இலக்கியத்துக்கான பத்ம விருதுகள்

இலக்கியம், கல்வி, பத்திரிகைத்துறை ஆகிய மூன்றுக்கும் இலக்கியம்-கல்வி என்ற வகையில்தான் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றையும் கலந்தடித்து குழப்புவது ஏனென்று தெரியவில்லை.

இலக்கியம் என்று எடுத்துக் கொண்டாலும் அதில் பெரும்பாலும் ஆய்வுகளுக்குத்தான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், கவிஞர்கள் அபூர்வம்தான். அதுவும் ஏனென்று தெரியவில்லை. யாராவது கொஞ்சம் செல்வாக்குள்ளவர்கள், இல்லை அண்ணாமலையோடு பழக்கம் உள்ளவர்கள், இதை எல்லாம் மாற்றச் சொல்லுங்க!

முழு விருது பட்டியலும் இங்கே.

எழுத்தாளர்களுக்கான விருதுகள்:

ஜோ டி க்ரூஸுக்கு பத்மஸ்ரீ விருது. ஜோ கொற்கை புத்தகத்துக்காக சாஹித்ய அகடமி விருது வென்றவர். ஆழிசூழ் உலகு புத்தகத்தை எழுதியவர்.
ரகுவீர் சௌதுரி, பத்மஸ்ரீ, குஜராத். எழுத்தாளர், கவிஞர். சாஹித்ய அகடமி, ஞானபீடம் விருதுகள் பெற்றவர்.
ஹரீஷ் நாயக், பத்மஸ்ரீ, குஜராத். குழந்தைகள் எழுத்தாளர். 97 வயது. போன வருஷம்தான் இறந்திருக்கிறார்.
ஆய்வாளர்கள்:
முனி நாராயண பிரசாத், பத்மஸ்ரீ, கேரளா. நாராயண குருகுலத்தின் தலைவர். நித்ய சைதன்ய யதியின் சீடர். வேதாந்த விளக்கங்களாக நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.
கேதவாத் சோம்லால், பத்மஸ்ரீ, தெலுங்கானா. இவர் பஞ்சாரா மொழியில் பகவத்கீதையை மொழிபெயர்த்திருக்கிறார். (பஞ்சாரர்கள் – ஆந்திராவில் வாழும் ஒரு “பழங்குடியினர்” நம்மூர் நரிக்குறவர்கள் மாதிரி வைத்துக் கொள்ளலாம்)
யஷ்வந்த் சிங் கதோச், பத்மஸ்ரீ, உத்தரகண்ட். வரலாற்று ஆய்வாளராம்.
பகவதிலால் ராஜ்புரோஹித், பத்மஸ்ரீ, மத்தியபிரதேசம். பல அபுனைவுகளை (உதாரணமாக: பதஞ்சலி) எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. எல்லாம் ஹிந்தியில் இருப்பதால் அவை ஆய்வுகளா, இல்லை எளிய அறிமுகங்களா என்று தெரியவில்லை.
நவஜீவன் ரஸ்டோகி, பத்மஸ்ரீ, உத்தரபிரதேசம். அபிநவகுப்தர் பற்றி நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார்.
ராஜாராம் ஜெய்ன், பத்மஸ்ரீ. உத்தரபிரதேசம். 97 வயது! பல தொன்மையான இலக்கியங்களை பதித்திருக்கிறார் என்று தெரிகிறது.
அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் திருவாங்கூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்மநாபஸ்வாமி கோவில் பற்றி விரிவான ஆய்வு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
பியரி ஃபிலியோசட், பத்மஸ்ரீ. ஃப்ரான்ஸ் நாட்டவர். சமஸ்கிருத வல்லுனர், குறிப்பாக பாணினி இலக்கணத்தின் ஆராய்ச்சியாளர் என்று தெரிகிறது.
ஃப்ரெட் நெக்ரிட், பத்மஸ்ரீ. ஃப்ரான்ஸ் நாட்டவர். இந்திய ஆய்வாளராம்.
கல்வியாளர்கள்:
குரெல்லா விட்டலாசார்யா, பத்மஸ்ரீ, தெலுங்கானா. இரண்டு லட்சம் புத்தகங்கள் உள்ள நூலகத்தை நிறுவி இருக்கிறார். முன்னாள் கல்லூரி பேராசிரியர்.
சித்ரன் நம்பூதிரிபாட், பத்மஸ்ரீ, கேரளா. 103 வயதில் சில மாதங்களுக்கு முன்னால்தான் இறந்திருக்கிறார். 99 வயதில் கூட இமய மலையில் ஏறினாராம். புத்தகங்கள் எழுதி இருந்தாலும் இவரை கல்வியாளர் என்றுதான் வகைப்படுத்த வேண்டும்.
ஜாஹிர் காஜி, பத்மஸ்ரீ, மஹாராஷ்டிரா. இவர் அஞ்சுமன் கல்வி அமைப்பின் தலைவர். கல்வியாளர்.
ஸ்ரீதர் கிருஷ்ணமூர்த்தி, பத்மஸ்ரீ, கர்நாடகா. கல்வியாளர்.
பத்திரிகையாளர்கள்:
ஹோர்மஸ்ஜி காமா, பத்மபூஷன், மஹாராஷ்டிரா. இவர் மும்பை சமாசார் என்ற குஜராத்தி பத்திரிகையை நடத்துகிறார்.
குந்தன் வியாஸ், பத்மபூஷன், மஹாராஷ்டிரா. இவர் ஜன்மபூமி என்ற குஜராத்தி பத்திரிகையின் தலைமை ஆசிரியர்.
சுரேந்திர கிஷோர், பத்மஸ்ரீ, பீஹார். பத்திரிகையாளர். மறைந்த பீஹார் தலைவர் கர்பூரி தாகூரின் உதவியாளராக இருந்திருக்கிறார். அவசரநிலை காலத்தில் ஜார்ஜ் ஃபெர்னாண்டசுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அவசரநிலை காலத்தில் தலைமறைவு வாழ்க்கைதான். நேர்மையான பத்திரிகையாளர் என்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: விருது அறிவிப்பு

காந்தி தோற்றதும் ஜின்னா வென்றதும்

காந்தி நினைவாக:

காந்தி-ஜின்னா போராட்டத்தில் காந்தி தோற்றார், ஜின்னா வென்றார் என்பது வரலாறு. ஏன் என்பது ப்யாரேலால் எழுதிய Mahatma Gandhi: The Last Phase புத்தகத்தைப் படிக்கும்போது தெளிவாகிறது.

காந்தியால் இந்தப் போராட்டத்தில் வெற்றி அடைந்திருக்கவே முடியாது. ஜின்னா காங்கிரஸ் தலைவர்களின் பலங்களை நன்றாகப் புரிந்து கொண்டு காங்கிரசைத் தாக்கினார். அவரால் காந்தி, நேரு, படேல் ஆகியோரின் பலங்களை பலவீனங்களாக மாற்றிவிட முடிந்தது. ஜின்னாவின் வியூகங்களைப் புரிந்து கொண்டு அவற்றை சமாளிக்கும் திறமை, temperament அன்று காங்கிரஸ் தலைவர்கள் எவருக்கும் – காந்தி, நேரு, படேல், ஆசாத், பிரசாத் – இல்லை. கொஞ்சம் சந்தேகப்பிராணியான ராஜாஜி மட்டுமே ஜின்னாவை சமாளித்திருக்கக் கூடியவர் என்று தோன்றுகிறது. ஆனால் அவருக்கு தமிழக காங்கிரஸில் செல்வாக்கு போய்விட்டிருந்தது, காமராஜ் அவர் காலைப் பிடித்த முதலையாக இருந்தார். தேசிய அளவிலும் காந்தி ஒருவரைத் தவிர மற்ற தலைவர்களுக்கு அவர் மேல் கொஞ்சம் கசப்பு இருந்தது. 1946க்கு பிறகான படேல்-ராஜேந்திர பிரசாத் கடிதப் போக்குவரத்தில் விட்டு விலகியவருக்கு எப்படி பொறுப்பு தருவது என்று அலுத்துக் கொள்வதைப் படித்திருக்கிறேன். அதனால் ராஜாஜியின் குரல் பலவீனமாகவே இருந்தது.

