சுஜாதா: பிரிவோம் சந்திப்போம்

பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.

30-35 வருஷங்களுக்கு முன் விகடனில் பிரிவோம் சந்திப்போம் தொடர்கதையாக வந்தது. அப்போதெல்லாம் சுஜாதாவின் சாகசக் கதைகள்தான் எனக்கு comfort-food ஆக இருந்தது. இதுவோ காதல் கதை. அப்போதெல்லாம் காதல் கதைகள் என்றால் பிடிக்காது. ஒரு வாரம் படித்தால் அடுத்த வாரம் விட்டுவிடுவேன்.

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் comfort-food ஆக சுஜாதா நாவல் ஒன்றைத் தேடினேன். இது கண்ணில் பட்டதும் சரி முழுவதுமாகப் படித்துப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன்.

கதையில் அங்கங்கே ஓட்டைகள் தெரிந்தாலும் நாயகன் ரகுவின் முதல் காதல், காதல் முறிந்ததால் ஏற்பட்ட காயம், அடி வாங்கியதாலேயே முழுவதும் மறக்க முடியாமல் – not able to completely move on – தவிப்பது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது “காதலி” ரத்னாவின் பாத்திரம், திருமணத்துக்கு முந்தைய மதுவின் சித்திரம், ரகுவின் அப்பாவின் அறிவுபூர்வமான அணுகுமுறை எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

ஆனால் ரகுவின் அப்பா சரியாக ரகுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்போது இன்னொரு பெண்ணை “வைத்துக் கொள்வது” என்னடா சினிமாத்தனமாக இருக்கிறதே என்று தோன்ற வைக்கிறது. ராதாகிருஷ்ணன் மனைவியை முன்னாள் காதலனோடு ஊர் சுற்ற அனுப்புவது என்னடா தெலுகு சினிமாத்தனமாக இருக்கிறதேன் என்று நினைக்க வைக்கிறது. எதற்காக அனுப்ப வேண்டும்? ரத்னாவோடு நிச்சயதார்த்தம் என்றால் சரியாக அங்கே மது வந்து காரியத்தைக் கெடுக்கிறாள்.

ரகுவின் இளிச்சவாய்த்தனம் நிச்சயமாக அந்தக் கால இளைஞர்களால் அவன் பாத்திரத்தில் தன்னை கொஞ்சமாவது காண வைத்திருக்கும். (தொடர்கதை வந்தது இதயம் திரைப்பட முரளி காலம்…)

அமெரிக்காவின் சித்தரிப்பு சில சமயங்களில் புன்னகைக்க வைக்கிறது. குறிப்பாக இந்தியாவை மறக்க முடியாத முதல் தலைமுறையின் கலாசாரத் தடுமாறல்கள்.

வாரப்பத்திரிகை தொடர்கதையில் not able to completely move on என்பதை அருமையாக, உண்மையாக சித்தரிப்பது சுஜாதாவின் திறமையை உணர வைக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்பதால் சேர்க்கப்பட்டிருக்கும் சினிமாத்தனமான நிகழ்ச்சிகள் எத்தனை திறமை வாய்ந்த எழுத்தாளரையும் நீர்த்துப் போக வைக்கும் என்பதை புரிய வைக்கிறது. சுஜாதா வாரப் பத்திரிகை பிராபல்யம் என்ற மாயைக்குள் சிக்காமல் இருந்தால்… என்று பெருமூச்சு விட வைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

6 thoughts on “சுஜாதா: பிரிவோம் சந்திப்போம்

  1. நானும் எப்போதோ படித்தது.  மறுபடி படிக்கவேண்டும்.  நினைவில் இருபிப்பது முதல் பாகம் உருகி உருகி படித்தது.  இரண்டாம்பாகம் கடமைக்கு படித்தது.

