ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

ஒரு மாறுதலுக்காக இன்று புத்தகங்கள் பற்றி இல்லை. பழைய பதிவு ஒன்றை தூசி தட்டி மீள்பதித்திருக்கிறேன். – மூலப்பதிவு இங்கே.

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் (எண்பதுகள்) துக்ளக் பத்திரிகையில் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டவர் ம.பொ.சி. சரியான ஜால்ரா என்றுதான் நினைத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவருக்கும் ஜால்ரா என்று தெரியவந்தது. அவரை பற்றி பேசிய குடும்ப/நட்பு வட்டாரப் பெரியவர்கள் எல்லாரும் அவர் நன்றி கெட்டவர், கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அவருக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டு இப்போது எம்ஜிஆரை சந்தோஷப்படுத்த கருணாநிதியைத் திட்டுகிறார் என்றுதான் சொன்னார்கள்.

இன்னும் கொஞ்சம் விவரம் தெரிந்தபோது இவர்தான் மறந்து போயிருந்த கட்டபொம்மனையும் வ.உ.சியையும் தமிழர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் என்று தெரியவந்தது. அட! என்று பார்த்தேன். பிறகு மெதுமெதுவாக அவர் தமிழக எல்லை போராட்டத்தில் ஆற்றிய பங்கு, தமிழையும் இந்தியாவையும் ஒரே நேரத்தில் போற்றியது மாதிரி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். அவரே எழுதிய சில புத்தகங்கள் – நானறிந்த ராஜாஜி, ராஜாஜியுடன் அவருக்கிருந்த உறவு பற்றி – கிடைத்தன. பத்து வருஷங்களுக்கு முன் தமிழம் தளத்தில் தமிழ் முழக்கம் பத்திரிகையின் சில பழைய இதழ்களையும் பார்த்தேன்.

ம.பொ.சி. 1906-இல் பிறந்தவர். பனை ஏறும் ஜாதியில், நாடார் உட்பிரிவாக இருக்க வேண்டும், – தாழ்வாக கருதப்பட்ட ஜாதியாம் – பிறந்தவராம். (கிராமணி என்றால் கிராமத்தில் முக்கியப் பதவி, “உயர்ந்த” ஜாதி என்று நினைத்திருந்தேன்.) சுதந்திர போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்றார் என்று நினைக்கிறேன். மிக ஏழையாக இருந்திருக்கிறார். பரம்பரை சொத்தும் இல்லை, குடும்பத் தலைவனும் விடுதலை, போராட்டம், சிறை என்று போய்விட்டால் குடும்பத்தின் நிலை கஷ்டம்தான். சிறைவாசம் அவரது உடல்நிலையை மோசமாக பாதித்திருக்கிறது. உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாம். அவரது எளிய பின்புலம், மற்றும் தோற்றம் – குறிப்பாக மீசை, அவர் ரவுடியோ என்ற ஒரு சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. ராஜாஜியே அப்படித்தான் நினைத்திருந்தாராம். கல்கியை ராஜாஜி மனமாற்றம் செய்ய வேண்டி இருந்ததாம்.

அவருக்கு வ.உ.சி.யும், கட்டபொம்மனும் பெரிய icon-கள். அவர்களை பற்றிய பிரக்ஞை தமிழ் நாட்டில் உருவாக அவர்தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். (அவருக்கு அடுத்த படியில்தான் நான் சிவாஜி கணேசனை வைக்கிறேன்)

நாற்பதுகளில் அவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்க ஆரம்பித்தது. சின்ன அண்ணாமலை உதவியுடன் கட்டபொம்மன், வ.உ.சி. புத்தகங்களை வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு முன்னும் வெளி வந்தாலும், அவை விற்கவில்லை. சின்ன அண்ணாமலை சாணி நிறக் காகிதத்தில் மோசமான பிரதிகளோடு ம.பொ.சி. தன்னை வந்து பார்த்ததாக குறிப்பிடுகிறார். சி. அண்ணாமலை வணிகம் ரத்தத்தில் ஊறிய செட்டியார். வியாபார உத்திகள் தெரிந்தவர். அவர் தனது தமிழ்ப்பண்ணை பதிப்பகத்தில் இவற்றை நல்ல முறையில் அச்சடித்து வெளியிட்டார், நன்றாக விற்றிருக்கிறது. ம.பொ.சிக்கு பணம் கிடைத்த மாதிரி தெரியவில்லை, ஆனால் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள்.

காங்கிரசை விட்டு வெளியேறிய ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழைய முயன்றபோது காமராஜ் அதை கடுமையாக எதிர்த்தார். அப்போது ராஜாஜி சார்பாக முனைந்து போராடிய தமிழ் நாட்டுக்காரர்களில் ம.பொ.சி. முக்கியமானவர். அப்போதிலிருந்தே ராஜாஜியின் அணுக்க சீடர் ஆகிவிட்டார். ராஜாஜி காங்கிரசுக்குள் நுழைவதற்காக செய்த சமரசங்களில் இவர் அவமானப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு ராஜாஜி இவரது விஸ்வாசம் பற்றி தெளிவாக புரிந்துகொண்டார்.

ராஜாஜியின் சிஷ்யர்தான், ஆனால் ராஜாஜிக்கு ஆமாம் போடுபவரில்லை. கண்மூடித்தனமான பக்தி இல்லை. (கல்கி நாட்டில் மழை பெய்ததற்கெல்லாம் ராஜாஜிதான் காரணம் என்று எழுதி இருக்கிறார்) சுதந்திரமாக (independent) ஆக செயல்பட்டார். ராஜாஜி இவரை வருமானம் வரக்கூடிய பல வேலைகளுக்கு பரிந்துரைத்திருக்கிறார். – கல்கியின் மறைவுக்கு பிறகு கல்கி பத்திரிகைக்கு ஆசிரியர் வேலை உட்பட. இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

52 தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லையா, பணம் இல்லாத குறையால் போட்டியிடவில்லையா, இல்லை தோற்றுவிட்டாரா என்று தெரியவில்லை. ராஜாஜி முதல்வர் ஆனதும் இவரை பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் பதவி எதுவும் தரவில்லை. ஏதோ நிலச்சீர்திருத்தம் விஷயத்தில் மிக அற்புதமாகப பேசி தஞ்சாவூர் பண்ணையார்களை சட்டத்தை ஒத்துக்கொள்ள வைத்தாராம். ராஜாஜி அரசே எல்லைப் போராட்டத்துக்காக இவரை சிறைப்படுத்தியது என்று படித்திருக்கிறேன். காமராஜ் இவரை ராஜாஜியின் சிஷ்யர் என்று ஒதுக்கிவிட்டார். தமிழக எல்லைக்காக இவர் போராடியதும் காமராஜுக்கு embarassing ஆக இருந்திருக்க வேண்டும்.

திராவிட இயக்கத்தின் தமிழ் இவரை கவர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை எதிரியாகத்தான் நினைத்திருக்கிறார். ஆனால் அவர்களது பாணியிலேயே அவர்களது நோக்கங்களை – கடவுள் மறுப்பு, திராவிட நாடு மாதிரி பல – எதிர்த்திருக்கிறார். அதாவது இந்தியாவுக்கு உட்பட்ட தமிழ் தேசியத்துக்காக நல்ல தமிழில் பேசி, எழுதி வந்திருக்கிறார். ராஜாஜியும் காமராஜும் அழகான தமிழ் பேசியதில்லை. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் ஆகியோரின் தமிழ் ஐம்பதுகளில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் கா.மு. ஷெரிஃப், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி. நாகராஜன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு தமிழரசுக் கழகம் என்று ஒரு அமைப்பை ஸ்தாபித்தார். ஏ.பி.என். சினிமா துறையில் அறுபதுகள் வரை பெரும் வெற்றி பெறவில்லை, ஆனால் கலைஞர் போல வர முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறார். தமிழ் முழக்கம் பத்திரிகையை புரட்டினால் கலைஞர், கே.ஆர். ராமசாமி மாதிரி பலரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. ஏ.பி.என். படங்களும் தி.மு.கவினரால் விமர்சிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இலக்கியத்தின் எதிரிகள் என்ற சிறு தொகுப்பில் கம்ப ராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் தாக்கிப் பேசிய ஈ.வே.ரா.வை மறுத்து எழுதுகிறார்.

