாள் 3. சட்டி சுட்டது 4. குறிஞ்சித் தேன் 5. சில நேரங்களில் சில மனிதர்கள் 6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 7. கல்லுக்குள் ஈரம் 8. ரத்த உறவு 9.அஞ்சலை 10. நெடுஞ்சாலை 11.கருக்கு 12.சங்கதி 13. மோகமுள் 14. அம்மா வந்தாள் 15. மலர் மஞ்சம் 16. அன்பே ஆரமுதே 17. உயிர்த்தேன் 18.செம்பருத்தி 19. நளபாகம் 20. மரப்பசு 21. வேள்வித்தீ 22.அரும்புகள் 23. நித்யகன்னி 24. பசித்த மானுடம் 25. கடலுக்கு அப்பால் 26.வாசவேஸ்வரம் 27.நாளை மற்றுமொரு நாளே 28. குறத்தி முடுக்கு 29. இடைவெளி 30. தண்ணீர் 31. பதினெட்டாவது அட்சக்கோடு 32. மானசரோவர் 33. புயலிலே ஒரு தோணி 34. குருதிப்புனல் 35. சுதந்திர பூமி 36. தந்திர பூமி 37. காகித மலர்கள் 38. என் பெயர் ராமசேஷன் 39. தலைமுறைகள் 40.பள்ளிகொண்டபுரம் 41. கிருஷ்ணபருந்து 42. புணலும் மணலும் 43. அசடு 44. நினைவுப்பாதை 45. நாய்கள் 46. நவீனனின் டைரி 47. வாக்குமூலம் 48. புத்தம்வீடு 49. புதிய தரிசனங்கள் 50. மறுபக்கம் 51. ஒரு கடலோர கிராமத்தின் கதை 52.சாய்வு நாற்காலி 53 கூனன் தோப்பு 54. ஒரு புளியமரத்தின் கதை 55. ஜே ஜே சில குறிப்புகள் 56. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 57. தலைகீழ் விகிதங்கள் 58.என்பிலதனை வெயில் காயும் 59. எட்டுத் திக்கும் மதயானை 60. மாமிசப்படைப்பு 61. மிதவை 62. சதுரங்க குதிரை 63. விஷ்ணுபுரம் 64. ரப்பர் 65. கடல் புரத்தில் 66. ரெயினீஷ் அய்யர் தெரு 67.கம்பாநதி 68. உப்பு வயல் 69. புலிநகக்கொன்றை. 70. ஆழி சூழ் உலகு 71. கொற்கை 72.பிறகு 73. வெக்கை 74. கோபல்ல கிராமம் 75. கோபல்ல புரத்து மக்கள் 76. குற்றப்பரம்பரை 77. காவல் கோட்டம் 78. வெட்டுப்புலி 79. உபபாண்டவம் 80. நெடுங்குருதி 81. உறுபசி 82. யாமம் 83. மலரும் சருகும் 84.தேனீர் 85. தாகம் 86. சர்க்கரை 87. வானம் வசப்படும் 88. மானுடம் வெல்லும் 89. மகாநதி 90. சொல் என்றொரு சொல் 91. அலெக்ஸாண்ல்டரும் ஒரு கோப்பை தேநீரும் 92. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் 93. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 94. எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் 95. ஸீரோ டிகிரி 96. ராஸலீலா 97. ஆறுமுகம் 98. செடல் 99. வெள்ளாவி 100. சிலுவைராஜ் சரித்திரம் 101. குள்ளசித்தன் சரித்திரம் 102. பகடையாட்டம் 103. கன்னி 104. நுண்வெளி கிரணங்கள் 105. சோளகர் தொட்டி 106. ஏறுவெயில் 107. நிழல் முற்றம் 108. கூளமாதாரி 109. சாயத்திரை 110. மணல்கடிகை 111. அம்மன் நெசவு 112. இரண்டாம் ஜாமங்களின் கதை.113. கல்மரம் 114. கள்ளி 115. கூப்பிடுவது எமனாக இருக்கலாம் 116.காக்டெயில் 117. ஆஸ்பத்திரி 118. கள்ளம் 119. கரமுண்டார் வீடு 120. கற்றாழை 121.அளம் 122. கீதாரி 123. மீன்காரத் தெரு 124. கருத்த லெப்பை 125. துருக்கித் தொப்பி 126.பஞ்சமர் 127. கனவுச்சிறை 128. கொரில்லா 129. ம் 130. தீ 131. சடங்கு 132. மாயினி 133. ஈரம் கசிந்த நிலம் 134. பாய்மரக்கப்பல் 135. போக்கிடம் 136. நதிமூலம் 137. சோற்றுப் பட்டாளம் 138. வாடாமல்லி 139. யாரும் யாருடனும் இல்லை 140. நல்ல நிலம் 141. ஆத்துக்குப் போகணும் 142.கிடங்குத்தெரு 143. இதயநாதம் 144. கேட்ட வரம் 145. இருபது வருடங்கள் 146. பகல் கனவு 147. வாடிவாசல் 148. ஜீவனாம்சம் 149. சுதந்திர தாகம் 150.பஞ்சும் பசியும் 151. இடைவெளி 152. பின் தொடரும் நிழலின் குரல் 153. காடு 154. ஏழாம் உலகம் 155. கொற்றவை. 156.அஞ்சுவண்ணம் தெரு


கோவை ஞானி – 47க்குப் பின் தமிழ் நாவல்கள் படைப்பும் பார்வையும் ( நாவல் கட்டுரை தொகுப்பு)

கோவை ஞானி ஒரு விமர்சகர் . அவரது பார்வையில் முக்கிய நாவல்களின் பட்டியலை தந்துள்ளார். அவை

