பாயசம் (தி. ஜானகிராமன்) குறும்படம்

மேம்படுத்தப்படுத்தி மீண்டும் பதிப்பதற்கு ஒரே காரணம்தான். நெட்ஃப்ளிக்சில் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் டெல்லி கணேஷ், ரோஹிணி, அதிதி பாலன் நடித்து இந்த சிறுகதை வெளியாகி இருக்கிறது.

இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த வசந்துக்கு ஒரு ஜே!

நவரசாவின் எல்லா அத்தியாயங்களையும் நான் பார்த்து முடிக்கவில்லை. பார்த்தவற்றுள் பலவும் சுமார்தான். ஆனால் இந்த நிகழ்ச்சி (episode) பிரமாதம். அபாரமான சிறுகதையோடு சிறந்த நடிப்பும் சேர்ந்துவிட்டால் இது போன்ற குறும்படங்கள் எங்கேயோ போய்விடுகின்றன.

டெல்லி கணேஷின் நடிப்பு மிக அருமை. ஆங்காரத்தை, தானும் தன் குடும்பமும் தாழ்ந்திருப்பதை அருமையாகக் காண்பித்திருக்கிறார். அதிதி பாலன் கடைசியில் டெல்லி கணேஷைப் பார்க்கும் பார்வைக்கே முழு பைசா வசூல். துணைப் பாத்திரங்களாக வருபவர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மணப்பெண்ணாக வருபவர், அவருடைய மகிழ்ச்சியும் அக்காவிடம் இருக்கும் அன்பும் பிரமாதமாக வந்திருக்கிறது; மற்றும் காத்தாடி ராமமூர்த்தி. “இது என்ன காப்பியா” என்று கேட்டால் “அப்படித்தான் சொல்றா” என்று அவர் பதில் சொல்வது இன்னாளில் அழிந்து கொண்டிருக்கும் அக்மார்க் தஞ்சாவூர் பிராமணக் குசும்பு.

இரண்டாவதாக அந்த கல்யாணக் காட்சியை படமாக்கி இருக்கும் விதம். நான் இளமையில் பார்த்த திருமணங்களை கண் முன் கொண்டு வந்துவிட்டது. அதுவும் அந்த ஜமக்காளம்! அந்த மாதிரி ஒரு ஜமக்காளத்தைப் பார்த்து பல வருஷம் ஆயிற்று.

பாயசம் சிறுகதையைப் பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? தி.ஜா.வின் முழு வீச்சும் வெளிப்படும் சிறுகதை. மனித மனத்தின் அசூயையை, பொறாமையை, உறவுகளுக்குள்ளே இருக்கும் அகங்காரப் (ego) பிரச்சினைகளை இதை விட அருமையாக சொல்லிவிட முடியாது. தவறவிடாமல் படியுங்கள்!

இந்த சிறுகதையை ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் சிறந்த தமிழ் சிறுகதை பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி. ஜானகிராமன் பக்கம், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: பாயசம் சிறுகதை

3 thoughts on “பாயசம் (தி. ஜானகிராமன்) குறும்படம்

 1. Super comments RV. I thought the same when I saw this drama. I have watched so far 6 and this one is the best among all. I liked the one with Arvindsamy and Prasanna. But I thought the dialogues were mostly in English. I loved the ending of that drama. I am bit doubtful whether that drama will capture audience interest..

  Like

 2. அவ்வளவு பெரிய அண்டாவை டெல்லி கணேஷ் எப்படி கவிழ்ப்பார் என்று யோசித்து கொண்டிருந்தேன். பதிவில் இருக்கும் படத்தை பார்த்தால், பரவாயில்லை, இதை என் பையனே கவிழ்த்துவிட முடியும். சாமநாதுவின் சாதரண எரிச்சல் மிகுந்த புலம்பல் போல தோன்ற செய்யும் வரிகளில் உள்ளே பொறாமையின் புழுக்கம் காண்பது எல்லாம் சுப்பராயனாக மாறும் அளவிற்கு உச்சமாவது எல்லாம் வெகு சுலபமாக அவரது எழுத்தில் வந்து விழுகின்றது.

  நெட்ப்ளிக்ஸில் இருப்பதால் பார்க்க முடியவில்லை, டெல்லி திறமையான நடிகர், வசந்தும் அருமையான இயக்குனர். முதலில் இதை படமாக்க முன்வந்த தைரியத்தை பாரட்ட வேண்டும். படிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தில் பாதி படத்தில் கிடைத்தாலே வெற்றிதான். பெரும்பாலனவர்கள் இதை பாராட்டிதான் எழுதுகின்றனர்.

  Like

 3. நன்றி, மாலா! நீங்களும் என் போன்றே உணர்வது மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்ட குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை.

  ரெங்கா, நீங்கள் சொல்வது சரி, இந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்த வசந்தைப் பாராட்ட வேண்டும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.