ம.பொ.சியின் தாக்கம் தமிழக எல்லை போராட்டத்தில்தான் பிரமாதமாக வெளிப்பட்டிருக்கிறது. நேருவும், ராஜாஜியும் மொழிவாரி மாநிலங்களின் ஆதரித்ததில்லை. மத உணர்வு பாகிஸ்தான் கொண்டு வந்தது போல மொழி உணர்வு பிரிவினை சக்திகளை ஊக்குவிக்கும் என்றுதான் எண்ணினார்கள். பொட்டி ஸ்ரீராமுலு போய்ச் சேரும் நிலை வந்த பிறகுதான் முதல்வர் ராஜாஜிக்கும் பிரதமர் நேருவுக்கும் அவரை பற்றி பிரக்ஞையே வந்திருக்கிறது. வேறு வழி இல்லை என்று தோன்றிய பிறகுதான் ஆந்திரா உருவாக ஒத்துக்கொண்டார்கள். மாநில எல்லையை அவர்களும் சரி, பின்னால் வந்த காமராஜும் சரி பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை. சென்னை மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடினார்கள் (அவர்களுக்கு உரிமை இருக்கவும் செய்தது). ம.பொ.சி., தமிழரசு கழகத்தார் போராடி இருக்காவிட்டால் திருத்தணி எல்லாம் ஆந்திராவில்தான் இருந்திருக்கும். சித்தூர், திருப்பதி ஆகியவற்றின் மீது தமிழர்களுக்கும் உரிமை அந்த காலத்தில் உண்டு. நேரு இதை பற்றி விசாரிப்பதாக வாக்குறுதி எல்லாம் கொடுத்திருக்கிறார், எல்லாம் காற்றோடு போய்விட்டது.

வட எல்லை மட்டுமல்ல; கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்ற போராட்டத்திலும் முக்கிய பங்களிப்பு இருந்திருக்கிறது. இன்று மார்ஷல் நேசமணி பேரே யார் நினைவிலும் இல்லை, இவருடைய பங்களிப்பு எங்கே நினைவிருக்கப் போகிறது?

காமராஜ் காலத்தில் ம.பொ.சிக்கு அழுத்தம் அதிகமாக இருந்திர்க்க வேண்டும். கட்சிக்குள்ளிருந்தே ஒருவர் தமிழக எல்லைகள் பற்றி “கலாட்டா” செய்வது காமராஜுக்கு கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். காமராஜ் கட்சிக்குள் இருக்க வேண்டுமென்றால் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். காங்கிரசை விட்டு வெளியேறினார். தமிழை வைத்து நடந்த போட்டியில் தி.மு.க.வினரை வெல்ல முடியவில்லை. தமிழரசுக் கழகம் மங்க ஆரம்பித்தது. ராஜாஜி சுதந்திராவுக்கு வரும்படி பல முறை கூப்பிட்டும் மறுத்துவிட்டார். ஓரளவு புகழ் இருந்தது, பணம்தான் குறைச்சலாக இருந்திருக்கிறது.

67-இல் ராஜாஜியே தி.மு.க.வுடன் கூட்டு சேரும்போது, ம.பொ.சி.யும் கூட்டணியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவர் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த முதல் பதவி அதுதான் – 60 வயதில். வயதாகிவிட்டது, இளமையில் இருந்த வைராக்யம் குறைந்துவிட்டது. மெதுமெதுவாக கலைஞருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்துவிட்டார். இது அவரது ஆளுமையின் பெரிய வீழ்ச்சிதான், ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய வீழ்ச்சி. அதை விட பெரிய வீழ்ச்சி அவர் எம்ஜிஆருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது. ஒரு முறை வெளிப்படையாகவே சொன்னார் – “எம்ஜிஆர் நன்றாக ஆட்சி செய்கிறார் ஏனென்றால் எனக்கு மேல் சபை தலைவர் பொறுப்பு கொடுத்திருக்கிறார்”! எம்ஜிஆர் மேல்சபையைக் கலைத்தபோது கூட அவரை மிக மிருதுவாக இப்படி எல்லாம் செய்யலாமா என்று பட்டும்படாமல் கேள்வி எழுப்பி இருக்கிறார். கண்டித்தால் வேறு பதவி கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயம் தெளிவாகவே தெரிந்தது. இன்றைய நிலையை வைத்து பார்த்தால் அன்று அவருக்கு கிடைத்தவை சிறு வசதிகள்தான் – ஒரு கார், ஒரு வீடு, ஏதோ கொஞ்சம் பணம். அவர் எழுதிய புத்தகங்கள், நடத்திய பத்திரிகை நிச்சயமாக நூலகங்களில் வாங்கப்படும் என்ற பேசப்படாத உறுதி. ஆனால் அதன் அருமை கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

அவரை காமராஜ் பயன்படுத்தி இருக்க வேண்டும். காங்கிரசுக்கு பெரும் வலு சேர்த்திருப்பார். அவரது பாணியை காங்கிரஸ் கடைப்பிடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தாக்கு பிடித்திருக்கலாம். அவரது potential பெரிது. அவரது சாதனைகள் குறைவுதான், வாய்ப்பு கிடைக்காத குறைதான்.

சிறந்த பேச்சாளர் என்று சொல்கிறார்கள். சிலம்புச் செல்வர் என்று பட்டமே கொடுத்திருக்கிறார்கள். நான் அவரது பேச்சை கேட்டதில்லை, அதனால் எதுவும் சொல்வதற்கில்லை.

பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவரது புத்தகங்கள் எதுவும் எனக்கு பிரமாதமாக தெரியவில்லை. வெகு சிலவற்றைத் தவிர மற்றவற்றை யார் வாங்கி இருப்பார்கள் என்றே புரியவில்லை. ஒரு வேளை நூலகங்கள் வாங்கினவோ என்னவோ. பொதுவாக கட்டுக்கோப்பு, வடிவ கச்சிதம் குறைவாக இருக்கின்றன, ramble ஆகின்றன.

ஆனால் சில புத்தகங்கள் முக்கியமான சரித்திர ஆவணங்கள் – கட்டபொம்மன், வ.உ.சி. ராஜாஜி, விடுதலை போரில் தமிழகம் போன்றவை முக்கியமான புத்தகங்கள். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு புத்தகத்திற்காக 1966-இல் சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது. அரசு இவரது எழுத்துகளை நாட்டுடமை ஆக்கி இருக்கிறது. ஒரு தபால்தலையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டை எழுதி பத்து வருஷம் இருக்கும். இன்று யோசித்தால் அவரது முக்கியப் பங்களிப்பு இந்திய அடையாளத்துக்குள் தமிழ் அடையாளம் என்ற கருத்தை முன் வைத்ததுதான் என்று தோன்றுகிறது. அந்த பண்பாட்டு அணுகுமுறை எத்தனை முக்கியம் என்று காங்கிரசும் காமராஜும் உணராமல் போனது துரதிருஷ்டமே. கடைசியில் ஆளே இல்லாத டீக்கடையில் டீயை ஆற்றும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அவர் காங்கிரசின் முகமாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் காமராஜின் முக்கியப் பேச்சாளராக, பிரச்சாரகராக இருந்திருந்தால், இன்றும் அங்கங்கே தெரியும் இந்தியா vs தமிழகம் என்ற இருமை நிலை இன்னும் குறைந்திருக்கும். அவரது பிற பங்களிப்புகளை அது இன்னும் பின்னே தள்ளி இருக்கும்.

காந்தியடிகளும் ஆங்கிலமும் புத்தகம் அவருக்கு இருந்த பிரச்சினைகளை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. காந்தி ஹிந்தி நாட்டின் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று உறுதியாகக் கருதியவர். அதை எந்த சமரசமும் இல்லாமல் பல முறை தெளிவாக சொல்லி இருக்கிறார். ம.பொ.சி.க்கு காந்தி மறுத்துப் பேச முடியாத தலைவர். அதே நேரத்தில் ஹிந்தி வேண்டாம் என்பது அவரது உறுதியான கருத்து. அவர் இரண்டு பக்கமும் பேச முடியாமல் அல்லாடுவது இந்தப் புத்தகத்தில் தெளிவாகத் தெரிகிறது.

திராவிட இயக்கம் இந்திய அடையாளத்துக்கு எதிரான தமிழ் அடையாளம் என்ற கருத்தை 1989-இல்தான் – முரசொலி மாறன் மத்திய அமைச்சர் ஆனபோதுதான் – உண்மையில் கைகழுவியது என்று நான் எண்ணுகிறேன்.

திறமை இருந்தும், லட்சிய வேகம் இருந்தும், தலைமை வகிக்க தகுதி இருந்தும், அவர் தன் வாழ்வில் பெரிய பதவி எதையும் அடையமுடியவில்லை. கடைசியில் தன் பேச்சுத் திறமையை ஜால்ரா அடிக்க பயன்படுத்திவிட்டார். அவரது தாக்கம் தமிழக எல்லைப் போராட்டத்திலும், வ.உ.சி., கட்டபொம்மன் ஆகியோரை பிரபலப்படுத்தியதிலும் மட்டுமே நிற்கிறது. ஒரு நல்ல ஆளுமையாக வரக்கூடிய தகுதி உள்ள ஒருவரை தேவைகளும், காலமும் எப்படி வீழ்ச்சி அடைய செய்கின்றன என்பதைத்தான் அவர் வாழ்க்கை காட்டுகிறது.

