யோசித்தால் சுஜாதாவும் சில cliche-க்களை பயன்படுத்தி இருப்பது தெரிகிறது. குறிப்பாக புண்ணியகோடி/திலகத்தின் முன்கதை. ஆனால் அந்த cliche-க்களை வைத்து திறமையாக கதையை முன் நகர்த்தி இருக்கிறார்.
புண்ணியகோடி/நாராயணன் திருடன். சிறையிலிருந்து தப்பிக்க அவனுக்கு ஒரு யுக்தி இருக்கிறது. தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். வேலை செய்யும் இடத்தில் திலகத்தின் மீது ஒரு கண். அவனைத் தேடும் போலீஸ். திலகம் பாதுகாப்புக்காக ஆண் துணையைத் தேடுகிறாள். நாராயணனோடு தங்குகிறாள். நாராயணனுக்கு சிக்னல் கொடுத்தாலும் அவளுக்கு நாராயணனை மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கிறது, ஆனால் ஜெயிலில். போலீஸ் நாராயணனை நெருங்குகிறது. நாராயணன் என்ன செய்யப் போகிறான்?
நாராயணனின் தலைமறைவு வாழ்க்கை; போலீஸ் அவனை நெருங்கும் விதம்; திலகம் வந்ததும் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்; denouement – எல்லாமே சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கதையை உயர்த்துபவை அவைதான்.
கதை சுவாரசியமாகச் செல்கிறது. Cliche எல்லாம் படிக்கும்போது தெரிவதே இல்லை. சுஜாதாவின் சாதனை என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் அவருடைய டச் தெரிகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்
Dear RV Sir, request you to read my blog, comment and share.
Regards
Chandra
LikeLike
சந்திரா, உங்கள் தளம் போலோஜி.காம் தளமா? அதைப் பார்த்தால் ப்ளாக் மாதிரி தெரியவில்லையே?
LikeLike
https://www.boloji.com/blog/2408/tambrahm-girls-look-before-you-leap-into-a-love
LikeLike
RV. I have written on this website called Boloji.com. I do not have a personal blog of my own.
I am sorry… but I am not very technically savvy… don’t know the difference between website and blog.
Apologies.
அது என்னவோ தெரியவில்லை ஆர்வீ ; உங்களுடன் கருத்துக்கள் பரிமாறிக்கொள்வது தென்றல் நம் முகத்தை வருடும் போது கொடுக்கிற சுகத்தை கொடுக்கிறது. அதாவது ரொம்ப நாள் கழித்து நம் மனதுக்கு மிகவும் பிடித்த பால்ய நண்பரைப்பார்த்தால் எப்படி தோன்றுமோ அது மாதிரி. உங்கள் பொறுமையைப்பாராட்டுகிறேன் ஆர்வீ. இந்த வலைத்தளத்தில் ஓர் ப்ளோக்இல் பின்னூட்டத்தை அளிப்பவர்கள் எல்லாம் நண்பர்கள் மாதிரி தோன்றுகிறது. ஒரு வித community bonding என்று எடுத்துக்கொள்ளலாமா.
கௌரி அவர்களே, உங்கள் மின்-அஞ்சல் முகவரி கிடைத்தால் நன்றாக இருக்கும்.
LikeLike