கடந்த நூறு ஆண்டுகளின் முக்கிய அமெரிக்க பெண் எழுத்தாளர்கள்

பொதுவாக எனக்கு பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர் என்று பிரிப்பதெல்லாம் பிடிக்காது. இருந்தாலும் சில சமயங்களில் வசதிக்காக இந்த மாதிரி பட்டியல்கள் தேவைப்படுகின்றன. யூஎஸ்ஏ டுடே பத்திரிகை கடந்த நூறு ஆண்டுகளின் முக்கிய அமெரிக்கப் பெண்கள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறது. அதிலிருந்து எழுத்தாளர்கள் பட்டியல் மட்டும் கீழே.

  1. மாயா ஏஞ்சலோ
  2. ஜூலியா ஆல்வாரெஸ்
  3. லொர்ரெய்ன் ஹன்ஸ்பெர்ரி
  4. ஜோரா நீல் ஹர்ஸ்டன்
  5. டோனி மாரிசன்
  6. ஏமி டான்

நீங்கள் முக்கியமான அமெரிக்க பெண் எழுத்தாளர் என்று யாரையாவது கருதுகிறீர்களா? சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

15 சிறந்த பாலியல் நாவல்கள்

இப்படி ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. இதில் ஒன்றைக் கூட படித்தத்தில்லை என்று ஒத்துக் கொள்ள வெட்கமாகத்தான் இருக்கிறது. படிச்சிட்டாலும்… என்று மைண்ட வாய்ஸ் வேறு கேட்கிறது. படிப்பதை விடுங்கள், இரண்டு புத்தகங்களைப் பற்றித்தான் கேள்வியே பட்டிருக்கிறேன். Lady Chatterley’s Lover, Tropic of Cancer.

நீங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

வசதிக்காக பட்டியல் கீழே.

  1. Story of the Eye by Georges Bataille (1928)
  2. Tropic of Cancer by Henry Miller (1934)
  3. The Story of O by Pauline Réage aka Anne Desclos (1954)
  4. Delta of Venus by Anaïs Nin (1977)
  5. Bad Behavior by Mary Gaitskill (1989)
  6. Baise-Moi by Virginie Despentes (1999)
  7. The Sexual Life of Catherine M. by Catherine Millet (2002)
  8. Lost Girls, Vols. 1-3 by Alan Moore and Melinda Gebbie (2006)
  9. Wetlands by Charlotte Roche (2008)
  10. House of Holes by Nicholson Baker (2011)
  11. Les Liaisons Dangereuses (Dangerous Liaisons) by Pierre Choderlos de Laclos
  12. The Lover by Marguerite Duras
  13. Venus in Furs by Leopold von Sacher-Masoch
  14. Call Me by Your Name by André Aciman
  15. Lady Chatterley’s Lover by D.H. Lawrence

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

ஆல்டைம் – மிகச் சிறந்த 10 புத்தகங்கள்

ஸ்டீஃபன் கிங், நார்மன் மெய்லர், டாம் வுல்ஃப் உள்ளிட்ட 125 எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்த 10 ஆல்டைம் கிரேட் புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. வசதிக்காக பட்டியல் கீழே.

1. Anna Karenina (டால்ஸ்டாய்)
2. Madame Bovary (ஃப்ளாபெர்ட்)
3. War and Peace (டால்ஸ்டாய்)
4. Lolita (நபோகோவ்)
5. Adventures of Huckleberry Finn (ட்வெய்ன்)
6. Hamlet (ஷேக்ஸ்பியர்)
7. Great Gatsby (ஃபிட்ஸ்ஜெரல்ட்)
8. In Search of Lost Time (ப்ரௌஸ்ட்)
9. Short Stories (செகாவ்)
10. Middlemarch (ஜார்ஜ் எலியட்)

எனக்கு இந்தப் பட்டியலில் இசைவில்லை. இந்தியா/தமிழை கணக்கிலே எடுத்துக் கொள்ளவே இல்லை என்றாலும் ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் Moby Dick, Les Miserables, Crime and Punishment, One Hundred Years of Solitude, All Quite on the Western Front, To Kill a Mockingbird, Old Man and the Sea, Animal Farm, Pride and Prejudice, Death of a Salesman, Glass Menagerie, Doll’s House, Ceaser and Cleopatra என்று பல நினைவு வருகின்றன. ஷேக்ஸ்பியரில் கூட நான் Macbeth-ஐ ஒரு மாற்று அதிகமாக மதிப்பிடுவேன். இந்தப் பட்டியலில் நான் டால்ஸ்டாயின் பெருநாவல்களைப் படித்ததில்லை (என் வாசிப்பில் அது ஒரு பெரிய ஓட்டை). மிச்ச எட்டில் Huckleberry Finn மற்றும் செகாவை மட்டும்தான் சேர்த்துக் கொள்வேன்.

