காந்தி 146

இன்று காந்தியின் 146ஆவது பிறந்த நாள்.

வெகு சில தலைவர்களே எல்லா காலத்துக்கும் உரியவர்கள். காந்தி அந்த சின்னக் கூட்டத்திலும் முதன்மையானவர்.

ஒரு விதத்தில் பார்த்தால் முழுத் தோல்வி அடைந்த மாபெரும் தலைவர் அவர் ஒருவரே. அவர் வகுத்த பாதை சரியானது என்று அவரது முதன்மை சீடரான நேரு கூட நம்பவில்லை. ஆனால் அவரது வெற்றி அவர் தன் இலக்குகளை அடைந்தாரா இல்லையா என்பதில் இல்லை. அவர் வாழ்க்கைதான், அவரது போராட்டங்கள்தான், அவர் மாற்றிய மனிதர்கள்தான் அவரது வெற்றி.

பள்ளிப் புத்தகங்களில் நான் கண்டது hagiography மட்டுமே. அதில் வியப்பும் இல்லை. காந்தியை அன்றைய மனிதர்கள் பலரும் தெய்வமாகத்தான் பார்த்தார்கள். அ.கா. பெருமாள் எழுதிய காந்தி சிந்துகள் என்ற அருமையான கட்டுரையைப் படித்தால் மக்கள் அவரை எப்படிப் பார்த்தார்கள் என்று ஓரளவு புரியும்.

மற்றவர்களை சொல்வானேன், காந்தியைப் பற்றிய பிரமிப்பு எனக்கும் குறைவதே இல்லை. இந்த ஒற்றை மனிதர் என்ன மாயம் செய்தார்? Gandhiஎப்படி சாத்தியமாயிற்று? லட்சக்கணக்கான படித்தவர்களும் படிக்காதவர்களும் பணக்காரர்களும் ஏழைகளும் பெண்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலைத் தாண்டி அடி வாங்கவும் ஜெயிலுக்குப் போகவும் சேரிகளில் வாழவும் மலம் அள்ளவும் எப்படித் தங்களைத் தயாராக்கிக் கொண்டார்கள்?

பள்ளிப் புத்தகங்களின் hagiography-ஐத் தாண்டி காந்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவிய புத்தகம் “Freedom at Midnight“. 47இல் கல்கத்தாவில் ஒற்றை மனிதனால் பெரும் உயிர் சேதத்தைத் தடுக்க முடிந்தது என்பது கொஞ்சம் உயர்வு நவிற்சிதான். ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. பஞ்சாபில் பற்றி எரிந்தது அங்கே எரியவில்லையே! (46-இலேயே எரிந்துவிட்டது என்று ஹிந்துத்துவர்கள் சொல்வது உண்டு.)

அப்புறம் காந்தி திரைப்படம். அது இன்னும் நீளமாக இல்லை, நிறைய விஷயங்களைப் பேசவில்லை என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டாலும் அது spoonfeeding-க்கு அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு சென்றது.

அதற்குப் பிறகு பல புத்தகங்கள், கட்டுரைகள் உண்டு. ஆனால் எல்லாப் புத்தகங்களும் கட்டுரைகளும் சினிமாவும் காந்தி என்ன செய்தார் என்பதுதான். அவர் ஏன் இப்படி செய்தார் என்பதைப் பற்றி இல்லை. காந்தியே விளக்கியவற்றில் சுவாரசியம் கம்மியாக இருந்தது, என்னால் ஊன்றிப் படிக்க முடியவில்லை.

உதவிக்கு ஜெயமோகன் வர வேண்டி இருந்தது. அவரது இன்றைய காந்தி காந்தீய சிந்தனைகளைப் புரிந்து கொள்ள உதவியது. மிகச் சிறப்பான புத்தகம்.

முழு புத்தகத்தையும் படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்கு இந்த ஒரு கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன் – காந்தி என்ற பனியா பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4.

