2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! முதலில் இளமை இதோ இதோ Happy New Year! என்று ஏதாவது தமிழ் பாட்டு வீடியோவை இணைக்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் படிக்கும் நாலு பேர் மேல் பரிதாபப்பட்டு விட்டுவிட்டேன்.

இந்த வருஷத்தில் என்ன படிப்பது என்று பார்த்தால் இரண்டு வருஷம் முன்னால் போட்ட பட்டியலையே இன்னும் முடிக்கவில்லை. பேசாமல் பட்டியலை சின்னதாக்கிக் கொண்டேன். இந்த வருஷமாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

போன வருஷம் நான் கண்டெடுத்த எழுத்தாளர்கள் F.X. Toole (Rope Burns), Patrick Modiano (Suspended Sentences), Ted Chiang மற்றும் Bernard Cornwell. தமிழில் குறிப்பிடும்படி புதிய எழுத்தாளர் எவரையும் நான் படிக்கவில்லை. எனக்குத்தான் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நண்பர்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள், தமிழ் புத்தகங்கள் யாராவது, ஏதாவது உண்டா?

நான் போன வருஷம் படித்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே:

சிறுகதைகள்/குறுநாவல்கள்:

  1. டெட் சியாங்கின் Exhalation சிறுகதை
  2. டெட் சியாங்கின் Truth of Fact, Truth of Feeling சிறுகதை
  3. டெட் சியாங்கின் Merchant and the Alchemist’s Gate சிறுகதை
  4. லா.ச.ரா.வின் பாற்கடல் சிறுகதை
  5. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதை
  6. ஜெயமோகனின் பழைய பாதைகள் சிறுகதை
  7. ஷோபா சக்தியின் கண்டிவீரன் சிறுகதை
  8. திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பு – ‘ரமாவும் உமாவும்
  9. அசோகமித்ரன் சிறுகதைபுலிக்கலைஞன்
  10. சுந்தர ராமசாமி சிறுகதை – பிரசாதம்
  11. ஐசக் அசிமோவின் SF சிறுகதைத் தொகுப்பு – ‘I, Robot
  12. பாட்ரிக் மோடியானோவின் குறுநாவல் தொகுப்பு – ‘Suspended Sentences
  13. தங்கர் பச்சானின் 2 சிறுகதைகள் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
  14. F.X. Toole எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – Rope Burns (Film: Million Dollar Baby)
  15. பூமணியின் சிறுகதை – ‘ரீதி
  16. கு.ப.ரா.வின் சிறுகதை – வீரம்மாளின் காளை
  17. லா.ச.ரா.வின் சிறுகதை – மண்
  18. சுந்தர ராமசாமியின் சிறுகதை – ‘விகாசம்
  19. அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – ‘கடவுச்சொல்

சரித்திர நாவல்கள்:

  1. பெர்னார்ட் கார்ன்வெல்லின் உத்ரெட் நாவல்கள் – Last Kingdom, Pale Horseman, Lords of the North, Sword Song, Burning Land, Death of Kings, Pagan Lord, Empty Throne, Warriors of the Storm, Flame Bearer
  2. பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள் – Winter King, Enemy of God, Excalibur
  3. பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள் – Archer’s Tale, Vagabond, Heretic & 1356
  4. ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy – Imperium, Lustrum & Dictator

மர்ம நாவல்கள்:

  1. அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express

கவிதைகள்

  1. ‘கவிதை’ – Jabberwocky
  2. குறுந்தொகை கவிதை – காமம் காமம் என்ப

அபுனைவுகள்:

  1. ஃபிலிப் பெடி எழுதிய A Walk in the Clouds (நியூ யார்க் நகரின் இரட்டை கோபுரத்தின் நடுவில் கயிற்றைக் கட்டி நடந்தவர் – Walk என்று திரைப்படமாகவும் வந்தது.
  2. ஏப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை
  3. ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதிய ‘Nadars of Tamil Nadu
  4. பாரி எஸ்டப்ரூக்கின் அபுனைவு – Tomatoland
  5. ராபர்டோ சாவியானோவின் கட்டுரை – Angelina Jolie
  6. எம்.வி.வி.யின் Memoirs – “எனது இலக்கிய நண்பர்கள்
  7. லாரி பேக்கர் எழுதிய Manual of Cost Cuts for Strong Acceptable Housing

