பத்மஸ்ரீ விருது வென்ற தெரியாத முகங்கள்

இதையும் ஆகஸ்ட் 15 அன்று பிரசுரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆகஸ்ட் 15 அன்று இலா பட் கட்டுரை வந்ததால் இதை இரண்டு நாள் லேட்டாக பதிக்கிறேன். அது சரி விருதுகள் அறிவிக்கப்பட்டு ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன, இரண்டு நாள் தாமதம் எல்லாம் ஒரு விஷயமா?

ஒவ்வொரு வருஷமும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நாலில் ஒரு பேரை நான் கேள்விப்பட்டிருந்தால் அதிகம். அதுவும் எழுத்துக்கான விருதுகள் கல்விக்கான விருதுகளோடு ஒரே category ஆக அறிவிக்கப்படுகின்றன. விருது வென்றவர் காலேஜ் பிரின்சிபலா இல்லை எழுத்தாளரா என்று கூட தெரியமாட்டேன் என்கிறது.

அதனால்தான் இந்தக் கட்டுரை எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. அதுவும் டீக்கடை வைத்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்யும் தேவரபள்ளி பிரகாஷ் ராவ், பழங்குடி மக்களுக்கு ஏறக்குறைய இலவச மருத்துவம் தரும் டாக்டர்கள் ஸ்மிதா மற்றும் ரவீந்திர கோல்ஹே, தன்னந்தனியனாக கால்வாயை வெட்டி மலை ஓடையைக் கீழே கொண்டு வந்த டைதாரி நாயக், இஞ்சினியர் உத்தவ் குமார் பரலி, நம்மூர் மதுரை சின்னப் பிள்ளை போன்றவர்கள் நாயகர்கள்.

இலக்கியத்துக்காக விருது பெற்ற இருவரைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் கொஞ்சம் வருகிறது.

Sixty-seven-year-old Mohammad Hanif Khan Shastri is a Delhi-based Sanskrit scholar who has been promoting Hindu-Muslim harmony through his books and poems based on ancient Indian Shlokas. He has written eight books, 700 poems on ancient Indian shlokas.

Another awardee, Kailash Madbaiya is a Bundeli folk writer and also the president of Akhil Bhartiya Bundelkhand Sahitya and Sanskrit Parishad. Mr Madbaiya has written 27 books like ‘Jay Veer Bundele Jawan Ki’, ‘Meethe Bol Bundeli Ke’ and also led ‘Manikikaran Andolan’ for Hindi-Bundeli language.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்