சுஜாதாவின் “பெண் எந்திரம்”

sujathaசாகச நாவல் என்று பார்த்தால் சுமார்தான், ஆனால் தொடர்கதையாக வந்தபோது நிச்சயமாக வாசகிகளைக் கவர்ந்திருக்கும்.

சிம்பிளான முடிச்சுதான். பன்ச் கார்ட் (பழைய கால கம்ப்யூட்டர்) ஆபரேடர் வித்யா, அவளை உண்மையாக விரும்பும் ப்ரோக்ராமர் கனகசபை, பணக்கார உயர் அதிகாரி கிருஷ்ணகுமார் என்று ஒரு முக்கோணம். வித்யாவின் சம்பளத்தை நம்பித்தான் அவள் குடும்பம் இருக்கிறது. அதனால் வித்யாவின் கல்யாணத்தில் அப்பாவுக்கு விருப்பமில்லை. வித்யாவுக்காக கனகசபை எதையும் விட்டுக் கொடுப்பான் என்று புரிந்து கொள்ளும்போது கனகசபையை வித்யாவின் குடும்பம் குன்சாக ஏற்றுக் கொள்கிறது. இந்த சமயத்தில் வித்யா தான் வாங்கும் சம்பளத்துக்கு மேல் வேலை செய்து கம்பெனியில் மோசடி நடப்பதைக் கண்டுபிடிக்கிறாள். கிருஷ்ணகுமாரிடம் சொல்கிறாள். கனகசபைதான் தில்லுமுல்லு செய்தான் என்று அவனுக்கு வேலை போகிறது. கிருஷ்ணகுமார் வித்யாவை மணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார். வித்யாவின் குடும்பத்தை பணத்தால் அடிக்கிறார். பிறகு வழக்கமான சுலபமாக யூகிக்க முடியும் திருப்பங்களுடன் கதை முடிகிறது.

இந்தக் கதையை மீண்டும் படிக்கும்போது எனக்கு தோன்றிய முதல் எண்ணம் இதுதான் – எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சிவசங்கரியும் லக்ஷ்மியும் அனுராதா ரமணனும் இன்னும் சில பல பெண் எழுத்தாளர்களும் வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினைகளை கருவாக வைத்து நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார்கள். அப்போதே என்னால் படிக்க முடியவில்லை, இப்போது யாராலும் முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் இந்த மனிதர் சாகசக் கதைக்கு நடுவே அதே பிரச்சினைகளைப் பற்றி நாலு வரி எழுதுவது இத்தனை உண்மையாக இருக்கிறது. பாலகுமாரனைப் போல பெரிய சத்தம் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. மனிதருக்கு நிறைய திறமை உண்டு, குமுதம் விகடனில் தொடர்கதை எழுதப்போய் தன் தரத்தை குறைத்துக் கொண்டுவிட்டார்…

இரண்டாவது எண்ணம் இதுதான் – அரைக்கிழமான நானே பஞ்ச் கார்ட் கம்ப்யூட்டர்களைப் பார்த்ததில்லை, பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பஞ்ச் கார்ட்களைத்தான் பார்த்திருக்கிறேன். இவர் பஞ்ச் கார்டுகளைப் பற்றி எழுதுவது இன்றைக்கு யாருக்குப் புரியும்?

சுஜாதா ரசிகர்களுக்காக மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

2 thoughts on “சுஜாதாவின் “பெண் எந்திரம்”

  1. ஆர்வீ , சுஜாதா எப்பொழுதும் பெண் என்று ஒரு தொடர்கதை எழுதினார்; இந்த கதை மங்கையர் மலரில் வந்தது ; அவரது வழக்கப்படி சற்று விரசமாக எழுதி இருந்தார், மூன்று பிள்ளைகள் அந்த தம்பதிக்கு , நடு வயசுக்கு மேல் ஒரு நாள் மின்வெட்டின் போது, அப்பா அம்மாவை தேடி போக கர்ப்பம் உண்டாகிறது. பிரசவத்தில் அம்மா இறந்து போகிறாள் , மூன்று பிள்ளைகளும் தங்கையின் பிறப்பு உறுப்பை பார்த்து ஆச்சர்யபடுகிறார்கள்; ஒரு வயதான பாட்டி தான் குழந்தைகளை வளர்க்கிறாள். இப்படி போகும் கதை சோகத்தில் முடிகிறது. நீங்கள் இந்த கதையைப் படித்து
    இருக்கீர்களஆ?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.