    Like

  2. https://rengasubramani.blogspot.com/2013/09/blog-post_25.html

    சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியதது, இந்த ஜனவரியில் மறுபடியும் படித்தேன் பல கருத்துக்களில் மாற்றமில்லை. ஒன்றிரண்டில் மாற்றம். //தொடர்கதைக்காகவும் (கடைசி அந்தியாய ட்விஸ்டுகள்) விகடனுக்காகவும் (கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட மதுமிதா) செய்யப்பட்ட சிலவற்றை ஒதுக்கிவிட்டால் மிக சிறந்த கதை. (இலக்கியம் என்று ஜல்லியடிப்பவர்கள் கொஞ்சம் எட்டி நிற்க) சில கதைகள் இரண்டாம் முறை படிக்கும் போது போரடிக்கும், ஆனால் இது பல முறை படித்தாலும் கட்டிப் போடுகின்றது. சுஜாதா ரசிகர்களுக்கு மறக்க முடியாத கதை. // இன்றைய காலகட்டத்தின் இளைஞர்களை மனதில் வைத்து படித்தால் மிகமிக மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவும், டூ மச் சினிமாத்தனம் / நாடகத்தனம்.

    Like

  3. அன்புள்ள ராணி இதழ் ஆசிரியர் அவர்களுக்கு

    இன்று எங்களது செய்தித்தாள் விற்பனையாளர் அவர்களிடம் “இனி ராணி இதழ்
    எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இந்த அளவுக்கு ராணி இதழ் தரம் தாழ்ந்து போகும்
    என்று நினைக்கவே இல்லை. மனதில் வருத்த உணர்வே மேலோங்கி
    உள்ளது.

    பத்திரிகை வாங்கும் நேயர்களின் எண்ணிக்கை நிறைய குறைந்து கொண்டே வருகிறது. படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. ப்ரதிலிபி போன்ற செயல் தளங்களில் நிறைய புது எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பரிசுகள் வழங்கப்படுகின்றன . கதைகளின் கருத்துக்களும் மென்மையாக உள்ளன.
    ராணி இதழின் தரம் சற்றே குறைந்த மாதிரி ஒரு நெருடல் எனக்கு ஏற்பட்டுள்ளது ஐயா. “வானத்து நிலவு” தொடர் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறதே என்று நினைத்தால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பெண் கழிப்பறைக்கு போவதை – அவள் காணவில்லை – என்ற மட்டரகமான திருப்பத்தைக் கொடுத்து என் போன்ற வாசகர்களை எரிச்சல் படுத்தி விட்டீர்கள் …ரீல் விடுவதற்கும் அளவு வேண்டும் ஐயா.
    இதில் மற்றுமொரு உறுத்தல் சிவசங்கரி அவர்கள் எழுதும் “கொஞ்சம் யோசிக்கலாம்”. கொஞ்சம் என்ன …நிறையவே யோசிக்கலாம்.. எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் ஒருவர் தான் சேர்த்து வைத்த பெருமையை எல்லாம் குப்பைத் தொட்டியில் போடும் அளவிற்கு மட்டமாக எழுதுவது வருத்தத்துக்குஉரிய சமாசாரம் தான் . சமூக விழிப்புணர்வைத் தூண்டும் வண்ணம் எழுதுதல் அவசியம். அப்படி எழுத இயலா விட்டால் எழுதாமல் இருப்பதே மேல் என்பது எனது எண்ணம். காக்கை அப்பளம் சாப்பிட்டது, காக்கை எங்கள் வீடு பால்கனியில் கூடு காட்டியது.. என்று சிவசங்கரி அவர்கள் சகட்டுமேனிக்கு எழுதிக்கொண்டே போனார் என்றால் ஆடு மாடுகளை எப்படி வெட்டுகிறார்கள் என்று விவரங்களை விரிவாக எழுதி அதை நியாயப்படுத்தும் முட்டாள்தனமான முயற்சியை என்னவென்று சொல்வது? இதைத்தான் ஆங்கிலத்தில் “senile ” என்று கூறுவார்கள். எழுதுவதையே மறுபடியும் மறுபடியும் எழுதுவது. குப்பை மாதிரி எழுதுவது அதை நியாயப்படுத்துவது என்று சிவசங்கரியின் “கொஞ்சம் யோசிக்கலாம்” பகுதி படிப்பதற்கே aversion ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது வருத்தம் அடையச் செய்கிறது என்றால் அது மிகையில்லை.
    பெண்கள் வீட்டு விலக்கானாலும் சுவாமி விளக்கேற்றலாம், கடவுளுக்கு படைக்கும் பிரசாதத்தை நாம் முதலில் ருசி பார்க்க வேண்டும் என்கிற ரீதியில் உள்ள அவரது எழுத்துக்கள் குமட்ட வைக்கின்றன. அதுவும் இவ்வளவு புகழ் பெற்ற எழுத்தாளர் – பல உயர் தரமான கதைகளை எழுதிய பெண்மணி …துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர் போனவர் …சமூக விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக எழுதுதல் அவசியம் ஆகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தவர் …இவ்வளவு பெருமைகளை அடைந்த பின்னர் இந்த மாதிரி தவறான கருத்துகளை பகிரலாமா?
    இந்த வார ராணி இதழில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் ஆகும் பெண்களுக்கு எப்படி கருக்கலைப்பு செய்யலாம் என்று ஆலோசனை வழங்குவது போல் அவர் எழுதியிருப்பதை படித்து அதிர்ந்து போனேன். அதை விட மோசம் என்னவெனில் – இந்த மாதிரி பெண்களை கண்டிக்க வேண்டாம் என்கிற ரீதியில் எழுதியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே சிவசங்கரி அவரின் எழுத்துக்கள் எனக்கு ரசிக்கவில்லை. காலையில் ராணி வார இதழை புரட்டினால் இந்த மாதிரி பகுதிகளை படிக்க வேண்டி இருக்கிறதே என்று எரிச்சல் தான் மேலோங்கிய உணர்வு.
    நன்றி ஐயா …இனி ராணி இதழ் படிப்பதை நிறுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்’

