சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள்

ரொம்ப நாளாச்சு ஒரு லிஸ்ட் போட்டு.

2 கண்டிஷன்தான். தமிழில் எழுதப்பட்ட புனைவாக இருக்க வேண்டும். திரைக்கதைக்கும் ஒரிஜினலுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு புனைவைத்தான் திரைக்கதையாக மாற்றி இருக்க வேண்டும், அது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கவும் வேண்டும். அதாவது பிரியா திரைப்படம் மாதிரி ஒரிஜினல் கதையை கொலையே செய்தாலும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. ஆனால் நான் கடவுளுக்கும் ஏழாம் உலகத்துக்கும் ஒற்றுமை இருந்தாலும், நான் கடவுளை லிஸ்டில் சேர்ப்பதற்கில்லை.

ஆசிரியர், புனைவு, சினிமா என்ற வரிசையில் எழுதி இருக்கிறேன்.

  1. அகிலன், கயல்விழி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
  2. அகிலன், பாவை விளக்கு, பாவை விளக்கு
  3. அண்ணாதுரை, காதல் ஜோதி, காதல் ஜோதி
  4. அண்ணாதுரை, நல்லவன் வாழ்வான், நல்லவன் வாழ்வான்
  5. அண்ணாதுரை, பார்வதி பி.ஏ, பார்வதி பி.ஏ
  6. அண்ணாதுரை, ரங்கோன் ராதா, ரங்கோன் ராதா
  7. அண்ணாதுரை, தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் மகளுக்கு கட்டிய தாலி
  8. அண்ணாதுரை, வண்டிக்காரன் மகன், வண்டிக்காரன் மகன்
  9. அனுராதா ரமணன், சிறை, சிறை
  10. அனுராதா ரமணன், கூட்டுப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள்
  11. சி.ஏ. பாலன், தூக்குமர நிழலில் நாவல், இன்று நீ நாளை நான் (இன்று நீ நாளை நான் அதே பெயரில் மாலைமதி வெளியீடாக முழு நாவலாக வந்தது. தூக்கு மர நிழலில் கதையில் அது ஒரு சிறிய அத்தியாயம் மட்டுமே.)
  12. தேவன், கோமதியின் காதலன், கோமதியின் காதலன்
  13. எல்லார்வி, கலீர் கலீர், ஆட வந்த தெய்வம்
  14. இந்திரா பார்த்தசாரதி, குருதிப்புனல், கண் சிவந்தால் மண் சிவக்கும்
  15. இந்திரா பார்த்தசாரதி, உச்சி வெயில், மறுபக்கம்
  16. ஜே.ஆர். ரங்கராஜு, ராஜாம்பாள், ராஜாம்பாள்
  17. ஜே.ஆர். ரங்கராஜு, சந்திரகாந்தா, சவுக்கடி சந்திரகாந்தா
  18. ஜே.ஆர். ரங்கராஜு, மோகனசுந்தரம், மோகனசுந்தரம்
  19. ஜாவர் சீதாராமன், பணம் பெண் பாசம், பணம் பெண் பாசம் (முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா நடித்தது)
  20. ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்
  21. ஜெயகாந்தன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  22. ஜெயகாந்தன், யாருக்காக அழுதான், யாருக்காக அழுதான்
  23. ஜெயகாந்தன், கருணையினால் அல்ல, கருணை உள்ளம்
  24. ஜெயகாந்தன், உன்னைப் போல் ஒருவன், உன்னைப் போல் ஒருவன்
  25. ஜெயகாந்தன், கைவிலங்கு, காவல் தெய்வம்
  26. கல்கி, பார்த்திபன் கனவு, பார்த்திபன் கனவு
  27. கல்கி, தியாகபூமி, தியாகபூமி
  28. கல்கி, கள்வனின் காதலி, கள்வனின் காதலி
  29. கல்கி, பொய்மான் கரடு, பொன்வயல்
  30. கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள், தில்லானா மோகனாம்பாள்
  31. கொத்தமங்கலம் சுப்பு, ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப் பிள்ளை
  32. லக்ஷ்மி, பெண் மனம், இருவர் உள்ளம்
  33. லக்ஷ்மி, காஞ்சனையின் கனவு, காஞ்சனா
  34. மஹரிஷி, புவனா ஒரு கேள்விக்குறி, புவனா ஒரு கேள்விக்குறி