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

9 thoughts on “2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  1. Thanks for the list RV and Happy New Year to you too.. last year i did read Mario Vargas Llosa (The Storyteller), Cormac Mccarthy (Cities of Plain and The Road), Umberto Eco’s Numero Zero, four books about Gandhi(by Dennis Allen, David Hardiman and Thomas Weber and William Shirer), Ian Rankin’s John Rebus series (3 books) Michael Connelly’s Harry Bosch series(3 books), Bill Bryson’s One Summer, Lawrence Wright’s The Looming Tower, Nikos Kazantkazis’ Zorba the Greek, Leonard Gordon’s Brothers against the Raj, Louis Menand’s The metaphysical club, Nayanjot Lahri’s Finding forgotten cities are some of them. I would say all the books were worth.

    From your list, I have noted down Robert Harris and Bernard Cornwell for the next series to read.

    In Tamil, I didn’t read anything. Nothing or no author caught my eye there.

    Like

    1. ராஜ், பட்டியலைப் பார்த்து பூரித்துவிட்டேன். இதையே அடுத்த பதிவாகப் போடலாமா என்று யோசிக்கிறேன்.

      ஹாரி போஷ் எனக்குப் பிடித்தமான பாத்திரம். எல்லா புத்தகஙக்ளையும் படித்திருக்கிறேன். எனக்கு எல்லாவற்றையும் விட மிகவும் பிடித்தது Last Coyote. Brothers against the Raj சுபாஷ் மற்றும் சரத் போஸ் பற்றியது அல்லவா? பல வருஷங்களுக்கு முன் படித்தது. மற்றபடி உங்கள் பட்டியலில் நயன்ஜோத் லாஹிரி, லோசா, ராங்கின், Zorba the Greek ஆகியோரைப் படிக்க ரொம்ப நாளாக ஆசைதான், நடக்கதான் மாட்டேன் என்கிறது. கார்மாக் மக்கார்த்தி எனக்கு என்னவோ இது வரை அப்பீல் ஆகவில்லை (50 பக்கம் படித்திருந்தால் ஜாஸ்தி). Numero Zero, One Summer, Metaphysical Club பற்றி கேள்விப்பட்டதில்லை.

      Like

      1. எனக்கும் Last Coyote பிடித்தமான ஒன்று. City of Bones என்னை பாதித்த ஒன்று (கொல்லப்பட்டவனின் கதை விரியும்போது இவன் பிறந்த காரணம்தான் என்ன என்று யோசித்திருக்கிறேன்). ஆனால் மைக்கல் கானலி கதைகளில் இறுதிக்காட்சிகள் ஹாலிவுடை நினைவுப்படுத்திவிடும். அப்படிப் பார்த்தால் John Reebus கதைகள் யதார்த்தக் குற்றப் புனைவுகளுக்கு மிக அருகில் இருக்கும்.

        Brothers against the Raj சுபாஷ் மற்றும் சரத் போஸ் பற்றியதே. மெக்கார்த்தியின் களன்கள் மிகவும் இருண்டது. No Country for old men கதை படத்தைவிட இருளானது. திரைக்கதை ஒருவிதத்தில் விறுவிறுப்பாகச் சென்றது என்றே சொல்லலாம்.

        இந்த வருடம் முழுக்க இந்திய சிந்தனை மரபைப் படிக்கலாம் என்று திட்டம். பார்க்கலாம்.

        Like

      2. ராஜ், மிகத் தாமதமாக இதைக் கேட்கிறேன். உங்கள் தளத்தின் சுட்டி என்ன? Skull நான் இன்னும் படிக்கவில்லை, குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்…

        Like

  2. RV…My blog is rchandra.blogspot.com. Last I wrote something useful was in 2011 (if you read some of them you will laugh, they are so amateurish). Then I went to FB and started writing mini reviews in there whenever I feel like it. Sometimes i write in solvanam too in the ID ‘Rajesh Chandra’.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.