லீ சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள்

சமீபத்தில் வெளிவந்த No Plan B புத்தகத்தைப் படித்ததால் மீள்பதித்திருக்கிறேன். இதுவும் ஆண்ட்ரூ சைல்ட் லீ சைல்டின் படைப்பைத் தொடர்வதுதான். மகா மோசமான நாவல். வில்லன்கள், அடியாள்கள் எல்லாரும் ஒவ்வொருவராக பிரசாதம் வாங்கிக் கொள்வது போல வரிசையாக வந்து மரண அடி வாங்குகிறார்கள். இதில் 3 சரடுகளை ஒன்றிணைக்க வேறு முயன்றிருக்கிறார். ரீச்சர் தற்செயலாக ஒரு கொலையை – விபத்து போல ஜோடிக்கபப்டுவதை பார்த்துவிட்டு தோண்ட ஆரம்பிக்கிறான். பதின்ம வயதினன் ஒருவன் தன் அப்பாவைத் தேடுகிறான். கல்லீரல் மாற்று சிகிச்சையில் இறந்த இளைஞனின் கொலைகார அப்பா வஞ்சம் தீர்க்க கிளம்புகிறான்.

சமீபத்தில் 2021-இல் வெளிவந்த Blue Moon புத்தகத்தைப் படித்ததால் மீள்பதித்திருக்கிறேன்.

Blue Moon ஜாலியான மசாலா கதை. ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. பயணத்தில் படிக்க ஏற்றது. வழக்கம் போல தனி மனிதனான ஜாக் ரீச்சர் ஊரில் போட்டி போடும் இரண்டு மாஃபியா கும்பல்களையும் அழிக்கிறான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த For a Few Dollars More திரைப்படத்தை கொஞ்சம் நினைவுபடுத்தியது. விஜய், அஜித் எல்லாம் இதை மூலக்கதையாக வைத்து படம் எடுக்கலாம், கொஞ்சம் பெட்டராக இருக்கும்.

லீ சைல்ட் (Lee Child) ஒரு த்ரில்லர் எழுத்தாளர். அவர் கதைகளின் ஹீரோ ஜாக் ரீச்சர் (Jack Reacher). ஜாக் ஒரு எக்சென்ட்ரிக். முன்னாள் ராணுவ வீரன். கை சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் எக்ஸ்பர்ட். ஜாக் எந்த ஊரிலும் வாழ்வதில்லை, அட்ரசே கிடையாது. கால் போன போக்கில் போவான். போகிற இடத்தில் எல்லாம் பிரச்சினை வரும், துப்பறிந்து, சண்டை போட்டு தீர்ப்பான். டைம் பாஸ் நாவல்கள், ப்ளேனில் படிக்க ஏற்றவை.

ரீச்சரை ஒரு விதத்தில் வெஸ்டர்ன் ஹீரோ என்று சொல்லலாம். எங்கிருந்தோ வரும் ஒருவன் ஊரில் உள்ள குற்றச் சூழ்நிலையை ஒழிக்கும் கருவைத்தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய கதை இல்லை. டிபிகல், ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமான, த்ரில்லர் எழுத்து. Pulp fiction. ஆனால் அந்த எங்கிருந்தோ வரும் வெஸ்டர்ன் ஹீரோ இமேஜில் ஒரு கவர்ச்சி இருக்கிறது.

jack_reacherஒவ்வொரு கதைக்கும் கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்கு முக்கியமானவை இல்லை. ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் One Shot என்ற கதையை பரிந்துரைப்பேன். ஐந்து கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவன் மீண்டும் மீண்டும் சொல்வது – “நான் குற்றமற்றவன், Get me Jack Reacher” ஆனால் ரீச்சர் அவன் குற்றவாளி என்று நினைக்கிறான். என்னாகிறது என்பதுதான் கதை. இது திரைப்படமாகவும் வரப்போகிறது வந்துவிட்டது, டாம் க்ருய்ஸ் நடிக்கப் போகிறார் நடித்திருக்கிறார்.

Killing Floor என்ற கதையையும் படிக்கலாம். இதுதான் முதல் நாவல். தற்செயலாக ஒரு சின்ன ஊரில் ரீச்சர் இறங்குகிறான். Of course, ஊரில் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ரீச்சர் கொலை செய்துவிட்டான் என்று கைது செய்யப்படுகிறான். ஜெயிலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் திரில்லிங் ஆக இருக்கும். வெளியே வந்த பிறகு அவனுக்கு இறந்தவன் தன் அண்ணன் என்று தெரிகிறது. பிறகு வழக்கம் போல சண்டை, எல்லா வில்லனையும் ஒழித்துக் கட்டுகிறான்.

சிறந்த வில்லன் – ஹுக் ஹோபி – வருவது Tripwire என்ற கதையில். ஹோபி ரீச்சரையும், ரீச்சரின் முன்னாள் பாஸ் கார்பரின் மகள் ஜோடியையும் கொல்ல முயற்சி செய்கிறான்.

சமீபத்திய கதைகளை – Sentinel, Better off Dead – தன் தம்பி ஆண்ட்ரூ சைல்டோடு இணைந்து எழுதி இருக்கிறார்.

இது வரை 27 நாவல்கள் வந்திருக்கின்றன.

  1. Killing Floor, 1997
  2. Die Trying, 1998
  3. Tripwire, 1999
  4. Running Blind, 2000
  5. Echo Burning, 2001
  6. Without Fail, 2002
  7. Persuader, 2003
  8. The Enemy, 2004
  9. One Shot, 2005
  10. The Hard Way, 2006
  11. Bad Luck and Trouble, 2007
  12. Nothing to Lose, 2008
  13. Gone Tomorrow, 2009
  14. 61 Hours, 2010
  15. Worth Dying For, 2010
  16. Affair, 2011
  17. A Wanted Man, 2012
  18. Never Go Back, 2013
  19. Personal, 2014
  20. Make Me, 2015
  21. Night School, 2016
  22. No Middle Name, 2017
  23. Midnight Line, 2017
  24. Past Tense, 2018
  25. Blue Moon, 2019
  26. Sentinel, 2020
  27. Better off Dead, 2021
  28. No Plan B, 2022

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: லீ சைல்டின் தளம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.