1. பொய்த்தேவு 2. சிவகாமியின் சபதம் 3. சுதந்திர தாகம் 4. பாவை விளக்கு 5. குறிஞ்சி மலர் 6. நெஞ்சில் ஒரு முள் 7. குற்றாலக் குறிஞ்சி 8. மோகமுள் 9. காதுகள் 10. பசித்த மானுடம் 11. ஜே ஜே சில குறிப்புகள் 12. பாலும் பாவையும் 13. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 14. வானம் வசப்படும் 15. பஞ்சும் பசியும் 16. தேநீர் 17. சங்கம் 18. புதிய தரிசனங்கள் 19. மண்ணகத்து பூந்தளிர் 20. வாடாமல்லி 21. ஏசுவின் தோழர்கள் 22. ஒற்றன் 23. தொலைந்து போன்வர்கள் 24. கடல்புரத்தில் 25.இடைவெளி 26. கனவுத் தொழிற்சாலை 27. இரும்புக்குதிரைகள் 28. சொப்பன பூமியில் 29. ஞானக்கிருக்கன் 30. பறளியற்று மாந்தர்கள் 31.ஆத்துக்கு போகணும் 32. சாய்வு நாற்காலி 33. நாலாவான் 34. பாலங்கள் 35. மணிக்கொடி 36. சதுரங்க குதிரைகள் 37. மஞ்சுவெளி 38. சாரா 39. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 40. மற்றும் சிலர் 41. மானாவாரி மனிதர்கள் 42. ஆற்றங்கரையோரம் 43.கள்ளம் 44. கருக்கு 45. ஸீரோ டிகிரி 46. பஞ்சமர் 47. சடங்கு 48. விஷ்ணுபுரம் 49. கோவேறு கழுதைகள் 50.தூர்வை 51. நுண்வெளி கிரணங்கள் 52. தலைமுறைகள் 53. கிருஷ்ண பருந்து 54. அந்தி 55. ஒன்பது ரூபாய் நோட்டு 56.கோபல்லபுரத்து மக்கள் 57.கவலை 58. நாளை மற்றுமொரு நாளே 59.தென்பாண்டிச் சிங்கம் 60. நல்ல நிலம் 61. கல்லுக்குள் ஈரம் 62. புத்தம் வீடு 63. வேர்களைத் தேடி 64. அபிதா 65.நேற்றிருந்தோம் 66. தொட்டிக்கட்டு வீடு 67. மெல்ல கனவாய் 68. வாக்குமூலம் 69. மானுட சங்கமம் 69.புயலிலே ஒரு தோணி 70. நதிமூலம் 71. ஏறுவெயில் 72. ஆனந்தாயி 73. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 74. காகித மலர்கள் 75. நைவேத்யம் 76. மிதவை 77.நாகம்மாள்


சி. மோகன் (சி. மோகன் கட்டுரைகள்)

சி. மோகன் படைப்பாளியாகவும் விமர்சகராகவும் இருக்கிறார். அவர் 1987ல் புதுயுகம் பிறக்கிறது என்ற இதழில் எழுதிய கட்டுரையில் நாவல்களை பட்டியலிட்டு இருக்கிறார். அந்த பட்டியல் இதோ

சிறந்த நாவல்கள்

1. மோகமுள் 2. ஜே ஜே சில குறிப்புகள் 3. புயலிலே ஒரு தோணி

நல்ல நாவல்கள்

1. பொய்த்தேவு 2. இடைவெளி 3. ஒரு புளிய மரத்தின் கதை 4. அம்மா வந்தாள் 5. நாகம்மாள் 6. கிருஷ்ணப் பருந்து 7. நினைவுப்பாதை 8. தண்ணீர் 9. பள்ளிகொண்டபுரம் 10. கடல் புரத்தில்

குறிப்பிடத்தக்க நாவல்கள்

1.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 2. இதயநாதம் 3. தலைமுறைகள் 4.செம்பருத்தி 5. புதியதோர் உலகம் 6.வேள்வித்தீ 7. நித்ய கன்னி 8. அசடு 9. புத்தம் வீடு 10. ஒரு நாள் 11. சட்டி சுட்டது 12. நாளை மற்றுமொரு நாளே 13. அபிதா 14. கரைந்த நிழல்கள் 15. வாடிவாசல் 16. சாயாவனம் 17. கம்பா நதி 18. பிறகு 19. நிழல்கள் 20. தலைகீழ் விகிதங்கள் 21. பசித்த மானுடம் 22. ஜீவனாம்சம் 23. புனலும் மணலும் 24. சடங்கு 25. கடலுக்கு அப்பால்
26. தாகம்


ந. முருகேச பாண்டியன் – அறுபது எழுபதுகளில் தமிழ் நாவல்கள் என்ற கட்டுரையில் (புதிய தமிழ் இலக்கிய வரலாறு)

இவர் ஒரு விமர்சகர்.

முக்கிய நாவல்களாக 35 நாவல்களைக் குறிப்பிடுகிறார்.