ஆதாரங்கள்:
ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், நானறிந்த ராஜாஜி, விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு ஆகிய புத்தகங்கள்
சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்பமாட்டீர்கள்

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
கப்பலோட்டிய தமிழன்
விடுதலைப் போரில் தமிழகம்
கட்டபொம்மன் – உண்மையும் தொன்மமும்
மாநில சுயாட்சியும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்
ம.பொ.சி. பற்றி சேதுராமன்
ம.பொ.சி. விக்கி குறிப்பு
தமிழக எல்லை நிர்ணயிப்பில் ம.பொ.சி.

கலைஞானம்: சினிமா சீக்ரட்ஸ்

சுவாரசியமான புத்தகம்.

கலைஞானம் அவர் வார்த்தைகளிலேயே “கலாய் பூசுபவர்”. திரைக்கதைகளில் நகாசு வேலை செய்பவர். திரைக்கதை விவாதங்களில் கலந்துகொண்டு காட்சிகளுக்கு மெருகேற்றுபவர். நாற்பது ஐம்பது வருஷமாக இந்தப் பணியை செய்கிறவர். திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல முகங்கள் இருந்தாலும் இதுவே அவரது முக்கியமான முகம்.

நிறைய திரைப்படங்கள் பார்ப்பவர். அவர் பார்க்கும் கலாய் வேலை எல்லாம் ஒரு காட்சியில் எப்படி மேலே போவது என்றால் இந்த ஆங்கிலத் திரைப்படத்தில் இப்படி மேலே போனார்கள், அந்தப் பழைய தமிழ்ப் படத்தில் அப்படி இந்த முடிச்சை அவிழ்த்தார்கள் என்று சிக்கலைத் தீர்ப்பதுதான். உதாரணமாக இயக்குனர் விக்ரமன் வானத்தைப் போல திரைப்படத்தில் கதையை மேலே நகர்த்த முடியாமல் தவித்தாராம். இவர் மிக சிம்பிளாக அட்வைஸ் செய்திருக்கிறார். பழைய அண்ணன் தம்பி பாசத் திரைப்படங்களான குலதெய்வம், அன்புச் சகோதரர்களைப் பாருங்கள், உங்களுக்கு ஐடியா கிடைக்கும் என்று. விக்ரமன் படங்களைப் பார்த்தாராம், problem solved!

அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.

ரஜினிகாந்த் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த பைரவி என்ற திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் வெளிவந்தபோது நான் சின்னப் பையன். பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். நன்றாக ஓடவும் செய்தது. ரஜினி அதை இன்னும் மறக்கவில்லை என்கிறார்.

எப்படி இருப்பார் என்று யோசிப்பவர்களுக்காக: இது நம்ம ஆளு திரைப்படத்தில் பாக்யராஜை ஐயராக நடி என்று தூண்டிவிடும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

1950களில் இருந்தே திரைப்படங்களோடு தொடர்பு கொண்டவர். கார் ஓட்டும் ட்ரைவர் உட்பட பல வேலைகளைப் பார்த்திருக்கிறார். பெரும் பணக்காரர் ஆகிவிடவில்லை என்றாலும் தயாரிப்பாளர் நிலைக்கும் உயர்ந்திருக்கிறார். (வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று படித்தேன்.)

தான் பார்த்தவர்கள், நேரடி அனுபவங்களை சுவாரசியமாக நக்கீரன் பத்திரிகையில் தொடராக எழுதி வந்திருக்கிறார். அதுதான் இந்த சினிமா சீக்ரட்ஸ் புத்தகம். யாரைப் பற்றியும் குறை சொல்லிவிடக் கூடாது, அதுவும் குறிப்பாக அதிகாரமும் தாக்கமும் உடைய ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி, தேவர் போன்றவர்களைப் பற்றி எதுவும் குறைவாக சொல்லிவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்ச்சி தெரிந்தாலும் உண்மையாக இருக்கிறது.

சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம். அவரது உறவினரான கே.பி. காமாட்சி சினிமா உலகத்தில் இருந்தவர். (பராசக்தியில் பூசாரியாக நடித்தவர்) “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே“, “தேனுண்ணும் வண்டு” உட்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். அவரைப் பிடித்தால் சினிமாவில் நுழையலாம் என்று அவரைத் தேடி வந்திருக்கிறார். கே.பி. காமாட்சிக்கோ அப்போது தேய்முகம். குடியால் வந்த வினை. ஆனால் மதிப்பு இருந்திருக்கிறது. அவர் இறந்தபோது அவர் பிணத்தை எம்ஜிஆரும் என்எஸ்கேயும் தூக்கி வந்திருக்கிறார்கள்.

எப்படியோ கார் ட்ரைவராக தொத்திக் கொண்டுவிட்டார். கஷ்ட வாழ்வுதான். அறுபதுகளில் பத்து ரூபாய் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. ஊருக்கே திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெய்ஷங்கர் நடித்த காதல் படுத்தும் பாடு என்ற வெற்றித் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். (தப்பித் தவறிக் கூட பார்த்துவிடாதீர்கள்.) வெகுளிப்பெண் என்ற திரைப்படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது. பிறகு குறத்தி மகன் என்ற திரைப்படம். கதை எழுதுபவர் என்ற பெயர் கிடைத்துவிட்டது.

தேவர் தன்னுடைய கதை இலாகாவில் மா.ரா., தூயவன் ஆகியவர்களோடு இவரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார். தேவரைப் பற்றி வெகு சுவாரசியமாக எழுதுகிறார். தேவர் பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடித்தாராம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பழனி முருகனுக்கு கட்டப்பட்ட கோவணத்தை வாங்கி நனைத்து அதைப் பிழிந்து தண்ணீராகக் குடிப்பாராம். காரியம் நடக்கவில்லை என்றால் முருகனை கன்னாபின்னாவென்று திட்டுவாராம். எம்ஜிஆரோடு நெருக்கம் இருந்தபோதும் அவர் அதிமுக ஆரம்பித்தபோது அரசியல் அழுத்தத்தால் அவரை வைத்து படம் எடுப்பதை நிறுத்திவிட்டாராம். அதிமுக முதன்முதலாக பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு நின்றபோது தேவர் பணம் கொடுத்தாராம், ஆனால் அதை எம்ஜிஆர் மறுத்துவிட்டாராம். கே.ஆர். விஜயா தரப்பிலிருந்து பணம் வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டாராம்.

தேவர் தினமும் கதை கேட்பாராம். அதில் தனக்குப் பிடித்த ஐடியாக்களை எடுத்துக் கொள்வாராம். அதனால் இவர் போன்றவர்களுக்கு தினமும் கதை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அது நல்ல பயிற்சியாக அமைந்தது என்கிறார்.

அப்படி ஓஹோ என்று இருந்த தேவருக்கும் கடைசி காலத்தில் கடன் தொல்லை. ரஜினியை வைத்து படம் எடுப்பதாக இருந்தாராம், ஆனால் அதற்குள் இறந்துவிட்டாராம். தேவர் போன பிறகும் பத்து வருஷமாவது தேவர் ஃபில்ம்ஸ் ஓடி இருக்கிறது. ஆனால் தேவர் ஃபில்ம்ஸுக்காக பல படங்களை இயக்கிய தேவரின் மாப்பிள்ளை தியாகராஜன், மற்றும் தேவரின் மகன் தண்டபாணி எல்லாரும் நொடித்துப் போனார்கள் என்கிறார். தண்டபாணி குடும்பத்தின் மருத்துவச் செலவுகளை நடிகர் சிவகுமார் ஏற்றுக் கொண்டாராம். ஆச்சரியமாக இருந்தது. தேவர் தன் படத்தில் வேலை செய்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே முழுச் சம்பளத்தை கொடுத்துவிடுவார் என்று படித்திருக்கிறேன். ராஜேஷ் கன்னாவுக்கு ஹாத்தி மேரா சாத்தி படத்தில் நடிக்க விருப்பமில்லை, ஆனால் தேவர் கொடுத்த பணத்தை மறுக்க முடியவில்லை, அதை வைத்துத்தான் தன் கனவு வீட்டைக் கட்டினார் என்பார்கள். (அந்த வீடு ராஜேஷ் கன்னா இறப்புக்குப் பிறகு 120 கோடிக்கு விற்கப்பட்டது.) தனக்கும் ஒரு வீட்டை கட்டிக் கொள்ளவில்லையா என்றுதான் தோன்றியது.

