பி.சு. கைலாசத்தின் “அனகா”

ஏற்கனவே வணிக எழுத்தாளரைப் பற்றி மொக்கை போடும் வத்தலக்குண்டு பித்தன் என்று பேர் கிடைத்துவிட்டது. இதில் அவ்வளவாகத் தெரியாத பி.சு. கைலாசத்தைப் பற்றி வேறு எழுதுகிறேன். 🙂

நான் இவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. என் அம்மா லோகல் நூலகத்திலிருந்து எடுத்து வந்ததை நானும் புரட்டினேன். கலைமகள், கல்கி மாதிரி பத்திரிகைகளில் வரக்கூடிய கதைகள். பெரும் இலக்கியம் என்றோ, தரிசனங்கள் என்றோ எதுவும் உயர்வாகச் சொல்வதற்கில்லை. ஒரு கன்சர்வேடிவ், பிராமண, சனாதன வாழ்க்கையை முன் வைக்கும் குறுநாவல்கள் இரண்டு. நானோ இந்த சனாதன வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவன். நாளை மீண்டும் படித்தால் தூக்கிப் போட்டுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் எதிர்பார்த்ததை விட பரவாயில்லை என்று இன்றைக்கு தோன்றுவதும் உண்மை. தெளிவாக articulate செய்ய முடியவில்லை.

அனகா குறுநாவலில் அம்மாவை கைவிட்ட அப்பா, மாமா தயவில் வளர்ந்த குழந்தைகள். இன்று அனகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அனகாவின் புருஷனும் ஊர் மேய்கிறான். விவாகரத்து என்று பேச்சு வரும்போது அம்மாவின் வாழ்க்கைதான் தனக்கு முன்னுதாரணம் என்கிறாள் அனகா.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் குறுநாவலில் பக்கா வைதீகப் பிராமணப் புருஷன். வேறு மாதிரி வளர்ந்த மனைவி. தன்னைத் தூக்கி வளர்த்த வேற்று ஜாதி ஆயாவிடம் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது, வீட்டுக்கு விலக்கானால் கோடி அறையில் உட்காரமாட்டேன் என்று சின்ன சின்னதாக புரட்சி. பெரிதாக வெடித்து இருவரும் பிரிகிறார்கள். அறுபது வயதாகும்போது போனால் போகிறது என்கிற மாதிரி நான் தப்பு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு மனநிலைக்கு வரும் கணவர். என்னை மன்னியுங்கள் மனநிலையில் இருக்கும் மனைவியோடு இணைகிறார்.

அனகா செய்வது மடத்தனம் என்பதிலோ, தவறு கணவன் பேரில்தான் என்பதிலோ எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இந்தக் கதைகள் மீது எனக்கு ஒரு சின்ன soft corner உருவாக என்ன காரணம் என்று எனக்கே புரியவில்லை. Curiosity value-வுக்காகப் படிக்கலாம்.

6 thoughts on “பி.சு. கைலாசத்தின் “அனகா”

  1. சார், நீங்கள் ரொம்ப பொறுமைசாலி போல. இப்படியே குரும்பூர் குப்புசாமி, பிரதிபா ராஜகோபாலன், பி.வி.ராமகிருஷ்ணன் (பி.வி.ஆர்), எஸ்.பாலசுப்ரமணியன், அபர்ணா நாயுடு, கோவி.மணிசேகரன்,ரம்யா ராஜேஷ், அகில்குமார் போன்றோரது நூல்களையும் வாசித்து, விமர்சனம் எழுதி மகிழ்ந்து, எம்மையும் களிப்புறச் செய்ய வேணுமாய், நாம் அனுதினம் கூட வணங்காத மகர நெடுங்குழைக் காதரைப் பிரார்த்திக்கிறேன் 😉

    Like

  2. திரு ரமணன்

    இந்தப்பட்டியலில் பி வி ஆரை சாதாரணமாகச் சேர்க்கமுடியாது. வணிக எழுத்து என்பதிலும் அதற்குமேல் எங்குமே அவரது கதைகள் செல்வதில்லை என்பதிலும் ஐயமில்லை. அவர் ஒரு காலத்தில் [60-70 களில்] இன்றைய எந்த எழுத்துலக நட்சத்திரத்தைவிடவும் புகழ்பெற்றிருந்தார். ஆனால் அவர் காலகட்டத்து பிற வணிக எழுத்தாளர்களிடம் இருக்காத புறவுலக அவதானிப்பு அவரிடம் உண்டு. அவை நம்பகமான உலகங்களை காட்டக்கூடியவை. பரம்பிக்குளம் ஆளியார் அணைக்கட்டு பின்னணியின் அமைந்த கூந்தலிலே ஒருமலர் அவரது சிறந்த நாவல். [நீள்கதை] பின்னாளில் ஆர்தர் ஹெய்லி பாணியில் ஒரு வட்டாரத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களில் ’மிலாட்’ முக்கியமானது. உயர்நீதிமன்ற பின்னணி பெருமளவும் நம்பகமாக இருக்கும். கதாபாத்திரங்களும் மிகையற்றவை.

    [அரலை

    Like

  3. நன்றி ஜெயமோகன். நான் அவரது நாவல்களை மாலைமதியில் நிறைய வாசித்ததுண்டு. நூலகத்தில் “தாழம்பூ பங்களா” என்ற ஒன்றை எடுத்துப் படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் நாவல்களை நான் வாசித்ததில்லை. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமேதும் எனக்கு இல்லை.

    ஆனால் இந்த ஆர்வியை நினைத்தால்தான் ரொம்ப பாவமாக இருக்கிறது 😦

    பழைய மோனா, மாலைமதி, மணியன், டேபிரேக், டெவில், ராஜாராணி இதழ்களைத் தேடி எடுத்து ஆர்விக்கு அனுப்பலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். 😉

    Like

  4. மிஸ்டர் ரமணன்

    உங்கள் வலைப்பூவைச் சென்று பார்த்தேன். நீங்கள் இங்கே இடும் மறுமொழிகளுக்கும் உங்கள் வலைப்பதிவு விஷயங்களுக்கும் சம்மந்தமே இல்லையே! பேய், பிசாசு, பூதம், அமானுஷ்யம் என்றெல்லாவா திகிலாக இருக்கிறது. ’ரமணன்’ என்ற பெயரில் 2,3 பேர் இருக்கிறீங்களோ? இல்ல அவரு வேற்யா?

    Like

  5. ஜெயமோகன் இங்கும் வேறு இடங்களில் சொன்னதையும் வைத்து பிவிஆர் நான் தவற விட்ட எழுத்தாளர்களில் ஒருவர் என்று தெரிகிறது. என்றாவது…

    ரமணன், கோவி(யார்) பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். https://siliconshelf.wordpress.com/2011/01/13/கல்கியின்-வாரிசுகள்-சரி/

    Like

  6. மிஸ்டர் சர்வேஷ்..

    உங்கள் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல? 😉

    விடை ramanans என்ற பெயரிலேயே இருக்கிறது. அவ்வளவுதான். 🙂

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.