  35. மஹரிஷி, பத்ரகாளி, பத்ரகாளி
  36. மஹரிஷி, பனிமலை, என்னதான் முடிவு?
  37. மணியன், இலவு காத்த கிளி, சொல்லத்தான் நினைக்கிறேன்
  38. மணியன், மோகம் முப்பது வருஷம், மோகம் முப்பது வருஷம்
  39. மணியன், இதய வீணை, இதய வீணை
  40. மணியன், லவ் பேர்ட்ஸ், வயசுப்பொண்ணு
  41. மு. கருணாநிதி, வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு
  42. மு. கருணாநிதி, பொன்னர் சங்கர், பொன்னர் சங்கர்
  43. மு. வரதராஜன், பெற்ற மனம், பெற்ற மனம்
  44. நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை, மலைக்கள்ளன், மலைக்கள்ளன்
  45. நாஞ்சில் நாடன், தலைகீழ் விகிதங்கள், சொல்ல மறந்த கதை
  46. நீல. பத்மநாபன், தலைமுறைகள், மகிழ்ச்சி
  47. பொன்னீலன், பூட்டாத பூட்டுகள், பூட்டாத பூட்டுகள்
  48. புஷ்பா தங்கதுரை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
  49. புஷ்பா தங்கதுரை, நந்தா என் நிலா, நந்தா என் நிலா
  50. புஷ்பா தங்கதுரை, லீனா-மீனா-ரீனா, அந்த ஜூன் 18
  51. புதுமைப்பித்தன், சிற்றன்னை, உதிரிப்பூக்கள்
  52. புதுமைப்பித்தன், வாக்கும் வக்கும், சரஸ்வதி சபதம்
  53. ரா.கி. ரங்கராஜன், இது சத்தியம், இது சத்தியம்
  54. ராஜாஜி, திக்கற்ற பார்வதி, திக்கற்ற பார்வதி
  55. ராஜேந்திரகுமார், வணக்கத்துக்குரிய காதலியே, வணக்கத்துக்குரிய காதலியே
  56. எஸ்.எஸ். வாசன், சதி லீலாவதி, சதி லீலாவதி
  57. ச. தமிழ்ச்செல்வன், வெயிலோடு போய், பூ
  58. சிவசங்கரி, நண்டு, நண்டு
  59. சிவசங்கரி, ஒரு மனிதனின் கதை, தியாகு
  60. சிவசங்கரி, 47 நாட்கள், 47 நாட்கள்
  61. சிவசங்கரி, ஒரு சிங்கம் முயலாகிறது, அவன் அவள் அது
  62. ஸ்டெல்லா ப்ரூஸ், ஒரு முறைதான் பூக்கும், ஆண்களை நம்பாதே
  63. சு. வெங்கடேசன், காவல் கோட்டம், அரவான் (ஒரு பகுதி மட்டும் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது)
  64. சுஜாதா, பிரியா, பிரியா
  65. சுஜாதா, காயத்ரி, காயத்ரி
  66. சுஜாதா, கரையெல்லாம் செண்பகப்பூ, கரையெல்லாம் செண்பகப்பூ
  67. சுஜாதா, காகிதச் சங்கிலிகள், பொய் முகங்கள்
  68. சுஜாதா, ஜன்னல் மலர், யாருக்கு யார் காவல்
  69. சுஜாதா, அனிதா இளம் மனைவி, இது எப்படி இருக்கு
  70. சுஜாதா, பிரிவோம் சிந்திப்போம், ஆனந்தத் தாண்டவம்
  71. சுஜாதா, இருள் வரும் நேரம், வானம் வசப்படும்
  72. டி.எஸ். துரைசாமி, கருங்குயில் குன்றத்துக் கொலை, மரகதம்
  73. தங்கர் பச்சான், ஒன்பது ரூபாய் நோட்டு, ஒன்பது ரூபாய் நோட்டு
  74. தி. ஜானகிராமன், மோகமுள், மோகமுள்
  75. துமிலன், புனர்ஜன்மம், போன மச்சான் திரும்பி வந்தான்
  76. உமாசந்திரன், முள்ளும் மலரும், முள்ளும் மலரும்
  77. வாஸந்தி, ஜனனம், யாரோ எழுதிய கவிதை
  78. வடுவூர் துரைசாமி ஐயங்கார், கும்பகோணம் வக்கீல், திகம்பர சாமியார்
  79. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வித்யாசாகரம், வித்யாபதி
  80. வடுவூர் துரைசாமி ஐயங்கார், மேனகா, மேனகா
  81. வை.மு. கோதைநாயகி, ராஜ்மோகன், ராஜ்மோகன்
  82. வை.மு. கோதைநாயகி, அனாதைப் பெண், அனாதைப் பெண்
  83. வை.மு. கோதைநாயகி, தயாநிதி, சித்தி
  84. வை.மு. கோதைநாயகி, தியாகக்கொடி, தியாகக்கொடி
  85. வை.மு. கோதைநாயகி, நளினசேகரன், நளினசேகரன்