1. தலைமுறைகள் 2. பள்ளி கொண்டபுரம் 3. பாரீசுக்குப் போ 4. சில நேரங்களில் சில மனிதர்கள் 5. புத்தம் வீடு 6. சாயாவனம் 7. ஒரு புளியமரத்தின் கதை 8. கடலுக்கு அப்பால் 9. மலரும் சருகும் 10. வேரும் விழுதும் 11. மோகமுள் 12. செவ்வானம் 13. அபிதா 14. புயலிலே ஒரு தோணி 15. நாளை மற்றுமொரு நாளே 16. நினைவுப்பாதை 17. நாய்கள் 18. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 19. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 20. பதினெட்டாவது அட்சக்கோடு 21.காகித மலர்கள் 22. தந்திர பூமி 23. தாகம் 24. கடல்புரத்தில் 25. கோபல்ல கிராமம் 26. நேற்றிருந்தோம் 27. புணலும் மணலும் 28. கீறல்கள் 29. பிறகு 30. அசடு 31. பசித்த மானுடம் 32. குருதிப்புனல் 33.மரப்பசு 34.தலைகீழ் விகிதங்கள் 35.அலைவாய்க்கரையில்

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் (காலச்சுவடு, ஜனவரி 2010 இதழ்) என்ற கட்டுரையில் இவர் குறிப்பிடும் நாவல்கள்.

1. யாமம் 2. நெடுங்குருதி 3. சொல் என்றொரு சொல் 4. யுரேகா என்றொரு நகரம் 5. சிலந்தி 6. 37 7. பகடையாட்டம் 8. குள்ள சித்தன் சரித்திரம் 9. கானல் நதி 10. வார்ஸாவில் ஒரு கடவுள் 11. ராஸ லீலா 12. நிலாவை வரைபவன் 13. சூரனைத் தேடும் ஊர் 14. பாழி 15. பிதிரா 16. தாண்டவராயன் கதை 17. காக்டெயில் 18. ஆஸ்பத்திரி 19. ஜி சௌந்திரராஜன் கதை 20. ரத்த உறவு 21. ஆழி சூழ் உலகு 22. மணல் கடிகை 23. சோளகர் தொட்டி 24. மீன்காரத்தெரு 25. கருத்த லெப்பை 26. கூளமாதாரி 27. கங்கணம் 28. ஏழாம் உலகம் 29. காடு 30. கள்ளி 31. கல்மரம் 32. ஓடும் நதி 33. உறுபசி 34. நீலக்கடல் 35.ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் 36. செடல் 37. வாங்கல் 38. அஞ்சலை 39. கூகை 40 மரம் 41. அளம் 42. மாணிக்கம் 43. கீதாரி 44.கற்றாழை 45. ஆறுகாட்டுத்துறை 46. கண்ணகி 47. இரண்டாம் ஜாமங்களின் கதை 48. யாரும் யாருடனும் இல்லை 49. ம் 50. கொரில்லா 51. கனவுச்சிறை 52. சிலுவைராஜ் சரித்திரம் 53. காலச்சுமை 54. நிலாக்கள் தூர தூரமாக.


க. பூரணசந்திரன் – எழுபதுக்குப் பிறகு தமிழ் நாவல்கள் (புதிய தமிழ் இலக்கிய வரலாறு)

1.தண்ணீர் 2. ஜே ஜே சில குறிப்புகள் 3. நாளை மற்றுமொரு நாளே 4. இடைவெளி 5. கோபல்லபுரத்து மக்கள் 6. சுந்தரகாண்டம் 7. குறிஞ்சித்தேன் 8. கூட்டுக்குஞ்சுகள் 9. அலைவாய்க்கரையில் 10. வேருக்கு நீர் 11.வளைக்கரம் 12. கரிப்பு மணிகள் 13. சேற்றில் மனிதர்கள் 14. என் பெயர் ராமசேஷன் 15. ஏசுவின் தோழர்கள் 16. விசாரனை கமிஷன் 17. அவன் ஆனது 18. சூரிய வம்சம் 19. தொலைந்து போனவர்கள் 20. மாமிசபடைப்பு 21.எட்டு திக்கும் மத யானை 22. சதுரங்க குதிரைகள் 23. கம்பா நதி 24.ரெயினீஷ் அய்யர் தெரு 25. வெக்கை 26.மற்றும் சிலர் 27. ஆண்களும் பெண்களும் 28.மகாநதி 29.சந்தியா 30. மானுடம் வெல்லும் 31. வானம் வசப்படும் 32. ஒரு கடலோர கிராமத்தின் கதை 33. துறைமுகம் 34. கூனன் தோப்பு 35. சாய்வு நாற்காலி 36. ஈரம் கசிந்த நிலம் 37. ஜன கன மன 38 ஆகாச வீடுகள் 39. நிற்க நிழல் வேண்டும் 40. மௌனப்புயல் 41. வேர்களைத் தேடி 42. ரப்பர் 43. கவலை 44. கள்ளம் 45. கரமுண்டார் வீடு 46. நல்ல நிலம் 47. ஒன்பது ரூபாய் நோட்டு 48. புலிநகக் கொன்றை 49. டேபிள் டென்னிஸ் 50. சிலுவைராஜ் சரித்திரம் 51. தாகம் 52. சங்கம் 53. சர்க்கரை 54. ஊருக்குள் ஒரு புரட்சி 55. வாடாமல்லி 56. சோற்றுப் பட்டாளம் 57. கரிசல் 58.புதிய தரிசனங்கள் 59. தோழர் 60. மானாவாரி மனிதர்கள் 61. பழையன கழிதலும் 62. கருக்கு 63. சங்கதி 64.கோவேறு கழுதைகள் 65.ஆறுமுகம் 66. ஏறுவெயில் 67. தூர்வை 68. கூளமாதாரி 69. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் 70. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் 71.எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் 72.ஸீரோ டிகிரி 73. விஷ்ணுபுரம் 74. பின் தொடரும் நிழலின் குரல்


அசோகமித்திரன் டாப் 10 நாவல்களாக “காலக்கண்ணாடி” என்ற கட்டுரை நூலில் குறிப்பிடும் நாவல்கள்