இந்தக் காலகட்டத்தில் பாக்யராஜ் இவருக்கு உதவியாளராக சேர்ந்திருக்கிறார். ஆனால் இவரது பாணி திரைக்கதைகள் பிடிக்காமல் ஓடிவிட்டாராம். ஆனால் எப்போதும் இவரை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறாராம்.

கே.பி. சுந்தராம்பாளின் வீட்டில் குடியிருந்திருக்கிறார். கேபிஎஸ்ஸுக்கு அப்போது குடும்பத்தோடு தகராறு. இவர் மனைவிதான் சமைத்துப் போட்டிருக்கிறார். அதுவும் கேபிஎஸ் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவாராம். பன்னிரண்டு மணிக்கு முன்னால் இலை போட்டாக வேண்டும். ஒரு நாள் தாமதமாகி கலாட்டா நடந்திருக்கிறது. கேபிஎஸ் இறந்த பிறகு இவர்தான் சொத்துக்களை பிரித்துக் கொடுக்கும் executor ஆக பணி புரிந்திருக்கிறார்.

சிவாஜியோடு பணி புரிந்த மிருதங்க சக்ரவர்த்தி திரைப்படம் நன்றாக ஓடிற்றாம். ஆனால் ராஜரிஷி படத்தை எடுத்து கையை சுட்டுக்கொண்டாராம். 1985-இலேயே ஒரு கோடி செலவாயிற்றாம். சிவாஜியே இந்தக் கதை இன்று ஓடாது, வேண்டாம் என்று சொன்னார், நான் கேட்காமல் படம் எடுத்து நஷ்டப்பட்டேன் என்கிறார்.

பல வருத்தங்கள்; உதாரணமாக தேவர் மகன் திரைப்படத்தில் இவரது பங்களிப்புக்கு கமல் சரியான சம்பளம் கொடுக்கவில்லையாம். (முதலில் இவர்தான் காக்கா ராதாகிருஷ்ணன் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.) ரஜினி இவருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொன்னவர் செய்யவில்லையாம். ஆனால் எதையும் பெரிதுபடுத்தவில்லை என்கிறார்.

தமிழ் சினிமா உலகம் சுவாரசியமானது. இவர் போன்றவர்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அதன் நாடி நரம்புகளைப் பார்க்கிறார்கள். அனுபவங்களை உண்மையாக வெளிப்படுத்தும்போது எந்த முயற்சியும் இல்லாமல் புத்தகம் நன்றாக வந்துவிடுகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பிடித்த சிறுகதை: ஆஸ்கார் வைல்டின் Happy Prince

ஆஸ்கார் வைல்ட் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எனக்கு அறிமுகம் ஆனது இந்த சிறுகதை மூலமாகத்தான். பள்ளிக் காலத்தில் துணைப்பாடமாக இருந்தது என்று நினைவு.

எளிய சிறுகதை. ஆனால் அப்போது சரி, இப்போதும் சரி, உள்ளத்தைத் தொடும் சிறுகதை. குறிப்பாக அந்தப் பறவை நான் இனி மேல் இங்கே உங்களோடுதான் இருக்கப் போகிறேன் என்று சொல்லும் இடத்தைத்தான் நான் கதையின் உச்சமாகக் கருதுகிறேன்.

படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆஸ்கர் வைல்ட் பக்கம்


High above the city, on a tall column, stood the statue of the Happy Prince. He was gilded all over with thin leaves of fine gold, for eyes he had two bright sapphires, and a large red ruby glowed on his sword-hilt.

He was very much admired indeed. “He is as beautiful as a weathercock,” remarked one of the Town Councillors who wished to gain a reputation for having artistic tastes; “only not quite so useful,” he added, fearing lest people should think him unpractical, which he really was not.

“Why can’t you be like the Happy Prince?” asked a sensible mother of her little boy who was crying for the moon. “The Happy Prince never dreams of crying for anything.”

“I am glad there is some one in the world who is quite happy,” muttered a disappointed man as he gazed at the wonderful statue.

“He looks just like an angel,” said the Charity Children as they came out of the cathedral in their bright scarlet cloaks and their clean white pinafores.

“How do you know?” said the Mathematical Master, “you have never seen one.”

“Ah! but we have, in our dreams,” answered the children; and the Mathematical Master frowned and looked very severe, for he did not approve of children dreaming.

One night there flew over the city a little Swallow. His friends had gone away to Egypt six weeks before, but he had stayed behind, for he was in love with the most beautiful Reed. He had met her early in the spring as he was flying down the river after a big yellow moth, and had been so attracted by her slender waist that he had stopped to talk to her.

“Shall I love you?” said the Swallow, who liked to come to the point at once, and the Reed made him a low bow. So he flew round and round her, touching the water with his wings, and making silver ripples. This was his courtship, and it lasted all through the summer.

“It is a ridiculous attachment,” twittered the other Swallows; “she has no money, and far too many relations”; and indeed the river was quite full of Reeds. Then, when the autumn came they all flew away.

After they had gone he felt lonely, and began to tire of his lady-love. “She has no conversation,” he said, “and I am afraid that she is a coquette, for she is always flirting with the wind.” And certainly, whenever the wind blew, the Reed made the most graceful curtseys. “I admit that she is domestic,” he continued, “but I love travelling, and my wife, consequently, should love travelling also.”

“Will you come away with me?” he said finally to her; but the Reed shook her head, she was so attached to her home.

“You have been trifling with me,” he cried. “I am off to the Pyramids. Good-bye!” and he flew away.

All day long he flew, and at night-time he arrived at the city. “Where shall I put up?” he said; “I hope the town has made preparations.”

Then he saw the statue on the tall column.

“I will put up there,” he cried; “it is a fine position, with plenty of fresh air.” So he alighted just between the feet of the Happy Prince.

“I have a golden bedroom,” he said softly to himself as he looked round, and he prepared to go to sleep; but just as he was putting his head under his wing a large drop of water fell on him. “What a curious thing!” he cried; “there is not a single cloud in the sky, the stars are quite clear and bright, and yet it is raining. The climate in the north of Europe is really dreadful. The Reed used to like the rain, but that was merely her selfishness.”

Then another drop fell.

“What is the use of a statue if it cannot keep the rain off?” he said; “I must look for a good chimney-pot,” and he determined to fly away.

But before he had opened his wings, a third drop fell, and he looked up, and saw—Ah! what did he see?

The eyes of the Happy Prince were filled with tears, and tears were running down his golden cheeks. His face was so beautiful in the moonlight that the little Swallow was filled with pity.

“Who are you?” he said.

“I am the Happy Prince.”

“Why are you weeping then?” asked the Swallow; “you have quite drenched me.”

“When I was alive and had a human heart,” answered the statue, “I did not know what tears were, for I lived in the Palace of Sans-Souci, where sorrow is not allowed to enter. In the daytime I played with my companions in the garden, and in the evening I led the dance in the Great Hall. Round the garden ran a very lofty wall, but I never cared to ask what lay beyond it, everything about me was so beautiful. My courtiers called me the Happy Prince, and happy indeed I was, if pleasure be happiness. So I lived, and so I died. And now that I am dead they have set me up here so high that I can see all the ugliness and all the misery of my city, and though my heart is made of lead yet I cannot chose but weep.”

“What! is he not solid gold?” said the Swallow to himself. He was too polite to make any personal remarks out loud.

“Far away,” continued the statue in a low musical voice, “far away in a little street there is a poor house. One of the windows is open, and through it I can see a woman seated at a table. Her face is thin and worn, and she has coarse, red hands, all pricked by the needle, for she is a seamstress. She is embroidering passion-flowers on a satin gown for the loveliest of the Queen’s maids-of-honour to wear at the next Court-ball. In a bed in the corner of the room her little boy is lying ill. He has a fever, and is asking for oranges. His mother has nothing to give him but river water, so he is crying. Swallow, Swallow, little Swallow, will you not bring her the ruby out of my sword-hilt? My feet are fastened to this pedestal and I cannot move.”

“I am waited for in Egypt,” said the Swallow. “My friends are flying up and down the Nile, and talking to the large lotus-flowers. Soon they will go to sleep in the tomb of the great King. The King is there himself in his painted coffin. He is wrapped in yellow linen, and embalmed with spices. Round his neck is a chain of pale green jade, and his hands are like withered leaves.”

“Swallow, Swallow, little Swallow,” said the Prince, “will you not stay with me for one night, and be my messenger? The boy is so thirsty, and the mother so sad.”

“I don’t think I like boys,” answered the Swallow. “Last summer, when I was staying on the river, there were two rude boys, the miller’s sons, who were always throwing stones at me. They never hit me, of course; we swallows fly far too well for that, and besides, I come of a family famous for its agility; but still, it was a mark of disrespect.”