ஜெயமோகன் சமீபத்தில் ஆற்றிய ஒரு அருமையான உரையை இங்கே கேட்கலாம். சோம்பேறிகளுக்காக அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

 • காந்தியைப் பற்றிய பிம்பம் அவர் ஒரு மாபெரும் ஒழுக்கவாதி, புனிதர், ஏறக்குறைய மகான். ஆனால் அந்த பிம்பத்துக்கு அப்பாற்பட்ட காந்தியே இன்றும் relevant ஆக இருப்பவர்.
 • அவர் நாளைக்கான சிந்தனைகளை அன்றே கண்டறிந்திருக்கிறார். முதலாளித்துவம், கம்யூனிசம், ஜனநாயகம், தர்க்க அறிவு, ஐரோப்பிய சிந்தனை முறை, மரபான இந்திய சிந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிய அவரது விமர்சனங்கள் தீர்க்கதரிசனம் உள்ளவை. நேரு போன்றவர்கள் ஒரு காலகட்டத்துக்கு தேவையான சிந்தனைகளை (ஜனநாயகம், அரசு முதலாளித்துவம்) முன் வைப்பவர்களுக்கும் அவருக்கும் உள்ள பெரும் வேறுபாடு அதுதான்.
 • ஐரோப்பிய சிந்தனை முறையை முழுதாக உள்வாங்கிக் கொண்டவரும் அவரே. எதையும் பரிசீலனை செய்தே அதை ஏற்றோ மறுத்தோ முன்னேறி இருக்கிறார். வர்ணாசிரமம், ஜாதி முறை சரியே என்று நினைத்தவர் அதை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அடுத்தபடியாக நான் பரிந்துரைப்பது காந்தி-டுடே தளம். பல முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்க்கிறார்கள், தொகுக்கிறார்கள்.

சுவாரசியத்துக்கு இரண்டு சுட்டிகள்:

 • காந்தியின் குரலை இந்த வீடியோவில் கேட்கலாம்.
 • அவர் இறந்தபோது ஹிந்து பத்திரிகையில் வந்த செய்தி

இந்தத் தளத்தில் காந்தியைப் பற்றிய சில புத்தகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அவற்றை மீண்டும் நினைவு கூர்கிறேன்.

 1. ராஜேந்திர ப்ரசாத் எழுதிய At the Feet of Mahatma Gandhi
 2. மனுபென் காந்தி எழுதிய Bapu My Mother
 3. நாராயண் தேசாய் எழுதிய Childhood Reminiscences

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

ஜெயமோகனைப் படிக்கும் வரிசை

சமீபத்தில் ஜெயமோகனைப் பற்றியும் பி.ஏ. கிருஷ்ணனைப் பற்றியும் அறிமுகம் செய்து பேசினேன். பத்து நிமிஷத்தில் இவர்கள் இருவரையும் பற்றி என்ன அறிமுகம் செய்துவிட முடியும் என்று தெரியவில்லை. அதனால் jeyamohanஜெயமோகன் எழுத்துக்களை இது வரை படிக்காதவர்களுக்கு ஒரு வரிசையைப் பரிந்துரைத்தேன். அந்த வரிசை கீழே.

இது வரை படிக்காதவர்கள் சிறுகதைகளிலிருந்து ஆரம்பிப்பது உத்தமம். நான் பரிந்துரைக்கும் பத்து சிறுகதைகள்.

 1. மாடன் மோட்சம்
 2. ஊமைச்செந்நாய்
 3. படுகை
 4. திசைகளின் நடுவே
 5. வணங்கான் (பகுதி 1, பகுதி 2)
 6. அறம்
 7. யானை டாக்டர்(பகுதி 1, பகுதி 2, பகுதி 3)
 8. பித்தம்
 9. அவதாரம்
 10. லங்காதகனம்

இவைதான் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் என்று நான் சொல்ல வரவில்லை. இவை அவரது வீச்சை – பல தளங்களில் எழுதி இருப்பதை – பட்டியல் போடும் முயற்சி.