1. பிரதாப முதலியார் சரித்திரம் 2. கமலாம்பாள் சரித்திரம் 3. தியாகபூமி 4. மண்ணாசை 5. நாகம்மாள் 6. வாழ்ந்தவர் கெட்டால் 7. தில்லானா மோகனாம்பாள்
8-10 இடங்கள்: 1.அசடு 2. அவன் ஆனது 3. உயிர்த்தேன் 4. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 5. ஒரு புளியமரத்தின் கதை 6. கரிக்கோடுகள் 7. காகித மலர்கள் 8. நினைவுப் பாதை 9. பள்ளிகொண்டபுரம் 10. கிருஷ்ணப் பருந்து 11. நதிமூலம் 12. சுதந்திர பூமி

அசோகமித்திரன் – படைப்பாளிகளின் உலகம் என்ற கட்டுரை நூலில் இந்திய விடுதலைக்குப் பின் வெளியான தமிழ் நாவல்களின் மைல் கற்கள் எனக் குறிப்பிடும் நாவல்கள்
1. மோகமுள் 2. அசுரகணம் 3. அறுவடை 4. ஒரு புளிய மரத்தின் கதை 5. தலைமுறைகள் 6. கரைந்த நிழல்கள் 7. மலரும் சருகும் 8. அம்மா வந்தாள் 9. காகித மலர்கள் 10. தந்திரபூமி 11. கடல்புரத்தில்


சு. வேணுகோபால் ( உயிர்மை நூறாவது இதழ் )

1. கொற்றவை 2. கன்னி 3. ஆழிசூழ் உலகு 4. மணல்கடிகை 5. அஞ்சலை 6. காவல்கோட்டம் 7. நெடுங்குருதி 8. கூகை 9. தகப்பன் கொடி 10. செடல் 11. கூளமாதாரி 12.ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் 13. அஞ்சுவண்ணம் தெரு 14.ஏழரை பங்காளி வகையறா 15. யாரும் யாருடனும் இல்லை 16. சோளகர் தொட்டி 17.இமயத் தியாகம் 18. மாயினி 19. கனவுச்சிறை 20. கொரில்லா 21. ம் 22. குற்றப் பரம்பரை 23. புலிநகக் கொன்றை 24. அரசூர் வம்சம் 25. ஸீரோ டிகிரி 26. கள்ளி 29. கரமுண்டார் வீடு 30. சொல் என்றொரு சொல் 31.பிதிரா 32. தாண்டவராயன் கதை 33. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் 34. குள்ளச்சித்தன்சரித்திரம் 35. வார்ஸாவில் ஒரு கடவுள் 36. மில் 37. மறுபக்கம் 38. தோல் 39. நிறங்களின் உலகம் 40. ஏழாம் உலகம் 41. சாயத்திரை 42. முறிமருந்து 43. சிலுவைராஜ் சரித்திரம் 44. நிலாக்கள் தூர தூரமாக 45. நாடு விட்டு நாடு 46. ரத்த உறவு


பாவண்ணன் டாப் 10 மற்றும் முக்கிய நாவல்கள் (வலைத்தளம் மற்றும் பேட்டிகள் )

டாப் 10:

1. பொய்த்தேவு 2. ஒரு புளிய மரத்தின் கதை 3. மோகமுள் 4. நித்யகன்னி 5. வாடிவாசல் 6. சாயாவனம் 7. பிறகு 8. ஜே ஜே சில குறிப்புகள் 9. கூனன் தோப்பு 10. சதுரங்க குதிரைகள் 11. விஷ்ணுபுரம்

முக்கிய நாவல்கள் (திண்ணை பேட்டி மற்றும் தீராநதி பேட்டி ஜனவரி 2013)

1. தலைமுறைகள் 2. கோபல்லபுரம் 3. காடு 4. ஏழாம் உலகம் 5. நெடுங்குருதி 6. யாமம் 7. மாதொருபாகன் 8. மணல் கடிகை 9. கூகை 10. காவல்கோட்டம் 11. ஆழி சூழ் உலகு 12. யாரும் யாருடனும் இல்லை 13.நெடுஞ்சாலை 14. முறிமருந்து 15. சிலுவைராஜ் சரித்திரம்

மேலும் பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளை இந்த கட்டுரையில் சேர்க்க இயலவில்லை. அவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என்ற எனது முந்தைய கட்டுரையில் டாப் 10 இடத்தைப் பிடித்த 24 நாவல்களைப் பார்த்தோம். இந்த கட்டுரையில் அந்த 24 நாவல்களையும், புதிதாக இந்த பட்டியலில் இடம் பிடித்த கிருஷ்ணப்பருந்து நாவலையும் , வெக்கை நாவலையும் சேர்த்து 26 நாவல்களை முதலில் வரிசைப்படுத்தலாம்.

கிருஷ்ண பருந்து நாவலை டாப் 10 க்கு பரிந்துரைத்தவர்கள்- ஜெயமோகன், அசோகமித்திரன், சி.மோகன், கோபால் ராஜாராம்.