இந்தப் புத்தகம் சிறந்த ஆவணம். 1944-48 காலகட்டத்தில் காந்தியின் வாழ்வை பல நுண்விவரங்களோடு ப்யாரேலால் விவரிக்கிறார். ஆனால் சுவாரசியத்துக்காக edit செய்யப்படவில்லை, அதனால் அலுப்பு தட்டலாம்.

gandhi-jinnahப்யாரேலால் மகாதேவ் தேசாயின் மறைவுக்குப் பின் காந்தியின் செயலரானவர். காந்தியின் மருத்துவராக இருந்த சுசீலா நய்யாரின் சகோதரர். காந்தியை வெகு அருகில் இருந்து பல ஆண்டுகள் பார்த்தவர்.

pyarelal_nayyarப்யாரேலாலுக்கு காந்தி தெய்வம். காந்தி தவறு செய்ய முடியாது. அப்படி அவர் தவறு செய்திருந்தால் அதுதான் சரி. புத்தகம் காந்தியை நாயகனாகவும் ஜின்னாவை வில்லனாகவும் ஆங்கிலேயர்களை ஜின்னாவின் பிடிவாதத்தைக் கையாள முடியாமல் விட்டுக் கொடுப்பவர்களாகவும் சித்தரிக்கிறது. ஆனால் என்னுடைய எண்ணமும் அதுதான்.

இந்தக் காலத்தில் வேவல் பிரபு வைஸ்ராயாக இருந்தார். 1944-இல் காந்தியை எரவாடா சிறையிலிருந்து விடுதலை ஆனதிலிருந்து புத்தகம் ஆரம்பிக்கிறது. காந்தியின் விடுதலை, காந்தி-ஜின்னா பேச்சு வார்த்தைகள், காந்தி-வேவல் பிரபு பேச்சு வார்த்தைகள், காபினட் மிஷன் விஜயம், இந்தியாவில் ஒரு இடைக்கால அரசு உருவாக வேண்டும் என்று மிஷன் உண்மையாக முயற்சித்தது, ஜின்னா போட்ட முட்டுக்கட்டைகள், நேரு தலைமையில் இடைக்கால அரசு, கல்கத்தாவில் Direct Action Day, நவகாளி அக்கிரமங்கள் என்ற வரலாற்று நிகழ்ச்சிகளோடு, காந்தியின் வாழ்வின் minutiae-யும் சேர்த்து பதிவு செய்கிறது.

mahatma_gandhi_the_last_phaseசிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு காந்தியின் பிரச்சினை இதுதான். போர் முடியப் போகிறது என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால் வெள்ளையன் வெளியேற வேண்டும் என்று அறைகூவல் விட்டாயிற்று. மற்ற காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களைக் கலக்காமல் அறைகூவலை வாபஸ் வாங்க முடியாது. ஆங்கிலேய அரசிடம் ஏறக்குறைய மன்றாடுகிறார். தனக்கு சரி என்று பட்டதை செய்வதில் அவமானம், கடுப்பு எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஏற்கவில்லை. அவர்தான் காங்கிரசை விட்டு வெளியேறினார். அதனால் அவர் சிறையில் இல்லை. காந்தி விடுதலை ஆனதும் அவரைப் போய் சந்திப்பவர் யார்? ராஜாஜிதான். காந்திக்கு அவர் தன் வழியை ஏற்க மறுத்ததால் எந்த மனக்கசப்பும் இல்லை. மாறாக ராஜாஜியின் ஃபார்முலாவை ஏற்குமாறு ஜின்னாவிடம் பேச்சு வார்த்தை. காமராஜ் என்னதான் முயற்சித்தாலும் ராஜாஜி-காந்தி உறவை அசைத்திருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் வேண்டும் என்று போராடும் ஜின்னாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. என்ன செய்ய? காந்தி விடாமல் போராடிப் பார்க்கிறார். ஜின்னாவோடு பேச்சு வார்த்தை. காபினெட் மிஷன் அதிகாரிகளான பெதிக் லாரன்ஸ், க்ரிப்ஸ் ஆகியோரோடு இடைவிடாத உரையாடல். வேவலுடன் பேச்சு வார்த்தை. காங்கிரஸ் தலைவர்களை விட்டுக் கொடுக்கும்படி வற்புறுத்துதல். பாகிஸ்தான் பிரிய வேண்டுமா, சரி. ஆனால் அதை நிர்ணயிக்க வேண்டியது விடுதலை பெற்ற இந்தியா, அல்லது விடுதலைக்கு முந்தைய காலகட்ட நாடாளுமன்றம் என்று கூட ஒத்துக் கொள்கிறார். ஆனால் ஜின்னாவிடம் எதுவும் பலிக்கவில்லை.

எப்படி பலிக்கும்? ஜின்னா காந்தியைப் புரிந்து கொண்டிருக்கிறார். எப்போதும் எப்போதும் விட்டுக் கொடுப்பவர் என்பதை உணர்ந்திருக்கிறார். பிடிவாதம் பிடிக்கும் தன்னிடம் அல்ல, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ள காந்தியிடமும், அவரது பேச்சுக்குப் பெருமளவு கட்டுப்பட்ட காங்கிரசிடமுமே ஆங்கிலேயர்கள் சமரசம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. சட்டரீதியாக, நியாயரீதியாக, தர்க்கரீதியாக தான் கேட்பது சரியா தவறா என்றெல்லாம் அவருக்கு யோசனையே வந்த மாதிரி தெரியவில்லை. மீண்டும் மீண்டும் தன் பேச்சை மாற்றிக் கொண்டிருக்கிறார், முன்னுக்குப் பின் முரணாக பேசி இருக்கிறார், முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். காந்தியை வளைக்க முடியுமோ முடியாதோ, காங்கிரஸ் தலைவர்கள் (நேரு, படேல், ஆசாத், பிரசாத்) இன்றில்லாவிட்டால் நாளை களைப்படைவார்கள், ஒழிந்து போ சனியனே என்று விட்டுவிடுவார்கள் என்றே திட்டம் போட்டிருக்கிறார்.

ஜின்னாவின் அணுகுமுறை மிகவும் எளிமையானது. ஏதாவது வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது. ஒரு சமரசம் ஏற்படும். கொஞ்ச நாள் கழித்து சமரசம் எதுவுமே நடக்காத மாதிரி மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பார், அதே கோரிக்கைகள், அதே பிடிவாதம். மீண்டும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பார்கள். மீண்டும் மீண்டும் இதேதான். அவருடைய ஒரு demand-ஐக் கண்டு நான் சிரித்துவிட்டேன். அதிகபட்சம் 27% முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக்தான் காங்கிரஸ் யாரை அமைச்சராக்கும் என்ற முடிவை approve செய்ய வேண்டுமாம்.

காந்தி ஜின்னாவைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் எதிர்பார்த்தது 1920களின் ஜின்னாவை. அறிவுபூர்வமாக பேசும் ஜின்னாவை. அதனாலேயே அவர் தோற்றார்.

