சிலிக்கன்ஷெல்ஃப் இலக்கிய வட்டம் டிசம்பர் 2011 கூட்டம்

சிலிக்கன் ஷெல்ஃப் இலக்கிய வட்டத்தின் டிசம்பர் 2011 கூட்டம் நேற்று (ஜனவரி 7) தரமான நேரமாக கழிந்தது. முதலில் உறுப்பினர்கள் அதிகமாக வரமுடியாத காரணத்தால் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கக்கூடும என்ற நினைத்தது ஒரு தவறாகியது. மேலும் எதிர் நோக்கியிருந்த நிகழ்ச்சிகள் யாவும் கைகூடவில்லை. மனம் தளர்ந்திருந்தது. ஆனால் நிகழ்ந்தது வேறு. மிகச் சிறப்பான நேரமாகிவிட்டது. இதுபோல் எதிர்பார்ப்புகள் அதிகமாக இல்லாத சமயத்தில் கூட்டம் சிறப்பாக அமைவது மேலும் மன்ற சந்திப்புகளை நடத்திச் செல்ல உற்சாகத்தை கொடுக்கிறது.

குழும உறுப்பினர் விஷ்வனாத்தின் கம்போடிய-தாய்லாந்து பயணம் பற்றிய informal presentation மிகவும் சிறப்பாக இருந்தது. எப்படி போல்பாட் அரசு நிலக் கண்ணி வெடி (landmines) வைத்து அன்னியர்கள் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொண்டு நாட்டை பினனகர்த்தி சென்றது இன்றும் அங்கு அமைந்துள்ள sign boards சொல்லும் நிதர்சன உண்மையாக இருக்கிறது, அங்கோர்வாட்டில் எவ்வாறெல்லாம் கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது, disproportionate cost of housing, நீர் நில வளம், டாலர் செலுத்தும் ஆதிக்கம், பணம் கொடுக்கும் சீன மற்றும் அமேரிக்க நிர்வாக ஆதிக்க முறை, தாய்லாந்தில் எப்படி பால் சுற்றுலா குற்ற உணர்ச்சியின்றி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது பற்றி passionateஆக சொல்லிச் கொண்டே சென்றார். கேட்கும் ஆர்வத்தில் ஒன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை. அவரை ராஜன் தூண்டியவாறு இருந்தார். விஷ்வனாத் இருபதுகளில் இருப்பவர்.  இந்த வயதில் அவருடைய இலக்கிய ஆர்வங்களும், பயண ஆர்வங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. சென்ற ஆண்டு மெக்ஸிகோ பயணம் மேற்கொண்டிருந்தார்.  பயணம் பண்ணுவது வியப்பில்லை என்றாலும் அவருடைய  கூர்ந்த அவதானிப்புகள் மற்றும் தலங்களை பற்றிய நுண்குறிப்புகளை தன்னுள் வாங்கி கொண்டு
மற்றவர்களுக்கு விளக்குவது போன்ற திறமைகள் பாராட்டுக்குரியது. இலக்கியத்தில் பங்களிக்க வேண்டும் என்ற கனவை வைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள். விஷ்வனாத் இபபடி ஒரு பயணத்தை  குழுமத்தில் பகிர்ந்து கொண்டது ஒரு travelogue வாசித்த அனுபவத்தை கொடுத்தது. மேலும் அவர் பயண அனுபவத்தை கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதுவதாக கூறியிருக்கிறார்.

உணவு பரிமாறப்பட்ட வேளையில் கியர் மாற்றப்பட்டு ஜெயமோகனின் டிசம்பர் 23ஆம் தேதி குறுந்தொகை
பற்றிய சொற்பொழிவு ஆரம்பமாகியது. முன்னதாக வேறு ஒரு தலைப்பில் ஜெயமோகன் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிகழவில்லை. அந்த குறை குறுந்தொகை சொற்பொழிவு மூலம் தீர்ந்தது. ஒன்று நிச்சயம் சொல்லலாம். ஜெயமோகன் பேச்சை கேட்பது – lecture or casual conversation – ஒரு well spent time தான். இணையம் முழுவதும் பேசப்பட்டு முடிந்துள்ளது. சிறப்பான பேச்சு. குறிஞ்சி நிலத்திற்கே எடுத்துச் சென்றது. இரண்டு முறை கேட்டுள்ளேன். இன்னும் கேட்பேன் என் நினைக்கிறேன்.  இதிலெல்லாம் ஏன் பள்ளிக்கூடத்தில் பாடமாக சொல்லிக் கொடுக்கும் பொழுது பலருக்கு (சரி, எனக்கு) நாட்டமில்லை? ஆசிரியர் ஜெயமோகனாக இல்லாத கோளாறா? இல்லை கற்றுக் கொடுக்கப்படும் பாடம் கற்றுக் கொள்ளும் மாணவனின் வயதுக்கு ஒவ்வாததா? தருணம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். சங்க காலத்தில் ”அப்படியே கொல்லன் சென்றுக் கொண்டிருக்கும்பொழுது பாடுகிறான்” என்று அவர் விளக்கும் பொழுது சங்ககாலம் என்ற காலத்திற்கான மாபெரும் கதவின் திறவுகோள் திடீரென திறந்து கொண்டது போல் ஒரு உணர்வு. உடனே சங்கச்சித்திரங்களை படிக்கத் தோன்றுகிறது. இது தான் ஜெயமோகனின் வெற்றி. முதலாளித்துவ உலகமயத்தில் தமிழர்கள் வாழ்க்கை ஒற்றை நோக்க லட்சியமாக குறுக்கப்பட்ட அவலத்திலிருந்து மீண்டும் மீட்கும் முயற்சியாக ”கற்பூரம் என்ற எழுதப்பட்ட டப்பாவை” வைத்துகொண்டே கற்பூர வாசனை மட்டுமல்ல கற்பூரம் எப்படியிருக்கும் என்றும் உணரவைக்கிறீர்கள். இனம் புரியாமல் ஏனோ மனம் நெகிழ்கிறது. ஐயா! உங்கள் பணி தொடரட்டும்.