    Like

  4. ஆர்வீ அவர்களுக்கு சந்திராவின் தாழ்மையான வணக்கங்கள். ஏதடா இந்தக்கிழவிக்கு மூளை பிசகி விட்டதா …சுஜாதா பற்றி உள்ள கட்டுரையில் (கட்டுரையா அல்லது …இதற்கு என்ன சொல்வது…ப்லோக்) வேறு ஒரு ஆசிரியரைப்பற்றி எழுத்திருக்கிறாளே என்று யோசிக்கலாம்.
    நான் சொல்ல வருவது என்னவென்றால் அந்தக்கால எழுத்துக்கள் எல்லாவற்றிலும் நல்லதும் இருந்தது சொத்தையும் இருந்தது. சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி…இவர்கள் அனைவரும் நல்ல எழுதினாலும் பின்னால் வெளி வந்த கதைகளில் ஓட்டை நிறைய. சிவசங்கரி ராணியில் “கொஞ்சம் யோசிக்கலாம்” என்று வாராவாரம் ஒரு பகுதியை எழுதுகிறார் …குப்பை. அவ்வளவு தான். பைபாஸ் சர்ஜெரி ஆன பின்னர் ஓய்வு எடுக்காமல் கண்டதையும் எழுதி காலம் தள்ளுவதற்கு என்ன பெயரோ

    Like

  5. Most of Sujatha’s stories were translated into celluloid. This makes me wonder whether the writer who always grumbled about the way his stories were mashed up on the silver screen actually wrote his stories in such a way that it would attract Kollywood film makers. Some of his initial stories were great. Most of his later stories (post 90’s) can at best be described as pulp fiction. They were mediocre. I have still not figured out the ending of his story “:Aa” – a psychological thriller.

    Pirivom Sandippom was made into a movie but turned turnip at the box office. The only good thing about the movie was the fact that the movie was filmed amidst the beauteous landscapes in Ooty. Sujatha’s writings were laced with sex and one often wonders whether he was attempting to write his own personal experience of being a voyeuristic individual who lusted at women’s breasts. Artiste Jeyaraj added fuel to fire with his provocative drawings for Sujatha’s stories.

    Ditto with Sivasankari and Indumathi. I recall that you were a harsh critic of both these writers and justifiably so. Both these writers now claim that they were thick friends with Jayalalitha…Sivasankari is an overrated writer. Her writings are characterised by more of hype and less of substance.

    எல்லாம் அவர்களின் நேரம் …

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.