“Winning the battle but losing the war” என்று ஒரு சொல்வடை உண்டு. பாகிஸ்தான் விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. ஜின்னாவின் கனவு பலித்துவிட்டது. ஆனால் இன்றுள்ள பாகிஸ்தான் ஒரு failed state. அது ஜின்னாவின் கனவு பாகிஸ்தான் அல்ல. காந்தியோ lost the battle but won the war. இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் நிம்மதியாக இருக்க முடிகிறது என்றால் அதற்கு காந்தியே காரணம்.

ஆனால் அவருடைய பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம், அரவணைத்துச் செல்லும் பாங்கு எல்லாம் நேரு படேலால் கூட முடியவில்லை. என் போன்ற சாதாரணர்கள் எம்மாத்திரம்? கோட்சே கொதித்து எழுந்தது புரிந்து கொள்ளக்கூடிய, ஆனால் மிகவும் துரதிருஷ்டவசமான நிகழ்ச்சி.

என் கண்ணோட்டத்தில் காந்தியைப் போல சிறந்த தலைவர்கள் அபூர்வமே, ஆனால் இருக்கிறார்கள். (லிங்கன், மண்டேலா…) ஆனால் அவரைப் போன்ற ஒரு மனிதர் உருவாவது ஏறக்குறைய நடக்காத விஷயம். இந்தப் புத்தகம் அந்த எண்ணத்தை மேலும் வலுவாக்குகிறது.

காந்தியின் மீது ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். ஜின்னா, பாகிஸ்தான் மீது ஆர்வம் உள்ளவர்களும். புத்தகம் (பகுதி 1, பகுதி 2) இணையத்தில் கிடைக்கிறது.

பின்குறிப்பு: கல்கத்தாவில் ஹிந்துக்களே அடிபட்டார்கள், ஆனால் திருப்பி அடிக்க முடியவில்லை என்று நினைத்திருந்தேன். முஸ்லிம்களுக்கு மோசமான முறையில் அடி விழுந்தது, முஸ்லிம் லீக் அதைத் தன் தோல்வி என்றே நினைத்தது, அதனால்தான் அடுத்த தாக்குதலுக்கு 80% முஸ்லிம்கள் இருந்த நவகாளி மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தது என்று ப்யாரேலால் பதிவு செய்கிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி: மின்பிரதி (பகுதி 1, பகுதி 2)

Around the World In 80 Days

ஜூல்ஸ் வெர்னின் மிகப் பிரபலமான நாவல். 1872-இல் வெளிவந்தது.

பத்து பனிரண்டு வயதில் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றைப் படித்த நினைவு இன்னும் இருக்கிறது. ஃபிலியஸ் ஃபாக் கப்பல், ரயில், யானை, பனியில் செல்லும் “படகு” என்று பலவற்றிலும் மாறி மாறி பயணிப்பது, ஏடன், ப்ரிண்டிஸி, சிங்கப்பூர், ஹாங்காங், ஷாங்காய், யோகஹாமா, சான் ஃப்ரான்சிஸ்கோ, சிகாகோ, நியூ யார்க், லிவர்பூல், லண்டன் என்று என்னவோ பல கேள்விப்பட்டே இராத exotic நகரங்களின் பேர்கள், கடைசியில் அந்த முத்தாய்ப்பு (climax) எல்லாம் மனதைக் கவரந்தன. அட்சரேகை, தீர்க்கரேகை எல்லாம் அப்போதுதான் பாடப்புத்தகத்தில் பேசப்பட்டன, ஒவ்வொரு டிகிரிக்கும் நாலு நிமிஷம் நேரம் முன்னால் நகரும் என்று படித்திருந்தாலும் இந்தப் புத்தகம்தான் அதை தலையில் நன்றாக ஏற்றியது. ஆனால் பின்னாளில் ஆங்கிலத்தில் தேடிப் பிடித்து படித்தபோது அந்த மன எழுச்சி உண்டாகவில்லை.

இன்று உலகம் சுருங்கிவிட்டது. 80 நாள் என்ன, 8 நாளில் நாலு முறை உலகை சுற்றி வரலாம். மேலும் என் கண்ணில் ஜூல்ஸ் வெர்ன் காலாவாதி ஆகிக் கொண்டிருக்கும் எழுத்தாளர். காலாவதி ஆகிவிட்டார் என்று கூட சொல்லலாம். அதனால் மீண்டும் படித்துப் பார்ப்பதில் அத்தனை உற்சாகம் இல்லைதான். எப்படியோ மனதைத் தேற்றிக் கொண்டு படித்தேன்.

புத்தகம் ஏன் வெற்றி பெற்றது என்று நன்றாகவே புரிந்தது. இப்போது கூட கொஞ்சம் மன எழுச்சி உண்டாகத்தான் செய்கிறது. ஃபிலியஸ் ஃபாகின் சித்திரம் caricature-தான், ஆனாலும் சுவாரசியமாக இருக்கிறது. கடைசி முத்தாய்ப்பு இன்றும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்று இந்த நாவலுக்கு இருப்பது curiosity value மட்டுமே.

என்ன கதை? ஃபிலியஸ் ஃபாக் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ஆங்கிலேயர். எல்லாம் ஒழுங்காக சொன்ன நேரத்தில் சொன்னபடி நடக்க வேண்டும். தன் நண்பர்களிடம் 80 நாளில் உலகைச் சுற்றி பயணிக்க முடியும் என்று பந்தயம் வைக்கிறார்.

அன்று அது கஷ்டம்தான்; லண்டனிலிருந்து கப்பல்கள் மாறி சூயஸ் கால்வாய் வழியாக பம்பாய் செல்ல வேண்டும்; பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கு அப்போதுதான் ரயில் பாதை போடப்பட்டிருக்கிறது. கல்கத்தாவிலிருந்து ஹாங்காங்கிற்கு ஒரு கப்பல்; ஹாங்காங்கிலிருந்து ஜப்பானுக்கு இன்னொரு கப்பல்; ஜப்பானிலிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு இன்னொரு கப்பல் பயணம்; அமெரிக்காவில் அப்போதுதான் மேற்குக் கடற்கரையிலிருந்து நியூ யார்க் வரை ரயில் பயணம்; நியூ யார்க்கிலிருந்து லிவர்பூல்; லிவர்பூலிலிருந்து லண்டனுக்கு ரயில். ஒரு இடத்தில் மாறுவதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டாலும் 80 நாளுக்கு மேலே தேவைப்படும்.

தன் வேலைக்காரன் பாஸ்பார்த்தூவோடு ஃபாக் கிளம்புகிறார். பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார். காவல்துறை அதிகாரி ஃபிக்ஸ் ஃபாக் வங்கியிலிருந்து பணத்தை திருடியவர் என்று தவறாக சந்தேகிக்கிறான். ஆனால் கைது செய்ய தேவைப்படும் warrant கிடைப்பதில் தாமதம், அதனால் ஃபாகைத் தொடர்கிறான்.

