ஷெர்லாக் ஹோம்ஸ் – பிடித்த சிறுகதைகள்

ஷெர்லாக் ஹோம்ஸை எனது பதின்ம பருவத்தில் படித்தேன். புத்தக சொந்தக்காரரும் பெரிய ஷெர்லாக் பிரியர். புத்தகம் தன் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று அவர் உறுதியாக இருந்தார். இதற்காக அவர் பக்கத்து வீட்டில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போவது போல போய் அவ்வப்போது இரண்டு மூன்று கதைகள் படித்துத்தான் ஐம்பத்தாறு கதைகளையும் படித்து முடித்தேன். பல துப்பறியும் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் ஹோம்ஸ் போல இன்னொருவர் இல்லை.

ஹோம்ஸின் சிறப்பு என்ன? விக்டோரியா காலத்து இங்கிலாந்தை – குறிப்பாக லண்டனை – நம் கண் முன் கொண்டு வருவதா? ஹோம்ஸின் பாத்திரப் படைப்பா? சுவாரசியமான புதிர்களா? இவை எல்லாம்தான், ஆனால் எல்லாவற்றையும் கலக்கும்போது கிடைக்கும் அனுபவம் சிறப்பாக இருக்கிறது…

எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளை இங்கே லிஸ்ட் போட்டிருக்கிறேன்.

  1. A Scandal in Bohemia
  2. Red-Headed League
  3. Man with the Twisted Lip
  4. Blue Carbuncle
  5. Speckled Band
  6. Copper Beeches
  7. Silver Blaze
  8. Reigate Squires
  9. Naval Treaty
  10. Final Problem
  11. Empty House
  12. Norwood Builder
  13. Dancing Men
  14. Six Napoleans
  15. Dying Detective
  16. Three Garridebs
  17. Thor Bridge
  18. Retired Colourman

நான்கு நாவல்களும் இருக்கின்றன. எனக்கு (அனேகமாக எல்லாருக்கும்) பிடித்தது Hound of Baskervilles. எனக்கு Valley of Fear-உம் பிடிக்கும்.

ஆன்லைனில் படிக்க விரும்புவர்கள் இங்கே பார்க்கவும். ஆனால் சிட்னி பாகெட் (Sidney Paget) படங்களுடன் புத்தகம் கிடைத்தால் அந்த அனுபவமே வேறு.

31 thoughts on “ஷெர்லாக் ஹோம்ஸ் – பிடித்த சிறுகதைகள்

  1. ஷெர்லாக் ஹோம்ஸை யாராவது பிடிக்கவில்லை என்பார்களா என்ன? குலைக்காமலிருந்த நாயின் நினைவு மறையும் வரை அவரது நினைவும் மறையாதிருக்கும்.

    எனக்கு கோனன் டாய்லை அவர் இந்தக் கதைகளை எழுதியதால் பிடித்திருந்தது; அவர் ஆவி ஆராய்ச்சிகள் செய்தார் என்பதைப் படித்ததும் கூடுதலாய் பிடித்துப் போனது; அண்மையில் ஜூலியான் பார்ன்ஸ் எழுதிய ஆர்தர் அண்ட் ஜார்ஜ் என்ற நாவலில் கோனான் டாய்ல் ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரியே துப்பறிந்து சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டிருந்த ஒரு இந்திய வம்சாவழியினரைக் காப்பாற்றினார் என்று படித்தவுடன் அவரை ஆகக் கூடுதலாகப் பிடித்தே போய் விட்டது. http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/books/article536038.ece

    நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ் லிஸ்ட் போட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை!

    Like

  2. ஹோம்ஸ் எனக்குப்பிடித்த ஆசிரியர். அப்படி நான் பிடித்தமானவராக அவரைப்பற்றிச் சொல்வது இலக்கியவாசகர்களுக்கு பலசமயம் சிக்கலாக இருக்கிறது. ஹோம்ஸ் சாதாரணமான துப்பறியும் கதாசிரியர் அல்ல. அவரது துப்பறியும் கண் பல சமயம் மனித மனக்களின் மர்மங்களை நோக்கிச் செல்கிறது. பல கதைகள் குறியீடுகளாக வாசிக்கத்தக்கவை. ஆகவே அவை இலக்கியங்கள். அவரது கதைகளுக்கும் எர்ல் ஸ்டேன்லி கார்டினர் கதைகளுக்கும் உள்ள வேறுபாடே இதுதான். எப்போதும் ஓர் உளவியல் கண்டடைதல், ஒரு நியாயம் அவரது கடைசிச் சொற்பொழிவில் இருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் நிற்பதற்கான காரணம் இதுவே.

