ஜடாயுவின் பரிந்துரைகள்

ஜெயமோகனின் முக்கியத் தமிழ் நாவல்கள் பட்டியல் ஒரு seminal work. ஆனால் அதில் இரண்டு குறைகள் உண்டு. ஒன்று அது 2000த்துக்கு பிறகு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. இரண்டாவது அது ரொம்பவே நீளமானது. புதிதாக ஆரம்பிக்கும் வாசகனை பயமுறுத்தக் கூடிய சாத்தியம் உண்டு.

ஜடாயு இந்த இரண்டாவது குறையை மனதில் கொண்டு மிகச் சுருக்கமான ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். அவரது வார்த்தைகளில் –

கட்டாயம் வாசித்தாக வேண்டிய 10 தமிழ் நாவல்கள் (முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு)

  1. சிவகாமியின் சபதம்கல்கி
  2. பொய்த்தேவுக.நா.சு.
  3. மோகமுள்தி.ஜானகிராமன்
  4. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி
  5. பதினெட்டாவது அட்சக்கோடுஅசோகமித்திரன்
  6. வாசவேஸ்வரம்கிருத்திகா
  7. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
  8. கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்
  9. விஷ்ணுபுரம்ஜெயமோகன்
  10. தூர்வைசோ.தருமன்

ஜடாயுவின் டாப் டென்னோடு எனக்கு முழு இசைவு இல்லை என்பதையும் பதிவு செய்கிறேன். சிவகாமியின் சபதம் எல்லாம் டாப் டென் நாவல் லிஸ்டில் வரக் கூடாது. தூர்வையை நான் படித்ததில்லை, இருந்தாலும் சோ. தர்மன் டாப் டென் லிஸ்டில் வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. மற்றவை எல்லாம் என் டாப் டென்னில் வருமோ என்னவோ டாப் இருபது முப்பதிலாவது வரும்.

ஜடாயுவிடம் என் ஆட்சேபங்களைத் தெரிவித்தேன். அவர் சொன்ன பதிலையும் இங்கே பதிவு செய்கிறேன்.

எனது பட்டியலின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் – முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு என்று.

சிவகாமியின் சபதம்: தமிழின் “சரித்திர நாவல்” என்பதற்காக. அது கல்கி நாவல் என்றான பிறகு, பொன்னியின் செல்வனை விட, இது கச்சிதமான நாவல் என்பதால் சி.சபதம்.

தூர்வை – தலித் இலக்கியம் (அப்படி ஒன்று தனியாக இல்லை என்பீர்கள், அது சரிதான், தலித் வாழ்க்கையைக் கூறூம் ஒரு படைப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்) என்பதற்காக, பூமணியின் நாவல்களை விட தர்மனின் இந்த நாவல் தலித்வாழ்க்கையை அதன் முழுமையுடன் பதிவு செய்கிறது என்று நான் கருதியதால்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

7 thoughts on “ஜடாயுவின் பரிந்துரைகள்

  1. பொன்னியின் செல்வனை விட கச்சிதமான நாவல் என்பது சரிதான். பொ.செ இறுதி பகுதிகளில் கொஞ்சம் அடித்து பிடித்து ஓடும். சி. சபதம் ராமயணத்தனமானது, பொ. செ மகாபாரதத்தனமானது என்பது என் கருத்து.

    Like

  2. தமிழில் சரித்திரக் கதை இல்லையென்ற வசையை ஒழித்த பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” அல்லது “வானம் வசப்படும்” இவற்றில் ஏதாவது ஒன்றினைச் சேர்த்திருக்கலாம். சிவகாமியின் சபதத்தைச் சேர்த்தது ரொம்ப அதிகம்! (உண்மையில் அது நாவல் வகையில் சேர்கிறதா என்ன?)

    பாலுவிடம் ஜே.ஜே. கேட்ட, “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாளா?” என்ற கேள்விதான் நினைவுக்கு வருகிறது.

    இந்தப் பதிவுகளைப் படித்துப் பார்க்கலாம்:

    http://kesavamanitp.blogspot.in/2016/06/blog-post_13.html

    http://kesavamanitp.blogspot.in/2015/09/blog-post_9.html

    Like

  3. தமிழில் சரித்திர நாவல் இல்லையென்ற வசையை ஒழித்த பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” அல்லது “வானம் வசப்படும்” இரண்டில் ஏதாவது ஒன்றினைச் சேர்த்திருக்கலாம். கல்கியின் சிவகாமியின் சபதம் ரொம்ப அதிகம்! (உண்மையில் அது நாவல் வகையில் சேர்கிறதா என்ன?) பாலுவிடம் ஜே.ஜே. கேட்ட, “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாளா?” என்ற கேள்விதான் நினைவுக்கு வருகிறது.

    பின்வரும் பதிவுகளைப் படித்துப் பார்க்கலாம்:

    http://kesavamanitp.blogspot.in/2016/06/blog-post_13.html

    http://kesavamanitp.blogspot.in/2015/09/blog-post_9.html

    Like

  4. kesavamani tp, எனது பட்டியல் முற்றிலும் இலக்கிய விமர்சன கண்ணோட்டம் கொண்டது அல்ல. பிரபஞ்சனின் நாவல் சிறப்பான வடிவ நேர்த்தியும் வரலாற்று உண்மைத்தன்மையும் கொண்டதாயிருக்கலாம். ஆனால் கல்கியின் நாவல்களுக்கு ஒரு மிகப்பெரிய, மையமான தமிழ்ப் பண்பாட்டு முக்கியத்துவம் இருக்கிறது. இதில், பிரபஞ்சனின் நாவல் கல்கிக்கு அருகில் கூட வர முடியாது.

    கடந்த சில ஆண்டுகளாக சிலைக்கடத்தல் திருடுகளை அடையாளப்படுத்தி மாபெரும் விழிப்புணர்வை உருவாக்கி வரும் தன்னார்வலர் குழுவின் தலைவர் விஜய் குமார், சிற்பக் கலை மீதும், கோயில் பாரம்பரியம் மீதும் ஆர்வத்தையும் அது குறித்துப் பணி செய்யும் உத்வேகத்தையும் அளித்தது அமரர் கல்கியின் நாவல்கள் தான் என்று தனது நேர்காணல்களில் கூறியிருந்தார். அதையும் நினைவு கூரவும்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.