But the Happy Prince looked so sad that the little Swallow was sorry. “It is very cold here,” he said; “but I will stay with you for one night, and be your messenger.”

“Thank you, little Swallow,” said the Prince.

So the Swallow picked out the great ruby from the Prince’s sword, and flew away with it in his beak over the roofs of the town.

He passed by the cathedral tower, where the white marble angels were sculptured. He passed by the palace and heard the sound of dancing. A beautiful girl came out on the balcony with her lover. “How wonderful the stars are,” he said to her, “and how wonderful is the power of love!”

“I hope my dress will be ready in time for the State-ball,” she answered; “I have ordered passion-flowers to be embroidered on it; but the seamstresses are so lazy.”

He passed over the river, and saw the lanterns hanging to the masts of the ships. He passed over the Ghetto, and saw the old Jews bargaining with each other, and weighing out money in copper scales. At last he came to the poor house and looked in. The boy was tossing feverishly on his bed, and the mother had fallen asleep, she was so tired. In he hopped, and laid the great ruby on the table beside the woman’s thimble. Then he flew gently round the bed, fanning the boy’s forehead with his wings. “How cool I feel,” said the boy, “I must be getting better”; and he sank into a delicious slumber.

Then the Swallow flew back to the Happy Prince, and told him what he had done. “It is curious,” he remarked, “but I feel quite warm now, although it is so cold.”

“That is because you have done a good action,” said the Prince. And the little Swallow began to think, and then he fell asleep. Thinking always made him sleepy.

When day broke he flew down to the river and had a bath. “What a remarkable phenomenon,” said the Professor of Ornithology as he was passing over the bridge. “A swallow in winter!” And he wrote a long letter about it to the local newspaper. Every one quoted it, it was full of so many words that they could not understand.

“To-night I go to Egypt,” said the Swallow, and he was in high spirits at the prospect. He visited all the public monuments, and sat a long time on top of the church steeple. Wherever he went the Sparrows chirruped, and said to each other, “What a distinguished stranger!” so he enjoyed himself very much.

When the moon rose he flew back to the Happy Prince. “Have you any commissions for Egypt?” he cried; “I am just starting.”

“Swallow, Swallow, little Swallow,” said the Prince, “will you not stay with me one night longer?”

“I am waited for in Egypt,” answered the Swallow. “To-morrow my friends will fly up to the Second Cataract. The river-horse couches there among the bulrushes, and on a great granite throne sits the God Memnon. All night long he watches the stars, and when the morning star shines he utters one cry of joy, and then he is silent. At noon the yellow lions come down to the water’s edge to drink. They have eyes like green beryls, and their roar is louder than the roar of the cataract.”

“Swallow, Swallow, little Swallow,” said the Prince, “far away across the city I see a young man in a garret. He is leaning over a desk covered with papers, and in a tumbler by his side there is a bunch of withered violets. His hair is brown and crisp, and his lips are red as a pomegranate, and he has large and dreamy eyes. He is trying to finish a play for the Director of the Theatre, but he is too cold to write any more. There is no fire in the grate, and hunger has made him faint.”

“I will wait with you one night longer,” said the Swallow, who really had a good heart. “Shall I take him another ruby?”

“Alas! I have no ruby now,” said the Prince; “my eyes are all that I have left. They are made of rare sapphires, which were brought out of India a thousand years ago. Pluck out one of them and take it to him. He will sell it to the jeweller, and buy food and firewood, and finish his play.”

“Dear Prince,” said the Swallow, “I cannot do that”; and he began to weep.

“Swallow, Swallow, little Swallow,” said the Prince, “do as I command you.”

So the Swallow plucked out the Prince’s eye, and flew away to the student’s garret. It was easy enough to get in, as there was a hole in the roof. Through this he darted, and came into the room. The young man had his head buried in his hands, so he did not hear the flutter of the bird’s wings, and when he looked up he found the beautiful sapphire lying on the withered violets.

“I am beginning to be appreciated,” he cried; “this is from some great admirer. Now I can finish my play,” and he looked quite happy.

The next day the Swallow flew down to the harbour. He sat on the mast of a large vessel and watched the sailors hauling big chests out of the hold with ropes. “Heave a-hoy!” they shouted as each chest came up. “I am going to Egypt”! cried the Swallow, but nobody minded, and when the moon rose he flew back to the Happy Prince.

“I am come to bid you good-bye,” he cried.

“Swallow, Swallow, little Swallow,” said the Prince, “will you not stay with me one night longer?”

“It is winter,” answered the Swallow, “and the chill snow will soon be here. In Egypt the sun is warm on the green palm-trees, and the crocodiles lie in the mud and look lazily about them. My companions are building a nest in the Temple of Baalbec, and the pink and white doves are watching them, and cooing to each other. Dear Prince, I must leave you, but I will never forget you, and next spring I will bring you back two beautiful jewels in place of those you have given away. The ruby shall be redder than a red rose, and the sapphire shall be as blue as the great sea.”

“In the square below,” said the Happy Prince, “there stands a little match-girl. She has let her matches fall in the gutter, and they are all spoiled. Her father will beat her if she does not bring home some money, and she is crying. She has no shoes or stockings, and her little head is bare. Pluck out my other eye, and give it to her, and her father will not beat her.”

“I will stay with you one night longer,” said the Swallow, “but I cannot pluck out your eye. You would be quite blind then.”

“Swallow, Swallow, little Swallow,” said the Prince, “do as I command you.”

So he plucked out the Prince’s other eye, and darted down with it. He swooped past the match-girl, and slipped the jewel into the palm of her hand. “What a lovely bit of glass,” cried the little girl; and she ran home, laughing.

Then the Swallow came back to the Prince. “You are blind now,” he said, “so I will stay with you always.”

“No, little Swallow,” said the poor Prince, “you must go away to Egypt.”

“I will stay with you always,” said the Swallow, and he slept at the Prince’s feet.

All the next day he sat on the Prince’s shoulder, and told him stories of what he had seen in strange lands. He told him of the red ibises, who stand in long rows on the banks of the Nile, and catch gold-fish in their beaks; of the Sphinx, who is as old as the world itself, and lives in the desert, and knows everything; of the merchants, who walk slowly by the side of their camels, and carry amber beads in their hands; of the King of the Mountains of the Moon, who is as black as ebony, and worships a large crystal; of the great green snake that sleeps in a palm-tree, and has twenty priests to feed it with honey-cakes; and of the pygmies who sail over a big lake on large flat leaves, and are always at war with the butterflies.

“Dear little Swallow,” said the Prince, “you tell me of marvellous things, but more marvellous than anything is the suffering of men and of women. There is no Mystery so great as Misery. Fly over my city, little Swallow, and tell me what you see there.”

So the Swallow flew over the great city, and saw the rich making merry in their beautiful houses, while the beggars were sitting at the gates. He flew into dark lanes, and saw the white faces of starving children looking out listlessly at the black streets. Under the archway of a bridge two little boys were lying in one another’s arms to try and keep themselves warm. “How hungry we are!” they said. “You must not lie here,” shouted the Watchman, and they wandered out into the rain.

Then he flew back and told the Prince what he had seen.

“I am covered with fine gold,” said the Prince, “you must take it off, leaf by leaf, and give it to my poor; the living always think that gold can make them happy.”

Leaf after leaf of the fine gold the Swallow picked off, till the Happy Prince looked quite dull and grey. Leaf after leaf of the fine gold he brought to the poor, and the children’s faces grew rosier, and they laughed and played games in the street. “We have bread now!” they cried.

Then the snow came, and after the snow came the frost. The streets looked as if they were made of silver, they were so bright and glistening; long icicles like crystal daggers hung down from the eaves of the houses, everybody went about in furs, and the little boys wore scarlet caps and skated on the ice.

The poor little Swallow grew colder and colder, but he would not leave the Prince, he loved him too well. He picked up crumbs outside the baker’s door when the baker was not looking and tried to keep himself warm by flapping his wings.

But at last he knew that he was going to die. He had just strength to fly up to the Prince’s shoulder once more. “Good-bye, dear Prince!” he murmured, “will you let me kiss your hand?”

“I am glad that you are going to Egypt at last, little Swallow,” said the Prince, “you have stayed too long here; but you must kiss me on the lips, for I love you.”

“It is not to Egypt that I am going,” said the Swallow. “I am going to the House of Death. Death is the brother of Sleep, is he not?”

And he kissed the Happy Prince on the lips, and fell down dead at his feet.

At that moment a curious crack sounded inside the statue, as if something had broken. The fact is that the leaden heart had snapped right in two. It certainly was a dreadfully hard frost.