    ஒரு செய்தி. நான் சொல்புதிது நடத்தியபோது ஹோம்ஸின் ஒருகதையை [முகத்திரை அணிந்த பெண்] எம் எஸ் அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்து வெளியிட்டேன். உடனே இலக்கியச்சிற்றிதழில் துப்பறியும் கதையா என்ற ஐயங்கள் வந்தன. நான் அது ஏன் இலக்கிய முக்கியத்துவம் உள்ள கதை என்று விளக்கி எழுதினேன். அந்தக்கதையில் ஒரு சிங்கம் சட்டென்று உதிர மணத்தை கண்டுகொள்வதே திருப்பம். அந்த உதிரமணத்தை பல்வேறு வகையில் வாசகன் வாசிக்கலாம். முக்கியமான குறியீடு அது

    ஆனால் அமைதியான மாலைப்பொழுதில் என்ற தலைப்பில் எம் எஸ் அவர்கள் மொழியாக்கம் செய்த கதைகளை தமிழினி வெளியிட்டபோது [ இன்றுவரை தமிழில் வெளிவந்த எந்த மொழிபெயர்ப்பிலும் இல்லாத முழுமை கைகூடிய ஆக்கம் அது. வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம். ஆனால் தமிழின் தனித்துவம் மிக்க சகஜமான நடை] வசந்தகுமார் ஹோம்ஸ் கதையை நீக்கிவிட்டார். இலக்கியம் அல்ல என்று))

    Like

  3. >>>ஹோம்ஸ் எனக்குப்பிடித்த ஆசிரியர்.
    ஜெயமோகன் குறிப்பிடுவது ”ஆர்தர் கோனான் டாயல்”ஐ. அது ஒரு டைப்போ. அதை பிடித்துக் கொண்டு யாராவது வம்புக்கு வராதீர்கள். 🙂

    Like

  4. ஜெயமோகன், நீங்கள் ஹோம்ஸ் கதைகளின் ரசிகர் என்று தெரிந்தது கொஞ்சம் ஆச்சரியம், நிறைய சந்தோஷம். இந்தக் கதைகளை ஒதுக்கிவிடுவீர்கள் என்று நினைத்திருந்தேன். ஹோம்ஸ் கதைகள் துப்பறியும் கதைகள் என்ற genre -ஐ தாண்டி நிற்கின்றன. வேறு யாரும் – அகதா கிறிஸ்டி, டோரதி சேயர்ஸ் உட்பட இதை சாதிக்கவில்லை. வித்தியாசம் இருப்பது தெரிகிறது, ஆனால் என்ன வித்தியாசம் என்று விளக்கத் தெரியவில்லை. 🙂

    பாஸ்கர் (நட்பாஸ்), நீங்களும் ஹோம்ஸ் கதைகளின் ரசிகர் என்பது மகிழ்ச்சி! // குலைக்காமலிருந்த நாயின் நினைவு மறையும் வரை அவரது நினைவும் மறையாதிருக்கும். // என்று நீங்கள் சொல்வது மிகச்சரி.

    Like

  5. ஹோம்ஸை கிண்டல் பண்ணி ஒரு காமிக் ஸ்டிரைப் வந்தது தி இண்டுவில் எனக்கு அதுவும் பிடிக்கும்.