பேசாமொழி இணைய இதழில் இதை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள். அவர்கள் உபரியாக சேர்த்திருக்கும் புனைவுகள் கீழே.

  1. விக்டர் ஹ்யூகோ, Les Miserables, ஏழை படும் பாடு (சுத்தானந்த பாரதியாரின் தமிழ் மொழிபெயர்ப்பின் பேரும் ஏழை படும் பாடுதான்)
  2. கி. ராஜநாராயணன், கிடை, ஒருத்தி
  3. சி.ஆர். ரவீந்திரன், நண்பா நண்பா, நண்பா நண்பா
  4. ஜெயகாந்தன், ஊருக்கு நூறு பேர், ஊருக்கு நூறு பேர்
  5. பி.எஸ். ராமையா, நாலு வேலி நிலம், நாலு வேலி நிலம்
  6. பி.எஸ். ராமையா, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், (மூலம்: நிகோலாய் கோகோல் எழுதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல்)
  7. பி.எஸ். ராமையா, போலீஸ்காரன் மகள், போலீஸ்காரன் மகள்
  8. சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள், தக்கையின் மீது நான்கு கண்கள்
  9. டி. செல்வராஜ், தேனீர், தேனீர்
  10. சிவசங்கரி, குட்டி, குட்டி
  11. கந்தர்வன், சாசனம், சாசனம்
  12. பூமணி, கருவேலம்பூக்கள், கருவேலம்பூக்கள்

பால் ஹாரிஸ் டேனியல் எழுதிய ‘Red Tea” ஆங்கிலப் புனைவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பரதேசி திரைப்படத்தின் மூலம் இதுதான்.

இன்னும் நிறைய இருக்க வேண்டும். நினைவு வருவதை சொல்லுங்களேன்!

பிற்சேர்க்கை: இன்னும் புத்தகங்கள் இருக்க வேண்டும். விட்டுப் போன பல புத்தகங்களை சொன்னவர்களில் முதன்மையானவர் ஸ்ரீனிவாஸ். மற்றும் ராமச்சந்திரன் உஷா (நுனிப்புல்), டோண்டு, அரங்கசாமி, ரமணன் (பல பழைய படங்களைப் பற்றி சொன்னவர்), ராம்குமரன், கோகுல் எல்லாருக்கும் நன்றி!