9 thoughts on “சிலிக்கன்ஷெல்ஃப் இலக்கிய வட்டம் டிசம்பர் 2011 கூட்டம்

  1. அன்புள்ள ஆர்வி,

    ஜெயமோகனின் “கொலை புரிக” படித்தேன். நான் சிலிக்கான் ஷெல்ப்பின் மறைமுக பயணாளன். கடந்த பத்து வருடங்களாக எதையுமே படிக்காமல் விட்டிருந்தேன். தட்டி தடுமாறி சில ப்ளாகுகளை சேகரித்து கூகிள் ரீடரில் வைத்துவிட்டேன். அதில் சிலிக்கான் ஷெல்ப்பும் ஒன்று. நீங்கள் பரிந்துரைத்த புத்தகங்களில் இருந்து ஒரு பட்டியல் தயாரித்தேன். நாற்பத்தைந்து புத்தகங்களை கடந்த மாதம் இந்தியா சென்றிருந்தபோது வாங்கி வந்தேன். கண்டிப்பாக சிலிக்கான் ஷெல்ப் இல்லாமல் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பேயில்லை.

    Like

  2. RV,
    சிலிக்கன்ஷெல்ஃப் இலக்கிய வட்டம் எங்கே கூடுகிறது? ராஜ சந்திரா சொல்வதைப்போல இணைய வழியில நடத்த முடியுமா?

    Like

  3. Dear Mukundaraj,

    (Replying for RV)

    Thanks. Your reply will certainly encourage RV to write more.

    Dear Raj and Navana

    “Silicon Shelf Literary Circle” is a group in San Francisco Bay Area. As a test, we started this last year and its going well. We are planning to increase our activities this year. We are studying to see if we can webcast our meetings.

    Thanks
    Bags

    (My Tamil font is broken in this computer)

    Like

  4. பக்ஸ்,

    விஷ்ணுபுரம் நாமதேவர் ஸ்டைல சொல்லனும்னா “அடியேனது பாக்கியம்’.
    அடுத்த கூட்டத்திற்குமுன் விஷ்ணுபுரம் பற்றிய பதிவை அனுப்பிவிடுகிறேன்.

    -விசு.

    ஒரு அடிக்குறிப்பு : இலக்கிய அன்பர்களே, கூட்டங்களில் செவி உணயுடன் நல்ல சுவையான உணவும் பரிமாரப்படுகிறது 🙂

    Like

  5. ஆர்வி/பக்ஸ்,
    சிலிகானில் பல ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றி பதிக்கப்படிருக்கிறது.
    எல்லாரையும் ஒரு ‘லிங்க் குடை’ கீழ் கொண்டு வர இயலுமா?
    அதாவது அதை கிளிக்கினால் கிடைக்க கூடிய பட்டியல் நூலகம் போகும்போது உதவியாக இருக்கும்.

    கண்டிப்பாய் நிறைய பேரை தளம் அடைகிறது. சந்தேகம் வேண்டாம்..!
    தொடருக கொலைகளை!

    நன்றி.
    Essex சிவா

    Like

  6. முகுந்தராஜ், உங்கள் மறுமொழி தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளித்தாலும், இவை எல்லாம் வெட்டி டீக்கடை அரட்டைதானோ என்ற எண்ணம் எல்லாம் முழுமையாக நீங்கவில்லை. ஆனால் உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி!

    காவேரி, நானும்தான் போகவில்லை. என்னை அதற்காக பெண்ணாக்கிவிட்டீர்களே! 🙂

    மயிலேறி, பயணம் சிறப்பாக அமைந்தது என்று நினைக்கிறேன். நிறைய ஊர் சுற்றுங்கள்!

    சிவா, World Fiction மற்றும் Thrillers தலைப்புகளில் ஆங்கிலப் புத்தகங்கள் அனேகமாக இருக்கின்றன.

    Like

  7. ஆர்வி

    ”கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!” இந்த கீதை வாக்கு இது போன்ற பணிகளுக்கும் பொருந்தும். ஆனால் இந்த மனச்சோர்வும் சலிப்பும் தவிர்க்க முடியாததுதான். எப்படியாவது (கொஞ்சம் இடைவெளி விட்டு) மீண்டும் தீவிரமாக வாருங்கள்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.