Early the next morning the Mayor was walking in the square below in company with the Town Councillors. As they passed the column he looked up at the statue: “Dear me! how shabby the Happy Prince looks!” he said.

“How shabby indeed!” cried the Town Councillors, who always agreed with the Mayor; and they went up to look at it.

“The ruby has fallen out of his sword, his eyes are gone, and he is golden no longer,” said the Mayor in fact, “he is litttle better than a beggar!”

“Little better than a beggar,” said the Town Councillors.

“And here is actually a dead bird at his feet!” continued the Mayor. “We must really issue a proclamation that birds are not to be allowed to die here.” And the Town Clerk made a note of the suggestion.

So they pulled down the statue of the Happy Prince. “As he is no longer beautiful he is no longer useful,” said the Art Professor at the University.

Then they melted the statue in a furnace, and the Mayor held a meeting of the Corporation to decide what was to be done with the metal. “We must have another statue, of course,” he said, “and it shall be a statue of myself.”

“Of myself,” said each of the Town Councillors, and they quarrelled. When I last heard of them they were quarrelling still.

“What a strange thing!” said the overseer of the workmen at the foundry. “This broken lead heart will not melt in the furnace. We must throw it away.” So they threw it on a dust-heap where the dead Swallow was also lying.

“Bring me the two most precious things in the city,” said God to one of His Angels; and the Angel brought Him the leaden heart and the dead bird.

“You have rightly chosen,” said God, “for in my garden of Paradise this little bird shall sing for evermore, and in my city of gold the Happy Prince shall praise me.”

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

 • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
 • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
 • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
 • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
 • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
 • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
 • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
 • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
 • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
 • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
 • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
 • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
 • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
 • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
 • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
 • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
 • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
 • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
 • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
 • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
 • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

அனுத்தமா: கேட்ட வரம்

அனுத்தமா படிக்கலாமா வேண்டாமா என்று குழம்ப வைக்கும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிவசங்கரி, இந்துமதி வகை எழுத்தாளரோ என்று சந்தேகம். அதனால் பல வருஷங்களாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.

ஜெயமோகன் தனது சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் கேட்ட வரத்தை சேர்த்திருக்கிறார். அவரது பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு நாவலையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை.

கேட்ட வரத்தை பல முறை ஆரம்பித்தேன், ஆனால் என்னால் தொடர முடியவில்லை. துவக்ககட்ட சுவாரசியம் எனக்குப் போதவில்லை. எப்படியோ கடைசியில் படித்து முடித்தேன்.

நாவல் நிச்சயமாக சராசரி சிவசங்கரி நாவலை விட நன்றாகவே இருக்கிறது. எனக்கு நினைவிருக்கப்போவது கிராமத்து அக்ரஹார விழாச்சூழல்தான். நானே என் சிறு வயதில் அக்ரஹாரத்து சூழல், அபிராமண கிராமத்து விழாச்சூழல் இரண்டையும் பார்த்திருக்கிறேன். இன்றும் திருவையாறு தியாகராஜர் உற்சவம் போன்ற விழாச்சூழல்களில் இவற்றின் சாயல் தெரியலாம். ஆனால் இந்தச் சூழல் இன்று இல்லை என்றேதான் நினைக்கிறேன். அந்தச் சூழலை மெய்நிகர் அனுபவமாக சித்தரித்தற்காகத்தான் இன்று இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பாரம்பரியமாக ராமநவமி நாட்களில் பஜனை நடைபெறுகிறது. ஊரே (அக்ரஹாரமே) கூடி நடத்துகிறது. பல ஊர்களுக்கு சென்றுவிட்டாலும் ஊர்க்காரர்கள் விழாவுக்காக் விடுப்பு எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஊரிலேயே இருப்பவர்களோடு சேர்ந்து ஏற்பாடுகளை செய்கிறார்கள். அனேகமாக எல்லாருக்கும் பஜனை மடத்தில் ஒன்றாகத்தான் சாப்பாடு, டிஃபன், காப்பி எல்லாம். பல ஊர்களிலிருந்து பாடகர்கள், இசைக்கலைஞர்கள், கதாகாலட்சேபம் செய்பவர்கள் எல்லாரையும் அழைத்து வருகிறார்கள். உள்ளூர்க்காரர்களும் சேர்ந்து பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், கொண்டாடுகிறார்கள்.

இந்தப் பின்புலத்தில் ஊர்க்காரனான வாசுதேவன் – ஒரு பொறியாளன் – தன் மேலதிகாரியான கலெக்டரின் பட்டப்படிப்பு முடித்த இளம் மகள் மாயாவை விழா பார்க்க அழைத்து வருகிறான். மாயா மனதளவில் இன்னும் முதிர்ச்சி அடையாத சிறுமிதான். பட்டிக்காட்டு பழக்க வழக்கங்கள் அவளுக்கு கொஞ்சம் ஒத்துவரவில்லை. வாசுதேவனுக்கு ஏறக்குறைய திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஆனால் திடீரென்று பெண்ணின் அப்பா அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். அவன் நண்பனான ராஜாமணி மனைவியைப் பிரிந்திருக்கிறான். பிள்ளைப்பேறுக்காக தாய் வீடு போன லலிதா 3-4 வருஷம் கழித்தும் ராஜாமணியோடு சேர்ந்து வாழமுடியவில்லை. மாயாவுக்கு வழக்கமான பாணியில் வாசுதேவனின் நண்பன் கிருஷ்ணாராவோடு மோதல், பிறகு காதல். அவள் சிறுமி என்ற நிலையிலிருந்து இளம் பெண்ணாக மாறுகிறாள். என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ராஜாமணியின் நான்கு வயதுப் பையனின் சித்தரிப்பு நன்றாக வந்திருக்கிறது. கிருஷ்ணாராவ்-மாயா ஈர்ப்பு இன்னும் படிக்க முடிகிறது. ஊர்க்காரர்களின் (தளர்வான) பந்தங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அனுத்தமாவின் சொந்த ஊரிலும் இப்படி ஏதாவது விழா இருந்திருக்க வேண்டும், அந்த அனுபவத்தைத்தான் பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

கேட்டவரம்பாளையம் நிஜமான ஊர். திருவண்ணாமலை அருகில் இருக்கிறது.

கலைமகள், கல்கி போன்ற பத்திரிகைகளில் ஐம்பது-அறுபதுகளில் வந்திருந்தால் பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கும். இன்று கொஞ்சம் வயதாகிவிட்டதுதான், ஆனால் காலாவதி ஆகிவிடவில்லை. படிக்கக் கூடிய நாவல்தான், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.

இன்னும் ஓரிரண்டு புத்தகமாவது படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

ஹில்லரி க்ளின்டன் எழுதிய த்ரில்லர்

ஹில்லரி க்ளின்டன் லூயிஸ் பென்னியுடன் இணைந்து எழுதிய த்ரில்லர் – State of Terror (2021).

இந்த மாதிரி பில் க்ளின்டனும் ஜேம்ஸ் பாட்டர்சனோடு இணைந்து ஒரு த்ரில்லர் எழுதியது நினைவிருக்கலாம். அதில் கணவரின் பகல் கனவு என்றால் இதில் மனைவியின் பகல் கனவு. அதிலே அமெரிக்க ஜனாதிபதி தானே கோதாவில் குதித்து சதிகளை முறியடிக்கிறார். இதில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் – ஒரு பெண் – பதவி ஏற்றவுடன் அமெரிக்காவில் அணுகுண்டு வெடிக்கப்போகிறது என்று ஒரு சதி தெரிகிறது. உடனே அவர் உலகம் சுற்றும் கிழவி போல ஜெர்மனி, ஓமன், இரான், பாகிஸ்தான், ரஷியா போன்ற பல நாடுகளுக்கு சென்று அவ்வப்போது அந்த நாட்டு பிரதமர், ஜனாதிபதிகளை மிரட்டி ரகசியங்களைக் கறந்து சதிகளை முறியடிக்கிறார். ஒரு அத்தியாயத்தில் நாலைந்து திடுக்கிடும் திருப்பம் வருகிறது.

ஹில்லரியின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று யூகிப்பதுதான் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. பாகிஸ்தான், இரான், ரஷியாவின் அரசியல் பற்றிய அவரது எண்ணங்கள்தான் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். (இந்தியர்களுக்காக: பாகிஸ்தான் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்றுதான் நினைக்கிறார், தீவிரவாதத்தை பாகிஸ்தான் உருவாக்குகிறது, அரசியல் தலைமையால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற கருத்தை பாத்திரம் மூலம் வெளிப்படுத்துகிறார்.) டொனால்ட் ட்ரம்ப் போல ஒரு முன்னாள் ஜனாதிபதி வேறு.