ஜெயமோகனின் நாவல்களில் ஏழாம் உலகத்திலிருந்தோ வெள்ளை யானையிலிருந்தோ ஆரம்பிக்கலாம். அங்கிருந்து நான் பரிந்துரைக்கும் வரிசை: காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை. எனக்கு பர்சனலாக கஷ்டமாக இருந்த, ஆனால் உயர்ந்த படைப்பு – வெண்முரசு வரிசையில் வந்த நீலம்.

அபுனைவுகள்:

பட்டியல்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், பரிந்துரைகள்

பனியா காந்தி

என்னைப் பொறுத்த வரையில் நான் ஒரு இந்தியன் என்பது வெறும் விபத்து மட்டுமே. எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சைக் கேட்டால் மூச்சில் சக்தி பிறந்த வயதெல்லாம் போய் ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. நான் ஒரு இந்தியன், ஹிந்து, தமிழன், ஆண், ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்பதெல்லாமே வெறும் விபத்துக்கள்தான். இதில் பெருமைப்படவோ சிறுமையுறவோ ஒன்றுமில்லை.

ஆனாலும் சில விஷயங்களில் நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைக்கிறேன். பெரும் பண்பாட்டுப் புலம் என் பின்னால் இருக்கிறது. மஹாபாரதம் போன்ற காவியத்தை நான் அனுபவிக்கும் அளவுக்கு வேற்று நாட்டுக்காரன் அனுபவிக்க முடியாது. என் ஆன்மிகத்தை நானே நிர்ணயிக்கலாம் என்ற பிரக்ஞை நான் ஹிந்துவாகப் பிறந்திருக்காவிட்டால் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த விபத்துக்களில் பெருமைப்படவோ சிறுமையுறவோ எதுவுமில்லை என்று நான் இன்று நினைப்பதை பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று என் முப்பாட்டன் எனக்கு இன்றும் புரியும் மொழியில் பாடி இருப்பது நினைக்கும்போதெல்லாம் மகிழ்வு தரும் விஷயம். அப்புறம் காந்தி பிறந்த நாட்டுக்காரன்.

Gandhiஎப்படி சாத்தியமாயிற்று? லட்சக்கணக்கான படித்தவர்களும் படிக்காதவர்களும் பணக்காரர்களும் ஏழைகளும் பெண்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலைத் தாண்டி அடி வாங்கவும் ஜெயிலுக்குப் போகவும் சேரிகளில் வாழவும் மலம் அள்ளவும் எப்படித் தங்களைத் தயாராக்கிக் கொண்டார்கள்? இந்த ஒற்றை மனிதர் என்ன மாயம் செய்தார்?

காந்தியைப் பற்றி வேற்று நாட்டவரால் புரிந்து கொள்ள முடியாது என்பதில்லை. ஆனால் அவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். நான் வெளிநாட்டுக்கு வந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. காந்தியைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதவர்கள் எக்கச்சக்கம். நம் ஊரிலோ spoonfeeding நடக்கிறது. கொஞ்சூண்டு முயற்சித்தால் போதும், காந்தி பற்றிய hagiography, வசைகள் இரண்டையும் சுலபமாகத் தாண்டி அந்த ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

காந்தி குறைகள் இல்லாத மனிதர் இல்லை. தவறுகளே செய்யாத அவதார புருஷர் இல்லை. அப்படி யாராவது சொன்னால் அதற்கு முதலில் சிரிக்கும் மனிதர் அவராகத்தான் இருப்பார். ஆனால் காந்தியை வசை பாடுபவர்களின் சிந்தனை ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. கண்ணெதிரே நடந்து செல்லும் மாபெரும் கொம்பன் யானையை சின்ன சுண்டெலிதான் என்று எப்படி கூசாமல் சாதிக்கிறார்கள்?

