க.நா.சு. பற்றி பாரதி மணி II

க.நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். அவரது பொய்த்தேவு மிக அருமையான நாவல். அவரது படித்திருக்கிறீர்களா? எனக்கு பர்சனலாக மிக முக்கியமான படைப்பு – நல்ல தமிழ் படைப்புகளைப் பற்றி எனக்கு சொன்ன முதல் புத்தகம் அதுதான்.

பாரதிமணி க.நா.சு.வின் மாப்பிள்ளை. பாரதி திரைப்படத்தில் பாரதியின் அப்பா சின்னச்சாமியாக நடித்தவர். அவர் க.நா.சு.வை நினைவு கூரும் பதிவு ஒன்று இட்லிவடை தளத்தில் இருக்கிறது. கட்டாயமாக படியுங்கள்!

இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் க.நா.சு.வைப் பற்றி எழுதிய இன்னொரு பதிவும் அருமையானது. க.நா.சு. என்ற ஆளுமையை அருமையாகச் சித்தரிக்கிறது. அதைப் பற்றியும் முன்னால் எழுதி இருந்தேன். இப்போது ஏறக்குறைய அதே வார்த்தைகளை வைத்து இந்தப் பதிவுக்கும் சுட்டி…

தொடர்புடைய பதிவுகள்
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?
முந்தைய பதிவு