P.S. நான் இன்னும் டிவி சீரியல்கள், சினிமா ஆன நாடகங்கள், வேற்று மொழி படங்கள் ஆகியவற்றை சேர்க்கவில்லை.
தொடர்புடைய சுட்டிகள்:
சினிமா பக்கம்
சுஜாதாவின் சினிமா பங்களிப்பு
ஜெயகாந்தனும் சினிமாவும்
திருடப்பட்ட கதைகள் – அபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், கஞ்சிவரம்

38 thoughts on “சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள்

  1. சிவசங்கரி, ஒரு மனிதனின் கதை, தியாகு
    நீலபத்மநாபன், தலைமுறைகள், மகிழ்ச்சி
    புதுமைப்பித்தன், சிற்றன்னை, உதிரிப்பூக்கள்

    Like

  2. சட்டென்று நினைவுக்கு வரும் சுஜாதாவின் கதைகள்….

    விக்ரம் — திரைக்கதை எழுதிய பிறகு குமுதத்தில் தொடராக வந்தது

    ஒண்டித்வனி (தனிக்குரல்) – கன்னட திரைப்படம், மூலக்கதை

    சுஜாதாவின் 24 ரூபாய் தீவு நாவல்

    பொய் முகங்கள் – மூலக்கதை சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள் குறுநாவல்

    கரையெல்லாம் செண்பகப்பூ- மூலக்கதை சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவல்

    யாருக்கு யார் காவல்? – மூலக்கதை சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவல்

    இது எப்படி இருக்கு – மூலக்கதை சுஜாதாவின் அனிதா இளம் மனைவி நாவல்

    ஆர்யபட்டா — கன்னட திரைப்படம் மூலக்கதை சுஜாதா

    கன்னத்தில் முத்தமிட்டால் — படத்தின் ஒரு பகுதியை ‘அமுதாவும் அவனும்’ என்ற கதையாக சுஜாதா எழுதினார்

    ஆனந்தத் தாண்டவம் — மூலக் கதை சுஜாதாவின் பிரிவோம், சந்திப்போம்

    Like

  3. ஜெயகாந்தனின் ‘கருணை உள்ளம்’ திரைப் படம் அவரது ‘கருணையினால் அல்ல’ குறுநாவலை வைத்து எடுத்த படம்.

    ஜெயகாந்தனின் ‘நல்லதோர் வீணை’ தொலைக்காட்சி படம் – மூலக்கதை அவரது ‘பாரீசுக்குப் போ’ நாவல்.

    ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்’ (‘கை விலங்கு’ குறுநாவல்)

    ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்.’

    Like

  4. சுஜாதா என் இனிய இயந்திரா (டி.வி தொடர்)
    அகிலன் சித்திர பாவை, சித்திர பாவை (டி.வி தொடர்)
    தங்கர்பச்சான் ஒன்பது ரூபாய் நோட்டு,ஒன்பது ரூபாய் நோட்டு
    ஜாவர் சீதாராமன் , உடல் பொருள் ஆனந்தி,உடல் பொருள் ஆனந்தி (டி.வி தொடர்)

    Like

  5. எனக்கு ஞாபகம் வருவதைச் சொல்கிறேன். (என்னை மாதிரியே) கொஞ்சம் அரதப்பழசாக இருக்கும். ஓகேவா…

    வை.மு.கோதைநாயகி – ராஜமோகன் – ராஜமோகன், தியாகக்கொடி – தியாகக்கொடி, நளினசேகரன், – நளினசேகரன் சித்தி – சித்தி

    நாமக்கல் சுந்தரலிங்கம் பிள்ளை – மலைக்கள்ளன் – மலைக்கள்ளன்

    கொத்தமங்கலம் சுப்பு – தில்லானா மோகனாம்பாள் – தில்லானா மோகனாம்பாள்

    கல்கி – கள்வனின் காதலி – கள்வனின் காதலி

    டாக்டர் மு.வரதராசன் – பெற்ற மனம் – பெற்ற மனம்

    சி.என்.அண்ணாதுரை – வேலைக்காரி – வேலைக்காரி, ஓர் இரவு – ஓர் இரவு, ரங்கோன் ராதா – ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ – பார்வதி பி.ஏ

    மு. கருணாநிதி – ??????????????