பம்பாயிலிருந்து கல்கத்தா போவதில் சிக்கல். ஃபாக் நம்பி இருந்த செய்தித்தாள் தகவல் தவறு, ரயில் பாதை போடுவது இன்னும் முடியவில்லை, நடுவே கொஞ்ச தூரம் பயணிகள் தானே ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டு அலஹாபாத் போக வேண்டும். ஃபாக் ஒரு யானையை வாங்கி பயணம் செய்கிறார். நடுவில் உடன்கட்டை ஏற பலவந்தப்படுத்தப்படும் ஔதாவைக் காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஃபிக்ஸ் ஹாங்காங் வரை தொடர்கிறான், வாரண்ட் இன்னும் அவன் கைக்கு வரவில்லை. ஹாங்காங்கில் அவன் சதியால் ஃபாக் தன் போக வேண்டிய கப்பலில் ஏற முடியவில்லை. இதனால் சான் ஃபரான்ஸிஸ்கோ செல்ல வேண்டிய கப்பலை தவற விடும் அபாயம். ஆனால் ஃபாக் இன்னொரு சிறு கப்பலை தனக்கு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்து கொண்டு போய் அந்தக் கப்பலை பிடித்துவிடுகிறார்.

இப்போது ஃபாக் ஆங்கில காலனிகளுக்கு வெளியே. ஃபிக்ஸால் அவரை கைது செய்ய முடியாது. அதனால் ஃபிக்ஸ் அவரை தாமதப்படுத்தும் முயற்சிகளை கைவிடுகிறான். அவர் சீக்கிரம் இங்கிலாந்து சென்றடைய தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறான்.

ஃபாக் அமெரிக்கா வருகிறார். ரயில் பயணத்தில் செவ்விந்தியர்கள் ரயிலைத் தாக்குகிறார்கள். அபாயகரமான நிலையில் ஒரு பாலம். சிறு தாமதங்களால் லிவர்பூல் செல்லும் கப்பலைத் தவறவிடுகிறார்கள்.

ஃபாக் மீண்டும் இன்னொரு கப்பலைப் பிடிக்கிறார். அந்தக் கப்பலை வாங்கியே விடுகிறார். நிலக்கரி தீர்ந்து போகும் நிலையில் கப்பலில் உள்ள மரச்சாமான்கள், பாய்மரங்கள் எல்லாவற்றையும் எரித்து லிவர்பூல் வந்து சேர்கிறார்.

லிவர்பூலில் இறங்கியதும் ஃபிக்ஸ் ஃபாகை கைது செய்கிறான். இரண்டு மணி நேரம் கழித்து தன் தவறு புரிகிறது. ஃபாக் தனக்கென்று ஒரு பிரத்தியேக ரயில் ஏற்பாடு செய்து கொண்டு லண்டன் வருகிறார். ஆனால் அவர் லண்டன் வந்து சேரும்போது அவர் சொன்ன கெடுவுக்கு மேல் சில நிமிஷங்கள் சென்றுவிடுகின்றன.

பந்தயத்தில் தோற்றோம் என்று ஃபாக் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். ஆனால் ஃபாக் கிழக்கிலிருந்து மேற்காகப் பயணித்திருக்கிறார். அமெரிக்காவில் எனக்கு இரவு எட்டு மணி என்றால் இந்தியாவில் காலை ஒன்பதரை மணி அல்லவா? அதனால் ஃபாக் வந்து சேர்ந்தது 79-ஆவது நாளில். அதை கடைசியில் உணர்ந்து சரியான நேரத்திற்கு போய்விடுகிறார். ஔதாவை மணக்கிறார். சுபம்!

எளிய சூத்திரத்தை வைத்து எழுதப்பட்ட நாவல்தான். உலக வரைபடத்தையும் நாடுகளின் எளிய சித்திரத்தையும் வைத்துக் கொண்டு சுலபமாக எழுதிவிடலாம். ஆனால் விறுவிறுப்பாக செல்கிறது. இன்றும் பதின்ம வயதினருக்குப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. காலாவதி ஆகிவிட்டதோ என்று சந்தேகித்தாலும் என் கண்ணில் இன்னும் வசீகரிக்கும் நாவல் (charming).

நாவல் எழுதப்பட்டது 1872-இல். சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது 1869-இல்; அமெரிக்காவில் பசிஃபிக் கடற்கரையையும் அட்லாண்டிக் கடற்கரையையும் இணைக்கும் ரயில் பாதைகள் (transcontinental railway) கட்டப்பட்டதும் 1869-இல். பம்பாய்-கல்கத்த ரயில் பாதை போடப்பட்டது 1870-இல். அதற்கு முன் இப்படி 80 நாள் உலகப் பயணம் சாத்தியமே இல்லை.

1956-இல் டேவிட் நிவன் ஃபிலியஸ் ஃபாகாக நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.

படியுங்கள், பத்து பதினோரு வயது சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

விர்ஜினியா வூல்ஃப்: How Should One Read a Book?

விர்ஜினியா வூல்ஃப் எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது.

சுருக்கமாக, அவர் வார்த்தைகளிலேயே:

…how should we read a book? Clearly, no answer that will do for everyone; but perhaps a few suggestions. In the first place, a good reader will give the writer the benefit of every doubt; the help of all his imagination; will follow as closely, interpret as intelligently as he can. In the next place, he will judge with the utmost severity. Every book, he will remember, has the right to be judged by the best of its kind. He will be adventurous, broad in his choice, true to his own instincts, yet ready to consider those of other people. This is an outline which can be filled, in at taste and at leisure, but to read something after this fashion is to be a reader whom writers respect. It is by the means of such readers that masterpieces are helped into the world.

சில இடங்களில் வேறுபட்டாலும் பொதுவாக இசைகிறேன். எழுத்தை ரொம்ப கேள்வி கேட்கக் கூடாது. கிரிகரி சாம்சா கரப்பான் பூச்சியாக மாறுகிறான் என்றால் சரி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஏற்க முடியவில்லை என்றால் காஃப்கா உங்களுக்கான எழுத்தாளர் இல்லை, அவ்வளவுதான். எழுத்தை கறாராகத்தான் மதிப்பிட வேண்டும்.

Wisdom of the crowds என்பது நாம் என்ன படிக்கிறோம் என்பதை வழிநடத்துகிறதுதான், ஆனால் ஓரளவு கையில் கிடைத்ததை படிக்கும் மனநிலை, ஒன்றை நம் வாசிப்பால் ஏற்கும்/நிராகரிக்கும் மனப்பான்மை வேண்டும்.

நேர்மை மகா முக்கியம், ஊர் சொல்கிறது என்பதால் ஒரு படைப்பை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் பிடிக்கிறது என்று சொல்லிவிடாதீர்கள். அதே போல பிடித்த படைப்பை பிடிக்கவில்லை என்றும் சும்மா பந்தாவுக்காக சொல்லிவிடாதீர்கள்.

மாறுபடும் இடம் இதுதான்; எழுத்தாளர் மதிக்கும் வாசகனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் முயலாதீர்கள், உங்கள் ரசனைக்கு உண்மையாக இருங்கள் என்றுதான் நான் சொல்வேன். அப்படி இருப்பதை எழுத்தாளர் மதித்தால் மகிழ்ச்சி; இல்லாவிட்டால் குறை ஒன்றுமில்லை.

எனது இன்னொரு takeaway – நீங்கள் இதை சம்பவத்தை/பாத்திரத்தை எப்படி எழுதுவீர்கள் என்று வாசிக்கும்போது யோசித்துப் பாருங்கள் என்கிறார். இப்படி எனக்கு இது வரை தோன்றியதில்லை. சில சமயம் சொந்த அனுபவங்களை கதை எதிரொலித்திருக்கிறது, அந்த அனுபவங்களைப் பற்றி யோசித்திருக்கிறேன். சில கதைகளில் – குறிப்பாக துப்பறியும் கதைகளில் – கதை எப்படி நகரும் என்று சிந்தனை ஓடும். ஆனால் நானே இந்தக் கதையை எழுதினால் எப்படி இருக்கும் என்று இது வரை யோசித்ததில்லை. முயன்று பார்க்க வேண்டும்.