வெக்கை நாவலை டாப் 10க்கு பரிந்துரைத்தவர்கள்–ஆர்வி, க.நா. சுப்ரமணியம் , பூரி, எம்.சுந்தரமூர்த்தி

நாவல் ——- ஆசிரியர்– பரிந்துரைகள்

1.மோகமுள்- தி.ஜானகிராமன் – ( டாப் 10 பரிந்துரைகள்-20, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

2. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி– ( டாப் 10 பரிந்துரைகள்-15, பட்டியலுக்கான பரிந்துரைகள் -20 )

3. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி- ( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

4. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்-( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -16 )

5. கடல்புரத்தில் – வண்ணநிலவன்— ( டாப் 10 பரிந்துரைகள்-10, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்–( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )

7 .கோபல்ல கிராமம் – கி ராஜநாராயணன்—-( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

8. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )

9. பொய்த்தேவு – க நா சுப்ரமணியம் –( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

10. தலைமுறைகள் – நீலபத்மநாபன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -17 )

12. பொன்னியின் செல்வன் – கல்கி- -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -11 )

13. 18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன்–( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )

14. சாயாவனம் – சா. கந்தசாமி– ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

15. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

16. கோவேறு கழுதைகள் – இமையம்- ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )

17. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

18. நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

19. நினைவுப்பாதை – நகுலன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

20. கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -8 )

21. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -18 )

22. ஆழி சூழ் உலகு – ஜோ.டி.குரூஸ் — ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -14 )

23. வெக்கை -பூமணி —— ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

24. கிருஷ்ணப்பருந்து – ஆ.மாதவன் —( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -10 )

25. வானம் வசப்படும் – பிரபஞ்சன்–( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

26. வாசவேஸ்வரம் – கிருத்திகா–( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

இந்த 26 நாவல்களில் 24 நாவல்களைப் பற்றி எனது “தலை சிறந்த நாவல்கள் ஒரு பார்வை” என்ற கட்டுரையில் விரிவாக பார்த்துவிட்டதால் அடுத்த 11வது இடத்தைப் பிடிக்கும் நாவல்கள் எவை என்பதையும் அவற்றின் தர வரிசையையும் , பரிந்துரைத்த எழுத்தாளர்கள் பற்றியும் பார்க்கலாம். டாப் 10 பட்டியலில் 3 பரிந்துரைகளைப் பெற்று பட்டியலில் குறைந்தது 4 பரிந்துரைப் பெற்ற நாவல்கள் இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

டாப் 10 பட்டியலில் 3 பரிந்துரைகளைப் பெற்று 11 வது இடத்தைப் பிடித்த நாவல்கள்

வாடிவாசல் , குருதிப்புனல், பிறகு, நெடுங்குருதி , சில நேரங்களில் சில மனிதர்கள், மானுடம் வெல்லும் பின்தொடரும் நிழலின் குரல், சோளகர் தொட்டி , காவல் கோட்டம் , வேள்வித்தீ , சித்திரப்பாவை, அவன் ஆனது, உயிர்த்தேன், ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

இந்த 14 நாவல்களும் 11 வது இடத்தைப் பிடித்துள்ளன.அவற்றைப் பரிந்துரைத்தவர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

27. வாடிவாசல்- சி சு செல்லப்பா
டாப் 10 பரிந்துரைகள் – 3, சிம்புதேவன், பாலகுமாரன், பாவண்ணன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 14, இரா முருகன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன், க நா சுப்ரமணியம் , இரா குருநாதன் , ஆர் வி, வெங்கட் சாமினாதன் , நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி ,பா ராகவன், அய்யனார் விஸ்வனாத், சுந்தர், கொழந்த

28. குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி
டாப் 10 பரிந்துரைகள் – 3, வெங்கட், பாலகுமாரன், ரமணி
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 13, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், இரா முருகன், நாஞ்சில் நாடன், க நா சுப்ரமணியம் , சி சரவண கார்த்திகேயன், பா ராகவன், அய்யனார் விஸ்வனாத், வெங்கட ரமணன், ந முருகேச பாண்டியன், இரா குருநாதன் , ஆர்வி, ஜெ. வீரனாதன்

29. சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்
டாப் 10 பரிந்துரைகள் – 3, வெங்கட், மய்யம்.காம், பாலகிருஷ்ண பாலாஜி
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 12, பூரி, இரா முருகன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் , க நா சுப்ரமணியம், சி சரவண கார்த்திகேயன், பெ.தேவி, வெங்கட ரமணன், ந முருகேச பாண்டியன், ஆர் வி, ஜெ வீரனாதன் , நாஞ்சில் நாடன்,

30. பிறகு – பூமணி
டாப் 10 பரிந்துரைகள் :- 3, விக்ரமாதித்யன், வண்ணதாசன், பாவண்ணன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 12, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன், பாலகுமாரன், நாஞ்சில் நாடன், வெங்கட் சாமினாதன், க நா சுப்ரமணியம் , வேதசகாயகுமார், பெ.தேவி, ந முருகேசபண்டியன், இரா குருநாதன் , ஆர்வி

31. பின் தொடரும் நிழலின் குரல்- ஜெயமோகன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3, ஆர்வி, ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 11, நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி,சி சரவண கார்த்திகேயன், பா ராகவன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார், வெங்கட ரமணன், க பூரணசந்திரன், அரங்கசாமி, அம்பை , பிரேம் ரமேஷ்

32. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3, ஜெயமோகன், கிரிஜா, கோபால் ராஜாராம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 11, இரா முருகன்,எஸ் ராமகிருஷ்ணன், வெங்கட் சாமினாதன்,நாஞ்சில் நாடன், பா ராகவன், சுப்ரபாரதி மணியன், அய்யனார் விஸ்வனாத், க பூரணசந்திரன், ஆர்வி, பிரேம் ரமேஷ், ஜெ வீரனாதன்

33. நெடுங்குருதி – எஸ் ராமகிருஷ்ணன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3, நாஞ்சில் நாடன், கலாப்ரியா,சு வேணுகோபால்,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 10, எஸ் ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, பா ராகவன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார், ந. முருகேச பாண்டியன், சுந்தர், ஆர்வி, பாவண்ணன்