காந்தியைப் பற்றிய பிரமிப்பு சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. பள்ளிக் காலத்தில் – ஒரு ஒன்பது பத்து வயதில் – முதல் முதலில் என்னை வியப்பில் ஆழ்த்திய புத்தகம் கே.ஏ. அப்பாஸ் எழுதிய “இன்குலாப்“. அதில் உப்புச் சத்தியாக்கிரக காலத்தில் சத்தியாக்கிரகிகள் வரிசையாக நின்று அடி வாங்கும் காட்சியில் அமெரிக்க நிருபருக்கு மட்டுமல்ல எனக்கும் மூச்சு நின்றேவிட்டது. அமைதியாக நின்று அடி வாங்கிக் கொள்ள ஒரு கூட்டத்தை எப்படி இந்த மனிதர் உருவாக்கினார் என்று என் அம்மாவும் நானும் பேசிப் பேசி வியந்திருக்கிறோம்.

அப்புறம் காந்தி திரைப்படம். அது இன்னும் நீளமாக இல்லை, நிறைய விஷயங்களைப் பேசவில்லை என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டாலும் அது spoonfeeding-க்கு அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு சென்றது.

எனக்கு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி காந்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவிய புத்தகம் “Freedom at Midnight“. 47இல் கல்கத்தாவில் ஒற்றை மனிதனால் பெரும் உயிர் சேதத்தைத் தடுக்க முடிந்தது என்பது கொஞ்சம் உயர்வு நவிற்சிதான். ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. பஞ்சாபில் பற்றி எரிந்தது அங்கே எரியவில்லையே! (46-இலேயே எரிந்துவிட்டது என்று ஹிந்துத்துவர்கள் சொல்வது உண்டு.)

gandhi_cartoon_by_abuஅதற்குப் பிறகு பல புத்தகங்கள், கட்டுரைகள் உண்டு. ஆனால் எல்லாப் புத்தகங்களும் கட்டுரைகளும் சினிமாவும் காந்தி என்ன செய்தார் என்பதுதான். அவர் ஏன் இப்படி செய்தார் என்பதைப் பற்றி இல்லை. காந்தியே விளக்கியவற்றில் சுவாரசியம் கம்மியாக இருந்தது, என்னால் ஊன்றிப் படிக்க முடியவில்லை.

jeyamohanஅதற்கு ஜெயமோகன் வர வேண்டி இருந்தது. காந்தியின் சிந்தனைகளை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் ஜெயமோகன்தான். அவரது இன்றைய காந்தி புத்தகத்தை எல்லாருக்கும் பரிந்துரைக்கிறேன். அதை மொழிபெயர்த்துப் பிற மொழிகளுக்குக் கொண்டு சொல்ல வேண்டும்…

முழு புத்தகத்தையும் படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்கு இந்த ஒரு கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன் – காந்தி என்ற பனியா பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4.

பின்குறிப்பு: நான் சாதாரணமாக மகாத்மா காந்தி என்று எழுதுவது இல்லை. காந்திதான். புரட்சித் தலைவர்/தலைவி, பேரறிஞர், பெரியார், இனமானக் காவலர் என்று பட்டப்பெயர்கள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் அவரையும் பட்டப்பெயர் வைத்து குறிப்பிடுவது அவரை இழிவுபடுத்துவதாகத் தெரிகிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்
தொடர்புள்ள சுட்டி: காந்திக்கு ஒரு தளம்

தமிழருவி மணியன் சிபாரிசு செய்யும் அரசியல் புத்தகங்கள்

நன்றி, விகடன்!

 1. பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)
 2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
 3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
 4. லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர.)
 5. ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
 6. ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
 7. ‘பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
 8. ரஜனி பாமி-தத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
 9. ‘பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
 10. ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)

இவற்றில் லூயி பிஷரின் அருமையான புத்தகம் ஒன்றைத்தான் நான் படித்திருக்கிறேன். இன்றைய காந்தி படிக்கத் திட்டம் உண்டு. கோசாம்பியையும் படிக்க வேண்டும். மற்றவை பற்றி சொல்வதற்கில்லை.

படித்தவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!