இணை எழுத்தாளரான லூயிஸ் பென்னி கனடா நாட்டுக்காரர். நிறைய துப்பறியும் நாவல்கள் எழுதி இருக்கிறாராம்.

சுமாரான டைம் பாஸ் த்ரில்லர் மட்டுமே. பஸ்ஸில், விமானத்தில் அரை கவனத்தோடு படித்தால் போதும். ஹில்லரி க்ளின்டன் பெயர் இருப்பது மட்டும்தான் சுவாரசியம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

கென் லியூவின் விருதுகள் பெற்ற சிறுகதை: Paper Menagerie

Paper Menagerie எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று.

இதை வகைப்படுத்துவது கஷ்டம். தொன்மக்கதை சாயல் உடையது. அறிவியல் சிறுகதை சாயல் உடையது. அறிவியல்/மிகுகற்பனை (fantasy) புனைவுகளுக்கான ஹ்யூகோ, நெபுலா மற்றும் World Fantasy விருதுகள் பெற்றது. ஆனால் என் கண்ணில் இது உறவுகளின் கதை. வெளிநாட்டுக்கு குடியேறுபவர்களின் கதை. இந்தக் கதையில் என்னால் என்னையும் என் அம்மா அப்பாவையும் என் மகள்களையும் காணமுடிகிறது.

என்ன கதை? ஏழை சீனப் பெண். Mail-order bride ஆக விளம்பரப்படுத்திக் கொள்கிறாள். அமெரிக்கனை மணக்கிறாள். கடைசி வரை ஆங்கிலம் சரியாகப் பேச வரவில்லை. மகன் பிறக்கிறான், தன்னை அமெரிக்கனாக உணர்கிறான், தனது சீன வம்சாவளியை ஒரு குறையாக நினைக்கிறான். ஆங்கிலம் பேச வராத, அமெரிக்க சூழலோடு ஒட்ட முடியாத அம்மாவிடம் கொஞ்சம் கடுப்பு.

அம்மா மகனுக்கு ஒரிகாமி முறையில் பொம்மைகள் – புலி, மான், சுறாமீன்… – செய்து தருகிறாள். அந்த பொம்மைகள் உயிர் பெறுகின்றன, ஓடி ஆடி விளையாடுகின்றன, இரண்டங்குல உயரப் புலி இரண்டங்குல உயர மானைத் துரத்துகிறது…

மகன் அம்மாவிடமிருந்து விலகிக் கொண்டே இருக்கிறான். அம்மா இறக்கும்போது அவனுக்கு ஒரு சிறு பெட்டகத்தைத் தருகிறாள். வருஷத்தில் ஒரு நாள் – சீனப் பண்டிகையான Qingming அன்று அதைத் திறந்து பார்க்கச் சொல்கிறாள், அன்று ஒரு நாள் தன்னை நினைவு கூரச் சொல்கிறாள். பல வருஷங்கள் அதை மறந்துவிடும் மகன் ஒரு வருஷம் அதைப் பார்க்கிறான். அவன் அம்மா அவனுக்கு சீன மொழியில் எழுதிய ஒரு கடிதம் இருக்கிறது.

அவ்வளவுதான் கதை. அதற்கு மேல் நேராகப் படித்துக் கொள்ளுங்கள்!

கதையிலிருந்து சில மேற்கோள்கள்.

 • புது வீட்டுக்கு குடிபெயர்ந்த பிறகு பக்கத்து வீட்டு வெள்ளை இனப் பெண்கள் அறிமுகம் செய்துகொள்ள வீட்டுக்கு வருகிறார்கள். அப்பா வெளியே போக வேண்டி இருக்கிறது. அப்போது: She smiled at the women. The three of them stood in a triangle around me, smiling and nodding at each other, with nothing to say, until Dad came back
 • At dinner I asked Dad, “Do I have a chink face?”
 • “If I say ‘love,’ I feel here.” She pointed to her lips. “If I say ‘ai,’ I feel here.” She put her hand over her heart
 • …when I was in high school. By then her English was much better, but I was already at that age when I wasn’t interested in what she had to say whatever language she used
 • Because I have to write with all my heart, I need to write to you in Chinese
 • You know what the Chinese think is the saddest feeling in the world? It’s for a child to finally grow the desire to take care of his parents, only to realize that they were long gone
 • Son, I know that you do not like your Chinese eyes, which are my eyes. I know that you do not like your Chinese hair, which is my hair. But can you understand how much joy your very existence brought to me?
 • இந்த வயதில் இந்தக் கதையை சொந்த அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது, இரண்டு விதமாகவும் உணர முடிகிறது.

  20 வருஷமாக என் அப்பாவின் உலகமும் என் உலகமும் வெகு சில புள்ளிகளில்தான் தொட்டுக் கொண்டிருந்தன. எத்தனை அன்பு இருந்தாலும் பேசும்போதெல்லாம் என்ன பேசுவது என்று இருவருக்குமே யோசிக்க வேண்டி இருந்தது. அது ஒரு சின்ன அழுத்தத்தை உண்டாக்கியது.

  ஆனால் என் அம்மாவிடம் எனக்கு யோசிக்க வேண்டியதில்லை 🙂 பேச ஒன்றுமில்லை என்றால் அணைத்துக் கொள்ளலாம். அம்மா பதினாறாம் வாய்ப்பாட்டை ஒப்பித்தாலும் ஒரு பிரச்சினையும் இல்லை. அம்மாவும் அப்படித்தான் என்று நினைக்கிறேன், ஆனால் சில சமயங்களில் அம்மாவுக்கு யோசிக்க வேண்டி இருக்கிறதோ, ஏதாவது அழுத்தத்தை உணர்கிறாளோ என்று கொஞ்சம் சந்தேகம் உண்டு.

  என் அத்தை ஒருவரோடு எனக்கு மிக நெருக்கமான பந்தம் உண்டு. அவரோடு வருஷத்துக்கு ஒரு முறை பேசினால் அதிகம். இருவரின் உலகமும் விலகிவிட்டனதான், ஆனாலும் விலகலே இல்லை. பார்க்கும்போதெல்லாம் இருவருக்கும் வாய் முழுவதும் புன்னகைதான்.

  என் பெண்களின் உலகமும் என் உலகமும் விலகிக் கொண்டே இருக்கின்றன. என்னிடம் தகவல் சொல்வதைக் கூட கடனே என்றுதான் சொல்கிறார்கள். எனக்கு மிகவும் ஆர்வமூட்டும் கணிதம், படிப்பு, கற்பது கற்பதற்காகவே, மதிப்பெண்களுக்காக அல்ல, அதனால் காலம் முழுவதும் மகிழ்ச்சியோடு கற்கலாம் என்ற மனநிலை இவற்றை எல்லாம் என் பெண்களுக்கு என்னால் கைமாற்ற முடியவில்லை. நல்ல வேளையாக இன்னும் என் மனைவியின் உலகம் அவர்களின் உலகத்தோடு நெருங்கியதுதான். நான் என்ன செய்வது? குறைந்த பட்ச முயற்சியாக என் பெண்களையும் இந்தச் சிறுகதையை படிக்கச் சொல்லி இருக்கிறேன். 🙂 படிக்கிறார்களா, என் போலவே உணர்கிறார்களா என்று பார்ப்போம்.

  கென் லியூ சீன வம்சாவளி அமெரிக்கர். நிறைய எழுதி இருக்கிறார், மொழிபெயர்த்திருக்கிறார். நான் படித்தது கொஞ்சம்தான், ஆனால் எதுவும் சோடை போகவில்லை.

  படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

  தொடர்புடைய சுட்டிகள்:

 • சிறுகதைக்கு சுட்டி
 • கென் லியூ – விக்கி குறிப்பு
 • கென் லியூவின் தளம்
 • பூமணி: கொம்மை

  எனக்கு மகாபாரதம் என்றால் பித்து. பூமணி என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். மகாபாரதத்தை அவரது கோணத்தில் எழுதி இருப்பதை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.

  புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. பூமணி மகாபாரதத்தை கொஞ்சம் கொச்சையான பேச்சுமொழியில் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான். உதாரணமாக அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் அச்சு, கிச்சு, கருத்த மச்சான், கருவாயா என்று அழைத்துக் கொள்கிறார்கள். இது ஒன்றே போதும் என்று பூமணி நினைத்துவிட்டார். நாளைக்கு பாரதத்தை சென்னைத் தமிழில் கூட எழுதலாம். “நீ சுபத்ரையை டாவு கட்டி இஸ்துக்கினு ஓட்று” என்று கிஷ்டன் அர்ச்சுனுக்கு அட்வைஸ் கொடுப்பதாக எழுதலாம். அதில் என்ன தரிசனம், கவித்துவம், நயம் இருக்கிறது? சில இடங்களில் அபூர்வமாக அந்த மொழியின் “பொருந்தாத்தன்மை” சின்னப் புன்னகையை வர வைக்கிறது, அத்தோடு சரி.