34. சோளகர் தொட்டி – ச பாலமுருகன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3, சின்னக்குத்தூசி, கற்றது ராம், நாஞ்சில் நாடன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 7, சு. வேணுகோபால், அய்யனார் விஸ்வனாத், ந முருகேச பாண்டியன், கொழந்த, விஜயமகேந்திரன், மா. மணிமாறன், வேனில் கிருஷ்ணமூர்த்தி

35. காவல் கோட்டம் – சு. வெங்கடேசன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3 , சு. வேணுகோபால், நாஞ்சில் நாடன், தமிழ்மகன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6, வேதசகாயகுமார், சுந்தர், விஜயமகேந்திரன், ஜெ. வீரனாதன், ஜெயமோகன், பாவண்ணன்

36. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3 , கோபால் ராஜாராம், அசோகமித்ரன் , சுந்தரமூர்த்தி,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6, இரா முருகன், கோவை ஞானி, எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரேம் ரமேஷ்,

37. உயிர்த்தேன் – தி ஜானகிராமன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3, அசோகமித்திரன், கலாப்ரியா, ரமணி
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-5, விக்ரமாதித்யன் , நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், பெ.தேவி, இரா குருநாதன்

38. வேள்வித்தீ – எம் வி வெங்கட் ராம்
டாப் 10 பரிந்துரைகள் :- 3 , எஸ் ராமகிருஷ்ணன், பாலகுமாரன், கற்பக வினாயகம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 5, ஜெயமோகன், சி மோகன், நாஞ்சில் நாடன், பெ.தேவி, சுந்தர்

39. அவன் ஆனது – சா கந்தசாமி
டாப் 10 பரிந்துரைகள் :- 3, சா கந்தசாமி, அசோகமித்திரன், க நா சுப்ரமணியம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 4 , விக்ரமாதித்யன், பா ராகவன், க பூரணசந்திரன், ஜெயமோகன்

40. சித்திரப்பாவை — அகிலன்
டாப் 10 பரிந்துரைகள் :- 3, தி டாப் டென்ஸ்.காம் , காசி ஆனந்தன், ஃபோரம்ஹப்.காம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 3, ஜெயமோகன், இரா குருநாதன், ஜெ வீரனாதன்

அடுத்த 12வது இடத்தைப் பிடிக்கும் நாவல்கள் எவை என்பதையும் அவற்றின் தர வரிசையையும் , பரிந்துரைத்த எழுத்தாளர்கள் பற்றியும் பார்க்கலாம். டாப் 10 பட்டியலில் 2 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்கள் இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. பட்டியல்களில் பரிந்துரைகள் இதில் சேர்க்கப்பட்டு அவை தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது

டாப் 10 பட்டியலில் 2 பரிந்துரைகளைப் பெற்று பட்டியலில் குறைந்தது 5 பரிந்துரைகளைப் பெற்று 12 வது இடத்தைப் பிடித்த நாவல்கள்– 22. அவை

எட்டு திக்கும் மதயானை , ஒரு கடலோர கிராமத்தின் கதை, கோபல்லபுரத்து மக்கள், பசித்த மானுடம், ரப்பர், என் பெயர் ராமசேஷன், ஏழாம் உலகம், தண்ணீர், கமலாம்பாள் சரித்திரம், அஞ்சலை, இடைவெளி, ரத்த உறவு, காகித மலர்கள், சாய்வு நாற்காலி, நித்யகன்னி, கூகை, கொற்றவை, குறிஞ்சி மலர் ,மணல் கடிகை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சிவகாமியின் சபதம், பிரதாப முதலியார் சரித்திரம்.

41.எட்டு திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, வெங்கட் சாமினாதன், பாலகிருஷ்ண பாலாஜி
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:12, எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், பா ராகவன், ஜெயமோகன் அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார்,க பூரணசந்திரன், இரா குருநாதன், ஆர்வி, அரங்கசாமி, ஜெ. வீரனாதன், வேனில் கிருஷ்ணமூர்த்தி

42.ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரான்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, கற்பகவினாயகம், சுந்தரமூர்த்தி
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:-12 ,ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், இரா முருகன், வெங்கட் சாமினாதன் , நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி,அய்யனார் விஸ்வனாத்,சுந்தர், க பூரணசந்திரன், ஆர் வி, அரங்கசாமி, அம்பை

43. கோபல்லபுரத்து மக்கள்- கி. ராஜநாராயணன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, ரமணி, வெங்கட்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:11, க பூரணசந்திரன்,அய்யனார் விஸ்வனாத்,பாவண்ணன், கோவை ஞானி, ஜெயமோகன், வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், கொழந்த, ஆர்வி, அரங்கசாமி, பிரேம் ரமேஷ்

44. பசித்த மானுடம்- கரிச்சான் குஞ்சு
டாப் 10 பரிந்துரைகள் :- 2, எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10, ஜெயமோகன்,சி மோகன், கோவை ஞானி, நாஞ்சில் நாடன், பா ராகவன், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வனாத், சுந்தர், ந முருகேச பாண்டியன், ஆர்வி

45. ரப்பர்- ஜெயமோகன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, சா கந்தசாமி, பாலகிருஷ்ண பாலாஜி
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10,ஜெயமோகன், இரா முருகன்,நாஞ்சில் நாடன்,சுந்தர ராமசாமி,பா ராகவன், சுப்ரபாரதி மணியன், க பூரணசந்திரன், வேதசகாயகுமார், ஆர்வி, அரங்கசாமி,

46. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, அசோகமித்திரன், கிரிஜா
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, இரா முருகன், ஜெயமோகன்,எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன், க நா சுப்ரமணியம், வேதசகாயகுமார், பெ.தேவி, ஆர்வி, ஜெ வீரனாதன்

