ஞானபீட விருதும் தமிழும்

சாகித்ய அகாடமி விருதை துவைத்து காயப் போட்டாயிற்று. இப்போது ஞானபீடம்.

இது வரை இரண்டே இரண்டு தமிழ் எழுத்தாளர்கள்தான் ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். அகிலன் சித்திரப்பாவை நாவலுக்காகவும், ஜெயகாந்தன் தன் எழுத்துக்களுக்காகவும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். அசோகமித்திரன், லா.ச.ரா., அழகிரிசாமி, கி. ரா, தி.ஜா., சா. கந்தசாமி, ஜெயமோகன் யாரும் விருது கமிட்டி கண்ணில் படவில்லையா?

ஜெயகாந்தன் கவுரவிக்கப்பட வேண்டியவரே. அவரது தாக்கம் அவரது எழுத்துகளை விட பெரிது. ஆனால் வயதாகிக்கொண்டே போகும் அசோகமித்திரன், கி.ரா. மாதிரி ஆட்களை கவனிங்கப்பு!

சித்திரப்பாவை அகிலனின் எழுத்துகளில் சிறந்தது என்று நினைக்கிறேன். முழுமையான வெற்றி அடையவில்லை என்றாலும் நாவல் வந்த காலத்தில் அது ரசிக்கப்பட்டிருக்கும். கால ஓட்டத்தில் நிற்காது என்று அப்போதே யூகிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்பவும் குற்றம் சொல்வதற்கில்லை.

அகிலன் 1977-இல் இந்த விருதைப் பெற்றார். அப்போது விகடனில் வந்த செய்தி: (சித்திரப்பாவை விகடனில் தொடர்கதையாக வந்தது.)

‘அகிலன் எழுதிய சித்திரப் பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு’ என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்:

‘நாலரைக் கோடி தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது! தமிழர்களிடமும் ஞானபீடம் அங்கீகாரம் பெற்று, வானபீடமளவுக்கு அல்லவா உயர்ந்துவிட்டது!’

அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப் பரிசு தமிழுக்குக் கிடைத் திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.

பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக் குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். “பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெறும் ஒரு நூல் ‘மிகச் சிறந்தது’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற்காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக்களையும் சீர்தூக்கிப்பார்த்து அவருடைய மொத்த படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டார். “பாரதத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றவர். 1975-ல் ‘எங்கே போகிறோம்‘ நாவலுக்கென ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பரிசைப் பெற்றவர்” என்றும் குறிப்பிட்டார்.

ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.

அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒரு பேழையில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும் (இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய், அகிலனுக்கு வழங்கினார்.

“இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை!” என்று ‘ஞானபீடம்’ அகிலன் குறிப்பிட்டார்.

அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு, “தமிழ் மிகவும் வளமான மொழி. இலக்கியச் செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளை விடச் சிறந்த மொழி. இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால், இந்தியாவில் 60 சதவிகிதம் பேர் இந்தி பேசுகிறார்கள்” என்று பிரதமர் ரொம்ப வும் நாசூக்காக இந்திப் பிரச்னையை நினைவுபடுத்தினார்.

“சித்திரப்பாவைக்கு இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்” என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்.

இது வரை இந்த விருதை வென்றவர்கள் லிஸ்டை இங்கே காணலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  • ஞானபீட தளம்
  • ஞானபீட விருது வென்றவர்கள் லிஸ்ட்
  • ஜெயகாந்தன் பக்கம்
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் பகுதி I, பகுதி 2
  • சாகித்ய அகாடமி பற்றி ஜெயமோகன்
  • சாகித்ய அகாடமி விருதுகள் பற்றி ஜெயமோகன்

    விருது பெற்ற தமிழ் படைப்புகளின் தரம் பொதுவாக மோசமாக இருக்கிறதே என்று ஜெயமோகனிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டேன். அவர் ஏற்கனவே பல முறை இவற்றைப் பற்றி எழுதி இருக்கிறார். (புவியரசு பற்றி எழுதியது தவிர வேறு எந்தப் பதிவையும் நான் பார்த்ததில்லை) அதுவும் பல விஷயங்கள் – இது கலைஞர் விருது போல முக்கியத்துவம் இல்லாத விருது இல்லை, இலக்கிய விமர்சங்களுக்கு தருவது அதிகமாக இருக்கிறது – எனக்குத் தோன்றுகிற மாதிரியே அவருக்கும் தோன்றி இருக்கிறது. (சரி சரி அவருக்கு தோன்றிய மாதிரியே எனக்கும் தோன்றி இருக்கிறது.)

    சுருக்கமாக அவருக்கும் எனக்கும் தோன்றும் எதிர்மறை விஷயங்கள்:

    1. சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருதுகள் தமிழ் இலக்கியத்தை மற்ற இந்தியருக்கு, உலகத்தாருக்கு காட்டும் ஒரு ஜன்னல். அங்கே தரமற்ற எழுத்தாளர்கள், புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவது முட்டாள்தனம், அயோக்கியத்தனம்.
    2. இந்த விருதுகள் பொதுவாக தாமதமாக வழங்கப்படுகின்றன. (உதாரணமாக கி.ரா. தனக்கு 76-இலேயே கோபல்ல கிராமம் புத்தகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும், 91-இல் கோபல்லபுரத்து மக்களுக்கு கிடைத்தது என்று சொல்லி இருந்தார். சா. கந்தசாமிக்கு சாயாவனத்துக்கு தரப்படவில்லை. புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள், கரைந்த நிழல்கள், தண்ணீர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், உபபாண்டவம், நெடுங்குருதி, என் பெயர் ராமசேஷன் இப்படி எதற்கும் கிடைத்ததாக தெரியவில்லை.)
    3. நம்பியார் மாதிரி கையை பிசைந்துகொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை.

      பின்குறிப்பு: எனக்கும் அவருக்கும் இசைவில்லாத ஒரு இடமும் உண்டு. ரா.பி. சேதுப்பிள்ளை போன்றவர்களுக்கு விருது கொடுக்கப்பட்டது அந்தக் கால தர நிர்ணய அடிப்படையில் சரியே, அதை இந்த கால தர நிர்ணய அடிப்படையை வைத்து குறை சொல்லமுடியாது என்று நான் நினைக்கிறேன். பிரதாப முதலியார் சரித்திரம் நல்ல புத்தகம் இல்லை, ஆனாலும் அது ஒரு முன்னோடி இல்லையா? ஜெயமோகன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கிறார். 🙂

      தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

      தொடர்புடைய பதிவுகள்:
      சாகித்ய அகாடமி விருதுகள் பகுதி 1, பகுதி 2
      ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

    4. ஞானபீட விருது