அதனால் என்ன? அவரவருக்கு ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளலாம். அதில்தான் மஜா. உங்கள் பட்டியல் என்ன? தவறாமல் எழுதுங்கள்!

பின்குறிப்பு அதே 125 எழுத்தாளர்களின் ஆல்டைம் கிரேட் எழுத்தாளர்கள் பட்டியல்:
1. டால்ஸ்டாய்
2. ஷேக்ஸ்பியர்
3. ஜேம்ஸ் ஜாய்ஸ்
4. நபோகோவ்
5. டோஸ்டோவ்ஸ்கி
6. ஃபாக்னர்
7. டிக்கன்ஸ்
8. செகாவ்
9. ஃப்ளாபெர்ட்
10. ஜேன் ஆஸ்டென்

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியலகள்

Best First Lines in Fiction

பிபிசி தளத்தில் Best First Lines in Fiction என்று ஒரு சுட்டி கண்ணில் பட்டது. எனக்குப் பிடித்த சில வரிகள் அதிலிருந்து.

ஜேன் ஆஸ்டன், Pride and Prejudice:

It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.

டிக்கன்ஸ், A Tale of Two Cities:

It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.

ஹெர்மன் மெல்வில், Moby Dick:

Call me Ishmael.

டால்ஸ்டாய், Anna Karenina:

All happy families are alike; each unhappy family is unhappy in its own way.

ஜார்ஜ் ஆர்வெல், 1984:

It was a bright cold day in April, and the clocks were striking thirteen.

இடாலோ கால்வினோ, If on a Winter’s Night a Traveller:

You are about to begin reading Italo Calvino’s new novel, If on a winter’s night a traveller.

கொசுறாக, ஒரு நாவலின் கடைசி வரி

டிக்கன்ஸ், A Tale of Two Cities:

It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest that I go to than I have ever known

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

தொடர்புடைய சுட்டி: பிபிசியின் ஒரிஜினல் சுட்டி

2010-களின் பெஸ்ட்செல்லர்ஸ்

இவைதான் போன தசாப்தத்தின் பெஸ்ட்செல்லர்ஸாம்

Mockingjay தவிர்த்த வேறு எதையும் நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

நூலகங்கள்

நூல்கங்களைப் பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு பதிவிட்டிருந்தேன். இப்போது இந்தப் பதிவு கண்ணில் பட்டது. நேஷனல் ஜியாக்ரஃபிக் உலகின் அழகிய நூலகங்களைப் பற்றி ஒரு slideshow இங்கே.

சாம்பிளுக்கு ஒரே ஒரு புகைப்படம் கீழே (மெட்டன் நூலகம், ஜெர்மனி)

தொகுக்கப்பட்ட பக்கம் பட்டியல்கள்

கோவில் ஓவியங்கள்

சுவரோவியங்கள் உள்ள தமிழகக் கோவில்கள் என்று ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. இந்தப் பட்டியலில் பத்து பனிரண்டு கோவில்களுக்குப் போயிருந்தாலும் தஞ்சை பெரிய கோவில் ஓவியங்களைத் தவிர நான் வேறு எதையும் பார்த்ததில்லை.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு சமீபத்தில்தான் போயிருந்தேன், சிற்பங்களைப் பார்த்து பிரமித்து நின்றுவிட்டதாலோ என்னவோ, ஓவியங்களைப் பார்த்த நினைவே இல்லை!

உத்திரமேரூருக்கு அருகில் பல வருஷங்கள் வசித்திருக்கிறோம், ஒரு முறை கூட சுந்தரவரதப் பெருமாள் கோவிலுக்குப் போனதில்லை!

