வெஸ்டர்ன் நாவல் – ட்ரூ க்ரிட்

true_grit_john_waynetrue_grit_jeff_bridgesTrue Grit பற்றி நான் எழுதக் காரணம் அதை அடிப்படையாகக் கொண்டு வந்த திரைப்படங்கள்தான். நாவலில் சில நல்ல கூறுகள் இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.

நாவலில் சிறப்பான அம்சம் அது ஒரு கிழவி தன் 14 வயது சாகசங்களை நினைவு கூர்வதாக அமைக்கப்பட்டிருப்பதுதான். 14 வயது மாட்டி ராஸ் ஒரு சிறப்பான பாத்திரம். தன் அப்பாவைக் கொன்றவனைப் பிடிக்க அவள் ஒரு மார்ஷலைப் பிடிக்கிறாள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை குறைந்த அமெரிக்க மேற்கு மாநிலங்களில் குற்றவாளிகளைப் பிடிக்கும் அமைப்புகள் குறைவு. மார்ஷல்கள் ஊர் ஊராக அலைந்து திரிந்து குற்றவாளிகளைப் பிடிப்பார்கள். பிடித்தவனுக்கு ஏற்றாற்போல பரிசுத் தொகை கிடைக்கும். மாட்டியிடம் வேலைக்கு சேரும் ரூஸ்டர் காக்பர்ன் கொஞ்சம் வயதானவன். ஒற்றைக் கண்ணன். மாட்டி கொடுக்கும் பணத்துக்காக பொறுப்பை ஏற்கிறான். ஏற்கனவே அந்த குற்றவாளியைத் தேடிக் கொண்டிருக்கும் லாபீஃப் இவனோடு சேர்ந்து கொள்கிறான். மாட்டி பிடிவாதம் பிடித்து அவர்களோடு சேர்ந்து தானும் அலைகிறாள். என்ன ஆகிறது என்பதுதான் கதை.

true_gritமாட்டியின் – அதுவும் 14 வயது மாட்டியின் கண்களின் வழியாகத்தான் கதை விவரிக்கப்படுகிறது. ஆரவாரம் அற்ற நடை. அந்த எளிய நடையே என்னைக் கவர்ந்த கூறு. கதையின் ஆரம்ப வரிகளைக் கீழே தந்திருக்கிறேன், அது கதைப்பாணியைப் புரிந்து கொள்ள உதவும்.

People do not give it credence that a fourteen-year-old girl could leave home and go off in the wintertime to avenge her father’s blood but it did not seem so strange then, although I will say it did not happen every day. I was just fourteen years of age when a coward going by the name of Tom Chaney shot my father down in Fort Smith, Arkansas, and robbed him of his life and his horse and $150 in cash money plus two California gold pieces that he carried in his trouser band.

மாட்டியின் கண்கள்தான் இதை ஒரு சாதாரண கௌபாய் கதையிலிருந்து உயர்த்துகிறது. இது விஷ்ணுபுரமோ மோகமுள்ளோ இல்லைதான். ஆனாலும் நல்ல புத்தகம்.

charles_portisநாவலை எழுதியவர் பெயர் சார்லஸ் போர்டிஸ் (Charles Portis). 1968-இல் வெளிவந்திருக்கிறது.

இரண்டு முறை திரைப்படமாக வந்திருக்கிறது. ஜான் வெய்ன் நடித்து 1969-இல் ஒரு முறை. 2010-இல் மாட் டாமன், ஜெஃப் ப்ரிட்ஜஸ் நடித்து ஒரு முறை.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.