    டோண்டு ராகவன் தொடர்வார்.

    Like

  6. புஷ்பா தங்கதுரையின் (ஸ்ரீ வேணுகோபாலன்)
    “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது”,
    “நந்தா என் நிலா”,
    “லீனா, மீனா, ரீனா” (அந்த ஜூன் 18 )
    ஆகிய நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன.

    Like

  7. இது சத்தியம்- இது சத்தியம்- ஜாவர் சீதாராமனா? டோண்டு சார், எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
    குருதிபுனலா கண்சிவந்தால் மண் சிவக்கும்?
    ராஜேந்திரகுமாரின் ஒரு நாவல் ஸ்ரீ தேவி, ரஜினி நடித்திருப்பார்கள். பெயர் மறந்துவிட்டது.
    ரமணிசந்திரனின் ஒருநாவல்கூட படமாகவில்லையா?

    Like

  8. @ராமசந்திரன் உஷா
    இது சத்தியம் ரா.கி. ரங்கராஜன் எழுதியது, குமுதத்தில் முதன் முறை தொடர்கதையாக வந்த காலத்திலேயே படித்துள்ளேன். ராஜேந்திர குமாரின் நாவல் ரஜனி ஸ்ரீதேவி நடித்தது “வணக்கத்துக்குரிய காதலியே”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Like

  9. சி.ஏ. பாலன் எழுதிய தூக்குமர நிழலில் நாவல் தான் இன்று நீ நாளை நான். சிவகுமார், லஷ்மி,
    சுலக்ட்சணா நடித்தது.
    நான் எழுதுவது ராமசந்திரன் உஷா என்ற பெயரில் உஷா ராமசந்திரன் இல்லை.

    Like

  10. வண்ண நிலவன் கூறுகிறார்… (நகர்ந்து செல்லும் நாட்குறிப்புகள் — கல்கி இதழ்)

    தமிழ் இலக்கிய உலகில் நீல. பத்ம நாபன் குறிப்பிடத்தக்கவர். அவரது ‘தலைமுறைகள்’ நாவல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுபவை எல்லாம் இலக்கியமல்ல என்றாலும், அவரது ‘தலை முறைகள்’ நாவல் நவீன தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்று.

    நீல.பத்மநாபனது ‘தலைமுறைகள்’ நாவலின் ஜீவன் அவரது குமரி வட்டார மொழியிலும், ஒரு இரணியல் செட்டிமார் குடும்பத்தின் வாழ்வை ஆற்றொழுக்காகச் சொல்லியதிலும்தான் உள்ளது.

    ஆனால், நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றான ‘தலைமுறைகள்’ நாவலை, ‘மகிழ்ச்சி’ என்ற திரைப்படமாக எடுத்து அந்த நாவலின் ஜீவனைக் கொன்று விட்டார்கள். நமது வழக்கமான தமிழ் கமர்ஷியல் திரைப்பட ஃபார்முலாக்களுடன் ‘தலைமுறைகள்’ நாவலைப் படமாக்கி கலைக் கொலை செய்துவிட்டார்கள். பொன்னீலனின் கதையை ‘பூட்டாத பூட்டுகள்’ என்று படமாக்கிக் கெடுத்தார்கள். நாஞ்சில் நாடனின் நாவலும் திரைப்படம் என்ற பெயரில் குற்றுயிரும் குலை உயிருமாகத்தான் வந்தது. இப்போது இந்த கமர்ஷியல் சினிமா வலையில், கலாபூர்வமாக எழுதப்பட்ட தலைமுறைகளும் மாட்டிக் கொண்டு விட்டன.

    டால்ஸ்டாயின் அன்னா கரீனா, தாஸ்தாயேவ்ஸ்கியின் ‘மீக் ஒன்’ போன்ற நாவல்கள், நெடுங்கதைகளை எல்லாம் அவற்றின் இலக்கிய அழகு கெடாமல் திரைப்படமாக்கி இருக்கிறார்கள். டைரக்டர் டேவிட் லீனின் ‘டாக்டர் ஷிவாகோ’ உண்மையாகவே ஒரு திரைக்காவியம். நமது தமிழ் சினிமா, டாக்டர் ஷிவாகோ போன்ற படைப்புகளை எந்த ஜென்மத்திலும் உருவாக்கப் போவதில்லை.

    Like

  11. ஆர்.வி,

    வண்ண நிலவனுக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை (தலைமுறைகள் – மகிழ்ச்சி) என்று தெரிகிறது.

    கல்கி விமர்சனத்தைப் பார்ப்போம்: (12/12/2010)

    மகிழ்ச்சி
    ————-
    எத்தனை நாளாயிற்று இப்படி ஒரு படம் பார்த்து. அக்கா – தம்பி பாசம்தான் கதை (நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவல்) அதைக் கூடிய மட்டும் அலுப்புத் தட்டாமல் தந்திருக்கிறார் இயக்குனர் வ.கௌதமன்.

    வ.கௌதமன் – அஞ்சலி காதல் காட்சிகளின் போதெல்லாம், ஹே…. இந்த மாதிரி காதலை நாம் ஊர்லேயும் பார்த்திருக்கிறோமே… என்று மனத்துக்குள் ஃப்ளாஷ்பேக் ஓடுகிறது. அதுதான் படத்துக்குப் பலமே! அக்காவாக கார்த்திகாவும், தம்பியாக கௌதமனும் நடித்திருக்கும் காட்சிகளிலெல்லாம் நமக்குள்ளும் நெகிழ்ச்சி ததும்புகிறது. நாஞ்சில் நாட்டில் நடக்கும் கதை என்பதால் காட்சிக்குக் காட்சி செழியனின் கேமராவில் பசுமைன்னா அப்படியொரு பசுமை. கௌதமனின் அப்பா பாத்திரத்தில் நடித்திருப்பவர், ஊர்ப் பெரிசுகள் என… பாத்திரங்களின் தேர்வில் இயக்குனரின் ஆளுமை பளிச்சிடுகிறது. விற்பனைக்குப் போகும் வயலின் நாற்றைக் கட்டிப்பிடித்து அழுகின்ற காட்சி ஒன்றே போதும் மண்ணின் நேசத்தை உணர்த்த! கஞ்சாக்கருப்புவின் காமெடி, சீமானின் நடிப்பு… படத்துக்குப் பக்க பலம். இசையும் (வித்யாசாகர்) திரைக்கதையும் கதம்பமாக மணக்கின்றன. ஆங்காங்கே தலை தூக்கியிருக்கும் வியாபாரத் தனங்களைக் கவனமாக ஒதுக்கியிருந்தால் மகிழ்ச்சி இன்னும் கூடுதலாகி இருக்கும்.

    மகிழ்ச்சி – மண் வாசம்.

    Like

  12. சு. வெங்கடேசன் – காவல் கோட்டம் – அரவான் (சில பகுதிகள்)
    ச. தமிழ்ச்செல்வன் – வெயிலோடு போய் – பூ
    சிவசங்கரி – 47 நாட்கள்
    பொன்னீலன் – பூட்டாத பூட்டுகள்

    ஜெயகாந்தன் ஊருக்கு நூறுபேர் என்ற படத்தை இயக்கினார் என்று ஞாபகம்

    Like

  13. ரெங்கசுப்பிரமணி, திருத்திவிட்டேன்.
    கோபி, அரவானை சேர்க்கக்கூடாது என்று நினைக்கிறேன், மற்றவற்றை சேர்த்துவிட்டேன்.

    Like

  14. ஜாவர் சீதாராமன் – பணம் பெண் பாசம் -பணம் பெண் பாசம் ( முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா நடித்தது)

    இன்று நீ நாளை நான் அதே பெயரில் மாலைமதி வெளியீடாக முழு நாவலாக வந்தது. தூக்கு மர நிழலில் கதையில் அது ஒரு சிறிய அத்தியாயம் மட்டுமே.

    Like

    1. கார்த்திக், எம்.எஸ். பெருமாள் அவள் ஒரு தொடர்கதையின் திரைக்கதையைத்தான் எழுதினார் என்று நினைவு. இது நாவலாகவும் வெளிவந்ததா என்ன?

      Like

  15. I think aval oru thodarkathai was a serial story published in Kalaimagal. Written by the renowned RA su nallaperumal who was from Palayamkottai.

    RV, what about “Kallukul Eeram” the story of Ra Su Nallaperumal, which was made as “Hey Ram”.

    Sivasankari’s novel was made into Kanneer Pookal starring Vijayan and Sreepriya (it is a heart rending story of a Brahmin girl who becomes a call girl – but the circumstances are completely different from what KB portrayed in “Arangetram”. Pramila I think is now based in the US. I did not realise that Pramila was a malayalee. For a long time, I thought that Pramila was a Tamilian. i think she married actor Jayagenesh.

    Like

  16. Dondu Sir, have you read “Thedi Konde Iruppen” by Lakshmi that was serialised in Kumudam in 1981. It was a 52-part serial but Lakshmi had attempted a murder mystery for the first time. To be frank, it cannot be called a murder mystery. She had built in lot of social elements into it and the end result was sub optimal. But still the story that roamed around the streets of Chennai had its strong moments. At one time, actress Lakshmi had planned to act in the lead role of Sowdamini who wants to wreak vengeance on Ekambaram (to be played by Srikanth) who has cheated her after impregnating her and also frames her in a murder. Sowdamini is falsely implicated

    Needhi, the 1972 film starring Sivaji, Sowcar and Lalitha was a novel by Ra Ki Rangarajan.

    Even SAP’s Kadalenum Theevinile almost made into the list. Sivaji Ganesan and Devika were supposed to play the lead.

    Maharishi’s Bhadrakali, Bhuvana Oru Kelvikuri are other stories that were filmed by the silver screen.

    Saveeta’s Evala En Manaivi, Indumathi’s Tharayil Erangum Vimanagal… made forays in TV.

    Visu’s Meendum Savitri, the mega flop starring Revati and Saranya was based on a story and screen play by Visu.

    Aparna Sen’s Paroma was based on ” Irandu Per” by Sivasankari and Indumati.

    Can someone clarify who made “Metti”? I long to see this movie. I recall Radhika in the cast. But was it based on a novel?

    Even Vandikaran (Sivakumar, Saritha) was based on a story by Azhagpuri Azghappan, Rosapoo Ravikaikari was based on a story by P D Samy who wrote in Rani, the Tamil weekly,

    Thanner Thanner was a film based on a play by Komal Swaminathan.

    I am sharing an interesting blog on – ” Sollathan Ninaikiren”.
    Please see link.

    Even, Maharishi’s story Nadiyai Thedi Vanda Kadal, was made into a movie of the same name – this was the last movie of Lalitha.

    Pattikada Pattanma was based on a story by ….. can’t recollect. Ditto with “savale samali”.

    Like

  17. PVR’s “Kuppathy sastrigal” was made into a TV serial. Stella Bruce aka Ram Mohan who committed suicide unable to bear the separation of his wife after her death wrote many wonderful novels in Ananda Vikatan. I think he was a government employee who wrote in his spare time. One of his stories – Mayamangal which I read before moving out of India was a serial I loved immensely. It was made into a TV serial with Delhi Kumar (Aravind Samy’s dad) and Yuvarani (who got into a controversy with a hero Vignesh who acted with her in Bharathiraja’s film). But I am not sure if the serial continued its full run.