டேனியல் டெஃபோ (ராபின்ஸன் க்ரூசோ நாவலை எழுதியவர்), ஜேன் ஆஸ்டென், தாமஸ் ஹார்டி மூவரும் ஒரு பிச்சைக்காரனை தெருவில் சந்திப்பதை எப்படி எழுதுவார்கள் என்று அவர் விவரித்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன்.

வூல்ஃபின் கடைசி பாரா கவிதை.

If the moralists ask us how we can justify our love of reading, we can make use of some such excuse as this. But if we are honest, we know that no such excuse is needed. It is true that we get nothing whatsoever except pleasure from reading; it is true that the wisest of us is unable to say what that pleasure may be. But that pleasure—mysterious, unknown, useless as it is—is enough. That pleasure is so curious, so complex, so immensely fertilizing to the mind of anyone who enjoys it, and so wide in its effects, that it would not be in the least surprising to discover, on the day of judgment when secrets are revealed and the obscure is made plain, that the reason why we have grown from pigs to men and women, and come out from our caves, and dropped our bows and arrows, and sat round the fire and talked and drunk and made merry and given to the poor and helped the sick and made pavements and houses and erected some sort of shelter and society on the waste of the world, is nothing but this: we have loved reading.

வூல்ஃப் புகழ் பெற்ற எழுத்தாளர். ஆனால் நான் இது வரை படித்ததில்லை. சஹிருதயர் என்று இந்த ஒரு கட்டுரையிலேயே தெரிகிறது. ஏதாவது ஒரு புத்தகத்தை இந்த ஆண்டு படித்துப் பார்க்க வேண்டும்.

கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய சுட்டிகள்:

  • விர்ஜினியா வூல்ஃப் விக்கி குறிப்பு
  • How Should One Read a Book? கட்டுரை

முதல் நாடகம்: Persians

Persians-ஐ முதல் நாடகம் என்பது தவறு. நமக்கு கிடைத்திருக்கும் நாடகங்களில் காலத்தால் முந்தையது. கிரேக்க நாடக ஆசிரியர் ஈஸ்கைலஸ் எழுதியது. கி.மு. 472-இல் எழுதப்பட்டதாம். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது…

கிரேக்க நாட்டிலேயே கூட இதற்கு முன்பும் நாடகங்கள் இருந்திருக்க வேண்டும். ஈஸ்கைலஸுக்கு முன்னால் நாடகங்களில் பாத்திரங்கள் கோரஸுடன் மட்டுமே பேசுவார்களாம். இவர்தான் பாத்திரங்களுக்குள் பேச்சு என்பதையே அறிமுகப்படுத்தினாராம். அப்படி என்றால் அவருக்கு முன் நிச்சயமாக நாடகங்கள் இருந்திருக்க வேண்டும் இல்லையா?

எளிய நாடகம். பாரசீக அரசவை. கிரேக்க நாட்டிற்கு எதிராக பெரும்படையோடு ஸெர்க்ஸஸ் போயிருக்கிறார். நாளாயிற்று, செய்தி இல்லை. என்னாயிற்று என்று தெரியவில்லை. ஸெர்க்ஸஸின் அம்மா ஏதோ தீய கனவு கண்டு கவலைப்படுகிறாள். அந்த நேரத்தில் படுதோல்வி என்று செய்தி வருகிறது. இறந்து போன ஸெர்க்ஸஸின் அப்பா டரியஸின் ஆவி இனி மேல் கிரேக்கத்தின் மேல் படை எடுக்காதே என்று எச்சரிக்கிறது.

பாரசீகப் படையெடுப்பு, தோல்வி எல்லாம் நடந்த வரலாறுதான். போரின் சித்தரிப்பு நன்றாகவே இருக்கிறது. ஈஸ்கைலஸ் கிரேக்கராக இருந்தாலும் இது தோற்ற பாரசீகர்களின் துயரத்தை விவரிக்கிறது என்றும் வாசிக்கலாம். கிரேக்கர்களின் பெருமிதத்தை காட்டுகிறது என்றும். என்னைப் பொறுத்த வரை அதுதான் இந்த நாடகத்தின் கவர்ச்சி.

ஆனால் 2500 வருஷத்துக்கு முந்தைய நாடகமாக இல்லாவிட்டால் படிக்க மாட்டோம் என்றுதான் தோன்றுகிறது. பொதுவாக ஈஸ்கைலஸின் நாடகங்கள் எல்லாமே முன்னோடி நாடகங்கள் மட்டுமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 

 

 

சிறுவர் புத்தகங்கள்

இந்தப் பதிவில் சில miscellaneous சிறுவர் புத்தகங்கள். இவை எல்லாவற்றையும் ஒரு பத்து பனிரண்டு வயதிற்குள் படிப்பது நலம். நான் மனதளவில் வளரவே இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு, அது இந்த மாதிரி புத்தகங்கள் எனக்கு இன்னும் பிடித்திருப்பதால்தான்.

  • Scarlet Pimpernel கதைகள்: பாரனஸ் ஆர்க்சி எழுதிய ஸ்கார்லெட் பிம்பர்னல் கதைகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரிய வெற்றி பெற்றன. முதல் நாவலான Scarlet Pimpernel 1903-இல் வந்தது. பிறகு பத்து பனிரண்டு நாவல்கள் வந்தன. ரெஞ்ச் புரட்சி காலத்தில் நடப்பதாக வடிவமக்கைப்பட்ட ஃபார்முலா கதைகள். ஒவ்வொன்றிலும் சர் பெர்சி ப்ளேக்னி தன் உயிரைப் பணயம் வைத்து ஃபிரான்சில் ஆபத்தில் இருக்கும் பிரபுக்கள் குடும்பத்தினரை மீட்டு இங்கிலாந்துக்குக் கொண்டு வருவார். இன்று படிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் அமெரிக்காவில் பள்ளிகளில் கூட சில சமயம் இவற்றை பாடமாக வைக்கிறார்கள். படிப்பதென்றால் பனிரண்டு வயதுக்கு முன்னாலேயே படித்துவிட வேண்டும். 🙂 எல்லா புத்தகங்களையும் இங்கே படிக்கலாம்.
  • Carry on, Mr. Bowditch (1956) புனைவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு. பௌடிச் உண்மை மனிதர். அன்றைய கடல் பயணத்துக்கான data-இல் சில தவறுகளைக் கண்டுபிடித்து அதை சரி செய்தவர். எனக்குப் பிடித்த புத்தகம். நியூபெர்ரி பதக்கம் வென்ற புத்தகம்.
  • Black Stallion தொடர்: முதல் புத்தகமான Black Stallion (1941) ஒரு காட்டுக் குதிரைக்கும் ஒரு சிறுவனுக்கும் உண்டாகும் உறவு. பிறகு நிறைய புத்தகங்கள். பெரியவர்களால் யூகிக்க முடியும் என்றாலும் சிறுவர்கள் ரசிப்பார்கள். எழுதியவர் வால்டர் ஃபார்லி. திரைப்படமாகவும் வந்தது.
  • Children of the Lamp தொடர்: P.B. Kerr எழுதிய இந்தத் தொடரின் முதல் நாவல் Akhenaten Adventure (2004). நாலைந்து நாவல்கள் வந்திருக்கின்றன. இரட்டைக் குழந்தைகளான ஜானும் ஃபிலிப்பாவும் அவர்கள் இருவரும் ஜின்னிகள் என்று தெரிந்து கொள்கிறார்கள். பிறகு என்ன எல்லாம் நடக்கிறது என்று கதை.
  • டெரக் லாண்டியின் ஸ்கல்டக்கரி ப்ளசன்ட் தொடர்: ஸ்கல்டக்கரி ஒரு துப்பறிபவன். ஆனால் வெறும் எலும்புக்கூடு. முதல் கதையில் அவன் செர்பைன் என்ற மந்திரவாதியை எதிர்த்துப் போராடுகிறான். அவனுடைய பார்ட்னராக ஒரு 12 வயது இளம் பெண் வருகிறாள். அவள் ஹாரி பாட்டர் மாதிரி. மந்திர மாய உலகம் இருப்பதை அறியாதவள், ஆனால் அவளுக்கு அந்த பாரம்பரியம் இருக்கிறது. செர்பைன் ஒரு மந்திரக்கோலை தேடுகிறான். அதற்காக நடக்கும் போராட்டம்தான் கதை. ஒரு 12 வயதில் படிக்கலாம்.
  • Boggart by Susan Cooper, 1993: ஒரு விளையாட்டான “பேய்” ஸ்காட்லாந்திலிருந்து கனடா சென்றுவிடுகிறது. அது எப்படி திருப்பி வருகிறது, திரும்பும் வரை என்னென்ன குறும்பு செய்கிறது என்று கதை. நான் படிக்க ஒரே காரணம் பெயர்தான். ஹாரி பாட்டர் புத்தகத்தில் boggart வரும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