  நாட்டார் இலக்கியப் பாணியில் எழுத முயற்சித்தாரோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த கொச்சையான பேச்சுமொழியை விட்டுவிட்டால்; பொன்னருவி கதையை இணைத்திருப்பது (கர்ணனை சூதன் என்று அவமானப்படுத்தும் மனைவி, புகழேந்திப் புலவர் இந்த நாட்டார் கதையை அம்மானையாக எழுதி இருக்கிறார் என்று நினைவு), விதுரனின் அம்மாவின் கணவன் அந்தப்புர காவலன், அதனால் காயடிக்கப்பட்டான் என்ற கற்பனை, இந்திரப்பிரஸ்தத்துக்கு வரும் இடும்பி-கடோத்கஜன் அவமானப்படுத்தப்படுவது என்ற கற்பனை, காந்தாரி சகுனியை உன் மாதிரி சகோதரன் இருந்து என்ன பயன் என்று திட்டும் இடம் என்று வெகு சில இடங்களில்தான் அது தெரிகிறது.

  பூமணி இந்த நாவலை மகாபாரத நாயகிகளை, அவர்களது உணர்வுகளை முன்வைத்து எழுதினாராம். சில இடங்களில் – குறிப்பாக இடும்பி, பாஞ்சாலி-சுபத்திரை உறவு, காந்தாரியின் மன உளைச்சல் என்று இருந்தாலும் பொதுவாக இது மகாபாரதக் கதையை அப்படியேதான் திருப்பிச் சொல்கிறது. குந்தியையும் திரௌபதியையும் கதாநாயகிகள் என்று சொல்லலாம். திரௌபதி துகிலுரியப்படும்போது மீட்பது கிருஷ்ணன் அல்ல; தன்னைத் தானே மீட்டுக் கொள்கிறாள்!

  விதுரன் யுதிஷ்டிரனின் தந்தை; திருதராஷ்டிரன் பீமனின் தந்தை என்ற கற்பனைகளை வேறு இடங்களில் படித்திருக்கலாம்; சகுனி நகுல-சகதேவனின் தந்தை என்ற என் கற்பனையையும் படித்திருந்தால் நூறாண்டு வாழ்க! ஆனால் கிருபர் அர்ஜுனனின் தந்தை என்ற கற்பனையை இங்கேதான் முதல் முறையாகப் படித்தேன். நானும் அப்படி யோசித்திருக்கிறேன், ஆனால் பாண்டவர்களை எரிக்கச் சென்று உபபாண்டவர்கள் படுகொலையில் பங்கு கொள்ளும் கிருபரை அர்ஜுனனின் தந்தையாக வைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை. தன் பேரனை தானே கொல்பவரா கிருபர்?

  கொம்மை என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பினேன். நல்ல வேளையாக அவரே அதன் பல அர்த்தங்களை நாவலின் ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டார். கொம்மை என்றால் “திரண்ட”, “குமிழ் போன்ற” என்று பொருளாம். கொம்மை முலை என்றெல்லாம் வார்த்தை பிரயோகம் உண்டாம். ஒரு வேளை பெண்மையைக் குறிக்கும் விதமாக கொம்மை என்று பேர் வைத்தாரோ என்னவோ.

  தீவிர மகாபாரதப் பிரியர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைப்பேன்.

  பின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதிய பிறகு நண்பர் ரெங்கசுப்ரமணி இதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று பார்த்தேன். அவர், கேசவமணி, நான் மூவருக்கும் ஏறக்குறைய ஒரே அலைவரிசை. (கேசவமணி இப்போதெல்லாம் எழுதுவதை நிறுத்திவிட்டாரோ?) கொம்மையைப் பற்றி எனது கருத்துக்கள்தான் அவருக்கும்

  தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம், மகாபாரதப் பக்கம்

  தொடர்புடைய சுட்டி: கொம்மை பற்றி ரெங்கா

  ஜெய்ஷங்கர் காமிக்ஸ்

  சமீபத்தில் இணையத்தில் ஜெய்ஷங்கரை நாயகனாக வைத்து வெளிவந்த காமிக்ஸ் புத்தகம் ஒன்று கிடைத்தது. இரவில் ஒரு குரல். சுரேஷ் சந்துக்கு நன்றி!

  அசந்துவிட்டேன். என் பள்ளிக் காலங்களில் ஜெய்ஷங்கர் எங்கள் குழுவுக்கு பெரிய நாயகன். (எம்ஜிஆரில் ஆரம்பித்து சிவாஜிக்குப் போய் ஜெய்ஷங்கருக்கு வந்து மீண்டும் சிவாஜிக்குப் போய் ரஜினி-கமலுக்குத் தாவினோம்.) இப்படி ஒரு காமிக்ஸ் அப்போது கண்ணில் பட்டிருந்தால் பொக்கிஷமாக இருந்திருக்கும். மீண்டும் மீண்டும் படித்துப் படித்து மகிழ்ந்திருப்போம். எம்ஜிஆர், ரஜினி, ஏன் அமிதாப், தர்மேந்திரா யாரையாவது வைத்து காமிக்ஸ் வந்திருக்கிறதா?

  அப்போது தெரிந்ததெல்லாம் முத்து காமிக்ஸ், கோகுலம் பத்திரிகையில் வரும் காமிக்ஸ் (பலே பாலு…) மட்டுமே. இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ போன்றவர்கள்தான் எங்கள் முதன்மை நாயகர்கள். ஃபாண்டம், மான்ட்ரேக், ரிப் கிர்பி, மாடஸ்டி ப்ளைய்ஸ் என்று பலரும் பின்னால் வந்தாலும் – அதுவும் ஆங்கிலத்தில் படித்த மாடஸ்டி எனக்கு ஸ்பெஷல்தான் – இதுவும் முக்கிய இடம் பெற்றிருக்கும்.

  கதை எல்லாம் முக்கியமில்லை. ஜெய்ஷங்கர் நாயகன்; ஜெயலலிதா நாயகி. ஜெயராஜின் ஓவியங்கள்! அறுபதுகளின் ஜெய் திரைப்படக் கதை, யார் எழுதியது என்று தெரியவில்லை. திடுக்கிடும் திருப்பங்கள் எதுவும் இப்போது நம்மை திடுக்கிட வைக்கப் போவதில்லை. இருந்தாலும் பழைய திரைப்படப் பிரியர்கள், காமிக்ஸ் பிரியர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்

  என் கவிதை: Free at Last

  நான் எழுதிய இரண்டாவது கவிதை இதுதான். பல முறை எழுதிப் பார்த்தும் திருப்தியாக இல்லை. சரி வந்த வரைக்கும் பதிக்கிறேன்…

  One has gone to New York
  Other to San Diego
  Former 7 hours away by flight
  Latter 7 hours away by car
  Northeastern corner and Southwestern corner

  No more clothes on the bathroom floor
  No more hand scrubbing 3 day old tea cups
  No more expletive filled songs in the car
  No more fights about who walks the dog
  No more shouts to come to dinner
  No more snarky answers
  The living room TV is mine at last

  Then why do I feel unfulfilled?
  Why, in the name of the God, do I miss all that?

  தமிழில்:
  மூத்தவள் நியூ யார்க்கில்
  அடுத்தவள் சான் டியகோவில்
  அவளைப் பார்க்க வேண்டுமென்றால் 7 மணி நேரம் விமானப் பயணம்
  இவளுக்கு 7 மணி நேரம் கார் பயணம்
  ஒருத்தி வடகிழக்கு மூலையில்
  இன்னொருத்தி தென்மேற்கு மூலையில்

  குளியலறைத் தரையில் துணிகள் குவிந்து கிடப்பதில்லை
  மூன்று நாளாகக் காய்ந்து கிடக்கும் டீக் கோப்பைகளை கையால் கழுவ வேண்டியதில்லை
  நாயை யார் சிறுநீர் கழிக்க கூட்டிச் செல்வது என்ற சண்டைகள் இல்லை
  மரியாதைக் குறைவான பதில் பேச்சுகள் இல்லை
  வரிக்கு வரி ஃபக் ஃபக் என்று ஒலிக்கும் பாடல்கள் இல்லை
  ஒரு வழியாக டிவி ரிமோட் என் கையில்

  பிறகும் என்ன சலிப்பு எனக்கு?
  ஏன் நாள் இத்தனை வெறுமையாக இருக்கிறது?

  தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

  தொடர்புடைய சுட்டி: நான் எழுதிய முதல் கவிதை