அசோகமித்ரன் சிபாரிசுகள்

விகடனில் அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (ஏப்ரல் 2, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து). நன்றி, விகடன்!

அசோகமித்திரன் தேர்ந்தெடுத்திருக்கும் படைப்புகளில் ஒன்று கூட என் டாப் டென் லிஸ்டில் வராது. கவிதை, பழந்தமிழ் இலக்கியம் எல்லாம் எனக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திலிருந்து அவர் எதையுமே தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. புதுமைப்பித்தன் இல்லாமல் ஒரு லிஸ்டா?

  1. திருக்குறள் (கழக வெளியீடு) ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்ச தூரம்தான்.
  2. சிலப்பதிகாரம் (உ.வே.சா. நூலக வெளியீடு) இதுவும் தூரம்தான்.
  3. கம்பராமாயணம் (சென்னை கம்பன் கழக வெளியீடு) இதுவும் தூரம்தான்.
  4. சத்திய சோதனை – காந்தி படிக்கப்பட வேண்டிய புத்தகம்.
  5. கண்டுணர்ந்த இந்தியா – நேரு அருமையான புத்தகம்
  6. என் சரித்திரம் – உ.வே. சாமிநாதய்யர் நல்ல புத்தகம், ஆனால் டாப் டென்னில் எல்லாம் இடம் பிடிக்காது.
  7. என் கதை – கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை படித்ததில்லை
  8. பாரதியார் கட்டுரைகள் நல்ல புத்தகம்.
  9. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம் படிக்க ஆசை, கிடைக்க மாட்டேன் என்கிறது.
  10. தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா வெளியீடு) இது படிப்பதற்கில்லை

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், புத்தக சிபாரிசுகள்

8 thoughts on “அசோகமித்ரன் சிபாரிசுகள்

  1. நல்ல நூல் பட்டியல்தான். ஆனால் இவை அடிப்படையானவை. பெரும்பாலானவை பள்ளி, கல்லூரி காலங்களிலேயே மாணவர்களுக்கு அறிமுகமானவை. இவற்றை அடிப்படையாக வைத்து பின்னர் மேலே செல்ல வேண்டும் என்று சொல்கிறாரோ என்னவோ.

    இவற்றை எல்லாம் படிக்காமலும் மேலே செல்லலாம். இருந்தாலும் கம்பன், பாரதி எல்லாம் படித்து விட்டு கண்ணதாசன், வைரமுத்து, வாலி, மேத்தாக்களைப் படிக்கும் போது அதுசும் ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.

    Like

  2. ம.பொ.சி.யின் புத்தகம் TamilVU தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது:
    http://tamilvu.org/library/lAB00/html/lAB00ind.htm

    உ.வே.சா.வின் சுய சரிதையும் இங்கு உள்ளது.
    நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’ அண்மையில் udumalai.com தளத்தில் வாங்கினேன். படித்தவரை நன்றாகவே உள்ளது.

    Like

  3. என்ன context-ல் இந்தப் புத்தகங்களை அ.மி. சொன்னார் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவரின் டாப் 10-ல் இவைகள் இருக்கும் வாய்ப்பில்லை. No offense to those books, ஆனால் இவை ஏதோ தமிழ் புலவர் கொடுத்த லிஸ்ட் போல இருக்கிறது.

    Like

  4. ரமணன்/ராஜ், நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது.
    கண்ணன், அங்கே இருக்கும் புத்தகம் “விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு” அதை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன், மிகவும் ramble ஆகும். அதை அசோகமித்திரன் தேர்வு செய்வார் என்று நம்பமுடியவில்லை. அவர் சொல்லி இருக்கும் பேரும் – விடுதலைப் போரில் தமிழகம் – வேறாக இருக்கிறது.

    Like

  5. @RV

    அசோகமித்ரனின் பரிந்துரைகளாக நாம் இந்தப் பட்டியலில் உள்ள புத்தகங்களைக் கொள்ளலாம்.

    http://ramamoorthygopi.blogspot.com/2011/01/blog-post_19.html

    இந்தப் பட்டியலை உங்கள் தளத்திலும் ஒரு பதிவாகப் போடுங்களேன் முடிந்தால். நிறைய பேரைச் சென்றடையும்.

    Like

    1. கோபி, கூடிய விரைவில் நீங்கள் சுட்டி இருக்கும் அசோகமித்திரன் சிபாரிசுகளை பதித்துவிடுகிறேன். சுட்டிக்கு நன்றி!

      Like

  6. \\புதுமைப்பித்தன் இல்லாமல் ஒரு லிஸ்டா?\\

    இது மேலே சொன்ன பட்டியலில் இருக்கிறது!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.