சேதுபதி சீமையின் வரலாற்றாய்வாளர்: எஸ்.எம். கமால்

கமால் ராமநாதபுரத்துக்காரர். ராமநாதபுரம், சிவகங்கை வரலாற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கல்வெட்டுகள், செப்பேடுகள், பழைய ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து 18-19 ஆம் நூற்றாண்டின் பாளையக்காரர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள், சிவகங்கை சீமை ஆகியோரைப் பற்றிய தெளிவான வரலாற்று சித்திரத்தை அளிக்கிறார்.

கமாலின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. சரியான தேர்வு. இதற்காக தமிழக அரசுக்கு ஒரு ஜே!

அவரது எழுத்துக்களில் கொஞ்சம் politically correct ஆக இருக்கும் விழைவு தெரிகிறது. முஸ்லிம்களின் பங்கை கொஞ்சம் மிகைப்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது. புத்தகம் யாரைப் பற்றி இருக்கிறதோ, அவரது பங்களிப்பை கொஞ்சம் மிகைப்படுத்துகிறார். அவர் அப்படி நினைத்தார், இவருக்கு இப்படி தோன்றியது என்பதெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களில் கொஞ்சம் விந்தையாகத்தான் இருக்கிறது. பல புத்தகங்கள் ஒரே காலகட்டத்தின் வேறு வேறு ஆளுமைகளைப் பற்றி இருப்பதால் ஒரு புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அடுத்த புத்தகத்தில் வருகின்றன, கூறியது கூறல். ஆனால் இவை சிறு குறைகளாகவே தெரிகின்றன. அதுவும் என் போன்ற பாமரர்களுக்கு பாளையக்காரர்கள், சேதுபதிகள், ராமநாதபுரம்-சிவகங்கைப் பகுதிகளின் அன்றைய அரசியல் நிலை புரிய வைத்துவிடுகிறார்.

பல புத்தகங்களிலிருந்து கிடைக்கும் சித்திரம் இதுதான். 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் அரசு முடிந்த பிறகு ஆர்க்காட்டு நவாபிடம் தென் தமிழகத்தின் அதிகாரம் போகிறது. பாளையக்காரர்கள் நவாபிடமிருந்து விடுதலை பெற முயல்கிறார்கள். யாரும் – ஹைதர், திப்பு உட்பட – ஆங்கிலேயர்களை இன்னொரு சக்தியாகத்தான் பார்த்திருக்கிறார்கள், அன்னியர்கள் இங்கே அதிகாரம் செலுத்துகிறார்களா என்றெல்லாம் யோசித்த மாதிரி தெரியவில்லை. அதனால் நவாபிடமிருந்து விடுதலை பெற முயன்ற பூலித்தேவரை ஆங்கிலேயர்களோடு சேர்ந்து மருதநாயகம்/யூசுஃப் கான் அடக்குகிறார். மருதநாயகம் ஆங்கிலேயரை எதிர்த்தால் பிற பாளையக்காரர்களின் உதவி ஆங்கிலேயருக்கு கிடைக்கிறது. மருது சகோதரர்கள் ராமநாதபுரம் சேதுபதிக்கு எதிராக ஆங்கிலேயருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களால் ராமநாதபுரம் சேதுபதி அரசை ஒரு துப்பாக்கி குண்டு செலவழிக்காமல் கைப்பற்றி கடைசி சேதுபதி அரசரை சிறை வைக்க முடிகிறது. கட்டபொம்மன் முடிந்த வரை சமாதானமாகப் போகப் பார்த்ததும் வரலாறுதான். கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனும் தொண்டைமானும் ஆங்கிலேயருக்கு துணை நிற்கிறார்கள். கடைசி கண்ணியாக மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீழ்கிறாரக்ள்.

ராமநாதபுரம் மாவட்டம் புத்தகம் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தர முயற்சிக்கிறது. ஜாதிகள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எல்லாரையும் பற்றி விவரிக்கிறது. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் புத்தகம் கடைசி அரசர் முத்துராமலிங்க சேதுபதியின் அரசியல் வாழ்க்கையை விவரிக்கிறது. பதின்ம வயதில் அவரை ஆங்கிலேயர்கள் சிறைப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் மீண்டும் அவர் அரசராகி இருக்கிறார். நிர்வாகப் பணிகள், வணிகம் என்று மும்முரமாக இருந்திருக்கிறார். ஆனால் சிவகங்கை சீமையோடு – மருது சகோதரர்களோடு – இடைவிடாத தகராறு. கொஞ்சம் ஆங்கிலேயர்களோடு முரண்டு பிடித்திருக்கிறார். ஒரு நாள் ஆங்கிலேயர்கள் படையெடுத்து வந்து கத்தியின்றி ரத்தமின்றி அவாது அரண்மனைக்குள் புகுந்து அவரை மீண்டும் சிறைப்படுத்திவிட்டார்கள். பிறகு இறக்கும் வரை சிறைதான். ராமநாதபுரம் அரசு ஜமீனாக மாறிவிட்டது. மயிலப்பன் ராமநாதபுரத்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கலவரம் செய்திருக்கிறார், பின்னாளில் மருது சகோதரர்களோடு சேர்ந்து ஆங்கிலேயரோடு போராடி இருக்கிறார்.

முத்துராமலிங்க சேதுபதிக்கு ஆங்கிலேயரிடம் சில சில்லறை பூசல்கள், மனக்குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு முக்கிய எதிரி மருது சகோதரர்கள்தான். விடுதலைப் போரில் அவர் எந்தப் பங்கும் வகித்த மாதிரி தெரியவில்லை. கமால் கொஞ்சம் உயர்வு நவிற்சி அணியைக் கையாள்கிறார். ஆனால் புத்தகத்தைப் படித்தால் இதெல்லாம் தெளிவாகப் புரிகிறது.

சேதுபதி வம்சாவளியினரைப் பற்றி சில புத்தகங்களை எழுதி இருக்கிறார். பாண்டித்துரை தேவரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ராமநாதபுரம் ஜமீந்தாராக இருந்தவருமான மன்னர் பாஸ்கர சேதுபதி என்ற நூலில் ஒரு சுவாரசியமான விஷயம். கமுதியில் சாணார்கள் (நாடார்கள்) ஆலயப் பிரவேசம் செய்ததை அங்கீகரித்திருக்கிறார்! ஆனால் வழக்குத் தொடுக்கப்பட்டு அந்த முடிவு மாற்றப்பட்டிருக்கிறது. இவர்தான் விவேகானந்தருக்கு பொருளுதவி செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது என்பது நினைவிருக்கலாம். பாஸ்கர சேதுபதியின் தம்பி தினகர சேதுபதி பற்றியும் ஒரு புத்தகம் (திறமையின் திருவுருவம் தினகர சேதுபதி) உண்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்து

தொடர்புடைய சுட்டி: எஸ்.எம். கமால் விக்கி குறிப்பு

இந்திரா சௌந்தரராஜன்: சேது நாட்டு வேங்கை

பத்து ஆண்டுகளுக்கு முன் சேது நாட்டு வேங்கை நல்ல வரலாற்று நாவல் என்று யாரோ பரிந்துரைத்தார்கள். சமீபத்தில்தான் படிக்க முடிந்தது.

எளிய நாவல்தான். நான் எழுதி இருந்தால் நாலு பக்கம்தான் எழுத முடிந்திருக்கும். இவர் நானூறு பக்கம் எழுதி இருக்கிறார். சரளமாகச் செல்வதும், கிழவன் சேதுபதியை அதிநாயகனாக வர்ணித்திருப்பதும்தான் கதையின் பலங்கள்.

என்ன கதை? சொக்கநாத நாயக்கர் மதுரையில் அரசராக இருக்கும் காலம். பாளையமாக இருந்த சேது நாட்டை சுதந்திர நாடாக்கி கிழவன் சேதுபதி தனியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மதுரையில் ருஸ்தம் கான் சூழ்ச்சியால் அரசு அதிகாரத்தை கைப்பற்றுகிறான், நாயக்கர் பெயரில் மட்டுமே அரசர். மதுரைக்கும் சேது நாட்டுக்கும் நடுவே கொஞ்சம் புகைச்சல் இருந்தும்சேதுபதி படை எடுத்துச் சென்று நாயக்கரின் அதிகாரத்தை மீட்கிறார். பிறகு மைசூரின் சிக்கதேவராயர் மதுரை மீது படையெடுத்து வரும்போதும் சேதுபதி துணை நிற்கிறார். அவ்வளவுதான் கதை.

நடுவே கோவி. மணிசேகரன் பாணியில் சேதுபதி மீதும் அவரது அமைச்சர் சீதக்காதி மீதும் புகழ் மழை. ஆனால் மணிசேகரன் அளவுக்கு எரிச்சல் மூட்டவில்லை. சேதுபதியின் பங்காளி தாதியத்தேவர் கொடுக்கும் சில்லறைத் தொந்தரவுகள்.

சுமாரான, வணிக நாவல். அவ்வளவுதான். தமிழின் வரலாற்று நாவல்களிலும் வணிக நாவல்களிலும் எனக்கு ஆர்வம் உண்டு; மேலும் பரிந்துரைக்கப்பட்ட சமயத்திலிருந்தே இதைப் படித்துவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இ. சௌந்தரராஜன் ரசிகர்கள் ரசிக்கலாம். நான் பரிந்துரைக்க மாட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சாஹித்ய அகடமி சர்ச்சைகள்

தமிழுக்கான தேசிய விருதுகள் – குறிப்பாக சாஹித்ய அகடமி விருது, ஞானபீட விருது – பல முறை தரமற்ற படைப்புகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கல்லூரி பேராசிரியர்கள் எழுதும் “இலக்கிய விமர்சனங்களுக்காக” மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறள் நீதி இயக்கம் (கே.டி. திருநாவுக்கரசு – 1974க்கான விருது) போன்ற புத்தகங்களில் எதுவும் உருப்படியாக இருந்துவிடும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை. உண்மையைச் சொன்னால் இந்த விமர்சனங்களை விட சிலிகன்ஷெல்ஃப் விமர்சனங்களே உயர்ந்த தரத்தில் இருக்கின்றன என்றே கருதுகிறேன்.

உயர்ந்த இலக்கியம் என்று அன்று கருதப்பட்ட சில புத்தகங்கள் காலம் தாண்டி நிற்பதில்லைதான். அலை ஓசை, அகல் விளக்கு, வேங்கையின் மைந்தன் என்று சில இருக்கின்றன. அவற்றைப் பற்றி எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் கோவி. மணிசேகரனை எல்லாம் சாஹித்ய அகடமி விருதுக்குத் தேர்ந்தெடுத்தவர்கள் பரம அயோக்கியர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆரம்ப காலத்தில் honest mistakes இருக்கலாம், ஆனால் விதிமீறல்கள், பாரபட்சம் – சரி அயோக்கியத்தனம் என்றே சொல்லிவிடுகிறேன் –  இருந்திருக்காது என்று நினைத்திருந்தேன். அப்போதே ஆரம்பித்துவிட்டது என்று தெரிகிறது.

முதல் சாஹித்ய அகடமி விருது ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழின்பம் என்ற நூலுக்கு 1955-இல் தரப்பட்டது. விருது கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியிடப்பட்ட புத்தகத்துக்குத்தான் தரப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1948-இல் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1951-இல் வந்திருக்கிறது. மூன்றாம் பதிப்பு 1954-இல் வந்திருக்கிறது, அதை கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசு தரப்பட்டிருக்கிறது! என்ன அநியாயம்! வல்லிக்கண்ணன் இதற்கு மூல காரணம் சேதுப்பிள்ளை பல சாஹித்ய அகடமி கமிட்டிகளில் உறுப்பினராக இருந்ததுதான் என்கிறார் (சரஸ்வதி காலம் புத்தகம், பக்கம் 145-147)

வல்லிக்கண்ணன் 1956-இல் அலை ஓசைக்கு விருது தரப்பட்டதற்கும் திரை மறைவு காரணங்கள் உண்டு என்கிறார், ஆனால் அவர் எதையும் விவரிக்கவில்லை.

1957-இல் தமிழில் அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் வெளியான எந்தப் புத்தகத்துக்கும் விருதுக்கு தகுதி இல்லை என்று விருது கொடுக்கப்படவே இல்லை. 1958-இல் சக்கரவர்த்தி திருமகன் புத்தகத்துக்கு விருது. ஆனால் புத்தகத்தின் முதல் பதிப்பு 1956-இல் வெளியாகி இருக்கிறது! 1957-இல் தகுதி இல்லாத புத்தகம் 1958-இல் எப்படி தகுதி பெற்றது?

எனக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு; எந்த எழுத்தாளருக்கு விருது என்று தீர்மானித்துவிடுகிறார்கள்; முந்தைய மூன்று ஆண்டுகளில் எந்தப் புத்தகம் வந்திருந்தாலும் அதற்கு விருது கொடுத்துவிடுகிறார்கள். சேதுப்பிள்ளைக்கு விருது (நியாயமான முறையிலோ இல்லை திரை மறைவு அழுத்தத்தாலோ) என்று தீர்மானித்துவிட்டால் முந்தைய மூன்று ஆண்டுகளில் வந்த புத்தகம் – அது எத்தானவது பதிப்பாக இருந்தாலும் சரி – ஒன்றுக்கு கொடுத்துவிடுவது. இது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பமே தள்ளாட்டம்; இப்போது முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னும் கொஞ்சம் தூரம் போக வேண்டும். சாருவுக்கும் சுப்ரபாரதிமணியனுக்கும் கோணங்கிக்கும் யுவன் சந்திரசேகருக்கும் கண்மணி குணசேகரனுக்கும் இன்னும் விருது கொடுக்காமல் அநியாயம் செய்கிறார்கள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

 

பிடித்த சிறுகதை: Man with a Scar

சாமர்செட் மாம் நல்ல எழுத்தாளர். இலக்கியம் என்று பார்த்தால் இரண்டாம் வரிசைதான், ஆனால் எழுத்தின் தொழில் திறமை (craft) கை வந்தவர். இந்தச் சிறுகதை ஒரு நல்ல உதாரணம். என்ன பில்டப், என்ன முத்தாய்ப்பு! வாழ்வின் அபத்தத்தை அருமையாகச் சித்தரித்திருக்கிறார்.

