பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் (மீள்பதிவு)

எம்.வி. வெங்கட்ராமின் இந்த கதையை அழியாச்சுடர்கள் தளத்தில் ராம் பதித்திருக்கிறார். அற்புதமான, மிகவும் powerful கதை. மன அழுத்தத்தை, அப்படி மன அழுத்தம் தரும் சூழ்நிலையை சித்தரிப்பதில் இதை விட அருமையான சிறுகதையை நான் படித்ததில்லை. நான் கதையைப் பற்றி எதையும் எழுதி உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. நேராக கதைக்கே போய்விடுங்கள்!

ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் இந்த கதையை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், எம்விவி பக்கம்

டிஜிடல் யுக உ.வே.சா.க்களுக்கு ஒரு ஜே!

60th birthdayகௌரி கிருபானந்தன் அன்பளிப்பு சிறுகதைத் தொகுதியை தெலுகில் மொழிபெயர்ப்பதற்காக அதில் என்னென்ன சிறுகதைகள் வெளியாகின என்று தேடிக் கொண்டிருக்கிறார், தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். கடைசியில் அவரே கண்டுபிடித்துவிட்டார். எப்படி? கு. அழகிரிசாமியின் மகன்களான திருவாளர்கள் சாரங்கராஜன் மற்றும் ராமச்சந்திரன் புத்தகத்தை இரவல் கொடுத்து உதவி இருக்கிறார்கள்!

ku. azhagirisamiசாதாரண விஷயம் என்று நான் நினைத்திருந்தது எத்தனை சிரமமான விஷயம் என்று தெளிவாகத் தெரிகிறது. கண்டுபிடிக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகி இருக்கிறது. கடைசியில் புத்தகத்தின் பிரதி அழகிரிசாமியின் மகன்களிடமிருந்துதான் பெறப்பட்டிருக்கிறது. இதற்கே இவ்வளவு கஷ்டம் என்றால் எங்கெங்கோ சிறுகதைகளைத் தேடி தட்டச்சிடும் சென்ஷே, அழியாச்சுடர்கள் மாதிரி ஒரு தளத்தை நடத்தும் ராம், ஓப்பன் ரீடிங் ரூம் நடத்தும் ரமேஷ், தொகுப்புகள் தளத்தை நடத்தும் சிங்கமணி இவர்களை எல்லாம் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களை விடுங்கள், இவர்களாவது டிஜிடல் யுகத்து உ.வே.சா.க்கள், ஊர் ஊராக அலைந்து திரிந்து புதுமைப்பித்தன் சிறுகதைகளைத் தேடி கையால் பிரதி எடுத்து பதிப்பித்த வேதசகாயகுமார், கிராமம் கிராமமாக அலைந்து நாட்டார் பாடல்களையும், கதைகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு செய்யும் நா. வானமாமலை, அ.கா. பெருமாள் போன்றவர்களுக்கு எல்லாம் கோவில்தான் கட்ட வேண்டும்!

டிஜிடல் யுகத்து உ.வே.சா.க்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி மேல் இணைக்கும் சிறுகதைக்களுக்காவது பதிப்பு விவரங்களை – எந்தப் பத்திரிகை/புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது, எந்தப் பதிப்பு, பதிப்பகம், வெளியான தேதி இத்யாதி – பதிவு செய்யுங்கள். எதிர்கால வேதசகாயகுமார்களுக்கு உதவியாக இருக்கும்.

அன்பளிப்பு புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் திருவல்லிக்கேணி தமிழ்ப் புத்தகாலயம் (இன்னும் இருக்கிறதா?) முதல் பதிப்பு 1967இல் வந்திருக்கிறது. நான் அன்பளிப்பு எல்லாம் ஐம்பதுகளில் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். (அழகிரிசாமி எப்போது இறந்துபோனார்?)

அன்பளிப்பு கதை வரிசை

  1. அன்பளிப்பு
  2. ஏமாற்றம்
  3. ராஜா வந்திருக்கிறார்
  4. இரண்டு பெண்கள்
  5. இரண்டு ஆண்கள்
  6. சாப்பிட்ட கடன்
  7. கல்யாண கிருஷ்ணன்
  8. ஞாபகார்த்தம்
  9. அழகம்மாள்
  10. திரிவேணி
  11. தேவ ஜீவனம்
  12. எங்கிருந்தோ வந்தார்

புத்தகத்தில் உள்ள பதிப்புரை:

திரு கு. அழகிரிசாமி அவர்களின் 9வது கதைத் தொகுதி இது. தமிழில் 9 கதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
திரு. அழகிரிசாமி எழுதியுள்ள கதைகள் எண்ணிக்கையில் மட்டும் அதிகம் அல்ல. தரத்திலும் மிக உயர்ந்தவை. அவருடைய கதை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒரு உண்மையைத் தெளிவாக விளக்கும் ஆற்றல் படித்தவை. வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பலகோணங்களில் நின்று கவனித்தும் பல்வேறுபட்ட கதைகளைப் படைத்துள்ளார். இத்தொகுதில் அடங்கியுள்ள ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு போன்ற கதைகள் அவருடைய சிறந்த படைப்புகள். இரண்டு பெண்களுக்கு இணையான கதை தமிழ் மொழியில் அபூர்மாகவே கிடைக்கும்.
இந்த நல்ல தொகுதியை வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த ஆசிரியருக்கு நன்றி.


பின்குறிப்பு: இங்கே இருப்பது கௌரி அவர்களின் அறுபதாம் கல்யாண புகைப்படம். படு ஜோராக இருக்கிறது! தம்பதியருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பதிவுகள், அழகிரிசாமி பக்கம்

அ. முத்துலிங்கத்தின் “மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்” – பிடித்த சிறுகதை

a_muthulingamஇதில் என்னைக் கவர்வது அவரது craft. என்ன கச்சிதமான, நேர்த்தியான சிறுகதை! எத்தனை முறை படித்தாலும் ஒரு உற்சாகம் வருகிறது. கதை கிதை என்று ஒரு மண்ணும் கிடையாது. “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று ஒரு வரியை இப்படியும் எழுதலாம். ஆனால் இவ்வளவு நேர்த்தியாக எழுதவேண்டுமே! இப்படி ஒரு கச்சிதமான சிறுகதையாவது எழுதினால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்.

அழியாச்சுடர்கள் தளத்தில் ராம் பதித்திருக்கிறார். அவருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம், சிறுகதைகள்

ஜெயமோகனின் “ஊமைச் செந்நாய்” – பிடித்த சிறுகதை

என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை. விவரிக்க விரும்பவில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

ஊமைச் செந்நாய் சிறுகதை அடங்கிய சிறுகதைத் தொகுப்பு கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை நூறு ரூபாய். கட்டாயம் வாங்கிப் படியுங்கள்!

லா.ச.ரா.வின் சிறுகதை – பாற்கடல்

அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து ஒரு சிறந்த சிறுகதை.

இந்த மாதிரி குடும்பங்கள் இன்று இல்லை. ஆனாலும் இது அந்நியமாகத் தோன்றவே இல்லை. என் தலைமுறைக்காரர்களுக்கு கூட்டுக் குடும்பம் என்பதுதான் மனதளவில் – மனதளவில் மட்டுமே, ப்ராக்டிகலாக இல்லை – சரி…

லா.ச.ரா. எப்போதுமே உணர்ச்சிப் பிரவாகம். இதிலும் அப்படித்தான். என் தமிழ் சிறுகதை anthology-யில் இடம் பெறும். அதற்கு மேல் விவரிக்க விரும்பவில்லை, நேராக படித்துக் கொள்ளுங்கள்!

எஸ். ராமகிருஷ்ணனின் தேர்வு – நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள்

என்னுடைய reference-களில் எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த சிறுகதைகள் தேர்வும் ஒன்று. அழியாச்சுடர்கள் ராம் இப்போது அந்த சிறுகதைகளில் பலவற்றை தொகுத்து (அதாவது பேரை கிளிக்கினால் கதையைப் படிக்கலாம்) ஒரு மாஸ்டர் reference உருவாக்கி இருக்கிறார். படித்துப் பாருங்கள்! நல்ல சிறுகதையை படிக்க மூட் வரும்போது இங்கே போய் எதையாவது க்ளிக்கி படிக்கலாம்…

இப்படி நானே தொகுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போது எனக்கு வேலை மிச்சம். 🙂 ராமுக்கு டபிள் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், படிப்பு

தொடர்புடைய சுட்டிகள்:
கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து: எஸ்.ரா.வின் சிறுகதை தேர்வுகள், என் சிறு குறிப்புகளுடன் – பகுதி 1, பகுதி 2

தி. ஜானகிராமனின் சிறுகதை – பாயசம்

தி.ஜா.வின் இன்னொரு பிரமாதமான கதையை இன்று அழியாச்சுடர்கள் ராம் பதித்திருக்கிறார். பாயசம் கதையை விட மனித மனத்தின் அசூயையை, பொறாமையை, உறவுகளுக்குள்ளே இருக்கும் ஈகோ பிரச்சினைகளை அருமையாக சொல்லிவிட முடியாது. மிஸ் செய்யாமல் படியுங்கள்!

இந்த சிறுகதையை ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் சிறந்த தமிழ் சிறுகதை லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், தி. ஜானகிராமன்

தொடர்புடைய சுட்டி: பாயசம் சிறுகதை

வண்ணநிலவனின் “எஸ்தர்”

வண்ணநிலவனின் ஒரு அருமையான சிறுகதையை – எஸ்தர்அழியாச்சுடர்கள் ராம் பதித்திருக்கிறார். பஞ்சம் பிழைக்க ஊரை விட்டு போகும் குடும்பம்; வயதான பாட்டியை என்ன செய்வது? கதையை மேலும் விவரித்து உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை, அங்கேயே போய் படித்துக் கொள்ளுங்கள்!

எஸ்தர் சிறுகதையை ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் தமிழின் சிறந்த சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக கருதுகின்றனர்.

இதே பிரச்சினையை வேறு தளத்தில் எழுத்தாளர் தமயந்தி அனல் மின் மனங்கள் என்ற கதையில் அணுகி இருக்கிறார். அதுவும் ஒரு பிரமாதமான கதை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய பக்கம்:
எஸ்தர் சிறுகதை
எழுத்தாளர் தமயந்தியின் தளம்

பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்

எம்.வி. வெங்கட்ராமின் இந்த கதையை அழியாச்சுடர்கள் தளத்தில் ராம் பதித்திருக்கிறார். அற்புதமான, மிகவும் powerful கதை. நான் கதையைப் பற்றி எதையும் எழுதி உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. நேராக கதைக்கே போய்விடுங்கள்!

ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் இந்த கதையை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், எம்விவி பக்கம்