    ஒரு ஜன்னல் கண்ணாடி உடைந்திருக்கிறது. வாட்சன் பார்த்துவிட்டு என்ன நினைக்கிறீர்கள் ஹோம்ஸ் என்பார்

    கூர்ந்து பூதக்கண்ணாடி வைத்து பார்த்துவிட்டு ‘ஈஸி வாட்சன் என்பார் ஹோம்ஸ், ‘கண்ணாடி இருபக்கத்திலிருந்தும் உடைந்திருக்கிறது’

    Like

  6. E. V. Knox நீங்கள் விரும்புவீர்கள். அவர்தான் கானன் டாயிலின் அதிகார பூர்வ பாரடியாளர். [பாரடியார்?]

    ஒரு கதையில் இப்படி வரும். துப்பறியும் நிபுணர் சொல்வார் ‘அதோ சாலையில் செல்லும் அந்தப்பெண் அனேகமாக ஒரு குடும்பத்தலைவி. அவளுடைய மான்தோல் ஓவர்கோட் அதை தெரிவிக்கிறது. தன் கணவர் இன்னும் வீடுதிரும்பாத அவசரத்தில் இருக்கிறா> அவளது பூட்ஸின் சேறு படிவத்தை பார்த்தான் அவள் கதீட்ரல் சாலை வழியாக வந்து பாலத்தை ஏறிக்கடந்து வெஸ்ட்மினிஸ்டர் சாலைக்கு வந்து இங்கே வந்திருக்கிறாள். அவளுடைய கையில் இருக்கும் பெட்டியின் கனத்தை வைத்து பார்த்தால் அதில் மளிகைச்சாமான்கள் இருக்கலாம். அனேகமாக ஆலிவ் எண்ணையும் முட்டையும். அந்த பெட்டி விளிம்பில் எண்ணை கறை உள்ளது. அவளுக்கு அனேகமாக முப்பத்தைந்து வயது. அவள் தாடையை வைத்துப்பார்த்தால் அவள் அனேகமாக மேற்கு சாக்ஸனியை சேர்ந்தவள். தீரமான பெண். ஆனால் கொஞம் முசுட்டுக்குணம். கணவனிடம் சண்டை போடுவாள். அவளுக்கு இரு குழந்தைகள். பன்னிரு வயதான பையன் ஒன்பது வயதில் பெண். அவள் பெயர் ஆலீஸ்..’

    ‘எப்படி தெரியும்? ’

    ’ ஈஸி…அவள் என் மனைவி’

    Like

    1. அன்புள்ள ஜெயமோகன்,

      E.V. Knox -ஐப் பற்றி நான் கேள்வி கூடப் பட்டதில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் parody -ஐ எங்கோ படித்திருக்கிறேன். ஒரு வேலை Ronald Knox என்ற துப்பறியும் கதைகள் எழுதுபவரைப் பற்றி சொல்கிறீர்களோ என்று தேடினேன். அவர் E.V. Knox-இன் சகோதரராம்!

      நீங்கள் சொன்ன காமிக் ஸ்ட்ரிப்-ஐயும் படித்ததில்லை. அந்த ஜோக் பிரமாதம்!

      Like

  7. ஆர்.வி – கோனன் டாயலின் ஷெர்லக்ஹோம்ஸ் பதின்ம வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் இல்லை. பாஜேயின் படங்களுடன் வாங்கிப் படிக்கத்தூண்டுகிறது இந்த பதிவு. சமீபமாக வலைப்பக்கங்களின் அருகே வருவதை வெகுவாக குறைத்திருக்கிறேன். அதைப் போல நேரம் கொல்லி வேறு இல்லை என்பதால். சில நல்ல பதிவுகளை சேர்த்து படிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சமீப ஷெர்லக்ஹோமஸ் தொலைக்காட்சித் தொடர் மிக நன்றாக இருக்கிறது. காட்சிப்படுத்துதலில் மற்ற மர்மத் தொடர்கள் போல் இல்லை.

    சமீபமாக முன்னை விடவும் நிறைய படிக்கிறேன், ஆனாலும் நான் படிக்காத டிக் பிரான்சிஸ், சுஜாதாவின் நாடகங்கள், இன்னும் படிக்க வேண்டி இருக்கும் மகாபாரதக்கதைகள் என்று இங்கே பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. எப்படியாவது எல்லாவற்றையும் படித்து உள்வாங்கிவிட வேண்டும் என்கிற ஆசை கூடுகிறதே தவிர குறைய மாட்டேன் என்கிறது. இது எனக்கு மட்டுமான வியாதியா இல்லை மற்றவர்களுக்கும் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.