47. என் பெயர் ராமசேஷன்- ஆதவன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, ஆர்வி, செந்தில்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,ஜெயமோகன்,எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன், நாஞ்சில் நாடன், சரவண கார்த்திகேயன், அய்யனார் விஸ்வனாத்,வெங்கடரமணன், இரா குருநாதன், பிரேம் ரமேஷ்

48. ஏழாம் உலகம்- ஜெயமோகன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, கலாப்ரியா, நாஞ்சில் நாடன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, சு வேணுகோபால், சரவண கார்த்திகேயன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வனாத், ந முருகேச பாண்டியன், வெங்கடரமணன், ஆர்வி, பாவண்ணன், அரங்கசாமி,

49.இடைவெளி- சம்பத்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன்,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, ஜெயமோகன், கோவை ஞானி, வெங்கட் சாமினாதன்,நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, அய்யனார் விஸ்வனாத், க பூரணசந்திரன், ஆர்வி

50. காகித மலர்கள்- ஆதவன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, ரமணி, அசோகமித்திரன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, ஜெயமோகன், சுப்ரபாரதி மணியன், கோவை ஞானி,இரா முருகன்,நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன்,வண்ணநிலவன், ந முருகேச பாண்டியன்,

51.தண்ணீர் – அசோகமித்திரன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, சி மோகன், க நா சுப்ரமணியம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, விக்ரமாதித்யன், நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார், க பூரணசந்திரன், இரா குருநாதன், ஆர்வி, ஜெயமோகன்

52.ரத்த உறவு – யூமா வாசுகி
டாப் 10 பரிந்துரைகள் :- 2, பெருமாள் முருகன், வண்ணதாசன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, எஸ் ராமகிருஷ்ணன்,சு வேணுகோபால், நாஞ்சில் நாடன், அரங்கசாமி, சுந்தர ராமசாமி, அய்யனார் விஸ்வனாத், ந முருகேச பாண்டியன்,கொழந்த

53. அஞ்சலை – கண்மணி குணசேகரன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2,சு வேணுகோபால், சு வெங்கடேசன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, எஸ் ராமகிருஷ்ணன்,நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார், ந முருகேச பாண்டியன், ஆர்வி

54.சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, ரமணி, செந்தில்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, இரா முருகன், கோவை ஞானி, ஜெயமோகன், வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, க பூரணசந்திரன்

55. நித்ய கன்னி- எம். வி வெங்கட்ராம்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, பாவண்ணன், விக்ரமாதித்யன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, சி மோகன், நாஞ்சில் நாடன், க நா சுப்ரமணியம், ஆர் வி, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், பெ.தேவி

56. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
டாப் 10 பரிந்துரைகள் :- 2, சா கந்தசாமி , அசோகமித்திரன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், க நா சுப்ரமணியம், ஆர்வி, வேதசகாயகுமார், பெ.தேவி, ஜெ வீரனாதன்.

57. கூகை – சோ. தர்மன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, சு வேணுகோபால், செந்தில்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, ஜெயமோகன், ந முருகேச பாண்டியன், கொழந்த, மா மணிமாறன், எஸ் ராமகிருஷ்ணன், ஆர்வி

58. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஜெயகாந்தன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, சின்னகுத்தூசி, ஃபோரம்ஹப்.காம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, க நா சுப்ரமணியம், ஜெயமோகன், பெ.தேவி, ந முருகேச பாண்டியன், ஆர்வி

59. சிவகாமியின் சபதம் – கல்கி
டாப் 10 பரிந்துரைகள் :- 2, காசி ஆனந்தன், ஃபோரம்ஹப்.காம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, ஜெயமோகன், கோவை ஞானி, பெருமாள் முருகன், பெ.தேவி , இரா குருநாதன்

60.குறிஞ்சி மலர் – நா பார்த்தசாரதி
டாப் 10 பரிந்துரைகள் :- 2 சின்னக்குத்தூசி, தி டாப்டென்ஸ்.காம்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, ஜெயமோகன், கோவை ஞானி, பாலகுமாரன், சுந்தர்,இரா குருநாதன்

61. கொற்றவை- ஜெயமோகன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2, சு வேணுகோபால், செந்தில்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், வேதசகாயகுமார், சுந்தர்

62. மணல்கடிகை- எம்.கோபாலகிருஷ்ணன்
டாப் 10 பரிந்துரைகள் :- 2 , சு வேணுகோபால், நாஞ்சில் நாடன்
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, ஜெயமோகன்,வேதசகாயகுமார், ந முருகேச பாண்டியன், கொழந்த, பாவண்ணன்

இதுவரை 62 நாவல்களைப் பற்றி பார்த்தோம். டாப் 10 பட்டியலில் இரண்டு பரிந்துரைகள், மூன்று பரிந்துரைகள் பெற்று பட்டியலில் குறைந்தது 4 பரிந்துரைகள் பெற்ற நாவல்கள் சிறந்த நாவல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் நாவல்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அவை பட்டியலில் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் இடம் பெறும். 135 ஆண்டுகளை கடந்த நாவல் வரலாற்றில் 135 நாவல்களை பரிந்துரைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில் உள்ளது. நாவல் பரிந்துரைப் பட்டியல், சிறந்த நாவல்கள் பட்டியலில் உள்ளவை. இவற்றையே பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன். சிறந்த நாவல்களுக்கான பட்டியல் 2041 பதிவுகளைக் கொண்டது. இந்த பரிந்துரைகளின் பட்டியலை நான் முழுவதும் கொடுக்க காரணம் வாசகர்கள் பயனடைவர் என்பதற்காகவே. சிலர் இந்த பட்டியலைப் படிக்கும்போது குறிப்பிட்ட எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட நாவல்களைப் படிக்க இயலும். மேலும் ஆதாரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தந்தால் வாசகர்கள் பட்டியலின் முழு பரிமாணத்தைக் காண்பர். அவ்வகையில் அடுத்த கட்டுரையில் , இக் கட்டுரையில் விடுபட்ட முக்கிய எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும், இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் நாவல்களையும் பார்க்கலாம்.

