கேணி இலக்கிய சந்திப்பில் கண்மணி குணசேகரன்

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் இந்த மாதம் நடக்க இருக்கும் கேணி இலக்கிய சந்திப்பில் பங்கேற்க இருக்கிறார்.

விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து கழகப் பணிமனையில் தொழிலாளியாகப் பணியாற்றுகிறார். பிறந்த ஊர் மணக்கொல்லை. கவிஞராக எழுதுவதைத் துவங்கினார். 93-லிருந்து எழுதுகிறார். தலைமுறைக் கோபம், காட்டின் பாடல் (கவிதை), உயிர்த் தண்ணீர், வெள்ளெருக்கு (சிறுகதைகள்), கோரை, அஞ்சலை, நெடுஞ்சாலை (நாவல்), ஆதண்டார் கோயில் குதிரை (சிறுகதைகள்), காற்றின் பாடல் (கவிதைகள்) ஆகிய படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். இவருடைய நடுநாடுச் சொல்லகராதி தமிழக அரசு விருது பெற்றுள்ளது.

அன்புடன் அழைப்பது,
ஞாநி & பாஸ்கர் சக்தி.

தேதி: அக்டோபர் 13
நாள்: ஞாயிறு
நேரம்: மாலை 4 மணி.
இடம்: 39 , அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர் சென்னை 78.


தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள், கண்மணி குணசேகரன் பக்கம்

அழகர்சாமியின் குதிரை (சிறுகதை) – பாஸ்கர் சக்தி

இந்தக் கதையை நான் பிரமாதம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். என் anthology-யில் நிச்சயமாக இடம் பெறாது. கதை எப்படி போகும் என்றெல்லாம் சுலபமாக யூகிக்க முடிகிறது. (நிஜ அழகர்சாமி வரும் இடத்தைத் தவிர) காதல் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. இருந்தாலும் சில இடங்களில் புன்னகை வருகிறது. அருள் வந்த போலீஸ்காரர், கிராமத்திலேயே ஏறக்குறைய செட்டில் ஆகிவிடும் கான்ஸ்டபிள்கள், கடுப்பான கோடாங்கி, குதிரை சிலை தேடப் போய் நிஜ குதிரை வந்தது, நிஜ குதிரையைத் தேடி வரும் நிஜ அழகர்சாமி என்று சில இடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. நிறைய விவரங்களோடு நாவலாக எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பாஸ்கர் சக்தி டிவி சீரியல் எழுதி புகழ் பெற்றவராம். இந்தக் கதையும் இப்போது திரைப்படமாகிறதாம். படம் ரிலீஸ் ஆகிவிட்டதாம்.