புத்தகக் கண்காட்சிக் கனவுகள்

புத்தகக் கண்காட்சி வருகிறது. நான் சென்னையில் இருந்திருந்தால் என்னென்ன புத்தகங்களைத் தேடி இருப்பேன், யாராவது என்னிடம் என்னென்ன புத்தகம் வாங்கலாம் என்று கேட்டால் என்ன சொல்வேன் என்று ஒரு பகல் கனவு. இது மனதில் தோன்றிய வரிசை, தரவரிசை இல்லை. Comprehensive லிஸ்டும் இல்லை.

படிக்க விரும்புபவை:

  1. ஜெயமோகன் – இன்றைய காந்தி
  2. க.நா.சு. – ஒரு நாள்
  3. சி.சு. செல்லப்பா – சுதந்திர தாகம்
  4. சு. வெங்கடேசன் – காவல்கோட்டம்
  5. பாரதி மணி – பல நேரங்களில் பல மனிதர்கள்
  6. லா.ச.ரா. – சிந்தாநதி
  7. ஜெயகாந்தன் – பாரீசுக்குப் போ
  8. நீல. பத்மநாபன் – பள்ளிகொண்டபுரம்
  9. ஆ. மாதவன் – கிருஷ்ணப் பருந்து
  10. நாஞ்சில்நாடன் – தலைகீழ் விகிதங்கள்
  11. ஜோ டி க்ருஸ் – கொற்கை
  12. சோ. தர்மன் – தூர்வை
  13. பாலகிருஷ்ண நாயுடு – டணாய்க்கன் கோட்டை
  14. உமாசந்திரன் – முள்ளும் மலரும்
  15. எம்.வி. வெங்கட்ராம் – காதுகள்
  16. தேவன் – சி.ஐ.டி. சந்துரு
  17. ஜெயந்தன் – கணக்கன்
  18. பிவிஆர் – ஜி.ஹெச்.
  19. வடுவூரார் – திகம்பர சாமியார்
  20. ஜே.ஆர். ரங்கராஜு – ராஜாம்பாள்
  21. சங்கரதாஸ் சுவாமிகள் – அபிமன்யு சுந்தரி
  22. விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள்
  23. ராஜமார்த்தாண்டன் (எடிட்டர்) – கொங்குதேர் வாழ்க்கை
  24. கோவை அய்யாமுத்து – எனது நினைவுகள்
  25. யூமா. வாசுகி – ரத்த உறவு
  26. விட்டல்ராவ் – வண்ண முகங்கள்
  27. சு. வேணுகோபால் – வெண்ணிலை
  28. சூத்ரதாரி – மணல் கடிகை
  29. காலபைரவன் – புலிப்பாணி ஜோதிடர்
  30. பாமா – கருக்கு
  31. அ.கா. பெருமாள் – தென்குமரியின் கதை
  32. ராஜம் கிருஷ்ணன் – பாதையில் படிந்த அடிகள்
  33. ரா.கி. ரங்கராஜன் – நான், கிருஷ்ணதேவராயன்

படித்தவை (அனேகமாக):