  1. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
  2. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  3. திருப்பருத்திக்குன்றம் சந்திரப்பிரபா கோவில்
  4. உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோவில்
  5. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்
  6. வீடூர் ஆதிநாதர் கோவில்
  7. செஞ்சி வெங்கடரமணஸ்வாமி கோவில்
  8. சித்தாமூர் பார்ஸ்வநாதர் கோவில்
  9. பனைமலை தாளகிரீஸ்வரர் கோவில்
  10. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
  11. திருமலை சமணக் கோவில்
  12. திருக்கோவிலூர் திரிவிக்ரமப்பெருமாள் கோவில்
  13. சிதம்பரம் நடராஜர் கோவில்
  14. விருத்தாசலம் பழமலைநாதர் கோவில்
  15. குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில்
  16. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
  17. மதுரை மீனாட்சி கோவில்
  18. அழகர்கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில்
  19. திருக்கோஷ்டியூர் சௌந்தரநாராயணப் பெருமாள் கோவில்
  20. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  21. மடவார்வளாகம் வைத்யநாதஸ்வாமி கோவில்
  22. சித்தன்னவாசல் சமணக் கோவில்
  23. குடுமியான்மலை குடுமிநாதர் கோவில்
  24. நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில்
  25. திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்
  26. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில்
  27. கும்பகோணம் ராமஸ்வாமி கோவில்
  28. முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம்
  29. பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோவில்
  30. திருவலஞ்சுழி பிள்ளையார் கோவில்
  31. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்
  32. ஆடுதுறை ஆபத்சகாயஸ்வேரர் கோவில்
  33. திருமங்கலங்குடி பிரணநாகேஸ்வரர் கோவில்
  34. திருவையாறு ஐயாறப்பன் கோவில்
  35. தஞ்சை பெரிய கோவில்
  36. வேதாரண்யம் சிவன் கோவில்
  37. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோவில்
  38. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்
  39. ராமநாதபுரம் ராமலிங்க விலாசம்
  40. உத்தரகோசமங்கை மங்களேஸ்வர ஸ்வாமி கோவில்
  41. குற்றாலம் குற்றாலநாதர் கோவில்
  42. ஆழ்வார் திருநகரி ஆதிநாதஸ்வாமி கோவில்
  43. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
  44. திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில்
  45. திருப்புல்லாணி ஆதிஜகன்னாதர் கோவில்
  46. வரகுணமங்கை பெருமாள் கோவில்
  47. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்
  48. சுசீந்திரம் ஸ்தாணுமாலயன் கோவில்
  49. அதமன்கோட்டை சென்ராயன் கோவில்
  50. மலையடிப்பட்டி பெருமாள் குடைவரைக்கோவில்
  51. இடைக்கால் தியாகராஜர் கோவில்
  52. கங்கைகொண்டசோழபுரம் கங்கை கொண்ட சோழீச்சுரம்
  53. திட்டக்குடி சிவன் கோவில்
  54. வேப்பத்தூர் பெருமாள் கோவில்

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

பட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்

நீங்கள் புதிதாக ஒரு நூலகத்தைத் திறந்தால் – அதற்காக 100 புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால், எவற்றை வாங்குவீர்கள்? வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், எல்லா நூலகங்களிலும் அனேகமாக இருக்கும் புத்தகங்கள் எவை? அதற்கும் ஒரு பட்டியல்Worldcat தளத்திலிருந்து இதற்கான தரவுகளை எடுத்திருக்கிறார்கள்.

டாப் டென் மட்டும் வசதிக்காக கீழே. அனேகமாக நாம் எல்லாருமே இவற்றைப் படித்திருப்போம். Alice, Huckleberry Finn, Pride and Prejudice, Moby Dick ஆகியவை கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை.

  1. Don Quixote by Miguel de Cervantes
  2. Alice’s Adventures in Wonderland by Lewis Carroll
  3. The Adventures of Huckleberry Finn by Mark Twain
  4. The Adventures of Tom Sawyer by Mark Twain
  5. Treasure Island by Robert Louis Stevenson
  6. Pride and Prejudice by Jane Austen
  7. Wuthering Heights by Emily Brontë
  8. Jane Eyre by Charlotte Brontë
  9. Moby Dick by Herman Melville
  10. The Scarlet Letter by Nathaniel Hawthorne

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

மறக்க முடியாத வரிகள்

81 Staggering Lines என்ற ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. ஷேக்ஸ்பியர் இல்லாமல் எப்படி 81 வரிகளைத் தொகுத்தார் என்று புரியவில்லை. இருந்தாலும் சில தேர்வுகள் என் மனதிலும் பதிந்தவைதான். சிலவற்றை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் இந்தப் பதிவு அந்தக் கட்டுரையைப் பற்றி அல்ல. தமிழ் புனைவுகளில் அப்படி என்ன வரிகள் மனதில் பதிந்திருக்கின்றன? எனக்கு ஒன்றே ஒன்றுதான் சட்டென்று தோன்றியது.

கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!

வேறு ஒரு வரியும் தோன்றவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? நினைவில் கொள்ளுங்கள், அந்த வரி கதைக்கு முக்கியமா என்பதை வைத்து தேர்வு செய்யாதீர்கள். அந்த வரி அதன் மட்டிலுமே striking ஆக இருக்க வேண்டும். எதிர்மறை உதாரணமாக ‘எனக்கு டகர் பாயிட் வருங்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க’ என்பது முக்கியமான வரிதான். ஆனால் அந்த வரியை மட்டுமே பார்த்தால் ஒன்றும் பிரமாதமில்லை. தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் இல்லாமல் போகாது, என் மரமண்டைக்குத்தான் நினைவு வரமாட்டேன் என்கிறது.

முகின்? பாலாஜி? விசு? சுந்தரேஷ்? பக்ஸ்? ராஜன்? ராஜ் சந்திரா?

உதாரணங்கள் கீழே:

Pride and Prejudice:
It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife.

A Tale of Two Cities:
It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair.

Glass Menagerie:
Time is the longest distance between two places.

Gone With the Wind:
My dear, I don’t give a damn.

Fellowship of the Ring:
All we have to decide is what to do with the time that is given us.

Anna Karenina:
All happy families are alike; each unhappy family is unhappy in its own way.

One Hundred Years of Solitude:
Many years later, as he faced the firing squad, Colonel Aurelio Buendía was to remember that distant afternoon that his father took him to discover ice.

1984:
It was a bright cold day in April, and the clocks were striking thirteen.

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

தடை செய்யப்பட்ட தமிழ் புத்தகங்கள்

இந்தப் பட்டியலை எங்கே பார்த்தேன் என்று நினைவில்லை. தொகுத்தவருக்கு நன்றி!

  • பாரதியாரின் ஆறில் ஒரு பங்கு, தடை எப்போது நீக்கப்பட்டது என்று தெரியவில்லை.
  • பாரதியாரின் ஸ்வதேச கீதங்கள் 1928-இல் தடை செய்யப்பட்டது. 1929-இல் தடை நீக்கப்பட்டது.
  • பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் தடை செய்யப்பட்டது , தடை எப்போது நீக்கப்பட்டது என்று தெரியவில்லை.
  • அண்ணா எழுதிய ஆரிய மாயை, கம்பரசம் தடை செய்யப்பட்டன, தடை எப்போது நீக்கப்பட்டது என்று தெரியவில்லை.
  • என்.வி. கலைமணி எழுதிய திருப்புகழ் ரசம் தடை செய்யப்பட்டது. தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் இலங்கையில் 1947-இல் பிரசுரித்தார்களாம். கம்பரசத்தால் inspire ஆகி இதை கலைமணி எழுதினாராம். இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று நினைவு, அதனால் இப்போது தடை இருக்காது என்று நினைக்கிறேன்.
  • புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம் 1948-இல் தடை செய்யப்பட்டது. 1971-இல் தடை நீக்கப்பட்டது. இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று நினைவு.
  • தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய முதலிரவு தடை செய்யப்பட்டது. காந்தி தனது மனதின் மீதும் உடலின் மீதும் இருந்த கட்டுப்பாட்டை பரிசோதிக்க சில இளைஞிகளுடன் நிர்வாணமாக படுத்து உறங்குவாராம். இந்த நாவல் அந்தப் பரிசோதனைகளை பின்புலமாக வைத்து எழுதப்பட்டதாம். இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன, அதனால் இப்போது தடை இருக்காது என்று நினைக்கிறேன்.
  • குழந்தை ராயப்பன் எழுதிய மதுரை வீரனின் உண்மை வரலாறு புத்தகம் 2013-இல் தடை செய்யப்பட்டது.
  • கே. செந்தில் மள்ளர் எழுதிய மீண்டெழும் பாண்டியர் வரலாறு தடை செய்யப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது.
  • பெருமாள் முருகனின் மாதொருபாகன் தடை செய்யப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது.
  • ம. நவீன் எழுதிய பேய்ச்சி மலேசிய அரசால் தடை செய்யப்பட்டது

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்