(பட்டியல் தொடரும்)

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

அசோகமித்ரன் என்ற ஆளுமை

asokamithranஅசோகமித்ரனின் எழுத்தைப் படித்தவர்கள் ஏதாவது ஒரு கதையிலாவது, ஏதாவது ஒரு இடத்திலாவது, “வாத்யாரே, நீ மேதை!” என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அவர் தமிழில் நோபல் பரிசு தரத்தில் எழுதிய ஒருவர் என்பதெல்லாம் தெரிந்ததுதான். என்னைப் பொறுத்த வரையில் அவர் தமிழின் மூன்று ஜீனியஸ் எழுத்தாளர்களில் ஒருவர். (மற்றவர்கள் – புதுமைப்பித்தன், ஜெயமோகன்).

அவரது ஆளுமையையும் அவரது எழுத்திலிருந்தே யூகிக்கலாம். வாழ்வின் உணர்ச்சிகரமான, நாடகீய தருணங்களை ஆல் இந்தியா ரேடியோ செய்தி வாசிப்பாளர் மாதிரி உணர்ச்சியே இல்லாத நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதுவார். அந்தத் தருணங்களை வெளியிலிருந்து பார்த்து ஆவணப்படுத்துபவர் போன்ற தொனியில்தான் அவரது கதைகள் இருக்கின்றன. அவர் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்திருக்கிறது. எழுத்துக்காக ஜெமினி ஸ்டுடியோ வேலையை விட்டார். காகிதம் வாங்கப் பணம் இல்லாமல் அச்சடித்த காகிதங்களின் பின்பக்கம் எல்லாம் நுணுக்கி நுணுக்கி எழுதுவாராம். அப்பளம் விற்றிருக்கிறாராம். சாவி அலுவலகத்தில் எடுபிடியாக பணியாற்றி இருக்கிறாராம். ஆனால் இதையெல்லாம் பேசும்போது யாரோ மூன்றாம் மனிதனுக்கு வந்த பிரச்சினை மாதிரி தொனியில்தான் பேசுவார்.

அசோகமித்ரனின் பேட்டி காலச்சுவடு பத்திரிகையில் வந்திருக்கிறது. அவரது ஆளுமை ரத்தினச் சுருக்கமாக இந்த வரிகளில் வெளிப்படுகிறது.

தேவிபாரதி+சுகுமாரன்: தண்ணீரில் வரக்கூடிய சாயா, டீச்சர், மானசரோவரில் வரக்கூடிய ஜம்பகம் எல்லோருமே மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சக்தியின் குறியீடு போல் தோன்றுகிறது.
அசோகமித்ரனின் பதில்: எனக்கு நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நீங்களாக அதிகப்படியான அர்த் தத்தை ஏற்றிவிடுகிறீர்கள். அவை எல்லாம் வெறும் கதைகள், ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை.

அவரது ஆளுமையின் இன்னொரு சுவாரசியமான பக்கம் அவரது ரசனை. 1930, 31இல் பிறந்தவர். சிறு வயதில் அவருக்குப் பிடித்துப் போன சினிமாக்கள், கதைகள் மீது அவருக்கு இன்னும் ஒரு soft corner உண்டு. அவருக்குப் பிடித்த சினிமாக்களில் கத்திச் சண்டை போடும் வீரர்கள் இருக்க வேண்டும். அதுவும் தமிழ் சினிமாவாக இருக்க வேண்டும். சர்வாதிகாரி (1950) திரைப்படத்தைப் பற்றி பேசும்போது என்னதான் எர்ரால் ஃப்ளின், ரொனால்ட் கோல்மன் சண்டைகளைப் பார்த்தாலும் எம்ஜிஆரும் நம்பியாரும் தமிழ் பேசிக் கொண்டு வாள் வீசும்போதுதான் திருப்தியாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். கல்கியின் தியாகபூமியை தனக்குப் பிடித்த பத்து தமிழ் நாவல்களில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பேட்டியிலும் வரிந்து கட்டிக் கொண்டு கல்கியின் எழுத்தின் நல்ல கூறுகளை முன் வைக்கிறார். அதே நேரத்தில் அவற்றின் தரம் என்னவென்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். இது அவருக்கு மட்டுமல்ல, அனேகமாக எல்லாரும் அப்படித்தான். பள்ளிப் பிராயத்தில் ஹரிகேன் விளக்கு வெளிச்சத்தில் இரவு முழுதும் படித்த ஜே.ஆர். ரங்கராஜுவின் “ராஜாம்பாள்” நாவலைப் பற்றி கல்கி விலாவாரியாக எழுதி இருக்கிறார். க.நா.சு.வுக்கும் ராஜாம்பாள் பிடித்தமான நாவல். எனக்கும் இரும்புக்கை மாயாவி, பி.ஜி. உட்ஹவுஸ், அலிஸ்டர் மக்ளீன் மாதிரி நான் ஆரம்ப காலத்தில் விரும்பிப் படித்த நாவல்களின் மீது ஒரு soft corner உண்டு. ரசனைக்கும் தரத்துக்கும் நடுவே உள்ள இந்த இடைவெளி is just fascinating!

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்