கமலா சடகோபன் RIP

kamala_sadagopanகமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நாவல் எனக்கு நினைவிருக்கிறது. சின்ன வயதில் படித்திருக்கிறேன். கலைமகளில் தொடராக வந்தது. அவர் மறைந்தார் என்று தெரிந்ததும் தேவை இல்லாமல் மீண்டும் ஒரு முறை இணையத்தில் தேடிப் படிக்கவும் செய்தேன். ஒரே ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. எப்படி தி.ஜா.வுக்கும் பாலகுமாரனுக்கும் நடுவில் பெரிய இடைவெளி இருக்கிறதோ அதே போல இவருக்கும் சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி, இந்துமதிக்கு நடுவிலும் பெரிய இடைவெளி இருக்கிறது. ஒரு footnote ஆகக் கூட வரமாட்டார். முழுமையாக நிராகரிக்கலாம்.

ஆனால் அவர் எழத்துக்களை விட அவர் சுவாரசியமான மனிதராகத் தெரிகிறார். ஹிந்துவில் வந்திருக்கும் இந்த கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

என்னைப் போல வெட்டியாக எழுதுவேன் எழுதுவேன் என்று கனவு கண்டுகொண்டிருக்காமல் முயன்று எழுதி இருக்கிறார். அதற்காகவே (மட்டும்) அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

தொடர்புடைய சுட்டி: ஹிந்து ஆபிச்சுவரி

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

6 thoughts on “கமலா சடகோபன் RIP

  1. நீங்கள் குறிப்பிட்ட எழுத்தளர்கள் வரிசையில் நிச்சயம் கமலா சடகோபன் வர மாட்டார். அவர் அகிலன், கி வ ஜா. நா பா, அனுதம்மா, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களுடன் சமமாக நின்றவர். பேனா மினுக்கி எழுத்தாளராக அவர் என்றுமே வளைய வந்ததில்லை. கதவு, அதன் மனோ தத்துவ நிகழ்வுகளுக்காக, பல்கலைகழகத்தில் துணை பாடமாகவே வைத்தனர். என்ன செய்வது. ஒய்யார கொண்டாய் இட்டு, நுனி நாக்கில் பேசிக்கொண்டு அரசியல் வாதிகளுடன் வளைய வந்தால் தான் பெண் எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் என்று மதிக்கின்றனர். பவுடர் பூசும் உதட்டு சாமும் போடாத கமலா நிச்சயம் நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் அருகே வர கூட முடியாது.

    Like

  2. சரியாகச் சொன்னீர்கள் நரசிம்மன்..தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஆர்.வி.
    இவ்வளவு கடுமையாக விமர்சிக்கத் தேவையில்லை அவரவர் ருசி அவரவர்களுக்கு

    Like

  3. ஸ்ரீவத்சன், என் கண்ணில் நா.பா., போன்றவர்கள் கமலா சடகோபனை விட நன்றாக எழுதக் கூடியவர்கள். நா.பா.வோடு அவரை ஒப்பிடுவதற்கில்லை.

    ராதாகிருஷ்ணன், சரியாக சொன்னீர்கள், அவரவர் ருசி அவரவருக்கு. என் ருசி எனக்கு.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.