சாகித்ய அகாடமி விருதை துவைத்து காயப் போட்டாயிற்று. இப்போது ஞானபீடம்.
இது வரை இரண்டே இரண்டு தமிழ் எழுத்தாளர்கள்தான் ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். அகிலன் சித்திரப்பாவை நாவலுக்காகவும், ஜெயகாந்தன் தன் எழுத்துக்களுக்காகவும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். அசோகமித்திரன், லா.ச.ரா., அழகிரிசாமி, கி. ரா, தி.ஜா., சா. கந்தசாமி, ஜெயமோகன் யாரும் விருது கமிட்டி கண்ணில் படவில்லையா?
ஜெயகாந்தன் கவுரவிக்கப்பட வேண்டியவரே. அவரது தாக்கம் அவரது எழுத்துகளை விட பெரிது. ஆனால் வயதாகிக்கொண்டே போகும் அசோகமித்திரன், கி.ரா. மாதிரி ஆட்களை கவனிங்கப்பு!
சித்திரப்பாவை அகிலனின் எழுத்துகளில் சிறந்தது என்று நினைக்கிறேன். முழுமையான வெற்றி அடையவில்லை என்றாலும் நாவல் வந்த காலத்தில் அது ரசிக்கப்பட்டிருக்கும். கால ஓட்டத்தில் நிற்காது என்று அப்போதே யூகிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்பவும் குற்றம் சொல்வதற்கில்லை.
அகிலன் 1977-இல் இந்த விருதைப் பெற்றார். அப்போது விகடனில் வந்த செய்தி: (சித்திரப்பாவை விகடனில் தொடர்கதையாக வந்தது.)
‘அகிலன் எழுதிய சித்திரப் பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு’ என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்:
‘நாலரைக் கோடி தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது! தமிழர்களிடமும் ஞானபீடம் அங்கீகாரம் பெற்று, வானபீடமளவுக்கு அல்லவா உயர்ந்துவிட்டது!’
அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப் பரிசு தமிழுக்குக் கிடைத் திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.
பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக் குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். “பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெறும் ஒரு நூல் ‘மிகச் சிறந்தது’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற்காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக்களையும் சீர்தூக்கிப்பார்த்து அவருடைய மொத்த படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டார். “பாரதத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றவர். 1975-ல் ‘எங்கே போகிறோம்‘ நாவலுக்கென ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பரிசைப் பெற்றவர்” என்றும் குறிப்பிட்டார்.
ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒரு பேழையில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும் (இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய், அகிலனுக்கு வழங்கினார்.
“இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை!” என்று ‘ஞானபீடம்’ அகிலன் குறிப்பிட்டார்.
அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு, “தமிழ் மிகவும் வளமான மொழி. இலக்கியச் செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளை விடச் சிறந்த மொழி. இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால், இந்தியாவில் 60 சதவிகிதம் பேர் இந்தி பேசுகிறார்கள்” என்று பிரதமர் ரொம்ப வும் நாசூக்காக இந்திப் பிரச்னையை நினைவுபடுத்தினார்.
“சித்திரப்பாவைக்கு இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்” என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்.
இது வரை இந்த விருதை வென்றவர்கள் லிஸ்டை இங்கே காணலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்
தொடர்புடைய சுட்டிகள்:
of course,chithirapavai is not his masterpiece.the award was given by considering in toto..i dont know why he was targetted by most of other noted writers.
LikeLike
ஆர்வி, அகிலனுக்கு ஞானபீட பரிசு கொடுத்தது சரியில்லை என்பது என் கருத்து. அவருடைய “சித்திரப் பாவை” படித்திருக்கிறேன். சுமாராகத் தான் இருக்கும். சுரா, தி.ஜா, ச.கந்தசாமி போன்ற சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் அந்த கால கட்டத்தில் இருந்த போதும் இவருக்கு பரிசு கிடைத்தது ஊழ்வினையின் பலன் என்று தான் நினைக்கிறேன். மீண்டும் 2004 – இல் ஜெ.மோ. கொடுத்த பேட்டியைச் சுட்டிக் காட்டுகிறேன். .
http://www.jeyamohan.in/?p=122
பாஸ்கர்.
LikeLike
அகிலனக்கு ஞானபீடம் கொடுத்ததை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி சு ரா ஒரு கட்டுரை எழுதியிருப்பாரே படித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் என்னிடம் உள்ளது எடுத்துப் போடுங்கள். அது நியாயமான ஒரு கண்டனமாகவே தோன்றுகிறது. அதை அகிலன் படித்திருந்தால் நிச்சயம் பரிசைத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். கடுமையான விமர்சனத்திற்குள்ளானது அகிலனுக்கு கொடுக்கப் பட்ட அந்த விருது. ஜெயகாந்தனுக்கு கொடுத்து அதன் மதிப்பை மீட்டுக் கொண்டார்கள்.
அன்புடன்
ராஜன்
LikeLike
ராதாகிருஷ்ணன், சித்திரப்பாவைதான் நான் படித்த வரையில் சிறந்த புத்தகம். நீங்கள் எதை அகிலனின் மாஸ்டர்பீசாக கருதுகிறீர்கள்?
பாஸ்கர், நானும் சித்திரப்பாவையின் தரம் அவ்வளவு உயர்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். ஆனால் புத்தகம் வந்தபோது அது தமிழ் இலக்கியத்தின் சாதனை என்று கருதப்பட்டிருக்கும், அதனால் அவார்ட் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ராஜன், சு.ரா. கட்டுரை என்னிடம் இல்லை. உங்களிடம் இருந்தால் அனுப்புங்கள்.
LikeLike