ஆனால் வாசகன் மனதில் இந்த உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு அதை சிறப்பாக செயல்படுத்தி இருப்பது போன்ற ஒரு உணர்வு. பொங்கிப் பெருகும் நதியோ, அமைதியான அல்லது அலை பாயும் கடலோ அல்லது நீர்வீழ்ச்சியோ அல்ல; அழகாக அமைக்கப்பட்ட வாய்க்காலில் ஓடும் நீர், மிஞ்சி மிஞ்சிப் போனால் நன்றாக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று. எத்தனைதான் அழகாக இருந்தாலும் அது செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும் அல்லவா? அதனால் ஒரு மாற்று குறைவாகவே மதிப்பிடுகிறேன்.

ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே

ஓவர் டு மாம்!


The Man With The Scar

Somerset Maugham

It was on account of the scar that I first noticed him, for it ran, broad and red, in a great crescent from his temple to his chin. It must have been due to a formidable wound and I wondered whether this had been caused by a sabre or by a fragment of shell. It was unexpected on that round, fat and good-humoured face. He had small and undistinguished features, and his expression was artless. His face went oddly with his corpulent body. He was a powerful man of more than common height. I never saw him in anything but a very shabby grey suit, a khaki shirt and a battered sombrero. He was far from clean. He used to come into the Palace Hotel at Guatemala City every day at cocktail time and strolling leisurely round the bar offered lottery tickets for sale. If this was the way he made his living it must have been a poor one, for I never saw anyone buy, but now and then I saw him offered a drink. He never refused it. He threaded his way among the tables with a sort of rolling walk as though he were accustomed to traverse long distances on foot, paused at each table, with a little smile mentioned the numbers he had for sale and then, when no notice was taken of him, with the same smile passed on. I think he was for the most part a trifle the worse for liquor.

I was standing at the bar one evening, my foot on the rail, with an acquaintance – they make a very good dry martini at the Palace Hotel in Guatemala City – when the man with the scar came up. I shook my head as for the twentieth time since my arrival he held out for inspection his lottery tickets. But my companion nodded affably.

‘Qué tal, general? How is life?’

‘Not so bad. Business is none too good, but it might be worse.’

‘What will you have, general?’

‘A brandy.’

He tossed it down and put the glass back on the bar. He nodded to my acquaintance. ‘Gracias. Hasta Luego.’

Then he turned away and offered tickets to the men who were standing next to us.

‘Who is your friend?’ I asked. ‘That’s a terrific scar on his face.’

‘It doesn’t add to his beauty, does it? He’s an exile from Nicaragua. He’s a ruffian of course and a bandit, but not a bad fellow. I give him a few pesos now and then. He was a revolutionary general and if his ammunition hadn’t given out he’d have upset the government and be minister of war now instead of selling lottery tickets in Guatemala. They captured him, along with his staff, such as it was, and tried him by court-martial. Such things are rather summary in those countries, you know, and he was sentenced to be shot at dawn. I guess he knew what was coming to him when he was caught. He spent the night in gaol and he and the others, there were five of them altogether, passed the time playing poker. They used matches for chips. He told me he’d never had such a run of bad luck in his life.

When day broke and the soldiers came into the cell to fetch them for execution he had lost more matches than a reasonable man could use in a lifetime.

They were led into the patio of the gaol and placed against a wall, the five of them side by side, with the firing party facing them. There was a pause and our friend asked the officer in charge of them what the devil they were keeping him waiting for. The officer said that the general commanding the government troops wished to attend the execution and they awaited his arrival.

“Then I have time to smoke another cigarette,” said our friend. “He was always unpunctual.”

But he had barely lit it when the general – it was San Ignacio, by the way: I don’t know whether you ever met him – followed by his A.D.C. came into the patio. The usual formalities were performed and San Ignacio asked the condemned men whether there was anything they wished before the execution took place. Four of the five shook their heads, but our friend spoke.

“Yes, I should like to say goodbye to my wife.”

“Bueno,” said the general, “I have no objection to that. Where is she?”

“She is waiting at the prison door.”

“Then it will not cause a delay of more than five minutes.”

“Hardly that, Señor General.”

“Have him placed on one side.”

Two soldiers advanced and between them the condemned rebel walked to the spot indicated. The officer in command of the firing squad on a nod from the general gave an order, there was a ragged report, and the four men fell. They fell strangely, not together, but one after the other, with movements that were almost grotesque, as though they were puppets in a toy theatre. The officer went up to them and into one who was still alive emptied two chambers of his revolver. Our friend finished his cigarette and threw away the stub.

There was a little stir at the gateway. A woman came into the patio, with quick steps, and then, her hand on her heart, stopped suddenly. She gave a cry and with outstretched arms ran forward.

“Caramba,” said the general.

She was in black, with a veil over her hair, and her face was dead white. She was hardly more than a girl, a slim creature, with little regular features and enormous eyes. But they were distraught with anguish. Her loveliness was such that as she ran, her mouth slightly open and the agony of her face beautiful, a gasp of surprise was wrung from those indifferent soldiers who looked at her.

The rebel advanced a step or two to meet her. She flung herself into his arms and with a hoarse cry of passion: alma de mi corazón, soul of my heart, he pressed his lips to hers. And at the same moment he drew a knife from his ragged shirt – I haven’t a notion how he had managed to retain possession of it – and stabbed her in the neck. The blood spurted from the cut vein and dyed his shirt. Then he flung his arms round her and once more pressed his lips to hers.

It happened so quickly that many didn’t know what had occurred, but from the others burst a cry of horror; they sprang forward and seized him. They loosened his grasp and the girl would have fallen if the A.D.C. hadn’t caught her. She was unconscious. They laid her on the ground and with dismay on their faces stood round watching her. The rebel knew where he was striking and it was impossible to staunch the blood. In a moment the A.D.C. who had been kneeling by her side rose.

“She’s dead,” he whispered.

The rebel crossed himself.

“Why did you do it?” asked the general.

“I loved her.”

A sort of sigh passed through those men crowded together and they looked with strange faces at the murderer. The general stared at him for a while in silence.

“It was a noble gesture,” he said at last. “I cannot execute this man. Take my car and have him led to the frontier. Señor, I offer you the homage which is due from one brave man to another.”

A murmur of approbation broke from those who listened. The A.D.C. tapped the rebel on the shoulder, and between the two soldiers without a word he marched to the waiting car.

My friend stopped and for a time I was silent. I must explain that he was a Guatemaltecan and spoke to me in Spanish. I have translated what he told me as well as I could, but I have made no attempts to tone down his rather high-flown language. To tell the truth I think it suits the story.

‘But how did he get the scar?’ I asked at length.

‘Oh, that was due to a bottle that burst when he was opening it. A bottle of ginger ale.’

‘I never liked it,’ said I.


தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

  • சாமர்செட் மாமின் இன்னொரு சிறுகதை – Verger
  • Moon and Six Pence