ஜெயமோகனைப் படிக்கும் வரிசை

சமீபத்தில் ஜெயமோகனைப் பற்றியும் பி.ஏ. கிருஷ்ணனைப் பற்றியும் அறிமுகம் செய்து பேசினேன். பத்து நிமிஷத்தில் இவர்கள் இருவரையும் பற்றி என்ன அறிமுகம் செய்துவிட முடியும் என்று தெரியவில்லை. அதனால் jeyamohanஜெயமோகன் எழுத்துக்களை இது வரை படிக்காதவர்களுக்கு ஒரு வரிசையைப் பரிந்துரைத்தேன். அந்த வரிசை கீழே.

இது வரை படிக்காதவர்கள் சிறுகதைகளிலிருந்து ஆரம்பிப்பது உத்தமம். நான் பரிந்துரைக்கும் பத்து சிறுகதைகள்.

 1. மாடன் மோட்சம்
 2. ஊமைச்செந்நாய்
 3. படுகை
 4. திசைகளின் நடுவே
 5. வணங்கான் (பகுதி 1, பகுதி 2)
 6. அறம்
 7. யானை டாக்டர்(பகுதி 1, பகுதி 2, பகுதி 3)
 8. பித்தம்
 9. அவதாரம்
 10. லங்காதகனம்

இவைதான் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் என்று நான் சொல்ல வரவில்லை. இவை அவரது வீச்சை – பல தளங்களில் எழுதி இருப்பதை – பட்டியல் போடும் முயற்சி.

ஜெயமோகனின் நாவல்களில் ஏழாம் உலகத்திலிருந்தோ வெள்ளை யானையிலிருந்தோ ஆரம்பிக்கலாம். அங்கிருந்து நான் பரிந்துரைக்கும் வரிசை: காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை. எனக்கு பர்சனலாக கஷ்டமாக இருந்த, ஆனால் உயர்ந்த படைப்பு – வெண்முரசு வரிசையில் வந்த நீலம்.

அபுனைவுகள்:

பட்டியல்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், பரிந்துரைகள்

பாவண்ணனின் பரிந்துரைகள்

நண்பர் செல்வராஜ் அனுப்பிய குறிப்பு:

paavannanபாவண்ணனின் டாப் 10 மற்றும் முக்கிய நாவல்கள் (வலைத்தளம் மற்றும் பேட்டிகள் )

டாப் 10 (2001) (forumhub.com)

 1. பொய்த்தேவு
 2. ஒரு புளிய மரத்தின் கதை
 3. மோகமுள்
 4. நித்யகன்னி
 5. வாடிவாசல்
 6. சாயாவனம்
 7. பிறகு
 8. ஜே ஜே சில குறிப்புகள்
 9. கூனன் தோப்பு
 10. சதுரங்க குதிரைகள்
 11. விஷ்ணுபுரம்

முக்கிய நாவல்கள் (திண்ணை பேட்டி மற்றும் தீராநதி பேட்டி ஜனவரி 2013)

 1. தலைமுறைகள்
 2. கோபல்ல கிராமம்
 3. காடு
 4. ஏழாம் உலகம்
 5. நெடுங்குருதி
 6. யாமம்
 7. மாதொருபாகன்
 8. மணல் கடிகை
 9. கூகை
 10. காவல் கோட்டம்
 11. ஆழிசூழ் உலகு
 12. யாரும் யாருடனும் இல்லை
 13. நெடுஞ்சாலை
 14. முறிமருந்து
 15. சிலுவைராஜ் சரித்திரம்

தொகுக்கப்பட்ட பக்கம்: பாவண்ணன் பக்கம், பரிந்துரைகள்