  1. புதுமைப்பித்தன் – எல்லா சிறுகதைகளும் அடங்கிய தொகுதி (காலச்சுவடு வெளியீடு)
  2. அசோகமித்திரன் – தண்ணீர், கரைந்த நிழல்கள், ஒற்றன், மானசரோவர், இருவர், பதினெட்டாவது அட்சக்கோடு, எல்லா சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு (2 வால்யூம்கள்)
  3. ஜெயமோகன் – விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், கொற்றவை, ரப்பர், அறம் சீரிஸ் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், ஜெயமோகன் சிறுகதைகள், சங்க சித்திரங்கள், இலக்கிய முன்னோடிகள் வரிசை
  4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை – பிரதாப முதலியார் சரித்திரம் (போர்தான், ஆனால் நூலகம் என்று ஒன்று அமைத்தால் இது இருக்க வேண்டும்)
  5. ராஜம் ஐயர் – கமலாம்பாள் சரித்திரம்
  6. அ.மாதவையா – பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம்
  7. க.நா.சு. – பொய்த்தேவு, படித்திருக்கிறீர்களா
  8. தி.ஜா. – மோகமுள், அம்மா வந்தாள், சிறுகதைகள்
  9. சி.சு. செல்லப்பா – வாடிவாசல்
  10. கி.ரா. – கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், எல்லா சிறுகதைகளும்
  11. சுந்தர ராமசாமி – எல்லா சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு, ஒரு புளிய மரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள், நினைவோடை சீரிஸ்
  12. ப. சிங்காரம் – கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி
  13. வி.எஸ். காண்டேகர் – யயாதி
  14. எஸ்.எல். பைரப்பா – பர்வா, தாண்டு
  15. வ.ரா. – நடைச்சித்திரம், மகாகவி பாரதியார்
  16. யதுகிரி அம்மாள் – பாரதி நினைவுகள்
  17. அ.கா. பெருமாள் – சுண்ணாம்பு கேட்ட இசக்கி
  18. தமிழ்மகன் – வெட்டுப்புலி
  19. லா.ச.ரா. – அபிதா, புத்ர, பாற்கடல், சிறுகதைகள்
  20. ஜெயகாந்தன் – சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜயஜய சங்கர, சிறுகதைகள்
  21. ஹெப்சிபா ஜேசுதாசன் – புத்தம் வீடு
  22. ஜி. நாகராஜன் – எல்லா படைப்புகளும் (நாளை மற்றொரு நாளே குறுநாவல் இதில் இருக்கிறது)
  23. சா. கந்தசாமி – சாயாவனம், தக்கையின் மீது நான்கு கண்கள்
  24. ராகுல சான்க்ரித்யாயன் – வோல்காவிலிருந்து கங்கை வரை
  25. கிருத்திகா – வாசவேஸ்வரம்
  26. நீல. பத்மநாபன் – தலைமுறைகள்
  27. பூமணி – பிறகு, வெக்கை
  28. பிரபஞ்சன் – மானுடம் வெல்லும், வானம் வசப்படும்
  29. தோப்பில் முகமது மீரான் – ஒரு கடலோர கிராமத்தின் கதை
  30. இந்திரா பார்த்தசாரதி – குருதிப்புனல், காலவெள்ளம்
  31. சுஜாதா – சொர்க்கத்தீவு, நிர்வாண நகரம், நைலான் கயிறு, ப்ரியா, அனிதா இளம் மனைவி, காயத்ரி, கொலையுதிர் காலம், வசந்த்! வசந்த்!, கரையெல்லாம் செண்பகப்பூ, ஸ்ரீரங்கத்துக் கதைகள், ரத்தம் ஒரே நிறம், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், வைரங்கள், எல்லா நாடகங்களும், சிறுகதைகள், எல்லா கணேஷ்-வசந்த் நாவல்களும், விஞ்ஞான சிறுகதைகள்
  32. எஸ். ராமகிருஷ்ணன் – உபபாண்டவம், நெடுங்குருதி
  33. ஜோ டி க்ருஸ் – ஆழிசூழ் உலகு
  34. பாலகுமாரன் – அகல்யா, பந்தயப் புறா, இரும்புக் குதிரைகள், கரையோர முதலைகள், ஆனந்த வயல், காதல் வெண்ணிலா, என்னருகே நீ இருந்தால், உடையார், மெர்க்குரிப் பூக்கள், சின்ன சின்ன வட்டங்கள் (சிறுகதைத் தொகுப்பு), இரவல் கவிதை
  35. சுப்ரபாரதிமணியன் – அப்பா (சிறுகதைத் தொகுப்பு)
  36. சோ. தர்மன் – கூகை
  37. சிதம்பர சுப்பிரமணியன் – இதயநாதம்
  38. ர.சு. நல்லபெருமாள் – கல்லுக்குள் ஈரம்
  39. கல்கி – பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, ஓ மாம்பழமே!, பாங்கர் விநாயகராவ் (முன்னுரைக்காக மட்டும்)
  40. எம்.வி. வெங்கட்ராம் – நித்யகன்னி, எல்லா சிறுகதைகளும்
  41. வண்ணநிலவன் – கடல்புரத்தில்
  42. ஆதவன் – என் பெயர் ராமசேஷன்
  43. சம்பத் – இடைவெளி
  44. பெருமாள் முருகன் – நிழல் முற்றம்
  45. சாண்டில்யன் – யவன ராணி, கடல் புறா
  46. அரு. ராமநாதன் – வீரபாண்டியன் மனைவி
  47. கொத்தமங்கலம் சுப்பு – தில்லானா மோகனாம்பாள்
  48. மு.வ. – கரித்துண்டு, அகல் விளக்கு
  49. நா.பா. – குறிஞ்சி மலர்
  50. இந்துமதி – தரையில் இறங்கும் விமானங்கள்
  51. தேவன் – ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
  52. ஸ்டெல்லா ப்ரூஸ் – அது ஒரு நிலாக்காலம்
  53. வெ. சாமிநாத சர்மா – நான் கண்ட நால்வர், பாணபுரத்து வீரன்
  54. அண்ணாதுரை – வேலைக்காரி, ஓரிரவு, சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்
  55. பம்மல் சம்பந்த முதலியார் – மனோகரா, சபாபதி
  56. டி.கே. சண்முகம் – எனது நாடக வாழ்க்கை
  57. அ.ச. ஞா. – நான் கண்ட பெரியவர்கள்
  58. சோ – உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சாத்திரம் சொன்னதில்லை, கூவம் நதிக்கரையிலே, சர்க்கார் புகுந்த வீடு
  59. கு.ப.ரா. – எல்லா சிறுகதைகளும்
  60. கு. அழகிரிசாமி – எல்லா சிறுகதைகளும்
  61. பாரதியார் கவிதைகள், கதைகள், கட்டுரைகள்
  62. அ. முத்துலிங்கம் சிறுகதைகள்
  63. கிருஷ்ணன் நம்பி சிறுகதைகள்
  64. திலீப் குமார் – கடவு
  65. அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான்
  66. யுவன் சந்திரசேகர் – ஒளிவிலகல்
  67. வண்ணநிலவன் – கம்பாநதி, ரெய்னீஸ் ஐயர் தெரு
  68. பி. ஏ. கிருஷ்ணன் – புலிநகக் கொன்றை
  69. ந. பிச்சமூர்த்தி – கவிதைகள்
  70. திரு.வி.க. – என் வாழ்க்கை குறிப்புகள்
  71. மெரீனா – மாப்பிள்ளை முறுக்கு, தனிக்குடித்தனம்
  72. விட்டல்ராவ் (எடிட்டர்) – இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 6 Vols மற்றும் அவர் எழுதிய காலவெளி
  73. தங்கர் பச்சான் – குடிமுந்திரி
  74. டி.கே.சி. – இதய ஒலி
  75. பாமா – வன்மம்

தொடர்புடைய சுட்டி: சென்னை புத்தகக் கண்காட்சி