தடை செய்யப்பட்ட சிங்கள சிறுகதை

மொழிபெயர்ப்பு ஜெயமோகன் தளத்தில் வெளியாகி நாலைந்து வருஷம் ஆகிவிட்டது, இப்போதுதான் என் கண்ணில் பட்டது.

ஷக்திக சத்குமார என்பவர் எழுதி இருக்கிறார். ரிஷான் ஷெரீஃப் மொழிபெயர்த்திருக்கிறார்.

சர்ச்சைகளை எழுப்ப வாய்ப்பிருக்கும் சிறுகதைதான்; புத்த பிக்குகளின் பாலியல் அத்துமீறல்கள், புத்தர் துறவு மேற்கொண்டதற்கு காரணம் அவரால் தன் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை என்று புனைவிற்குள் புனைவாக ஓரிரு வரிகள் என்றெல்லாம் வருகிறது. சிறுகதையாக நான் இதை உயர்வாக மதிப்பிடவில்லை.

அதனால் ஒரு குறையுமில்லை. புனைவுகளை தடை செய்வது பெரும் தவறு என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். கோட்சேயை நாயகனாகவும் காந்தியை வில்லனாகவும் வைத்து நாளை ஒரு புனைவு எழுதப்பட்டால் எனக்கு கடுப்பேறும்தான், ஆனால் அது என் பிரச்சினை. ஒரு நாளும் அப்படிப்பட்ட புனைவு தடை செய்யப்பட வேண்டும் என்று குரல் எழுப்ப மாட்டேன்.

சத்குமார இதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்போது விடுதலை ஆகிவிட்டார்.

ஏதோ என்னால் முடிந்தது, மொழிபெயர்ப்புக்கு சுட்டி கொடுத்திருக்கிறேன். மொழிபெயர்த்த ரிஷான் ஷெரிஃபுக்கு என் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்: