க.நா.சு. நூற்றாண்டு

காலச்சுவடு இணைய இதழில் பழ. அதியமான் என்பவர் க.நா.சு. எழுதிய நூல்களைப் பற்றி நிறைய விவரங்கள் தந்திருக்கிறார். அந்தக் கட்டுரையிலிருந்துதான் இது க.நா.சு. நூற்றாண்டு என்பதே தெரிந்தது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நான் படித்த முதல் க.நா.சு. புத்தகம் படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகம் தந்த மகிழ்ச்சிக்கு ஈடாக முதன் முதலாக திலீப்குமாரின் கடைக்குப் போனது, ஜெயமோகனோடு முதல் சந்திப்பு இரண்டையும்தான் சொல்லலாம். ஒத்த ரசனை என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சம், தமிழில் அவணிக எழுத்துக்களைப் படித்துவிட்டு அவற்றைப் பற்றி பேச, எழுத, விற்க, பரிந்துரைக்க ஆள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது பெரிய சந்தோஷம். அதுவும் இணையம் வராத காலத்தில், இணையத்தில் தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாத காலத்தில் படித்திருக்கிறீர்களா புத்தகமும், திலீப்குமாரும் பாலைவனச் சோலைகள்தான். க.நா.சு. பரிந்துரைத்த புத்தகங்கள் அனைத்தும் பல வருடத் தேடலுக்குப் பிறகும் கிடைக்கவில்லை என்பது சோகமான விஷயம்.

படித்திருக்கிறீர்களா தந்த உற்சாகத்தில் அவர் பேரைப் பார்த்தால் புத்தகம் வாங்கத் தொடங்கினேன். நாவல் கலையாவது கொஞ்சம் பரவாயில்லை, இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984) எல்லாம் தினமணி மாதிரி பத்திரிகைகளில் படித்துவிட்டு தூக்கிப் போட வேண்டியவை. ஒரு ஐநூறு ஆயிரம் பேராவது புத்தகம் படியுங்கள் என்று கேட்டுக் கொள்வார் அவ்வளவுதான். இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பெரிய சோகம். அதை விடப் பெரிய சோகம் அவ்வளவு committed வாசகர்கள் கூட இல்லாமல் அவர் போன்றவர்கள் கஷ்டப்பட்டது.

அப்புறம் சுந்தரராமசாமியின் நினைவோடை சீரிஸில் அவரைப் பற்றிய ஒரு கோட்டுச்சித்திரம் கிடைத்தது. நினைவோடை சீரிஸ் பொதுவாகவே அருமையானது. இதில் க.நா.சு.வின் ஆளுமை நன்றாகப் புரிகிறது.

க.நா.சு.வின் மாப்பிள்ளை பாரதிமணி எழுதிய ஒரு நினைவுக் குறிப்பும் படிக்க வேண்டியது. படிப்பு, எழுத்து தவிர வேறு எதுவும் தெரியாத மனிதர். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். இன்னொரு நினைவுக் குறிப்பும் சுவாரசியமானது.

தஞ்சை பிரகாஷ் எழுதிய வாழ்க்கை வரலாறும் கிடைத்தது. கொஞ்சம் போர்.

இப்படி அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, அவர் புத்தகம் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் பொய்த்தேவு (1946) கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. ஜெயமோகன் இதைத் தமிழின் ஆறாவது சிறந்த நாவலாக மதிப்பிடுகிறார். (மதிப்பீடு 2000-க்கு அப்புறம் வந்த நாவல்களை கணக்கில் கொள்ளவில்லை.) எஸ்.ரா.வும் இதைத் தமிழின் சிறந்த நூறு நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் இது எல்லாருக்கும் அப்பீல் ஆகும் என்று சொல்வதற்கில்லை. என்னடா சோமு பிறந்தான், வளர்ந்தான், பணம் சம்பாதித்தான், ஓட்டாண்டி ஆனான், பண்டாரம் ஆகிச் செத்தான், இதெல்லாம் ஒரு கதையா என்று நினைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. சோமுவின் தேடல் உங்களுக்குப் புரிந்தால் அது இலக்கியம். இல்லாவிட்டால் போர்தான். தோழி அருணா கூட இதுல என்ன இருக்கு ஆர்வி என்று கேட்ட ஞாபகம் வருகிறது. (எனக்கு காஃப்கா எழுதிய மெடமார்ஃபாசிஸ் கொஞ்சமும் அப்பீல் ஆவதில்லை. திடீரென்று கரப்பான் பூச்சி ஆனானாம், அதை என்னதான் metaphor என்று வைத்துப் படித்தாலும் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை)

இன்னும் படிக்க விரும்பும் புத்தகங்கள் இருக்கின்றன. அசுரகணம் (1959), ஒரு நாள் (1950). வேறு நாவல்கள் பற்றித் தெரியவில்லை. அவர் எழுதிய சிறுகதைகள் பற்றி சுத்தமாகத் தெரியவில்லை. ஜெயமோகன் அவரது தெய்வ ஜனனம் என்ற ஒரே ஒரு சிறுகதையை மட்டும் நல்ல தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் சேர்க்கிறார். எஸ்.ரா.வின் டாப் நூறு தமிழ் சிறுகதைகளில் க.நா.சு. எழுதிய எதுவும் இடம் பெறவில்லை.

புதுமைப்பித்தன் போன்றவர்களுக்கு அடுத்த வரிசைதான் என்றாலும் ஆய்வு செய்யத் தகுதியானவர். அதியமான் எழுதி இருப்பது முதல் படி. இன்னும் நிறைய வரவேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
அதியமானின் கட்டுரை
காலச்சுவடு இதழில் சுகுமாரனின் கட்டுரை
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?
க.நா.சு. பற்றி பாரதி மணி – பகுதி I, பகுதி II, பகுதி III
சுந்தர ராமசாமியின் நினைவுகள் – நினைவோடை சீரிசிலிருந்து சில excerpts

3 thoughts on “க.நா.சு. நூற்றாண்டு

  1. >>>எஸ்.ரா.வின் டாப் நூறு தமிழ் சிறுகதைகளில் க.நா.சு. எழுதிய எதுவும் இடம் பெறவில்லை.
    என்னப்பா, எஸ்.ரா தான் பொய்தேவுக்கு 12ஆம் இடம் கொடுத்திருக்கிறாரே? http://sramakrishnan.com/?p=447

    Like

  2. பக்ஸ், பொய்த்தேவுக்கு நாவல் லிஸ்டில் இடம் கொடுத்திருக்கிறார். சிறுகதைகள் எதையும் எஸ்.ரா. தேர்வு செய்யவில்லை.

    Like

Ramesh -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.