    Like

  18. சந்திரப்ரபா, தகவல்கள் அளித்து கலக்குகிறீர்கள்!

    எனக்குத் தெரிந்து அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் எந்த நாவலிலிருந்தும் உருவாக்கப்பட்டதில்லை. ஆனால் பாலசந்தர் பல முறை நாவல்களைத் ‘திருடி’ இருக்கிறார் என்கிறார்கள். இந்தப் பட்டியலில் வெளிப்படையாக இந்த நாவல்தான் மூலக்கதை என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒரு கண்டிஷன். ‘கல்லுக்குள் ஈரம்’-‘ஹே ராம்’ நிலையும் அதேதான். மேலும் அவற்றுக்குள் கரு ஒன்றாக இருந்தாலும் கதைகள் வேறு வேறு.

    கண்ணீர்ப்பூக்கள் பற்றி தெரியாது. நாவல் பேரென்ன?

    டோண்டு ராகவன் மறைந்துவிட்டார். தமிழ் இணையத்துக்கு பெரிய நஷ்டம்.

    நீதி ஒரு ஹிந்திப் படத்தின் ரீமேக். சஞ்சீவ்குமார் நடித்தது. பாலாஜி தயாரிப்பு, அவர் எப்போதுமே பிற மொழிப் படங்களைத்தான் ரீமேக் செய்வார்?

    பத்ரகாளி மஹரிஷி நாவலா? நாவல் பேரென்ன?

    இந்தப் பட்டியலில் திரைப்படங்கள் மட்டும்தான், டிவி சீரியல்கள் கிடையாது என்பதும் ஒரு கண்டிஷன்.

    பரோமா, இரண்டு பேர் இரண்டும் நிச்சயமாக வேறு வேறு. நான் பரோமாவைப் பார்த்திருக்கிறேன், என் கஷ்ட காலம் இரண்டு பேர் நாவலையும் படித்திருக்கிறேன்.

    Like

  19. RV Sir, Kanneer Pookkal was the name of the film starring Vijayan and Sripriya. But the serial came in “Idhayam Pesiguruthu”, tried hard, can’t recollect the name of the serial story. The reason why I remembered was – in the story, Mohana was the name of the heroine whose father is handicapped and the love marriage of Mohana’s parents is opposed by their families. Sivasankari had used a maxim – “A man who has five daughters will become an andi or a beggar” (so male chauvinistic…!). Mohana becomes a call girl and she then gets married to an industrialist who I think comes to know of her background… Maya – the artist’s photos added life to the story.
    I am shocked to know about Dhondu Raghavan. I hope what you mean is – he has decided to stay away from Internet…& not what I initially thought.
    Bhadrakali was a novel by Maharishi and I think it was published by Rani Muthu. The film also came with the same title. It was made in Telugu and later in Hindi (Baawri, 1983). In both Hindi and Telugu versions Jaya prada played the lead. The Telugu hero was much better than Siva Kumar in Tamil who I believe is an over rated actor – I don’t understand why he speaks so fast…The heroine of Bhadrakali (1976) Rani Chandra died in a tragic accident (air crash) when the film was almost 90% complete. So, sivakumar and producer director (a c trilokchander) shot the last portions using a duplicate. Do watch the movie – it will bring tears to your eyes…Rani Chandra’s performance really moves you… more so when you feel so bad that career of a talented actress was nipped in the bud. the song – kannan oru kai kuzhantai composed by Ilayaraja was the highlight along with the chartburster – “Kettela Inge ada parthela ange”..

    Thanks for telling about the condition…(no TV serials)

    Needhi – the Hindi version was the superhit film starring Rajesh Khanna, Mumtaz and Meena Kumari – This was called as “Dushman”.

    Like

    1. சந்திரப்ரபா, டோண்டு இறந்து இரண்டு மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. பத்ரகாளி பற்றிய தகவல்களுக்கு நன்றி! இப்போது பதிவிலும் சேர்த்துவிட்டேன்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.